Saturday, September 5, 2009

ராகுல் முன்னிலையில் சேரும் விஜய் என்ற மற்றுமொரு தமிழின துரோகி

சென்னை, செப்.5: அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தமிழகத்தில் வரும் 8ந் தேதி முதல் 10ந் தேதி வரை 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 9ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தன் ரசிகர்களுடன் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைய இருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு இன்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

ராகுலை சந்திக்கும் விஜய்

தமிழகத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வருகை தரும் ராகுல் வரும் 9ந் தேதியன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது நடிகர் விஜய் தன் ரசிகர்களுடன் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைவார் என்று கூறப்படுகிறது.

4 Comments:

Anonymous said...

துரோகிகளுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் – தமிழகத்திலிருந்து அதிபதி
எழுதியவர்பகலவன் ON SEPTEMBER 5, 2009
பிரிவு: கட்டுரைகள், செய்திகள்
தமிழ்வின் இணையதளத்தில் விஜயை கண்டித்தது தவறு என்று வெளியிட்ட செய்தியை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். சேனல் 4ல் வெளியிடப்பட்ட காணொளியால் அனைவரும் துடி துடித்துப் போய் உள்ள இந்த நேரத்தில் இந்த விஜய் காங்கிரஸூடன் போய் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். ஈழத்தமிழர்களை காப்பாற்ற பேச்சு நடத்த வேண்டியதுதானே? தமிழக இளைஞர் காங்கிரஸ் பதவி பற்றி என்ன பேச்சு வேண்டியிருக்கிறது?
இப்போது விட்டு விட வேண்டியது. பிறகு அவர் காங்கிரஸில் பெரிய ஆளாக வளர்ந்து ப.சிதம்பரத்தை போல உள்துறை அமைச்சராகவோ அல்லது வெளியுறவு அமைச்சராகவோ ஆகி விடுவார். அப்போது போய் கொல்லாதே, கொல்லாதே என்று கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா?
தமிழர்கள் தொடர்ந்து துரோகிகளை தட்டிக் கேட்காததால்தான் இப்படி அனைவரும் எளிதாக துரோகம் செய்து விட்டு போய் விடுகிறார்கள். சோனியாவின் கொலைகார குடும்பத்துடன் எவ்வகையிலாவது தொடர்பை வைத்திருந்தால் அவர்களை செத்துப் போன ஈழ மக்களின் ஆன்மா மன்னிக்காது.
காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கும் திருமாவை குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள். வாரா வாரம் நக்கீரனில் கதை எழுதி விட்டு கருணாவுக்கும், கனிமொழிக்கும் சாமரம் வீசும் ஜெகத் கஸ்பரை பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்கள். எல்லோரும் தங்களுடைய அரசியல் நலன்களைதான் முக்கியமாக கருதுகிறார்கள்.
துரோகிகளை ஆரம்பத்திலேயே கண்டித்தால்தான் மற்றவர்கள் திருந்துவார்கள், பயப்படுவார்கள். அவர்களை ஒன்றும் கேட்காமலிருந்தால் பிறகு மற்றவர்களும் அதே போல் செய்வார்கள்.
உல்கமே சொல்லி கேட்காத ராகுலின் கொலைகார குடும்பம் விஜய் சொன்னால் மட்டுக் கேட்டு விடப் போகிறதா? கொலைகாரர்களை தட்டிக் கேட்பதற்கு பதிலாக அவர்களுடன் இணைவதுதான் சரி என்றால் விடுதலைப்புலிகள் எல்லோரும் காங்கிரஸ் உறுப்பினர் அட்டைகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
நடுநிலையோடு எதையும் எண்ணிப் பாருங்கள். கொலைகாரக் கரங்களையுடைய காங்கிரஸூடன் கூட்டணி வைக்கும் எல்லோரும் துரோகிதான். அதில் நல்ல துரோகி, கெட்ட துரோகி என்று எதுவும் கிடையாது.

http://www.meenagam.org/?p=9730

Anonymous said...

ஈழத்தமிழன்.. ஊறுகாய்

தரமானது .தன்னிகரில்லாதது..தொட்டு நக்கிப்பாருங்கள் .. நக்க.. நக்க.. நாவூறும்...
நக்கியவர்களிற்கு .. வாயூறும்.....வாயூறியவர்களிற்கு பதவி போதையூறும்.

இந்திய அரசியல் வியாபாரத்தில் இன்று ஈழத் தமிழனும்.. அவனது அவலவாழ்வும்தான் ஊறுகாய்...எதிர்கிறவன் ஆதரிக்கிறவன்.. உதவ வேண்டும் என்கிறவன்... உதைக்கவேண்டும் என்கிறவன்....ஆயுததத்தை அள்ளிக்கொடுத்து அழி...என்றுவிட்டு அகிம்சை தேசம் என்கிறவன்... அண்ணா நாமம் வாழ்க என்கிறவன்.. சிறுத்தை என்று விட்டு மியாவ்....என்பவன். ..பாட்டாளிகளிற்கு படம் காட்டுபவன்...குண்டு கோமளவல்லிக்கு குடை பிடித்தும் குறைந்த இடம் பிடித்தவன்..எல்லோருமே தொட்டுக்கொள்கிற ஊறுகாய்தான்.. ஈழத்தமிழன் வாழ்வு.... தமிழகத்தில் அரசியல் சாண(ந)க்கியங்களை அழகாகவே அரங்கேறுகின்றன...அதற்காக நாங்கள் அதிர்ந்து போகவோ .. ஆச்சரியப்படவோ இல்லை..பேசிப்பேசியே மரத்துவிட்ட உங்கள் நாக்குகளிற்கு எங்கள் இரத்தத்தை நக்கியாவது உணர்வு வந்தால் உண்மையில் நன்றிகள்..உங்களிற்கல்ல.. எங்கள் உறவுகளின் இரத்தத்திற்கு....

Anonymous said...

தமிழனுக்கு துரோகம் செய்து பிழைப்பை நடத்துவது மஞ்ச துண்டு,சூரமணி,சுமபை.வீரபாண்டியன் போன்ற முண்டங்கள் தான்.
இந்த மூஞ்சிகளைப் பார்க்கும் போது ராஹுல் காந்தி எவ்வளவோ சிறந்த மனிதனாக காட்சி அளிக்கிறார்.ஆகவே விஜய் காங்கிரஸில் இணைந்தால், அது வரவேற்க்கப் ப்ட வேண்டிய முடிவு.

Unknown said...

//சூரமணி,சும்பை.வீரபாண்டியன்//

அனானி,

தமிழின துரோகியான மஞ்ச துண்டுக்கு ஜால்ரா போடும் லிஸ்டில் முக்கியமான நபரான திருமாவை விட்டுவிட்டீர்களே.