தமிழகத்தின் முன்னணி நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, ஆகியோர் முன்னணியில் காங்கிரஸ் கட்சியில் விஜய் சேர்ந்து கொள்ளும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சரிந்து போயிருக்கும் காங்கிரஸின் செல்வாக்கை மீளவும் கட்டியெழுப்ப காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருந்தது.
தமிழகத்தில் மீளவும் தனித்து காங்கிரஸ் ஆட்சியமைக்கும் காலத்தை உருவாக்குவதே தமது விருப்பம் என காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தமையும் அதை நிலை நிறுத்த பாடுபடப்போவதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அண்மையில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரசியலில் ஆர்வம் காட்டத்தொடங்கியிருந்த நடிகர் விஜய், பல்வேறு சமூகப்பணிகளுடன் தனது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைந்து மக்கள் இயக்கமாக மாற்றியமைத்து, செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த தொடங்கியிருந்தார். தான் அரசியலில் ஈடுபடப்போவதை வெளிப்படையாகவும் பேசத்தொடங்கியிருந்தார்.
காங்கிரஸ் பக்கமும் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு தமிழகத்தில் பொருத்தமான முகமாக விஜய் இருப்பார் என கணக்கிட்ட காங்கிரஸ் தலைமைப்பீடம் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருக்கிறது. கைக்காசை செலவு பண்ணி அரசியலில் ஈடுபடுவது எடுபடுமா? எதிராக இருக்கக்கூடிய பெரும் கட்சிகளையும், தலைவர்களையும் எவ்விதம் எதிர்கொள்வது என எண்ணிக்கொண்டிருந்த விஜய்க்கு காங்கிரஸின் அழைப்பு பழம் நழுவி பாலில் விழுந்த கதை ஆயிற்று.
காங்கிரஸின் அழைப்பை ஏற்று, புதுடில்லி சென்ற விஜய், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பேச்சுவார்த்தை பேரம் நன்றாகவே முடிந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தைப் பேரத்தின் பிரகாரம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிளின் இளைஞரணிப் பொறுப்பு விஜய்க்கு வழங்கப்படவுள்ளதாகவும், தெரிய வருகிறது. வெகு விரையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் இந்த இணைவு இருதரப்புக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது விடயம் குறித்து விஜய் தரப்பில் பொறுத்திருந்து பாருங்கள் என்பதைத் தவிர வேறெதுவும் தெரிவிக்கப்படவில்லை
Thursday, September 3, 2009
அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்க காங்கிரசில் இணையும் பொறுக்கி பயல் விஜய் ?
Posted by நிலவு பாட்டு at 9:07:00 PM
Labels: ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment