தமிழகத்தில் இருந்து ஒரு ஈழத் தமிழச்சியின் மனக் குமுறல்...
நன்றி அதிர்வு
இறுதிப்போரில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து தமிழீழ வரலாற்றை தாங்கி வந்து முற்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எமது மக்கள் தமிழீழ வரலாற்றின் சுவடுகள். போற்றப்பட வேண்டியவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். கடைசி வரை தமிழீழ போராட்டத்திற்கு தம்மால் முடிந்த ஆதரவை அளித்து இன்று பல சித்திரவதைகளிற்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எமது சுவடுகளை போராட்டத்தின் வலிமையை முகாமிலுள்ள ஒவ்வொரு தமிழ் மகனிலும் நாம் பார்க்க முடியும். அந்த மக்கள் தாம் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய தமது பாராளுமன்ற உறுப்பினர்களையே பார்க்க முடியாத சூழலில் வெளிநாடுகளிலிருந்து வரும் தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்பலரையும் அந்த மக்களை பார்க்க சிறிலங்கா அரசங்கம் அனுமதிப்பது ஏன்?
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் அந்த மக்களை வைத்து தாம் பிழைப்பு நடத்தி பணம் சுரண்டுவதற்கே. ஒருவரால் கொடுக்கும் பணம் மொத்தமாக அந்த மக்களை சென்றடைவது இல்லை. மேலிடத்திலிருக்கும் ஒவ்வொருவரும் அதிலிருந்து சுரண்டி சுரண்டி அந்த மக்களுக்கு செல்வது பெயரளவுக்கு கொடுத்தோம் என்று சொல்கின்றளவுக்கே. உதாரணமாக சமீபக காலமாக நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததே. அதாவது மக்கள் முகாமிற்குள் வந்ததால் சம்பாதித்து இலட்சாதிபதியாகிய அமைச்சர்கள் பற்றி நாம் அறிவோம்.
இதைவிட கொடுமை என்னவென்றால், சிறிலங்காவின் அனுமதியில்லாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களை பார்க்க செல்லவில்லை. அது ஒரு புறமிருக்க, தமிழ் நாட்டிலிருந்து ஒரு நாடாளுமன்ற குழு அந்த முகாமுக்கு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டது. அந்த சுற்றுலாவில் சென்றவர்கள் சிலர் தமிழ்நாட்டில் செய்த ஊழல்கள் போதாதென்று தமிழீழத்திலும் செய்ய சென்றுவிட்டார்களோ! என்று ஐயம் ஏற்பட்டு தெளிவடைந்துள்ளேன்.
ஏன் அந்த ஐயம் என கேட்கிறீர்களா? சில வாரங்களுக்கு முன் தமிழ் நாட்டு நாடாளுமன்றக்குழு சிறிலங்காவுக்கு பயணித்து திரும்பியதும் என் செவிகளில் விழுந்த ஒரு செய்தி "கவிஞர் கனிமொழி 250 ஏக்கர் நிலம் வாங்கிவிட்டு வந்திருக்கிறார்" என்பதே. உள்ளமெல்லாம் கொதித்தது காரணம் அந்த நிலம் தமிழீழ நிலப்பரப்பிலாக இருந்திருந்தால் தமிழ்நாட்டிலுள்ள மாதிரியான ஒரு ஒழுக்கமற்ற அரசியல் தமிழீழத்திலும் வந்துவிடுமோ என்று. ஏனெனில், தமிழ் நாட்டில் ஒரு அரசியல்வாதி பொதுமகனின் நிலத்தை அபகரிப்பதும் அதனை அந்த பொதுமகன் போய்கேட்டால் அடியாட்களுடன் விரட்டுவதும் தமிழகத்தின் வழக்கமான ஒரு நிகழ்வாகிப்போய்விட்டது. அதே மாதிரி எமது தமிழீழத்திலும் வந்துவிடுமோ! என்று ஏங்கினேன்.
நேற்று தான் தெரிந்தது அது எமது நிலப்பரப்பில் இல்லை என்பது. அதையிட்டு சந்தோசமடைந்தாலும் அந்த குழுவில் இடம்பெற்ற தமிழீழ ஆதரவாளரான தொல்.திருமாவளவன் அவர்களின் செயற்பாடும் தமிழர்களின் மனம் நினைத்ததைப்போல இல்லை என்பதே உண்மை. தொல்.திருமாவளவனை கண்டதும் எம் மக்கள் கண்ணீர் விட்டு அழுததாக செய்திகளில் படித்தேன். எம் மக்கள் இலகுவில் யாரிடமும் கண்ணீர் விடமாட்டார்கள் மண்டியிடமாட்டார்கள். அந்த மக்கள் கண்ணீர் விட்டு எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று அவர்களிடம் கூறியதாக செய்திகள் படித்ததுமே என் உரோமங்கள் சிலிருத்தன. கண்கள் கனத்தன. எப்படியெல்லாம் வாழ்ந்த எம்மினம் எம்மக்கள் இப்படி துன்பப்பட்டு போனார்களே என.
சரி அவர்கள் ஏன் தொல்.திருமாவளவனை கேட்டார்கள். தமிழீழத்திற்கு ஆதரவானவர் ஒரு தமிழன் என்ற ஒரு உரிமை அவர்களின் மனதில் இருந்ததால் தானே!, அப்படியான அந்த மக்களிடம் நீங்கள் ஆறுதலாக பேசாதது ஏன்? அவர்களின் மனநிலையை அறிய முற்படாதது ஏன்? சரி அதைத்தான் விடுவோம் சர்வதேச குற்றவாளியாக நிறுத்தவேண்டும் என்று யாரை நீங்கள் கூறினீர்களோ அந்த குற்றவாளியின் விருந்தை உண்டு வந்த உங்களை தமிழீழ மக்களாகிய நாம் எந்த குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது?
வதை முகாம் சென்று வந்த காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் என்பவர் முகாம்கள் சர்வதேச மட்டத்தில் தரமாகவுள்ளதாக அறிக்கை விட்டிருக்கிறார். சர்வதேசமட்டம் என்றால் என்ன? என்பதற்கு வரைவிலக்கணம் தெரியுமா அவருக்கு! அவர் சர்வதேச மட்டம் என்று நினைத்தது தமிழ்நாட்டை என்று நினைக்கிறேன். ஏனெனில் தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர் அகதிமுகாம்களைவிட சிறிலங்காவின் ஈழத்தமிழர் வதைமுகாம்கள் சிறந்ததாக இருப்பதால் அவர்கள் சர்வதேசமட்டத்தில் சிறந்தாக இருப்பதாக கருதுகிறார்கள். தமது அரசியல் ஆசனத்துக்காக எமது மக்களை இந்தியரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ்நாட்டு அரசாங்கமும் சிங்கள அரசாங்கமும் கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றமை தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதைமுகாம் பயணம் சுட்டிக்காட்டுகின்றது.
தமிழகத்தில் இருந்து ஒரு ஈழத் தமிழச்சியின் மனக் குமுறல்....
Tuesday, October 27, 2009
இலங்கையில் கனிமொழி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிவிட்டு வந்திருக்கிறார் ?
Posted by நிலவு பாட்டு at 7:34:00 PM 3 comments
Labels: ஈழம்
Sunday, October 25, 2009
உலகதமிழ் மாநாட்டில் மரபுகள் கடைபிடிக்கப்படவில்லை: வைகோ குற்றச்சாட்டு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை அருகே உள்ள அன்னூர் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய தாவது:-
இதுவரை நடத்தப்பட்ட 8 மாநாடுகளும் உலகத்தமிழ் மாநாடு என்ற பெயரிலே நடத்தப்பட்டது. ஆனால் இப்போது உலகதமிழ் செம்மொழி மாநாடு என அரசு அறிவித்துள்ளது. இத்தகைய மாநாடு உலகத்தமிழ் மாநாடு அல்ல.
இதுவரை உலகத்தமிழ் மாநாடு நடத்த கடை பிடிக்கப்பட்ட விதிமுறைகள், மரபுகள் இப்போது கடை பிடிக்கப்படவில்லை. ஒழுங்கு நியதியை புறந்தள்ளி விட்டு நடத்தப்படும் உலகத் தமிழ் மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்காது.
சொந்த மண்ணில் சொந்தங்களை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக துன்பங்களையும், துய ரங்களையும் ஈழத்தமிழர்கள் அனுபவித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அரசு நடத்தும் உலக தமிழ் மாநாட்டை ம.தி.மு.க. புறக்கணிக்கும்.
இலங்கைக்கு பயணம் செய்த எம்.பி.க்கள் குழுவால் எந்தவித பயனும் இல்லை. அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் ஒருவர் கூட அகதிகள் முகாமிலிருந்து சொந்த இடத்திற்கு திரும்ப வில்லை.
கேரள பகுதியில் முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசு அனுமதி கொடுத்தது தவறு. இதற்காக கேரள முதல்- மந்திரி 5 முறை டெல்லி சென்றுள்ளார். ஆனால் தமிழக முதல்- அமைச்சர் ஒருமுறை கூட டெல்லி செல்லவில்லை. உண்மை நிலை பற்றி விளக்கமும் அளிக்கவில்லை. நல்ல நிலையில் உள்ள முல்லைப் பெரியார் அணைக்கு பதிலாக புதிய அணை கட்டகேரள அரசு முயற்சித்து வருவது இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவையும், இந்திய ஒருமைப்பாட்டையும் பாதிக்கும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
உங்கள் அன்பை என்றும் மறவாத S.சுடலைமணி
{ கந்தக பூமியுலே வெந்ததே எங்க குலம் ... சொந்தத்தை தொலைச்சிட்டு பதறுதே பாதி சனம் ... }
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"We are not chauvinists. Neither are we lovers of violence enchanted with war. We do not regard the Sinhala people as our opponents or as our enemies. We recognise the Sinhala nation. We accord a place of dignity for the culture and heritage of the Sinhala people. We have no desire to interfere in any way with the national life of the Sinhala people or with their freedom and independence. We, the Tamil people, desire to live in our own historic homeland as an independent nation, in peace, in freedom and with dignity."
"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." - Velupilllai Pirabaharan, Leader of Tamil Eelam
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
From cricket scores to your friends. Try the Yahoo! India Homepage!
Posted by நிலவு பாட்டு at 4:50:00 PM 0 comments
Wednesday, October 21, 2009
இலங்கை தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்:மாவோயிஸ்ட் தலைவர்
இலங்கையில் சமீபத்தில் சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போர் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறிவருகிறது.
இந்த நிலையில் போரில் உயிர் தப்பிய தமிழர்களை இலங்கை அரசு திறந்த வெளியில் அடைத்து வைத்து அவர்களை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளது. இந்த கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு அமெரிக்கா, நார்வே, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் கம்பி வேலிக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்கா விட்டால் தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று மாவோயிஸ்ட் இயக்க தலைவர் கணபதி அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், ‘’உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களை கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம்.
அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதற்கான விஷயங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் கொடூர சித்ரவதை செய்யப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.
அதிநவீன படகுகள் மூலம் கடல் வழியாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு செல்வோம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை ராணுவத்தினர் அங்குள்ள பெண்களை கற்பழிக்க மாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக்கொல்ல மாட்டார்கள். எனவே எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம்.
சித்ரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆயுத உதவி செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கென்று தனி குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம்.
எங்களது நக்சலைட் இயக்கத்தில் தமிழகம் - கேரளாவைச் சேர்ந்த நிறைய இளைஞர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்காக தமிழகம் - கேரளா எல்லைப்பகுதிகளில் விரைவில் முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்’’என்று கூறியுள்ளார்.
Posted by நிலவு பாட்டு at 6:58:00 PM 4 comments
Tuesday, October 20, 2009
குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே! (04 -04 -2008)
குருதி பெருக்கெடுக்கப் பெருக்கெடுக்க கடந்த ஆண்டின் மத்திமத்தில் இக்கவிதையை எழுதி தமிழக உறவுகளிடம் கையேந்தி நின்றோம்....பெருஞ் செயற்பாட்டினூடாக எமை ஆதரித்து ஆற்றுப்படுத்தினீர்கள். தியாகச் செம்மல் முத்துக்குமாரன் உட்பட பல உறவுகள் எங்கள் வலிகளைத் தாங்க முடியாமல் தீக்குளித்தீர்கள். மலையெனத் திரண்டெழுந்தீர்கள். தமிழகத்தின் அரசியல் நாற்காலிகள் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டன. இருப்பினும் இப்போது மறுபடியும் உங்கள் எழுச்சி.... தயவு செய்து அரசியல் வாதிகளால் முடங்கிப் போகாதீர்கள்.
உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின்
வேர்மடிக்கும் தாய்மடியே!
உறுதி குலையாத உரம் அன்றுதந்து
விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே!
ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக்
காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே!
எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ?
வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை
வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம்.
ஆர்த்து அணைத்து ஆர்ப்பரித்துப் பேசிடவும்,
பார்த்துப் பசியாறி பல்லாங்குழி ஆடிடவும்,
கோர்த்துக் கைகுலுக்கிக் கொவ்வையிதழ் விரித்திடவும்,
ஈர்ப்பு இருக்கிறது, எனினும் இப்போது முடியவில்லை.
கண்ணீர் பெருக்கெடுக்க,
உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி,
கூப்பிடு தொலைவில்த்தானே…
எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது.
ஆற்ற ஒரு நாதியின்றி, – எம்மினத்தின்
அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி,
அம்மா!.......
உன் கையணைக்கும் தூரத்திலல்லவா…
எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது.
வாதைகள் பல சுமந்து,
கந்தகக் காலனின் குடியிருப்பில், குடி சுருங்கி,
கொப்பளிக்கும் குருதிவழி குலைசிதற,
இடிதாங்கி, இடிதாங்கி அடிதாங்கும் நிலை கூட
இன்னும் உன் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பதென்ன?
