Sunday, September 27, 2009

தமிழர்களின் முகாம் வாழ்க்கை : சர்வதேச ஊடகங்களும் புலம்பெயர் தமிழர்களின் கடமையும்

இலங்கையில் தமிழர்கள் பகுதியில் மோதல் இடம்பெற்ற சமயம் மனித உரிமைகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த சர்வதேச ஊடகங்கள் இன்று வன்னியில் முகாம்களில் தொடராக எதிர்நோக்கிவரும் பெரும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து வாய்மூடிமௌனியாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியில் சிங்கள படையினர் தமிழர் பகுதிக்குள் அத்துமீறி ஊடுறுவியபோது தம் மக்களை பாதுகாக்க தீரமுடன் போராடி தமது உடன்பிறப்புகளை தம்மால் முடிந்தவரை பாதுகாத்துபோராடிய வீரமறவர்களை விமர்சித்த இந்த ஊடகங்கள் இன்று தமது நாட்டு மக்களையே கொடுமைப்படுத்தும் நிலையை கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியதே.


அண்மையில் முகாமுக்கு சென்று திரும்பிய நண்பர் ஒருவர் தெரிவித்த கருத்து தமிழினத்தையே வேதனைக்குள்ளாக்கியது.அதிலும் இதுபோன்ற செயல்கள் உள்நாட்டு,வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரியாமல்போனதன் தார்ப்பரியம் இதுவரை அறியப்படாதது வேதனைக்குரியதே.


அது என்னவெனில்,முகாம்களுக்குள் நுழையும் துணை ஆயுதக்குழுக்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாகவும் அதற்கு சிங்கள இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர்களை கேடயங்களாக பயன்படுத்துகின்றார்கள். தடுத்துவைத்துள்ளார்கள் என தினமும் செய்திகளை வெளியிட்டுவந்த உள்நாட்டு வெளிநாட்டு ஊடங்கள் இன்று அந்த மக்கள் ஒரு இனத்தின் அரசாங்கத்தால் மிக மோசமான முறையில் அடிமைப்படுத்தப்படுவது கண்டும் காணாமல் இருப்பது கவலையளிக்கின்றது.


முகாம்களில் உள்ள இளைஞர்களை தாங்கள் வெளியில் அழைத்துச்சென்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு,வேறு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தைகளை கூறி அவர்களுக்கு மூளைச்சலவை வழங்கப்பட்டு அவர்கள் முகாமுக்கு வெளியில் அழைத்துசெல்லப்படுகின்றனர்.


வெளியில் அழைத்துச்செல்லப்படும் இளைஞர்கள் துணைப்படை முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு தமது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அவர்கள் வலுக்கட்டாயப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.


முகாம்களில் அடைக்கப்படும் இளைஞர்கள் வெளி தொடர்புகள் அற்ற நிலையில் சிங்கள படையினரின் பாதுகாப்பில் இந்த முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டோர் துணைப்படையினர் உள்ள பல பகுதிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இவர்களின் இன்றை நிலை என்ன என்பது குறித்து தாம் அறிய துணைப்படையின் உயர்பீட தொடர்புகளை தொடர்புகொண்டபோதிலும் அது தொடர்பில் விபரம் பெறமுடியவில்லையென தெரிவித்தார்.


அது மட்டுமல்ல முகாம்களில் உள்ள இளம் பெண்களும் இந்த துணைப்படையினரால் கொண்டுசெல்லப்பட்டு கொழும்புபோன்ற இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுவருவதாகவும் அது தொடர்பில் முகாமில் உள்ளோர் தம்மிடம் உரையாடியதாகவும் இது தொடர்பில் கதைக்க அவர்கள் கொண்டுள்ளதாகவும் முகாம் சென்று திரும்பிய இலங்கை அரசின் உயர்பதவியில் இருக்கும் அதிகாரியான நண்பர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.


இது முகாமில் உள்ள தமிழர்கள் கொண்டுள்ள அடக்கு நடவடிக்கையின் ஒரு பகுதியே. அந்த முகாமில் தமிழர்கள் கொண்டுள்ள நெருக்கடி நிலை வார்த்தையால் வர்ணிக்கமுடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர்,முகாம்களின் நிலை தொடர்பில் ஊடகங்கள் கொண்டுள்ள பார்வை குறித்தும் கவலை தெரிவித்தார்.


முட்கம்பி வேலிகளுக்குள் அடைப்பட்டு ஏங்கி நிற்கும் உங்களது உறவுகளுக்காக இனி நீங்கள் மேற்கொள்ளப்போகும் போராட்டமே அவர்களுக்கு கைகொடுக்கும்.


தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர்களை கேடயங்களாக பயன்படுத்துகின்றார்கள். தடுத்துவைத்துள்ளார்கள் என தினமும் செய்திகளை வெளியிட்டுவந்த உள்நாட்டு வெளிநாட்டு ஊடங்கள் இன்று அந்த மக்கள் ஒரு இனத்தின் அரசாங்கத்தால் மிக மோசமான முறையில் அடிமைப்படுத்தப்படுவது கண்டும் காணாமல் இருப்பது கவலையளிக்கின்றது.


இன்று சர்வதேச ரீதியில் “புலனாய்வு செய்தியில்”பிரபல்யம் பெற்றுவருகையில் இந்த முகாம் மக்கள் தொடர்பில் இந்த செய்திமுறைமை பின்பற்றப்படாமல் இருப்பது ஊடக நிறுவனங்கள் மீது தமிழர்களை சந்தேகம் கொள்ளச்செய்கின்றது.


இந்த வேளையில் நாம் புலம்பெயர் மக்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.நீங்கள் ஈழ தமிழர்களுக்காக உங்களது உறவுகளுக்காக அன்று நடத்தியபோராட்டங்களை விட இன்று முட்கம்பி வேலிகளுக்குள் அடைப்பட்டு ஏங்கி நிற்கும் உங்களது உறவுகளுக்காக இனி நீங்கள் மேற்கொள்ளப்போகும் போராட்டமே அவர்களுக்கு கைகொடுக்கும்.


இனியும் சர்வதேசத்தின் கண்கள் திறக்கவேண்டும் என்றால் உங்களது உறவுகளின் நிலை தொடர்பில் உங்களது நாட்டு அரசுகளுக்கு அறிவியுங்கள்.உங்களது உறவுகளை மீட்க்க நடவடிக்கையெடுக்குமாறு உரக்க குரல்கொடுங்கள்.ஜனநாயகம் தாங்களே என கூச்சலிட்டுவரும் அந்த நாடுகளின் போலிக்கௌரவமாவது உங்களது உறவுகளுக்கு கைகொடுக்கும்

0 Comments: