Monday, September 21, 2009

'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை

பெரிய அண்ணன் பிரபாகரனின் அன்பு தம்பியாக இன்று தமிழர்களின் வாழ்வினில் சுடர் ஏற்ற வந்த இந்த புரட்சி தமிழ் புலியினை நாம் தோள் கொடுத்து உயர்த்துவோம். அவரது முதல் கன்னி முயற்சியான நாம் தமிழர் இயக்கம் மேன் மேலும் வளர்ச்சியடைய நாம் நமது அன்பு அண்ணன் சீமானின் 'நாம் தமிழர்' இயக்கத்தினில் இணைந்து தமிழர்களின் வாழ்வில் ஓளியேற்ற பாடுபடுவோம்.

இதோ இன்று ஒருவர் நமக்காக களமிறங்குகிறார். பதுங்கி பாயும் புலியாக சீமான் இருக்கட்டும். பெரிய புலி பதுங்கி இன்று சீமான் என்ற புலி தமிழர்களை வேட்டையாடும் காடையர்களை பலி கொள்ள வந்துள்ளது.

புறப்படு தோழா, இன்னும் ஏன் பயம், தயக்கம், தமிழனின் அடிமை என்னும் சங்கிலியினை தகர்த்தெறிவோம்.

நாம் தமிழர் இன்று ஒரு மாபெரும் அரசியல் இயக்கமாக உருவெடுக்க உங்களின் அனைவரின் ஆதரவினையும் அளியுங்கள்.

உங்களை உறுப்பினராக இணைத்து கொள்ளுங்கள் இங்கே, இதோ நமது புதிய தளம்

நாம் தமிழர்

1 Comment:

Anonymous said...

நண்பர்களே.. தற்பொழுதான் யூத வழியில் தமிழீழம்..கட்டுரை படிக்கும் வய்ப்பு கிட்டிய்து..அருமையான கட்டுரை. பூங்குழலி, அவர்களுக்கு நன்றி..விவரங்க்ள் பல அறிந்தேன். எனக்கு தமிழ் மீதும், த தமிழீழம் மீதும் பற்று உண்டு, செயல்படுகளில் ஈடுபட்டது இல்லை.. நாம் தமிழர் இயக்கம் என்னுள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது... ஆயிரம் கருத்து வேறுபாடுகள், செயல்முறை வேறுபாடுகள் இருந்த போதிலும், இனம் எதிர் கொண்டு நிற்கும் இந்த சவாலான தருணத்தில், தமிழினத்திற்கான தமிழீழ நாடு பெறுவதே ஒற்றை இலட்சியமாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் சகோதரர்களுக்கு இடையிலானவை. அவற்றை சுதந்திர தமிழீழ நாட்டில் நிதானமாக அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம். அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு அதிகபட்ச ஒருங்கிணைவுடன் செயல்பட வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.இதற்கு மேல் நம் இனத்திற்கு இக்கட்டானத் தருணம் வேறு ஒன்று வந்து விடாது. அப்படி ஒன்று வந்து விடக் கூடாது எனில் இப்போதே நாம் விழித்தெழ வேண்டும்
--
பிரியமுடன்
க. சுரேஷ்குமார்
ஆஸ்திரேலியாவில் நெற்றி மேல் கீறல் விழுந்தால் கூட அது இனவெறித் தாக்குதல் என முழக்கம்.... ஈழ‌த்தில், பிணக்காடு குவிந்தாலும் மௌனம் ... உன் மானம் எத்தனை ரூபாயடா இந்தியத் தமிழா?