உன் விழிமணிகள் மீதமர்ந்த வெண்சவ்வா?
இல்லாவிடின்
வேண்டா உறவென்ற விளங்காக் கொள்கையா?
கட்டாய வலி வந்து, கால் அகட்டிக் கிடக்கையிலே
ஆடைச் சரிவிற்குள் அந்நியர்கள் பார்வை…
எங்கள் தொப்புள் கொடிக்கான தொடர்பந்தம் நீதானே….
எப்படித் தனிக்க விட்டாய்?
ஏதிலியாய் தவிக்கவிட்டாய்?
சாவின் விளிம்பினிலே,
கூவிக் குளறி எம்தேசம் அழுகையிலே,
ஆவி துடித்தெழுந்து….
தாவி அணைக்கும் தாய்மடி நீதானே!
வாரியணைத்தெம் புவியின் வண்ணமுகம் பார் தாயே! - எவ்
வல்லமையும் உடைக்க முடியாத் தாய்மைவேதம் நீதானே!
தாயே!......
குமுறும் எம் உள்ளக் கோபுரத்தை வருடி எப்போது ஆற்றுவாய்?
தனித்த எம் வேர்மடிக்குத் தாங்கும் வலுவாய் தோற்றுவாய்?
அம்மா!
இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!
பாராமுகம் வேண்டாம்.
வா!... பக்கத்துணையாய் இரு!
வேற்று மருத்துவச்சி வேண்டவே வேண்டாம்.
எம்புவியின் பேற்று மருத்துவச்சியாய்
நீயே பிள்ளைக் கொடி அறு!
http://www.yarl.com/forum3/index.php?showtopic=36907
Posted by நிலவு பாட்டு at 6:38:00 PM 0 comments
Sunday, October 18, 2009
சானல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி கைகள் பின்னல் கட்டப்பட்டு, கண்களும் மறைத்துக் கட்டப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்படும் வீடியோவை சனல் 4 முதன்முதலில் வெளிவிட்டிருந்தது. ஆனால் அது சித்தரிக்கப்பட்ட ஒன்று என் இலங்கை அரசு உதாசீனம் செய்தது. ஆனால் இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டின் அந்த வீடியோவை ஆராய்ந்து உண்மைநிலையைக் கண்டறிய அமெரிக்க வல்லுநர்கள் நியமிக்கப்ப்பட்டனர். அவர்களின் முதற்கட்ட அறிக்கையின் பிரகாரம் அவ்வீடியோ உண்மையானது, அதன் காட்சிகள் தொடர்ந்து வருகின்றன, அந்த வீடியோவை நிறுத்தி, காட்சிகளை மேலதிகமாகச் செருகியதற்கோ அல்லது நீக்கியதற்கோ ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் முழுமையான அறிக்கை நவம்பர் மாதத்தில் கிடைக்கவுள்ளது.
ஆரம்பகட்ட அறிக்கையில் 10 வேறுபட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் சில கீழே உள்ளன.
- வீடியோ அல்லது ஓடியோ பகுதியில் எதுவும் திருத்தியமைக்கப்படவில்லை
- இரண்டாவதாகச் சுடப்பட்ட நபரைச் சூழ்ந்துள்ள இரத்தம் முதலில் சுடப்பட்ட வெள்ளைச் சட்டை வாலிபரைச் சூழ்ந்துள்ள இரத்தத்திலும் பார்க்க கூடிய நிறமாக உள்ளது. குருதி ஒட்சிசனேற்றம் அடைந்தால் அதன் நிறம் மாறும். எனவே இரண்டாவது நபரின் இரத்தம் கூடுதல் சிவப்பாக உள்ளமை அவர் பின்பு சுடப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.
- இரு சூட்டுச் சம்பவங்களின் சத்தம் வருவதிலும் உள்ள தாமதம் ஒத்ததாக உள்ளது.
- முன்பே சுடப்பட்டவரின் காலானது அடுத்த சூட்டுக்கு மெதுவாக உயர்ந்து பின்னர் பழைய நிலைக்கே செல்வது போல உள்ளமை அவர் முதலில் இறக்காமல் இருந்ததைக் காட்டுகிறது.
இந்த உறுதிப்படுத்தல்களின் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர்.
Posted by நிலவு பாட்டு at 7:02:00 PM 0 comments
Labels: ஈழம்
இதோ நா.உ ஏன் இலங்கை சென்றார்கள் என்பதற்கான விடை, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!
போர் நடைபெற்ற போதும் சரி, முடிந்த பின்னரும் சரி இலங்கை அரசுக்கு உதவி செய்வதில் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஊக்கமாகவே உள்ளார். ஏற்கனவே இலங்கைக்கு நிதியுதவி அளிக்கவென 500 கோடி ரூபா இந்தியாவின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டமை தெரிந்ததே. இப்போது மீண்டும் இந்திய அரசு ஒரு 500 கோடி ரூபா நிதியுதவி வழங்கலாம் என சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிதம்பரம், இலங்கையில் அகதி முகாம்களிலுள்ள மக்களின் புனர்வாழ்வுத் திட்டத்தை அந்நாட்டு அரசு தமக்குச் சமர்ப்பித்ததும் இந்திய அரசு மேலும் ஒரு 500 கோடி ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாகக் கூறினார். இந்திய நா.உ இலங்கை விஜயம் குறித்து வழங்கியுள்ள அறிக்கை பற்றிக் கூறும்போது தாம் அனைத்து விடயங்கள் குறித்தும் கருணநிதிக்கு விளக்கியுள்ளதாகக் கூறினார்.
அந்த அறிக்கையில் இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தாம் அதற்கு எவ்வாறு உதவுவது என்று கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். தடுப்பு முகாம் மக்கள் 5000 பேரை இலங்கையரசு அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி விட்டதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.
மேலும் தமிழக நா.உ களுக்கு தகவல்கள் வழங்கிய தமிழர்கள் கடத்தப்பட்டு, ரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளமை குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, தாம் உறுதி செய்யப்படாத செய்திகள் குறித்து கருத்து வழங்க விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். மொத்தத்தில் சிதம்பரத்தின் இன்றைய பேட்டி அவர் இலங்கையரசுக்கு சாதகமாக மட்டுமே பேசுவார் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளது.
Posted by நிலவு பாட்டு at 6:20:00 PM 1 comments
Labels: ஈழம்
Thursday, October 15, 2009
ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்!
ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு புரிய வைப்பதே என்னுடைய இந்தக்கட்டுரையாகும்.
சகோதர யுத்தம் பற்றி விரிவாக எழுதுவதானால் பல பக்கங்கள் தேவை எனவே சுருக்கமாக இரண்டு பாகங்களாக எழுத முயற்சிக்கிறேன். புலிகள் அமைப்பிலிருந்து முரண்பாடுகள் காரணமாக அதன் மத்திய குழுவிலிருந்து உமா மகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதும்.பின்னர் அவர் புதியபாதை என்னும் குழுவின் தலைவர் சுந்தரத்துடன் இணைந்து புளொட்(P.L.O.T )என்னும் அமைப்பினை தொடங்கி அதற்கு தலைவரான பின்னர். தமிழ்நாடு பாண்டிபஜாரில் பிரபாகரனிற்கும் உமா மகேஸ்வரனிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமே அன்றைய காலகட்டத்தில் பெரியதொரு சகோதர யுத்தமாகக் கருதப்பட்டது. ஆனால் அந்தச் சம்பவம்தான் இந்திய மத்திய அரசிற்கு ஈழவிடுதலைப்போராட்ட இயக்கங்ளுடனான தொடர்புகள் அமையவும் காரணமாயிருந்தது.
ஆனால் காலப்போக்கில் புளொட் அமைப்பில் ஏற்பட்ட உள் முரண்பாடுகளினால் அந்த இயக்கதினர் தாங்களே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இறுதியாய் புளொட் உறுப்பனராலேயே அதன் தலைவர் உமாமகேஸ்வரனும் கொல்லப்பட்டுவிட்டார் ( இது பலருக்கும் தெரியாத உண்மைச்சம்பவம் ). ஆனால் கருணாநிதியும் வேறுசிலரும் சகோதர யுத்தம் என்று சொல்லிக்கொண்டிருப்பது ரெலோ(T.E.L.O )இயக்கத்தினை புலிகள் தடைசெய்ததனையே . இந்தியா உதவியும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இயக்கங்களில் புலிகள் இந்தியா எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் என்று கண்மூடித்தனமாக நம்பவில்லை அதேபோல இந்தியாவும் புலிகள் தாங்கள் சொல்வதெற்க்கெல்லாம் பிரபாகரன் தலையாட்டுவார் என்று நம்பவுமில்லை. இதனால் புலிகளிற்கும் இந்திய உளவுத்துறைக்கும் ஆரம்பகாலங்களிலிருந்தே ஒருவித பனிப்போர் நடந்துகொண்டேயிருந்தது. அதே நேரம் பிரபாகரளை தங்கள் தலையாட்டிப்பொம்மையாக்கியே தீருவது என்று கங்கணம்கட்டிக்கொண்டு இந்தியாவிலிருந்த புலிகளின் பயிற்சி முகாம்களை பலவந்தமாக மூடியும்.ஆயுதங்களை பறித்தும். புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகளை பறித்தும்.அன்ரன் பலசிங்கத்தை நாடு கடத்தியும் தொடர்ந்து பலவித நெருக்கடிகளை கொடுத்துவந்தனர்.
ஆனால் றோ அதிகாரிகள் எள் என்றதும் எண்ணெயாகி அவர்கள் உச்சந்தலையிலே உருகிவழிந்த ரெலோ தலைவரிற்கு வேண்டிய வசதிகளை றோ அதிகாரிகள் செய்தது மட்டுமல்ல . எண்பதுகளில் தமிழ்சினிமாவில் உச்சத்திலிருந்த இரண்டு பிரபல நடிகைகளையும் கொடுத்து மாமாவேலையும் செய்தனர். இப்படி சிறீசபாரத்தினத்தை தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருந்துகொண்டு தமிழீழத்திலும் புலிகள் அமைப்பிற்கு றோ அமைப்பு நெருக்கடிகளை கொடுக்கத்தொடங்கியது.
இப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையாய் மாறிவிட்ட சிறீசபாரத்தினத்தின் போக்கு பிடிக்காமல் ரெலோ அமைப்பின் முக்கிய இராணுவத் தளபதியாக இருந்த தாஸ் என்பவர் இயக்கத்திலிருந்து பிரிந்து போய்விடுவதென முடிவெடுத்தபொழுது அவரையும் அவரது முக்கியமான நண்பர்கள் 5 பேரையும் பேச்சுவார்த்தை நடத்தலாம் வாருங்களென்று அழைத்து யாழ் வைத்திய சாலையில் வைத்து ரெலோ அமைப்பினரே சுட்டுக்கொன்றார்கள். அதனை புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது. அதே நேரம் புலிகளை எப்படியாவது வம்புச்சண்டைக்கிழுத்து புலிகளை அழித்துவிடும் றோவின் திட்டத்திற்கு சரியான சந்தர்ப்பம் பார்த்திருந்த ரெலோவும் ஈழத்தில் தாவடிப்பகுதியில் தமிழ்பாராழுமன்ற உறுப்பினர்களாகிய ஆலால சுந்தரம். மற்றும் தர்மலிங்கம் ஆகியோரை சுட்டுகொன்று விட்டு அதனையும் புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது.
தொடச்சியாய் பலகொள்ளைகளை நடத்திக்கொண்டிருந்த (முக்கியமாக வாகனக்கொள்ளைகள்) ரெலோ உறுப்பினர்களிற்கு இடைஞ்சலாயிருந்த புலிகள் அமைப்பு. இதனால் இரவு நேரக்காவல் கடைமையில் ரோந்து வரும் புலிகள் அமைப்பினரை கடத்துவது. துன்புறுத்துவது என்று தொடருந்து கொண்டிருந்ததபொழுது அவர்கள் எதிர்பார்த்த சர்ந்தர்ப்பமும் வந்தது. .......86 ம் ஆண்டு புலிகளிற்கும் இலங்கைக் கடற்படைக்கும் நடந்த ஒரு மோதலில் புலிகளின் தளபதியாகவிருந்த அருணாவும், தெய்வாவும் வேறு சிலரும் இறந்து போய்விட்ட செய்தியறிந்து (அருணா அந்தத் தாக்குதலில் இறந்திருக்கவில்லையன்பது பின்னர்தெரியவந்ததோடு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பல வருடங்கள் சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்துக்குமிடையிலான போர்க்கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலையாகி அதன் பின்னரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சிலவருடங்கள் போராளியாக இருந்து வீரமரணம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)
பொதுமக்கள் யாழ்குடாவெங்கும் வாழை தோரணம் கட்டி இறந்த போராளிகளின் உருவப்படங்களிற்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். அருணாவின் ஊரான கல்வியங்காடுதான் சிறீசபாரத்தினத்தின் ஊருமாகும். கல்வியங்காட்டிலும் மக்கள் தோரணங்கள் கட்டி அருணாவின் உருவப்படங்களை வைந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தவேளை அங்கு வந்த ரெலோ உறுப்பினர்கள் தோரணங்களை அறுத்தெறிந்து உருவப்படங்களையும் கிழித்தெறிந்து பொது மக்களையும் தாக்கியபொழுது அந்த இடத்திற்கு சென்று அவற்றை தடுக்க முயன்ற புலிஉறுப்பினர்களான முரளி என்பவரையும் மூத்த உறுப்பினரான பசீர்காக்காவையும் பலவந்தமாய் அடித்து இழுத்துச்சென்று தங்கள் முகாமில் அடைத்துவிட்டார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சிறீசபாரத்தினம் அதேகல்வியங்காட்டிலுள்ள முகாமில்தான் இருந்தார். முரளியையும் காக்காவையும் அடைத்து வைத்து விட்டு அவர்களை மீட்க எப்படியும் புலிகள் தாக்குதலிற்கு தயாராக வருவார்கள் அவர்கள் மீது தாக்குதலை தொங்கி அப்படியே தொடர்ச்சியாய் புலிகளை அழித்துவிடலாமென்கிற திட்டத்துடன் ரெலோ அமைப்பினர் தாக்குதலிற்கு தயாரான நிலையிலேயே இருந்தனர். ஊர் நிமைமைகள் அன்றைய புலிகளின் யாழ் மாவட்ட தளபதியான கிட்டு உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தபட்டு முரளியையும் காக்காவையும் ஒரு தாக்குல் மூலம் மீட்கலாமா அல்லது பேச்சுவார்த்தைமூலம் தீர்க்கலாமா என ஆலோசனை கேட்டிருந்தார்.
பிரபாகரனும் நிலைமைய சிக்கலாக்கமால் பேசித்தீர்க்கலாமென்கிற முடிவுடன் பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்பாமல் அப்பொழுது தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட புலிகளின் அலவலகத்திலிருந்த மூத்த உறுப்பினரும் சிறீசபாரத்தினத்திற்கு நன்கு பழக்கமான லிங்கத்தினை சிறீசபாரத்தினத்துடன் பேசுவதற்காக அனுப்பிவைத்தார். காரணம் கிட்டு கொஞ்சம் கோபக்காரர்.இப்படியான சந்தர்ப்பங்களில் அமைதியாகப்பேசமாட்டார். ஆனால் லிங்கம் எப்படிப்பட்ட சிக்கலான நிலைமையிலும் கோபப்படாமல் அமைதியாக பேசிகோபத்திலிருப்பவர்களையும் அமைதியாக்கி விடுவார். அதனால்தான் அவரிற்கு புலிகளின் மதுரை அலுவலகத்தினை நிருவகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அவசரமாக மாதகலில் வந்திறங்கிய லிங்கம் மேலும் இருவரை அழைத்தகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி கல்வியங்காட்டில் சிறீசபாரத்தினம் இருந்த முகாமிற்கு சென்று அங்கு தன்னை அறிமுகப்படுத்தி சிறீயுடன் கதைக்கவேண்டும் எனகேட்டதுமே லிங்கத்தை நோக்கி துப்பாக்கி சடசடத்தது. லிங்கம் அந்தவிடத்திலேயே இறந்துபோக அவருடன் கூடசென்றவர்களால் லிங்கம் கொல்லப்பட்ட செய்தி கிட்டுவிற்கு அறிவிக்கப்பட்டது.
அதற்கு மேலும் ரெலோவுடன் பேசிப்பயனில்லையென்று தெரிந்துகொண்ட புலிகள் அதிரடியாக ரெலோவின்மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முரளியையும் பசீர் காக்காவையும் மீட்டு இறுதியாய் சிறீசபாரத்தினமும் கொல்லப்பட்டதுடன் ரெலோவின் ஆதிக்கம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு புலிகள் அமைப்பினரைப்போலவே ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் சமமாய் இருந்தவர்கள் எனக்கருதப்பட்ட ரெலோ அமைப்பு புலிகளால் சுலபமாக அழிக்கபட்டதற்கு என்ன காரணங்களென பார்த்தால்.
1)ரெலோ அமைப்பு தனக்கு பின்புலத்தில் இந்தியா இருக்கின்றதென்கிற தைரியத்தில் தன்னுடைய சக்தியை அளவுக்கு மீறியதாக கற்பனை செய்து கொண்டதனாலும் . அவர்களது அடாவடித்தனங்கள் அதிகரித்தமையாலும்.உதாரணமாக யாழ்குடாநாட்டில் ஒரு வீட்டிலாவது ஒரு வாகனம் உருப்படியாய் நிற்க முடியாது முக்கியமாய் மோட்டார்சைக்கிள்கள். அவற்றை உடனேயே கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் அவற்றை தமிழ்நாடுவரை கொண்டு சென்று அங்கு பெரும்பணக்காரர்களிற்கு விற்றுவிடுவார்கள். அடுத்தது தொடர்ச்சியாய் பல கொள்ளைகள். இதனால் மக்கள் மனங்களிலிருந்து அன்னியப்படத்தொடங்கினர்.
2) புலிகளுடனான மோதலை வழிநடத்த சரியான அனுபவமுள்ள ஒரு வழிகாட்டி இல்லாததும் ஒருகாரணம். அத்தோடு மிக முக்கியகாரணமாக அமைந்தது அவர்களிடமிருந்த தாக்குதல்களை வழிநடத்துவதில் சிறந்தவர்களான தாஸ் மற்றும் காளியையும் அவர்களே யாழ்வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்று தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டதே. அது மட்டுமல்ல அதந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் நடாத்திய ஊர்வலத்திலும் பகிரங்கமாக கண்மூடித்தனமாக சுட்டதிலும் ஒருவர் இறந்து போனது மக்களிற்கு ரெலோ மீதான கோபத்தினை அதிகரித்திருந்தது.
3) புலிகளிடம் இருந்த அளவு ஆயுத ஆட்பலம் இருந்திருந்தாலும் ரெலோ அமைப்பிடம் தொலைத்தொடர்பு வசதிகள் இருக்கவில்லை . அதனால் அவர்களால் உடனுக்குடன் தலைமைக்கும் மற்றவர்களிற்குமிடையினாலான செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் பல குழுக்களாக தனித்துப்போயிருந்தனர்.
4)புலிகளுடனான சண்டை தொடங்கியதும் அதனை முன்னின்று வழிநடத்தாமல் தான் எப்படியாவது தப்பித்து தமிழ்நாட்டிற்கு ஓடிவிட்டால் போதுமென்கிற நினைப்பில் சிறீ சபாரத்தினம் தலைமறைவாகியதும் மற்றைய ரெலோ அமைப்பினரிற்கு ஒரு சலிப்பை கொடுத்தது. அவர்களும் தாங்களும் ஆயுதங்களை போட்டு விட்டு எப்படியாவது தப்பியோடி விடலாமென முடிவெடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் புளொட் இயக்க முகாம்களில் ஓடி ஒழிந்து கொண்டது.
5) எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய காலகட்டத்தில் புலிகளும் ரெலோவும் இராணுவ ரீதியில் சமபலத்துடன் இருந்ததாகவே பலரும் எண்ணினர். ஆனால் ரொலோ அமைப்போ தாங்கள் புலிகளைவிட பலமாக இருப்பதாகவே எண்ணினர். அவர்களின் இந்த எண்ணம்தான் புலிகளை தொடர்ச்சியாய் வலுச்சண்டைக்கு இழுக்கக் காரணமாயிருந்தது. ஆனால் புலிகள் ஆரம்பம் முதற்கொண்டு இன்று வரை தங்கள் முழுமையான ஆயுத இராணுவபலம் இதுதானென்று வெளியில் காட்டிக்கொண்டதேயில்லை. அதுமட்டுமல்ல புலிகளின் யுத்தஅனுபவங்களும் அவர்களின் ஆன்ம பலமும்தான் வழைமைபோல ரெலோவுடனான யுத்தத்திலும் வெற்றிபெறவைத்தது.
இவ்வாறான பல உண்மைநிலையையும், அனுபவங்களையும் கருத்தில் கொண்டு நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நம் நாட்டின் விடுதலைக்கும் மக்களின் சுதந்திர வாழ்வுக்கும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதே இன்றைய தேவை. எத்தனை கட்சிகள் இருப்பினும் அவை அனைத்துக்கும் சிங்கள இனவாத அரசிற்கும் அதன் செயற்பாடுகளுக்கும் எதிரானதாகவே இருக்கவேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் தமக்குள் குத்துப்படுவது தவிர்க்கப்படவேண்டியது. இவ்வாறு அனைவரையும் உள்வாங்கி செயற்பட்டால் தமிழரின் சுதந்திர வாழ்வு உறுதிசெய்யப்படும். சுதந்திர தமிழீழம் மலரும்....................................நன்றி ஈழத்தில் இருந்து ஈழவேந்தன்
Posted by நிலவு பாட்டு at 7:51:00 PM 3 comments
Labels: ஈழம்
தமிழினத்தை கருவருப்பவனுக்கு கௌரவமா
இவை எல்லாம் மலிவாய் மகிமை நாடுவாரா
அன்றி மானம் கேட்டு போன போக்கிரிகள்
என்று சொல்லி நாம் அழுவதா...
--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org
"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 7:42:00 PM 2 comments
Labels: ஈழம்
தி.க விலும் வாரிசு அரசியல் ..!!! - ஜூனியர் விகடன்
''எனக்குப் பின்னால் என்னுடைய புத்தகங்களும், தத்துவங்களுமே எனக்கு வாரிசு!'' - வாரிசு அரசியலை அறவே வெறுத்த தந்தை பெரியார், திராவிடர் கழகத்தை தொடங்கிய பிறகு உதிர்த்த வார்த்தைகள் இவை! ஆனால், இப்போது தி.க-விலும் வாரிசு வழிமுறை தொடங்கி விட்டது! திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி தஞ்சாவூரில் நடந்தது. அப்போதுதான், தி.க. தலைவர் கி.வீரமணியின் மகன் அன்புராஜ் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால் கறுப்பு சட்டைக்காரர்கள் மத்தியில் நிறைய பரபரப்பு! தி.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். ''தன் ஆண் குழந்தை அஞ்சு வயசுல இறந்தப்ப பெரியார், 'நல்ல வேளையா என் குழந்தை செத்துப் போச்சு. இல்லேன்னா வாரிசுங்கற பேர்ல எதிர்காலத்துல என் பொதுப்பணிகளுக்கு இடையூறு வந்துருக்கும்'னு அந்த சோகத்துக்கு மத்தியிலும் கம்பீரமாகச் சொன்னார். அப்படிப்பட்ட பாரம்பரியம் உள்ளது தி.க..! தற்போது கி.வீரமணி, தன் மகனை வாரிசாக நுழைத்திருக் கிறார். எப்பவுமே தேர்தல் சமயங்களில் யாரை ஆதரிப்பது என்பது பற்றிய விஷயங்கள் பேசுவதற்காக மட்டுமே பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும். இந்த முறை அப்படி எந்த ஒரு தேவையும் இல்லாத நிலையில், கடந்த மாதம் 2-ம் தேதி சென்னையில்
உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டினார் வீரமணி. பிறகு கடந்த 10-ம் தேதி திடீரென பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார். நாங்களும் ஒரு விதக் குழப்பத்துடனே கூட்டத்துக்குப் போனோம். கூட்டத்தைத் தொடங்கி வைத்து எடுத்த எடுப்பிலேயே வீரமணி, 'எனது உடல்நிலை மோசமாகிக்கொண்டே போகிறது. இனிமேல் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்வதை தவிர்க்கப் போகிறேன். முன்பு மாதிரி என்னை தொந்தரவு செய்யாதீர்கள்'னு பேசிட்டு உட்கார்ந்தார். அப்புறம், ஒரத்தநாடு குணசேகரன், 'ஐயா எதுக்கும் கவலைப்படக்கூடாது. நாங்க எல்லாரும் இருக்கோம். எல்லாத்துக்கும் மேல அன்புராஜ் இருக்கறப்ப எதுக்கு கவலைப்படறீங்க?'னு கண்ணீர் விட்டு அழுதாரு. எங்களுக்கு அப்பத்தான் விஷயமே புரிய ஆரம்பிச்சது. அடுத்த கைத்தடி களான நெய்வேலி ஜெயராமன், மாநில மாணவரணி அமைப்பாளர் ரஞ்சித் குமார் ரெண்டு பேருமே, 'தலைவர் உடல்நிலைதான் முக்கியம், இனி மேல் நீங்க முழுசா ஓய்வெடுக்கணும். கட்சிப் பொறுப்புகளை அன்புராஜ் மாதிரியான இளைஞர்களுக்குக் கொடுக்கணும்'னு ஜால்ரா போட்டாங்க. கடைசியில், 10 தீர்மானங்களை நிறைவேத்திட்டு, நிறைவாகப் பேசிய வீரமணி, 'இதுவரைக்கும் மேடையில் பேசிய தோழர்கள் எல்லாம் அன்புராஜை பொறுப்புக்குக் கொண்டு வரணும்னு கேட்டீங்க. எனக்கும் அதில் உடன்பாடுதான். இதுவரைக்கும் அன்புராஜ் கழகத்துக்காக நிறைய உழைச்சிருக்காரு. நாகம்மையார் குழந்தைகள் இல்லப் பொன்விழா, வாகைசூட வாரீர், விடுதலை பவழ விழா என முக்கியமான மூன்று நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்திருக்கார். அவர் மிகப்பெரிய தொழில் அதிபர். நிறைய விருதுகளை வாங்கியிருக்கார். அவரோட சேவை கழகத்துக்கு தேவை என்பதால், அவரை கழகத்தின் தலைமை நிலைய செயலாளரா அறிவிக்கறேன்'னு சொன்னாரு.
அதோடு, 'இந்த அறிவிப்புக்கு எதிராக என்ன விமர்சனங்கள், பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்த வீரமணி தயாராக இருக்கிறான்'னு சொல்லி அமர்ந்துட்டார். உடனே மாநில துணை பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் எழுந்து 'எல்லாரும் இந்த அறிவிப்பை வரவேற்று எந்திரிச்சு நின்னு கைதட்டணும்'னு மைக்ல சொன்னார். ஆனால், அரங்கத்திலிருந்த ஒருசிலர் தவிர யாருமே எந்திரிக்கவுமில்லை, கைதட்டவுமில்லை! எல்லோருக்கும் இந்த முடிவு ஷாக்தான். அதைப் புரிஞ்சுகிட்டு உடனே கூட்டத்தை முடிச்சுட்டாங்க. வீரமணியும் அவசரமா வெளியே போயிட்டாரு. தி.மு.க-வில் மு.க.ஸ்டாலின்கூட மிசா காலத்தில் கட்சிக்காக அடிபட்டு, ஜெயிலில் மிதிபட்டு கஷ்டப் பட்டார். ஆனால், அன்புராஜ் எந்த சிறைக்குப் போனார்? எந்த சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்? தி.க-வை இன்றும் பெரியளவில் பேச வைத்துக்கொண்டிருக்கும் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டாரா... இல்லை கட்சிப் பொறுப்புகளில்தான் இருந்தாரா? இப்படி எந்தத் தகுதியும் நிரூபிக்காத ஒருவர் தி.க-வின் மிக முக்கியமான பதவிக்கு எப்படி வரலாம்? பெரியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக நடக்கற அத்தனை நிகழ்ச்சிகளையுமே அங்கே பணியாற்றுகிற ஆட்களை வைத்துப் பார்த்துக் கொள்கிற அன்புராஜ் கட்சித் தொண்டர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவரல்ல. இப்படிப்பட்டவர் நாள்தோறும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டிய தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து தொண்டர்களிடம் எப்படிப் பேசுவார்?'' என கொதிப்போடு கேட்டார்கள். தி.க-விலிருந்து பிரிந்து கருத்து வேறுபட்டுப் பிரிந்து சென்ற பெரியார் திராவிடர் கழகத் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணனிடம் பேசினோம். ''தி.க. என்கிற பெரியாரின் சொத்தை, தன்னோட சொத் தாக மாத்திக்க நினைக்கறார் வீரமணி. அதுக்காகத்தான் தன் மகன் அன்புராஜுக்காக வாரிசு முறையை ஏற்படுத்தியிருக்கார். இதற்காக ஒரு வருடமாகவே பல்வேறு விஷயங்களைச் செய்துவந்தார் வீரமணி. விடுதலை பவழவிழா மாநாட்டுக் குழுவுக்கு அன்புராஜை தலைவராப் போட்டார். மாணவரணி மாநாடுகளில் அன்புராஜையே புரவலராக்குனாரு. 'பெரியார்' படத்தை எடுத்த லிபர்டி கிரியேஷன்ஸோட இயக்குநரும் அன்புராஜ்தான். திராவிட நலநிதி நிறுவனத்திலும் அன்புராஜ், அவர் மனைவி சுதா, வீரமணியின் மனைவி மோகனா, வீரமணி என குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் மட்டுமே இயக்குநர்கள். தி.க-வின் மிக முக்கிய டிரஸ்ட்டான பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்திலும் அன்புராஜ், சுதா உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே இயக்குநர்கள். 'விடுதலை' பத்திரிகையையும் வாய்மொழி உத்தரவா அன்புராஜ்தான் பார்த்துக்கறார், கலிபூங்குன்றன் சும்மா ஒரு பொம்மை மாதிரிதான். 'திராவிடன்' பதிப்பகத்தோட இயக்குநரும் அன்புராஜ்தான்!'' என்றார் ராமகிருஷ்ணன். ஆனால், தி.க-விலேயே ஒருதரப்பினர், ''அன்புராஜ் ஒண்ணும் திடீர்னு கட்சிக்கு வந்துடலை. சில வருடங்களாகவே கட்சிக்கு முதுகெலும்பு மாதிரி இருக்கிறார். திருச்சியில் நாகம்மையார் இல்லத்தின் 50-ம் ஆண்டு விழாவை மிகச்சிறப்பா நடத்தினதோட, நிறைய தொகையை மிச்சப்படுத்தி வீரமணி ஐயாகிட்ட கொடுத்தார். அதை வைச்சுத்தான் கோடி ரூபாய் செலவில் விளையாட்டு அரங்கம் கட்டினாங்க. இப்படி கட்சியோட எல்லா நிகழ்வுகளையும் எந்தப் பொறுப்பும் இல்லாமல் அவர்தான் சிறப்பா செய்யறார். பொறுப்பு கொடுத்தா இன்னும் சிறப்பா செயல்படுவார். அதனாலதான் கட்சியோட வளர்ச்சிக்காக அன்புராஜுக்கு பொறுப்பு கொடுத்திருக்காங்க!'' என்று கூறுவதையும் கேட்க முடிகிறது. இந்தப் பரபரப்புகள் குறித்து கி.வீரமணி யிடமே பேசினோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர், ''தற்போதைய சூழலில் நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை...'' என்று மட்டும் கூறினார். அவரிடமிருந்தோ தி.க. தலைமையகத்திலிருந்தோ இது குறித்து வரும் விரிவான விளக்கங்களுக்காக, வாசகர்களைப் போலவே நாமும் காத்திருக்கிறோம். | |
|
Posted by நிலவு பாட்டு at 7:35:00 PM 0 comments
இப்படியும் கூட நடந்திருக்கலாம்...!!!
பங்கேற்ப்போர்: இந்திய எம்.பிக்கள் குழு, முகாம் மக்கள்
Posted by நிலவு பாட்டு at 7:32:00 PM 0 comments
Labels: ஈழம்
கற்பு காத்த காவலர்
கலைஞரே உமது திருவிளையாடல் எம்மாம் பெருசு
இலங்கை மக்கள் குண்டு மழையில் செத்த போது கடிதம் எழுதுவது
அவர்களுக்காக போராட்டம் பெரிய அளவில் நடக்கும் போது
போலீச விட்டு வக்கீலையும் லீவு உட்டு மாணவர்களையும் நசுக்கு
போராட்டம் முடிந்ததும் தேர்தல் வெற்றில் இத்தனை மந்திரிகள் வேணும்னு
போராடி போராடி பெற்றீரே உமது அருமை தெரியாத சனங்கள்
நீர் இலங்கைக்கு அநீதி இழைத்ததா சொன்னது இதோ இந்திய குடியுரிமை
என இந்திய குடியுரிமையை இலவச வேஸ்டி கணக்கா சும்மா தூக்கி போட்டீரே
"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் " என உமது வசனத்துக்கு தகுந்தாப்பல
இல்லையா நீர் நடந்து கொண்டீர் . தினமலர் காரன் என்னென்ன எழுதினான் லங்கை பிரச்சனையில்
இந்திய ஆளும் வர்க்கத்தின் பார்பனியத்தின் கூசாவாக திகழ்ந்த அவனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு
நமீதாவும் , ஸ்ரீதேவியும் விபசாரம் பண்ணுவதாக புவனேஸ்வரி சொன்னார் என போட்டதற்கு
எழுதியவரை உள்ள தூக்கி வச்சு "நமீதாவின் கற்பை " காப்பாற்றிய உம்மை
" கற்பு காத்த காவலர் " என பட்டம் கொடுத்து புகழலாம் .
வாலி கிட்ட சொன்னா கவிதை அலையை தோற்று வித்து இதுபோல
உமது புகழை தமிழால் பாடி தமிழுக்கு பெருமை சேர்த்து இருப்பாருல்ல
எம்பி குழு போய் " அட நீங்க வேற மூனு வேளையும் பிரியாணி துண்ணுட்டு
இருக்காங்கன்னு சொன்னதும் " நாங்க் உங்களை நம்பிருவம்னு என்னமா
யோசிச்சு ஒரு முடிவு எடுத்தீங்க அதை பாராட்ட வார்த்தையே கிடையாது கலைஞரே
" நீ தண்ணி அடிக்கறவன் தானே' ன்னு சொல்ல " நீ ஊத்தி கொடுத்தியான்னு; கேட்டு
மோதிகிட்டு திரிந்த விசயகாந்து , செயா மாமியும் கூட்டு சேர்ந்து நம்ம டவுசரை
வரும் எலக்சனில் கழட்ட வாய்ப்பு இருக்குன்னு தெரிந்ததும் ' மருத்துவரை "
கூப்பிட்டு வந்துரு நாம ஒன்னா இருக்கலாம் என சொன்ன உமது மதியூகத்துக்கு
முன்னால் இந்த பயலுவ நிக்க முடியுமா/
கிடக்கிறதெல்லாம் கிடந்துட்டு போவுதுன்னு இப்போ பத்திரிக்கை -சினிமா உலக சண்டையை
சுவைத்து பார்க்கும் நீர்
நாளை அவனுகளை அழைத்து "பத்திரிக்கை யாளர் குடும்ப பாதுகாப்பு நிதி" அப்படின்னு
ஒன்றை ஏற்படுத்தினா சும்மா வாலை இந்த பக்கம் அந்தபக்கம் ஆட்டிகிட்டு
உமது புகழை இந்த பத்திரிக்கை எழுதாதா என்ன /
கலைஞரே உம்ம மாதிரி ஆளுக இருக்கிற வரை
நூறு பெரியாரில்லை ஆயிரம் பெரியார் வந்தாலும்
"திராவிட மாயையை " ஒழிக்க முடியான்னேன்
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 7:31:00 PM 0 comments
Labels: ஈழம்
மூன்று லட்சம் தமிழர்களை முட்கம்பி பின்னால், உலகமே கதறுகிறது, இந்த குழு பக்சேக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வந்துள்ளது
வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்குப்பின்னால் சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அகதிகளின் நிலைமையை நேரில் கண்டறிவது மற்றும் அவர்களை விரைந்து விடுவித்து மீள்குடியேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வது ஆகிய இலக்குகளுடனேயே இக்குழு இலங்கை வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் அதை விட வேறு உள் நோக்கங்கள் இக்குழுவுக்கு இருக்கலாம் என்றும் தமிழர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்படு கின்றது.
இந்தக் குழுவினரின் வருகைக்கான ஏற்பாடுகள், ஒழுங்குகள், நடைமுறைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடியோடு பிடிக்க வில்லை என்று தெரியவந்தது. சரியோ, பிழையோ இலங்கை நாடாளு மன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்குத் தமிழர்கள் 23 பேரில் 22 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இன்று சிறைவைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் வன்னித் தமிழர்களை நாடாளுமன்றில் பெருமளவில் பிரதி நிதித்துவப்படுத்துபவர்களும் கூட்டமைப்பினரே.
எம். மக்களின் வருகை மூடுமந்திரமாக இருந்தது
இந்த மக்களின் அவலநிலைமையை உண்மை நிலைவரத்தை கண்டறிவதாயின் அதற்கான ஏற்பாடுகளை அந்த மக்களின் பிரதி நிதிகளுடனேயே செய்ய வேண்டும். ஆனால் இந்திய எம்.பிக்கள் குழுவின் வருகை பெரும் மூடுமந்திரமாகவே வைக்கப் பட்டது. தமிழ்க் கூட்டமைப்பினருடன் ஒரு சுமுகமான தொடர்பாடலைப் பேணாமலேயே இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆக, கூட்டமைப்பினருடன் ஒரு சந்திப்பு குறுகிய கால முன்னறிவித்தலுடன் ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்டது. அதுவும் ஒன்றே கால்மணி நேரத்துக்குள் அவசரமாக முடிக்கப்பட்டது. சந்திப்பின்போது இந்திய எம்.பிக்கள் தரப்பில் பிரதிபலிக்கப்பட்ட கருத்துக்கள் கூட்டமைப்பு எம்.பிக்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தின என்று கூறப்படுகின்றது. இலங்கைத் தரப்புடன் ஓர் உடன்பாடு கண்டு, அதனடிப்படையில் சில விடயங்களை ஒப்பேற்றவே இந்த எம்.பிக்கள் குழு இலங்கை வந்துள்ளது என்ற எண்ணம் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் "உதயனு" க்குத் தெரிவித்தார்.
காங்கிரஸின் மூத்த எம்.பி. சொன்ன காரணம்
"இந்த அகதிகளை மீளக் குடியேற்று வதை இலங்கை இராணுவம் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிகின்றது. அதையும் மீறி அகதிகளை மீளக் குடியேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயன்றால் அவருக்கு எதிராக இராணுவம் கிளம்பும் சாத்தியம் உண்டு. அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அதில் இராணுவத்துக்கு சார்பாக சீனா தலையிடும் சூழல் உண்டு. இதை யெல்லாம் நாம் கணக்கில் எடுக்க வேண்டி உள்ளது.'' என்ற சாரப்பட இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.ஒருவர் இந்தச் சந்திப்பில் கூறியிருக்கின்றார். இது, இக்குழுவினரின் உள் நோக்கம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் மத்தியில் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும், இந்தச் சந்திப்பில் அகதிகளின் நிலைமை குறித்துப் பேசி முடிப்பதற்கிடையிலேயே நேரம் போய்விட்டதாகக் கூறி சந்திப்பு முடித்துக் கொள்ளப்பட்டு விட்டது.
"தமிழர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய வந்தவர்கள் தமிழர் தரப்பின் முக்கிய பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்து யாடாமல் முடித்துக் கொண்டமை முறித்துக் கொண்டமை வேறு உள்நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நிரலுடன் இக்குழுவின் விஜயம் அமைந்துள்ளது என்ற கருத்தையே எமக்குத் தந்துள்ளது.'' என்றார் கூட்டமைப்பின் இன்னொரு எம்.பி.
தமிழர்களின் அவல நிலைக்கு இந்தியாவே காரணம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்
"ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்குப் பிரதான காரணகர்த்தாக்களில் இந்தியாவும் ஒன்று. அவர்களால்தான் இந்த அவல நிலை இலங்கைத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ளது. இதை இக்குழுவினருக்கு உணர்த்த முன்னரே சந்திப்பை நேரம் போதாது என முடித்துவிட்டார்கள். யாராவது ஒருவர் இதை அவர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்த வேண்டும்.'' என்றார் இன்னொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எண்மர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஆவர்.ஆனால் யாழ்ப்பாணத்துக்கான இந்தக் குழுவினரின் விஜயம் எஞ்சியுள்ள ஓர் எம்.பியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் திரு விழாவாக நடத்திக்காட்டப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் எடுபட்டு, இக்குழுவினர் இலங்கை அரசு சார்பானவர்களாகவே செயலாற்றும் அவலம் ஏற்படும் என்று தமிழ்க் கூட்டமைப்பின் மற்றொரு எம்.பி. முற்கூட்டியே எச்சரிக்கை செய்துள்ளார்.
இக்குழுவினரின் இலங்கை வருகைக்கான பிரதான நோக்கம் வவுனியாவில் முடக்கி வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் தமிழர்கள் பற்றியதே. எனவே, அவர்களின் வருகையில் கணிசமான நேரம் அந்த அகதிகளுடனான சந்திப்பாகவே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது நேற்று மாலை சில மணி நேரத்துடன் முடிந்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எல்லா அகதி முகாம்களுக்கும் இந்தக் குறுகிய நேரத்துக்குள் சென்று விடயத்தை முடித் துக்கொள்ளலாம் எனக் கூறுவது அபத்தமாகும். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அகதிகளையும் இணைத்துக்கொண்டு வராமல், தமிழகத்தின் ஆளும் தி.மு.க. கூட்ட ணியில் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை மட்டும் அதுவும் இந்திய மத்திய அரசின் தூதுக்குழுவாக அல்லாமல் தமிழக முதல்வரின் தூதுக்குழுவாக அனுப்பி வைத்திருக்கின்றமையும் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியிருப்பதாகத் தமிழர் தரப்பில் கூறப்பட்டது.
Posted by நிலவு பாட்டு at 7:25:00 PM 0 comments
Labels: ஈழம்
மூத்த தமிழ் மகன்??????????
முத்தமிழ் வித்தகர் என்றும்-மூத்த
தமிழ் மகன் என்றும் -முடி
சூடும் கலைஞர் பெருமானே-தாங்கள்
இன்று முதல் கொலைஞர் பெருமான் ஆகுக!
பாதிக் காலம் பதவியில் இருந்து விட்டும்
மீதிக் காலமும் பல்லக்கில் பவனி வரும் கனவானே
சேற்றுக்குள் புழுவாய் செந்தமிழன் சீரழிதல்
கண்டும் சினம் கொள்ளா தன்மான சிங்கமே!
மனைவி துணைவி என்ற வாழ்வுண்டு - மக்கள்
மூவர்க்கு மகத்தான பதவியுண்டு - சுற்றம்
சூழலுக்கும் பேரக்கொளுந்துகளுக்கும் - சொந்தமாய்
டி.வீயுண்டு - உடன் பிறப்புகளுக்கு மட்டும் ?
உடுத்த உடையுமில்லை உண்ண உணவுமில்லை
பிஞ்சு மழலைகளுக்கு கஞ்சிக்கும் வசதியில்லை
இல்லை என்பதே நிறைந்து கிடக்குது - தமிழன்
உயிர்கள் மட்டுமே மலிந்து கிடக்குது.
குளிரை போர்த்தி உறங்குகிறார் - எம்மினம்
கழி நீர் போல வாழ்கின்றார் - உயிரை
கூட கொடுக்கிறோம் - மு.க
எங்கள் உணர்வை மட்டும் கொள்ளாதே!
மானாட மயிலாட மகிழ்ச்சி தான் - குறைப்
பாவடையில் தாயினம் தேய்மானம்
ஆவதும் குளிர்ச்சி தான்- பண்பட்ட தமிழுக்கு
உங்களின் பங்கு ஓங்குக! - ஓரிரு
நொடியேனும் எங்களின் அலறலை - உலகுக்கு
சொல்லுமையா ! - பாதக் கமலதிட்கு
செருப்பை இருக்கிறோம் - நெருப்பாய்
இருக்க வேண்டியவரே - ஏன்
இப்படி செருப்பாய் இருக்கிறீர்?
தமிழச்சி மார்பில் தான் மழலை
பசி தீர்தீரோ? பிறகேன் பன்றி
கூட்டத்திடம் - பல்
இழித்து நிற்கிறீர்?
இளைப்பாறும் போதிலேனும் தமிழனுக்கு
எள்ளளவேனும் ஏதும் செய்குக!
உளியின் ஓசை வடித்தவரே - எங்கள்
வலியின் ஓசை மட்டும் கேட்கலையோ?
வீழ்வது மு க வகா இருப்பினும் எழுவது
தமிழினமாய் இருக்கட்டும்.- வெல்க தமிழ்!
நன்றி:
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
--
அ.புபேசு மோகன்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற காணப்படும்.
The worthy and the unworthy
Are seen in their posterity
-திருக்குறள்
-Holy Kural
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 7:24:00 PM 0 comments
வருவோம் மீண்டும் புலியாக ! நீ அழிய காத்திரு சுனாமியாக !
தமிழா!
மூவேந்தர்களின் வாள் ஆண்ட பூமியை ! இன்றோ
முண்டாசு கட்டிக்கொண்டு ஆள்கின்றன பல முண்டங்கள்,
சேற்றிலும் சகதியிலும் விழ்ந்து கொண்டுள்ளோம் !
என்றோ பார்ப்பானியத்தில் விழுந்ததால்,
துர்நாற்றத்தை உணர ஆரம்பித்து விட்டோம்!
நீ இன்னும் சாக்கடை அரசியலை அனுமதிப்பதால்,
சிறகுகள் இருந்து பறக்க விட்டால்
சிறகுகள் முதிர்ந்து போகும் !
உறவுகள் இருந்து பழாக விட்டால்
வாழ்க்கை வெறுத்து போகும்!
உறவுகள் அழிந்து கொண்டிருக்க
நமக்கு ஏன் இன்னும் உறக்கம்,
இன்று எனக்குள் எரிகின்ற கோபம்!
நாளை உனக்குள்ளும் சுடர் விடுமடா ,
என் கிராமத்தின் இயற்க்கை
எந்தன் இதயத்தை வருடிச்செல்ல !
என் தாயின் அரவணைப்பு
எந்தன் முச்சை உயிரோடு அணைக்க !
என் தங்கையின் சிரிப்பொலி
எந்தன் நினைவுகளை கொய்ய !
என் தோழியின் குறும்புகள்
எந்தன் சிறகுகளை வானில் பறக்க விட!
இத்தனை உயிருள்ள உணர்ச்சிகளுக்கும் மத்தியில்
நான் வாழ நினைக்கிறேன் தீப்பிழம்பாய்!
காக்கை இனத்தின் ஒற்றுமை அதன் நிறத்தில்!
இரவின் ஒற்றுமை அதன் வெளிச்சத்தில் !
சாலைகளின் ஒற்றுமை அதன் பிரிவில் !
கடலின் ஒற்றுமை அதன் அலையில் !
கார் மேகத்தின் ஒற்றுமை மழைத்துளியில்!
இத்தனை ஒற்றுமைகளுக்கும் இயற்கை சாட்சியாக!
நமது இனத்தின் ஒற்றுமை எதன் சாட்சியாக ?
அடேய் திராவிடத்தை உனது செருப்பாக
மாற்றிய கருநாக பாம்பே !!!!!!!!!!!!!!!!!!!
இட்லிக்கு மாவாட்ட முடியாமல் என் இன அழிவிற்க்கு
வாலாட்டி கொண்டிருக்கும் இத்தாலி சூனியக்காரியே!
நீங்கள் சிதைத்த கண்ணாடி துண்டுகளில்
மீண்டும் உங்கள் முகத்தை பார்க்க நினைக்கிறிர்கள் போலும் !
புரிந்துக்கொள் அந்த துண்டுகளின் கூர்மை கூட
காத்திருக்கும் ஒருநாள் உங்களின் உயிரை காவு வாங்க!
வேதங்களில் சொல்லாத வேதத்தை ! உனக்கு
உணர்த்த புறப்பட்டு விட்டான் எந்தமிழன்,
நீ கட்டவிழ்த்த கதைகளுக்கு ! பதில்
கொடுக்க புறப்பட்டு விட்டான் எந்தமிழன்!
மூடுபனி சாலையிலே நீ நடக்கும் பொழுது
உன் கண்ணுக்கு தெரிவது கருமை நிறம் மட்டுமே !
அது எந்தமிழ் இனத்தின் நிறம் ! சற்றும்
திரும்பி பார்த்து விடாதே ! காத்து கொண்டுள்ளான்
உங்கள் எகத்தாள பேச்சுக்கு முடிவுகட்ட,
என்றோ செய்த ஒரு தன்மான பிழைக்கு
எங்கள் உறவுகளை தொலைத்தோம் அன்றோ!
இன்றோ மேலும் ரத்தபலி கேட்டால்!நாங்கள்
ஒன்றும் உன் விருந்துக்கு வந்த கோழி அல்ல!
உண்மைகளை உலகுக்கு உணர்த்த வந்த புலி,
நாங்கள் பதுங்கும் நேரம் உனது தோல்விக்காக!
நாங்கள் பாயும் நேரம் உனது அழிவுக்காக !
வருவோம் மீண்டும் புலியாக !
நீ அழிய காத்திரு சுனாமியாக !
சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்
அன்புடன் தோழன்
....மதன் (பகலவன்) ....
. குவைத்
Posted by நிலவு பாட்டு at 1:12:00 PM 0 comments
கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்தியத் துரோகம்!
ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்துகொண்டார்.
கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர். கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
தமிழகம் அமைதியானது. அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள். நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது.
மனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாக்கிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது. இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறியபோது தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார்.
தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர். வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.
நடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது.
இது இதுவரை இந்தியா மேற்கொண்டுவந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது. மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய சிறிலங்கா தொடர்பான கொள்கை மாற்றம் ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.
இதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும் மேனனும் சிறிலங்கா சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமிழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள். தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள்.
இந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது. சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார்.
தமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும். இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது.
நன்றி: ஈழநாடு (பாரிஸ்)
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 8:29:00 AM 0 comments
Labels: ஈழம்
Wednesday, October 14, 2009
ராசபக்சேவுக்கு கிடைத்த வைரம் கருணாநிதி, பச்சை தமிழின துரோகியாக திருமா
இன்று தமிழினம் எப்படிப்பட்ட ஒரு அழிவினில் இருந்தாலும் அதை பற்றி துளியும் கவலை கொள்ளாது தனது ஆட்சி ஒன்றே குறியாக இருக்கும் கருணாநிதிக்கு கண்டிப்பாக இந்த தமிழின வரலாறில் ஒரு துரோகியாகவே பார்க்கப்படுவார் எத்தனை தலைமுறைகளுக்கும்.
இன்னும் தேவையானால் இன்னுமொரு குழுவினை அனுப்பி அங்குள்ள தமிழர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று காங்கிரஸ் சொல்லச்சொன்னால் அதையும் ரொம்ப நல்லாகவே செய்வார்கள்.
பல் பிடிங்கப்பட்ட பாம்பாக திருமாவளவன், இவரு அறிக்கையை கருணாநிதிட்ட தனிப்பட்ட முறையில் கொடுப்பாராம், அவரு அதை அப்படியே குப்பை தொட்டியில தூக்கி போடுவாராம். பச்சை தமிழின துரோகியாக தன்னை காட்டி கொள்கிறார். நாமல்லாம் இவரு இன்னமும் தமிழினத்துக்கு குரல் கொடுப்பாருன்னு நினைச்சிட்டு இருக்கனுமாம். என்ன ஒரு பித்தலாட்டம்.
இது மாதிரி துரோகிகளும், முட்டாள்களும் இருக்கும் வரை நம்மை மலையாளி, கர்நாடகா, தெலுங்கன், சிங்களன் எங்கேயும் மதிப்பு மரியாதை கிடைக்கப் போவதில்லை.
Posted by நிலவு பாட்டு at 8:26:00 PM 5 comments
Labels: ஈழம்
கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்தியத் துரோகம்!
ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்துகொண்டார்.
கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர். கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
தமிழகம் அமைதியானது. அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள். நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது.
மனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாக்கிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது. இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறியபோது தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார்.
தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர். வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.
நடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது.
இது இதுவரை இந்தியா மேற்கொண்டுவந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது. மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய சிறிலங்கா தொடர்பான கொள்கை மாற்றம் ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.
இதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும் மேனனும் சிறிலங்கா சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமிழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள். தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள்.
இந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது. சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார்.
தமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும். இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது.
நன்றி: ஈழநாடு (பாரிஸ்)
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 6:18:00 PM 0 comments
Labels: ஈழம்
Tuesday, October 13, 2009
கள்ள சிரிப்பழகி, மனசு தாங்கமுடியலையே
என்ன ஒரு ஆனந்தம் இவர்களின் முகத்தில், வாயெல்லாம் பல். இப்படி இவர்கள் வாழ்க்கையில் என்றாவது சிரித்திருப்பார்களா என்றால் ஆச்சரியம்தான். தமிழனை அழித்த கயவனிடன் கொஞ்சி, சிரித்து பேசி விளையாடும் இவர்களும் மனிதர்கள்தானா. அட மானங்கெட்ட தமிழினமே நீ அழிந்து போ இது போன்ற துரோகிகளை நீ இன்னும் பதவியில் அமர்த்து வரை.
Posted by நிலவு பாட்டு at 9:33:00 PM 7 comments
Labels: ஈழம்
இலங்கை நட்பு நாடாம் ?! டி.ஆர்.பாலு
தமிழர்களும், சிங்களவர்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்று தமிழனின் சுடுகாட்டில் நின்று கொண்டு சொல்கிறீர்கள் கொஞ்சம் கூட நாகூசாமல்...முகாம்களை பார்த்தோம், எந்த வித கட்டுப்பாடுகளும் எங்களுக்கு விதிக்கப்படவில்லை, முழு சுதந்திரம் கொடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சே என்று புகழாரம் சூட்டுகிறீர்கள்..! ஈழதேசம்.கொம் நினைத்தது நடந்து விட்டது..வதை முகாம்களை பற்றி மேற்கத்திய நாடுகள் தினசரி சொலிக்கொண்டு வரும் நிலையில், நீங்கள் இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்கள்..!
ஒரு லட்சம் பேரை கொன்ற உலகின் மிகப் பெறும் போர்க் குற்றவாளி உங்களுக்கு நண்பன், அதுவும் தமிழ்நாட்டு எம்பி, திராவிடம்,தமிழர் என்று பேசக்கூடிய கட்சியை சேர்ந்தவர், உலகத் தமிழ் மாநாடு வேறு நடத்தப் போகிறீர்கள் !
மூன்று லட்சம் மக்களை தினசரி கொடுஞ் சித்திரவதைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு கொடிய மனித மிருகம் மகிந்த ராஜபக்சே...முழு சுதந்திரம் கொடுத்துள்ளார், நட்பு நாடு, நண்பர் என்றெல்லாம் முகாம்களை பார்த்து விட்டு வெளியில் வந்து சொல்கிறீர்கள் என்றால் உங்களின் கொடிய மூர்க்கத்தனமும், திமிரும்,ஆணவமும் அல்லவா வெளிப்படுகிறது...வதை முகாம்களை பார்வையிட்டோர்கள் மூன்று நான்கு நாட்கள் உணவு உண்ண முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் நிலையில், நீங்கள் முகாம்களை பார்த்து விட்டு கொஞ்சம் கூட மனிததன்மையற்ற நிலையில் சொல்கிறீர்கள் ..! இலங்கை அதிபர் நண்பர் என்று..!
உங்கள் கூட்டத்தினர் விரைவில் இந்த செயல்களுக்கான பயன்களைப் பெறுவீர்கள்...! நீண்ட நாட்கள் செல்லாது உங்களின் இந்த செயல்களும், மகிந்த ராஜபக்சேவின் அரசும்..தலைவர் வருவார் வென்றெடுப்பார் ஈழத்தை...!
விண்ணகன்,ஈழதேசம்.கொம்
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 6:10:00 PM 3 comments
Labels: ஈழம்
Sunday, October 11, 2009
உரையாடல் :ராஜா பக்சே and திமுக MP குழு
திமுக MP குழுவிற்கும் ராஜா பக்செவிற்கும் நடக்கும் உரையாடல் . திமுக MP குழு : ராஜா பக்சே வணக்கம்!. இங்கே முகாமில் உள்ள தமிழர்களை பாத்துட்டு போகலன்னு வந்தோம் . ராஜா பக்சே : ஆமாம் . நான் தான் கலைஞர் கிட்ட சொல்லி ஒரு 4 or 5 பேரை வர சொன்னேன் . கலைஞர் ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டார் . அங்கே தமிழ்நாட்டில் எதிர் கட்சிகளை சமாளிக்க முடியலயாமே?. திமுக MP குழு : ரொம்ப நன்றி சார் . கலைஞர் உங்கள் நலம் பற்றி மிக கேட்டதாக சொல்ல சொன்னார் . ராஜா பக்சே : நான் கலைஞர்க்கு ரொம்ப கடமை பட்டு இருக்கேன் . சிங்கள மக்கள் , சிங்கள தலைமுறை ரொம்ப கடமை பட்டு இருக்கு . சீன போரில் weapons கொடுத்து உதவுச்சு . பாகிஸ்தான் கொடுத்து உதவுச்சு . ரஷ்ய உதவுச்சு . இவர்கள் உதவி எல்லாம் உங்கள் தமிழர்களை கொல்ல நல்லா உதவிச்சு . ஆனா இந்தியா உதவி செய்யலைனா நாங்க கண்டிப்பா ஜெயிச்சிருக்க முடியாது . இந்தியா உதவ முடிச்சந்துக்கு காரணம் உங்கள் தமிழ் தலைவர் கலைஞர் தான் . எனவே எங்கள் சிங்கள army தமிழ் மக்களை கொல்வதற்கு உதவிய கலைஞர்க்கு ரொம்ப நன்றி. திமுக MP குழு : என்னங்க ரொம்ப சின்ன உதவிய பெருசு படித்திகிட்டு . ராஜா பக்சே : போரில் சாகாதவர்களை ஒரு 4 or 5 முகாமில் அடைத்து வைத்திருக்கிறேன் . அவர்களை பார்த்திவிட்டு எல்லாம் நல்லா இருக்குன்னு போய கலைஞர் கிட்ட சொல்லுங்க. Army truck வந்தாச்சு . நீங்க எல்லாரும் பின்னாடி ஏறிகுங்கங்க. driver menik முகாமுக்கு உங்களை ஒட்டிடுண்டு போவாரு . திமுக MP குழு : ரொம்ப நன்றி சார் . All DMK MPs board the Army truck now and reach Menik farm. Army Truck Driver: Menik முகாம் வந்தாச்சு . இங்கேதான் நெறையா பேர் இருக்கங்கக . Gate இல என்ட்ரி பண்ணிட்டு உள்ள போங்க . Army men உங்களை கூட்டிட்டு போவார்கள் . திமுக MP குழு : சரிங்க சார் . Army men: வாங்க எல்லாரும் sign பண்ணுங்க . Everybody signs திமுக MP குழு : இங்க நாங்க போட்டோ எடுக்கலாமா ?. Army men: போட்டோ எல்லாம் எடுக்க கூடாது . எல்லா பாத்து முடிச்ச பிறகு நாங்க சில photos தர்றோம் . உங்களையும் போட எடுத்து தர்றோம் . எடுத்து போங்க. உங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு . நீங்க கலைஞர் அனுப்பிச்ச ஆளுங்க . so no problem. திமுக MP குழு : முதல்ல சாப்பட்டு வசதி பாக்கலாமா ?. Army men: ரைஸ், bread எல்லாம் கொடுக்க பணமில்ல . சத்துமாவுதான் மூணு நேரமும் கொடுக்கிறோம் . சில நேரம் water கொடுப்போம் . பால் எப்போதாவது கொடுப்போம் . Army men: சரிங்க சார் . திமுக MP குழு : Toilet வசதி பண்ணி இருக்கா?. Army men: மொத்தம் 10 toilet இருக்கு . திமுக MP குழு : 3 lakhs மக்களுக்கு 10 toilet தானா?. Army men: இதுவே போதும்னு enga president சொல்லிடாரு . toilet வசதி கிடைக்காதவங்க அவங்க கூடாரம் முன்னாடி உள்ள ditch -ல தான் போய்க்கனும் . திமுக MP குழு: Hospital , schools எதாவது?. Army men: அதெல்லாம் கட்டிக்கிட்டு இருக்கோம் . திமுக MP குழு: சரிங்க sir. Army men: உங்கா time ஓவர் ஆயிடுச்சு . வந்ததுக்கு நன்றி . நம்ம கலைஞர் -ஐ கேட்ட தாக சொல்லுங்கள் . Army truck comes back to colombo. DMK MPs meet again Raja Pakse திமுக MP குழு : நல்லா சுத்தி பார்த்தோம் . ரொம்ப நல்லா இருந்தது . மக்கள் எந்த problem இல்லாம இருக்காங்க . இதை நாங்க கலைஞர் கிட்ட சொல்ல்றோம் . ராஜா பக்சே: நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்வதற்கு நன்றி . மறுபடியும் கலைஞர்க்கு என் நன்றியை சொல்லுங்கள் . Written by Senthil |
Posted by நிலவு பாட்டு at 6:53:00 PM 1 comments
Labels: ஈழம்
Saturday, October 10, 2009
போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக தொடரும் சித்திரவதைகள்: ஆனந்த விகடன் தெரிவிப்பு
இலங்கையை ஆள்வோர் 'விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது' என்று ஒருபக்கம் மார் தட்டிக்கொண்டே, போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இன்னமும் சித்திரவதைகளைத் தொடர்கிறார்கள்! இவ்வாறு இந்திய தமிழ் சஞ்சிகையான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.
இந்தவாரம் வெளிவந்துள்ள ஆனந்த விகடன் சஞ்சிகையில் ஆசிரியர் தலையங்கத்தில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது்-
பிரதமர் மன்மோகன்சிங்கும், ஆளும் காங்கிரஸின் தலைவி சோனியா காந்தியும் தீமைக்கு எதிராக வில்லேந்தி நின்ற தசரா கொண்டாட்டக் காட்சி - தமிழனைப் பொறுத்தவரை- இந்த வருடத்தின் தலைசிறந்த அவல நகைச்சுவை!
தீமைகளின் உருவமாக இராவணனைச் சித்திரித்து, அவனைக் 'கொடும்பாவி'யாக்கி அம்பு எய்து அருமையான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் இந்தத் தலைவர்கள். அடுத்தவர் மனைவியைக் கவர்ந்து சென்றான் என்பதுதான் இதிகாச இராவணன் மீதான குற்றச்சாட்டு. மற்றபடி அவன் சுத்த வீரன், யுத்த தர்மத்தை ஒருபோதும் மீறாதவன்!
ஆனால், இன்றைக்கு இலங்கையை ஆள்வோர் மீது உலக சமுதாயம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒன்றா, இரண்டா? 'விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது' என்று ஒருபக்கம் மார் தட்டிக்கொண்டே, போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இன்னமும் சித்திரவதைகளைத் தொடர்கிறார்கள்!
ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்குத் துணிச்சலை இவர்களுக்கு யார் தந்தது? ஒருபக்கம் முள்வேலி முகாம்களுக்குள் அப்பாவித் தமிழர்களை வதைத்துக்கொண்டே, மறுபக்கம் தன்னைப் புத்தராகவும் புனிதராகவும் காட்டிக்கொள்ள அங்கே இருப்பவர்கள் வேண்டுமானால் வெட்கம் கெட்டவர்களாக இருக்கலாம். 'தப்பாக எதுவும் நடக்கவில்லை' என்று இந்திய அரசுமா வெட்கம்கெட்டு பக்கவாத்தியம் வாசிக்க வேண்டும்?
அமெரிக்காவோ, ஐ.நா. சபையோ இலங்கை அரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரசுதான் மறைமுகத் தடையாக இருக்கிறது என்று இதுநாள் வரை நிலவிவந்த குற்றச்சாட்டுகளை இப்போதாவது பொய்யாக்க வேண்டாமா?
இன்னலுற்ற தமிழர்கள் வாழ்வில் இனியாவது ஒளி தோன்ற வேண்டுமானால், உருவகக் கொடும்பாவிகளை விட்டுவிடுங்கள், உண்மைக் கொடும்பாவிகளை நோக்கி வீரத்தைக் காட்டுங்கள்.
ஆம், நிஜமாகவே உங்கள் வில்லும் அம்பும் திரும்ப வேண்டியது இலங்கையை நோக்கித்தான்! இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 9:21:00 AM 0 comments
Labels: ஈழம்
Friday, October 9, 2009
பிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள்!
எருமை மாட்டின் சொரணைக்கு சவால் விடும் நமது வியாதிகள் ராசபக்சே வீட்டில் பிரியாணி தின்ன தயாராகி வருகிறார்கள்..இதில் கூத்து என்னவென்றால் இவ்வளவு நாட்கள் அங்கே தமிழினம் முட்கம்பி வேலிகளுக்குள் சிக்குண்டு இருப்பது தெரியாதா? இப்போதுதான் இவர்களுடைய பூனைக்கண் திறந்ததா? கூர்ந்து கவனித்தால் தமிழர்களுக்கு
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
http://siruthai.wordpress.com/2009/10/09/பிரியாணி-தின்ன-தயாராகும்/
நன்றி : தோழர் சிறுத்தை
Posted by நிலவு பாட்டு at 7:02:00 PM 0 comments
Labels: ஈழம்
Thursday, October 8, 2009
தமிழ் நாட்டு மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்..
தமிழ் ‘நாட்டு’ மீனவர்களை சுட ஆரிய ‘இந்தி’ யா இலங்கை கடற்படைக்கு பயிற்சி!
source:http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18074
தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் எப்போதும் தமிழினத்தை குறிவைத்து தாக்கும் இந்தியா தற்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டு விளையாட பயிற்சி வழங்கியுள்ளது.. ஏற்கனவே ஈழ தமிழர்களின் கதையை முடித்தாகிவிட்டது.. இனி அடுத்து தமிழக தமிழர் தானே! அதுதானெ முறை?
இதை எடுத்து சொன்னால் இந்தி தேசிய அடிப்பொடிகள் சீனா பாகிஸ்தான் என்று.. பசப்புவார்கள் அவர்களிடத்தில் ஒன்றைதான் நாம் கேட்க முடியும்..ஏன் சிங்களன் உங்கள் அக்கா தங்கையின் மீதி மையல் கொண்டுவிட்டால் .இதைதான் சொல்வீர்களா? நாம் பெண்ணை சப்ளை செய்யவில்லை என்றால் சீனாக்காரனும் பாகிஸ்தான்காரனும் சப்ளை செய்து விடுவார்கள் என்று?..இவர்கள் செய்தாலும் செய்வார்கள் ஏன் விளக்கு கூட பிடிப்பார்கள் …இப்படித்தானே இந்தியத்தால் இவர்களுக்கு மூளை சலவை செய்யபட்டுள்ளது..
அவர்களை விடுங்கள்..மீனவ சமுதாய மக்களே! உங்கள் இரண்டு குப்பத்து மக்களிடையே சண்டை என்றால் இரண்டு குப்பங்களும் பற்றி எரிகிறது..எல்லையில்லாத கடலுக்குள்ளே உங்களுக்குள் எல்லை தகராறு வருகிறது.. ஆனால் உங்களை தினந்தோறும் சுட்டு கொல்லும் சிங்களினிடத்தில் ஏன் ஒருமுறை கூட திருப்பிதாக்கவில்லை? அவனிடத்தில் துப்பாக்கி இருக்கிறது சரி நீங்களும் துப்பாக்கி ஏந்தலாமே? ஏன் நீங்கள் இன்னும் போராளியாக மாறவில்லை.. அதிகமாக மீன் பிடித்தால் வருமான வரித்துறைக்காரன் 6DD(e) of Rules, 1962 பிரிவின் படி உங்கள் வீட்டு வாசலை தட்டுகிறானே அந்த களவாணிகளையாவது ஒரு நாள் சிறைபிடித்து வைத்தீர்களா? மற்றும் ஒரு செய்தி தமிழக மீனவர்களை காப்பாற்ற தமிழ்நாடு மீனவளத்துறை அதிரடி நடவடிக்கை..என்னமோ ஏதோ என்று பார்த்தால்.. கச்சதீவை தமிழக மீனவர்கள் நெருங்க கூடாதாம்.. மாற்று வழியாக ராமேசுவரம் மீனவர்களை தேவிபட்டினத்தில் மீன் பிடிக்க சொல்கிறார்கள்..அடபாவமே! அதை விட ஊர் ஏரி குளத்தில் மீன் பிடிக்க சொல்லலாமே?
கட்சதீவுக்கு ஒரு நீதி என்றால்..காசுமீருக்கும் அதே தான் தீர்வு..உடனடியாக ஒப்ப்ந்தம் போட்டு காசுமீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இணைத்துவிடல் வேண்டும்..செய்வார்களா? இந்தி அரசியலில் காலங்காலமாக ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் காசுமீர் பண்டிட்டு குடும்பத்திற்கு ஆப்பு இறங்குமல்லவா?சிங்களவன் தனது பரம் எதிரியாக நினைப்பது இந்தி யர்களை அல்ல! ஈழத்து தொப்புள் கொடி உறவுகளாக உள்ள நம்மைத்தான்!.. இந்திகாரர்கள் எதிர்காலத்தில் சிங்களவன் கேட்கிறான் என்றால் நம்மையும் விற்க தயங்க மாட்டார்கள்.. எனவே தமிழக தமிழர்கள் அரசியல் வியாதிகளை நம்பி தந்தியடிப்பது..உண்ணாவிரதம் இருப்பது.. தெரு முக்கில் கத்திவிட்டு வீட்டிற்கு போய் இழுத்து போர்த்தி தூங்குவது போன்ற காலத்திற்கு ஒவ்வாத செயல்களை கைவிடல் வேண்டும்.. இன்று எத்தனை சிங்குகள் ..மலையாளிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்? இது எல்லாம் இளிச்சவாய் தமிழர்கள் நமக்குத்தானே?
இதற்கு தீர்வு எல்லாம் தமிழ்”நாடே”.. சாதி சமயங்கள் அற்ற சோசலிச தமிழ்நாட்டை அமைப்பதே இன்று நம் கண் முண் உள்ள தீர்வாகும்..ஆயுத வழி போராட்டமோ அறவழி போராட்டமோ..எதுவாக இருந்தாலும் தமிழ்தேசிய தோழர்களுக்கு இன்று தேவைபடுவது தொலைநோக்கு பார்வை.. அதாவது தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தேசிய உணர்வை ஊட்டுவதோடு.. அணுக்கரு..வேதியல் ..உயிரியல் ஆயுதங்கள் பற்றிய அறிவை ஊட்டுவதாகும்.. அதுவே நம் மீது கைவைக்க எவனுக்கும் அச்சத்தினை ஊட்டும்.. நமக்கு இங்கே இடமில்லையென்றால் வேறு எவனுக்கும் இங்கே இடமில்லை.. இவ ர்களை சுளுக்கெடுப்பதே நமது முதற்கடமை!!தமிழ்தேசிய தோழர்கள் செய்வார்களா?
நன்றி
http://siruthai.wordpress.com/2009/10/08/தமிழ்நாட்டு-மீனவர்-பிரச/
அக்டோபர் 8, 2009 பதிந்தவர் siruthai
Posted by நிலவு பாட்டு at 8:52:00 PM 2 comments
Wednesday, October 7, 2009
முள்வேலிக்குள் இருப்போர் கன்னடர்களாக இருந்தால் எஸ்.எம்.கிருஷ்ணா இவ்வாறு சொல்லி இருப்பாரா
இலங்கை தொடர்பாக அல்லது தமிழ் பிரதேசங்கள் தொடர்பாக எந்த அறிவோ தெளிவோ இன்றிய இந்திய வெளிவிகார அமைச்சர் கிருஸ்ணா இலங்கை அரசாங்கம் எடுக்கும் வாந்தியினை திரும்ப உள்வாங்கி தானும் எடுக்கின்றார் போல தெரிகின்றது. அல்லது இலங்கை அரசாங்கம் தாம் சொன்னால் நிதி கிடைக்காது என்பதற்காக இந்திய அரசாங்கத்தினை கொண்டு சொல்லப்படுகின்றனவா எனவும் ஐயம் எழுகின்றது.
இந்தியா போரின்போது தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு பதிலாக தமிழ் மக்களை அழிப்பதற்கு உதவியது மட்டுமன்றி அழிப்பு நடவடிக்கையினை செய்யும், சிங்கள அரசினை உலக அரங்கில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையினையும் மேற்கொண்டது.
அதனையே தற்போதும் செய்து வருகின்றது. தற்போது முகாம்களில் அடைத்து வைத்திருக்கின்ற மக்களை மீழ் குடியமர செய்வதற்கான கொடையாளர் நாடுகள், மனித உரிமை அமைப்புக்கள் ஆகியன அழுத்தம் கொடுக்கும் வேளையில் சிங்கள அரசுக்கு முட்டு கொடுக்குமாற்போன்று மீண்டும் தனது சுயரூபத்தினை வெளிக்காட்டி இருக்கின்றது. இந்தியா தாமும் ஒன்றும் தமிழ் மக்களுக்கு செய்ய போவதில்லை அதே நேரம் தமிழ் மக்களுக்கு யாராவது ஏதும் செய்ய புகுந்தால் அதனை விடாமல் தடுத்து நிறுத்தும் வேலைதான் செய்து கொண்டிருக்கின்றது.
இவ்வாறு செய்யும் இந்தியாவை எம்மவர் இன்னமும் ”அவர்கள் இன்றி நாம் இல்லை” என முன்மொழிவது ஏன்? எல்லாவற்றையும் விட்டுவிட்டு துணிந்து இந்தியா தொடர்பாக தமிழர்கள் ஒட்டு மொத்தமாக முடிவு எடுக்கவேண்டும். இந்த விடயத்தில் சிங்கள அரசின் தைரியத்தினை போற்றதான் வேண்டும். இலங்கை அரசு பேரம் பேசுதலில்தான் தனது அரசியலை கொண்டு செல்கின்றது.
தமிழர்களும் அந்த நிலைக்கு வரவேண்டும் புதிய நண்பர்களை தேடி புறப்படுங்கள், புதிய வழங்களை தேடி புறப்படுங்கள், புதிய உறவுகளை கண்டு பிடியுங்கள் நிச்சயமாக எங்கோ ஒருவர் எமக்காக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்.
இந்தியா இந்தியா என வாழ் கிழிய சொல்லிக்கொண்டு கிழட்டு தந்திரோபாயங்களை அதற்கே உரித்தானவர்களிடம் விட்டு விட்டு இன்னொரு பக்கம் புதிய அத்தியாயத்தினை ஆரம்பியுங்கள். எங்களுக்கு எல்லாமே வேண்டும்.
இனி எம்மை தவிர இவர்கள் யாரிடமும் போகமுடியாது என்ற இந்தியாவின் இறுமாப்பினை உடைக்க வேண்டும். இந்திய உறவு என்ற சாக்கடைக்குள் புழுக்களாக நெளியும் தமிழர்களாக நாம் இருக்க முடியாது இருந்தும் பிரஜோசனம் இல்லை நண்பர்களே.
எனவே அதற்கென யாரையாவது ஒதுக்கி விட்டிட்டு நாம் புதிய பயணத்தினை தொடரவேண்டும்.
http://www.eelanatham.net/news/important
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 6:53:00 PM 0 comments
Labels: ஈழம்
{நாம் தமிழர் பேரியக்கம்} தொலைக்காட்சிகளின் மற்றும் இணையங்களின் துரோகம்
அன்புக்கினிய என் தமிழ் சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம் ஒருமுக்கிய விசயமொன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்
அவ்விசயம் என்னவெனில் இன்று புலம்பெயர்ந்துவாழ்கின்ற தமிழர்களின் பலமென்பது யாவரும் அறிந்ததே ஏன் சிங்கள பேரினவாதமும் ஏற்றுகொண்டிள்ளார்கள் எம் மக்களை குழப்புவதற்காக பல சக்திகள் செயல்பட்டுகொண்டிருக்கின்றன பல வழிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை ஊடகங்கள் வாயிலாகவும் களமிறங்கிகொண்டிருக்கின்றது
அந்த அடிப்படையில்தான் இலங்கையில் இருந்து ஒளிபரப்புகின்ற தொலைக்காட்சி ஒன்று ஒரு முரண்பாடான கருத்துக்களை முன் வைத்து மக்களை திசைதிருப்புகின்ற பணியில் இடுபட்டுக்கொண்டிருக்கின்றது அதற்கு ஒரு சில தமிழர்கள் துணைபோவதை காணக்கூடியவாறு இருக்கின்றது கடந்த பல நிகழ்வுகளின்போது ஜீ ரீ வீ மற்றும் தமிழ் இணையத்தளங்களையும் விமர்சித்திருந்தார்கள் முகாம் மக்கள் நல்லமுறையில் இருப்பதாகவும் நல்லமுறையில் அரசாங்கத்தால் பேணப்படுவதாகவும்
இச் செய்திகளை திரிவுபடுத்தி தமிழ் இணையத்தளங்கள் அரசாங்கத்திற்கெதிராக பரப்புரை செய்வதாகவும் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன இன் நிகழ்ச்சியானது
இலங்கை நேரப்படி இரவு 1.30 இடம்பெறுகின்றன அன்பான என் உறவுகளே இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் இப்படியான தொலைக்காட்சிகளையும் பார்ப்பதை நிறுத்திக்கொள்வது உண்மையான தமிழனாக இருப்பின் நிறுத்திவிட்டு மின்வேலிக்குள்ளிருக்கும் எம் உறவுகளைமிட்பதற்கான் பாதையில் ஒன்றுபட்டு செயல்படுவது ஒவ்வொருதமிழனுடைய கடப்பாடாகும் எந்தவொரு தியசக்திக்கும் அடிபணியாது எம் இலட்சியத்தை அடையும்வரைபோராடுவோம் முப்பாதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் கனவை நினைவாக்குவோம் எமது மாவீரர் செல்வங்கள் யாருக்காக மடிந்தார்கள் என்பதை மனதில் நிறுத்தி
ஒற்றுமையுடன் போராடுவோம் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும் நன்றி
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
Posted by நிலவு பாட்டு at 6:39:00 PM 1 comments
Labels: ஈழம்
{நாம் தமிழர் பேரியக்கம்} வெளியுறவுத்துறையில் தமிழர்களுக்கு எதிரானவாகள்:ராமதாஸ் புகார்
''இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும், டெல்லி மத்திய அரசின் அதிகார மையத்திலும் தமிழர்களுக்கு எதிரான ஒரு கூட்டம் செயல்பட்டுவருகிறது.
அவர்கள் மாற்றப்படாதவரை இலங்கை தமிழர்பிரச்சனையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சனையிலும் எதிர்பார்க்கும் மாற்றம் வராது"என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பா.ம.க.வின் துணை அமைப்பான தமிழக மாணவர் சங்கம் சார்பில் சமச்சீர் கல்வித்திட்ட மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் ..'' இலங்கை தமிழர்கள் பிச்சனையில் மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதில்லை.
இந்திய வெளியுறவுத்துறையும் மதிப்பதில்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும், டெல்லி மத்திய அரசின் அதிகார மையத்திலும் தமிழர்களுக்கு எதிரான ஒரு கூட்டம் செயல்பட்டுவருகிறது. அவர்கள் மாற்றப்படாதவரை இலங்கை தமிழர்பிரச்சனையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சனையிலும் எதிர்பார்க்கும் மாற்றம் வராது."என்று ராமதாஸ் தெரிவித்தார்.
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
Posted by நிலவு பாட்டு at 6:38:00 PM 1 comments
Labels: ஈழம்
{நாம் தமிழர் பேரியக்கம்} சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்தி
ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் தடுமாற்றத்துக்கு இந்திய பெருமுதலாளிகளின் தலையீடே காரணமாகும் எனத் தமிழ்நெட்டின் கொழும்பு செய்தியாளர் கூறியிருக்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் கருணா நிதியின் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில் குடும்பமாக வளர்ந்துள்ளனர்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் போராட் டத்திற்கு இந்தியப் அரசு ஆதரவு நிலை எடுத்ததற்கு இந்திய பெருமுதலாளிகளே முக்கியமான காரணமாவார்கள். இலங்கை யில் உள்ள இயற்கை வளங்களை இந்தியப் பெருமுதலாளிகள் சுரண்டு வதற்காக தனது நாட்டையே சிங்கள அரசு திறந்துவிட்டுள்ளது.
இலங்கையுடன் இந்தியத் தொழில் வணிக நிறுவனங்களின் உறவு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இலங்கையில் மேற்கொள்விருக்கும் திட்டங்கள் பலவற்றுக்கு இலங்கை அரசின் ஒப்புதலை இந்திய நிறுவனங்கள் பெற்றுவிட்டன. எஞ்சிய திட்டங்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
லார்சன் ரூ டியூப்ரோ நிறுவனம் ரூ.250 கோடி மதிப்புள்ள பலமாடி வணிக வளாகம் கட்டும் பணிக்கான ஒப்பந் தத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் 26 அடுக்கு குடியிருப்பு மாடி வளாகம்இ யூரியாவை சேமித்து வைக்கும் மிகப் பெரிய கிடங்குஇ உர நிறுவனத்துக்கான கிரில் கோபுரம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களும் இந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்வாரியத்திற்கு தேவைப்படும் மின் கம்பி வடங்களைத் தாங்கும் உயர் அழுத்த மின் கோபுரங்களையும் இந்த நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது.
கொழும்பு புறநகர்ப் பகுதியில் குடியிருப்பு வீட்டுமனைகளை கட்டித் தரும் ஒப்பந்தத்தை கங்காதர் கன்ஸ்ட் ரக்ஷன் என்னும் நிறுவனம் பெற்றுள் ளது. கொழும்பு நகரிலேயே 25 ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய துணை நகரம் ஒன்றினை உருவாக்கும் ஒப்பந்தத்தை இதே நிறுவனத்தின் சகோதர நிறுவன மான புரவங்கார பெற்றுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கைபேசி நிறுவனமான பாரதி ஏர்டெல் ஏற்கனவே ஏர்டெல் என்ற பெயரில் இலங்கையில் தனது சேவைகளைத் தொடங்கிவிட்டது.
இலங்கை மின்வாரியத்துடன் இந் தியாவின் தேசிய அனல் மின் நிறுவனம் இணைந்து 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள அனல் மின்நிலையத்தை கட்டித்தரும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் இந்திய வம்சா வளித் தமிழ்த் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் மலையகப் பகுதியில் புனல்மின் நிலையங்கள் ஏராளமாக அமைக்கப் பட்டுள்ளன. இவற்றிலிருந்து உற்பத்தி யாகும் மின்சாரத்தை மலையகத் தமிழர் களுக்கோஇ ஈழத்தமிழர்களுக்கோ அளிக்க சிங்கள அரசு மறுத்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழீழப் பகுதி மின்வசதி இல்லாமல் இருண்டு கிடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழியாக மின்சாரம் கொண்டுசெல்லும் கம்பிகள் போடும் வேலையில் இந்திய அரசு ஈடு பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.
கிழக்கு திரிகோணமலையில் சம்பூர் என்ற இடத்தில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்தை நிறுவும் ஒப்பந்தத் திலும் தேசிய அனல் மின் நிறுவனம் கையெழுத்திடப்போகிறது. இதற்காக அந்தப் பகுதியில் 500 ஏக்கர் நிலம் போதும். ஆனால் சிங்கள அரசு 15இ000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அந்த நிலப் பகுதியிலிருந்த ஊர்கள்இ வீடுகள் எல்லா வற்றையும் இடித்துத் தரைமட்டமாக்கி அங்கு வாழ்ந்த தமிழர்களை எல்லாம் விரட்டியடித்தது.
ஹெச்.சி.எல்.இ மெபாசிக்ஸ்இ அக்சஞ் சர் போன்ற இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் இலங்கையில் தங்கள் பணிகளைத் தொடங்க உள்ளன.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிஇ ஆதித்யா பிர்லா குழுமம்இ டாடா குழுமம்இ இந்திய எண்ணெய் நிறுவனம்இ அசோக் லேலேண்ட் ஆகிய நிறுவனங்களும் இலங்கையில் தொழில் வணிக நடவடிக் கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்திய இரயில்வேயும் இந்தக் கொள்ளையில் இறங்கி உள்ளது. இலங்கை இரயில்வே துறைக்குத் தேவை யான 90 பெட்டிகளுடன் கூடிய 15 டீசல் - மின் தொடர் வண்டிகளைத் தயாரித்து அளிக்க பெரம்பூரில் உள்ள இரயிவே பெட்டி தொழிற்சாலை சம்மதித்துள்ளது. மேலும் இலங்கையின் உணவு மற்றும் சுற்றுலா கழகத்திற்கு நவீன தொழில்நுட்ப மற்றும் சொகுசு வசதிகளுடன் கூடிய 10 வகையான சுற்றுலா இரயில் பெட்டிகளை பெரம்பூர் தொழிற்சாலை தயாரித்து வருகிறது.
சிங்கள அரசுஇ தனது நாட்டின் வளங்களை இந்தியப் பெருநிறுவனங் களுக்கு திறந்துவிட்டு அவர்கள் மூலம் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் அழுத்தங்களை உருவாக்கி தனக்கு ஆதரவான நிலை எடுக்க வைத்துள்ளது என்பதுதான் உண்மையாகும்.
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
Posted by நிலவு பாட்டு at 6:36:00 PM 0 comments
Labels: ஈழம்
தெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்..வாக்களிக்கும் இயந்திரங்கள் எதாவது செய்யமுடியுமா?
முகாம் மக்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் : இந்திய வெளிவிவகார அமைச்சர். எவன எங்க அடிச்சுக்கிட்டா இவனுங்களுக்கு என்ன? இவனுங்க காசுமீர் அரிப்பையே இவர்களால் தடுக்கமுடியவில்லை..ஏன் அடுத்தவனிடத்தில் தலையிட வேண்டும்?.. தனது வீரத்தை ஒரு இனக்குழுமத்திடம் காட்டும் இவர்கள் அதே போல வம்பிழுக்கும் சீனா பாகிஸ்தானிடம் காட்ட தயாராக இருக்கிறார்களா? இவர்கள் பருப்பு அங்கே அவிய வாய்ப்பில்லை.. இளிச்சவாய் தமிழர்களிடம் மட்டும் தான் அவியும்.. ஈழ தமிழர்கள் செய்த ஒரே பிழை அவர்களை போலவே.. இவர்களும் ஆங்காங்கே (தமிழ்நாட்டை தவிர்த்து) குண்டு வைத்து காட்டியிருக்கவேண்டும்.. அதை அவர்கள் செய்யாததால் தான் இவ்வளவு தெனாவெட்டு பேச்சு! இரண்டாவது பிழை ஆறரை கோடி ஆட்டு மந்தைகளை (தமிழுணர்வாளர்களை தவிர்த்து) தொப்புள் கொடி உறவு அவரை கொடி உறவு என்று இந்தி யாவை பகைக்க விரும்பாமல் வீழ்ந்து போனது.. ஆனால் இப்போது ஒரு தெளிவு அவர்களுக்கு வந்திருக்கும்.என நினைக்கிறேன் இங்கே அனைவரும் ஆட்டு மந்தைகளாகவே உள்ளனர்.ஆட்டுக்கு புல்லை கொடுத்தால் தின்றுவிட்டு சாணத்தை இடுவது போல.. இவர்களுக்கும் ‘புல்லை’ கொடுத்தால் வாக்குகளாக இடுவார்கள்.. வாக்களிக்க தயாராக இருக்கும் இயந்திரங்கள் இந்த விசிலடிச்சான் குஞ்சுகாளை விட்டு விட்டு..ஆக்க பூர்வமாக செயல்படவேண்டும்..அடுத்த அல்லது அதற்கடுத்த இலங்கை தேர்தல்களில் மேற்குலகின் நண்பராக அறியபடுகிற ரணில் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் சீனாவின் கரங்களை ஈழதமிழர்கள் பலமாக பற்ற வேண்டும்.. அதுவரை அதே ஒர்மத்தையும் வஞ்த்தையும் நெஞ்சில் நிறுத்தி கொள்ளுதல் வேண்டும்
மூலம்:http://inioru.com/?p=6106
தனது முத்தானா ஒலவாயை இந்தி திருநாட்டின் சார்பாக கன்னட களவாணி ஒன்று வாய்திறந்து உள்ளது.. இவனுங்களுக்கு தனக்கு கீழே வலிமைகுறைந்த யாராவது நன்றாக இருந்தால் பிடிக்காது..நன்றாக அல்ல மூன்று வேளை நன்றாக உண்டாலே இந்தி அடிப்பொடிகளுக்கு வயிறுவாயெல்லாம் எரிய ஆரம்பித்துவிடும்..அதுவும் தமிழனாக இருந்தால் சொல்லவே வேண்டாம்..இச்செய்தியின் அடிப்படையில் கூர்ந்து கவனித்தால் மொத்த தமிழனத்தையும் ஒல் சேலில் வாங்கிவிட்டதாக நினைப்பு.. இன்னோரு மலையாள குள்ளநரி ஈழ தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை கட்டி எழுப்பி விடுவார்களாம்..அதை எப்படியாவது இந்தி யா தடுக்குமாம்..
Posted by நிலவு பாட்டு at 6:27:00 PM 1 comments
Labels: ஈழம்
நாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை சிங்கள தூதரக முற்றுகைப் போராட்டம்
வாய்க்கொழுப்பெடுத்து பேசித்திரியும் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்றக்கோரி நாளை 08-10 -2009 வியாழன் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தை நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொழுது வாய்க்கொழுப்பெடுத்து பேசியுள்ளான்.
இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க ஏன் அனுமதிக்க வில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு. ”முகாம்களில் நாங்கள் மிருகக்காட்சி சாலை எதையும்நடத்தவில்லை. எனவே தான் வெளியாட்களை அனுமதிக்கவில்லை”என்று திமிருடன் கூறியுள்ளான்.இது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகும்.கடந்த 4 மாதத்திற்கும் மேலாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களது தாய்த்திரு நாட்டிலேயே திறந்த வெளிச்சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு உணவு,உடை,அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் போன்ற எதையும் அளிக்காமல் அவ்ர்களை நித்தமும் சிறுகச் சிறுக உயிருடன் கொலை செய்யும் சிங்களப் பாசிச அரசு அவர்களைப் பார்வையிட சர்வதேச தொண்டு நிறுவனங்கள்.பத்திரிக்கையாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்க வில்லை.இதனைக் கண்டித்து உலகமெங்கும் கடும் எதிர்ப்புக்குரல் எழுந்து வரும் சூழ்நிலையில் பாசிசஅரசின் பிரதிநிதி இப்பொழுது அதை நியாயப்படுத்தவும் துணிந்துள்ளான்.மேலும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக அவதூறாகப் பேசித்திரிகின்றான்.
ஆகவே சிங்கள துணைத்தூதரைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சிங்கள தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.நாளை08-10-2009 வியாழன் காலை 10 மணிக்கு ஆழ்வார்பேடடை டி.டி.கே. சாலையில் உள்ள சிங்கள தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.தமிழர்கள் அனைவரும் முற்றுகைப் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு வாய்க் கொழுப்பில் திரியும் சிங்கள துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நாட்டை விட்டு வெளியேறும் போராட்டம் வெற்றி பெறச் செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்
http://www.naamtamilar.org/eventsview.php?Id=33
--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org
"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 1:06:00 PM 2 comments
Labels: ஈழம்
Tuesday, October 6, 2009
தேசியத் தலைவர் இருப்பு முதல், 'வணங்காமண்' அரசியல் வரை
"நாடு தேசமெல்லாம் எதிர்பார்த்து ஏங்கிகிட்டு இருக்கற பிரபாகரன் விஷயம் தெரியுமா? ரொம்ப பாதுகாப்பா இருக்காரு. நம்பகமான தகவல் இருக்கு. சூசை எல்லாம்கூட நீர்மூழ்கி கப்பல் மூலமா தப்பியிருக்காருன்னு தகவல் இருக்கு.அதனால உலக தமிழர்கள் யாரும் சோர்ந்துட வேண்டாம். தொடர்ந்து போராட்டத்தை நடத்துங்க. பயங்கரவாத புலிகள் இயக்கத்துக்கு, கோரிக்கைகளுக்கு உலகம் ஆதரவு தரமாட்டோம்னுதான சொன்னாங்க. விலகி நின்னு வேடிக்கை பார்த்தாங்க. இப்போ அரசியல் வழியில அதே கோரிக்கைய இன்னும் வேகமா முன்னெடுங்க. ராஜபக்சே இப்போ என்ன சொல்லப் போறார்னு உலக நாடுகள் தெரிஞ்சுகிடட்டும். கால அவகாசத்துக்கப் பிறகு வெளிய வந்து கச்சேரிய வச்சிக்கிடறோம்னு தகவல் சொல்லியிருக்காங்க" என்றார்.
ஏம்பா. என்னாப்பா இது. குவாட்டர் அடிக்குற எனக்கே தலைய சுத்துது. நீ இப்படி சொல்ற. ஆனா ராஜபக்சேதான் பிரபாகரன் இறந்துட்டதை வீடியோ எல்லாம் எடுத்து காமிச்சாரே. இப்போ புதுசாவேற பொட்டம்மான்தான் பின்னாடி நின்னு, கிட்டக்க இருந்து தலையில சுட்டு கொன்னாருன்னு வேற சொல்றாங்களே- கோட்டை கோபாலு." பொய்க்குதான் ஆயிரம் காரணத்தை அடுக்கடுக்கா சொல்லனும். உண்மைக்கு அது அவசியமே இல்லேங்கிறத மறந்துடாதே. ஏற்கனவே வீடியோ படம் காமிச்சதுலேயே ஆயிரத்தெட்டு கோல்மால். அயோக்கியத்தனம்னு தமிழார்வளர்கள் தரப்பு கொதிச்சுபோய் இருக்கு. இலங்கை அரசு பாணியில சொல்றதுன்னா உலகமே கவனிச்சுட்டு இருக்குற பயங்கரவாதி பிரபாகரனை அவர்கள் கொன்றால் அதை ஏன் கொழும்பு வரைக்கும் கொண்டுவந்து, மீடியாவை எல்லாம் கூப்பிட்டு பாருங்கோ. இவர்தான் அவர்னு காட்டாம விட்டது ஏன்- அதுக்கு தைரியமில்ல. காரணம் ஏன்ங்கிறது அவர்களுக்குத்தான் வெளிச்சம். இப்படி அவர்கள் சொன்ன கதைய எல்லாம் யாருமே ஏன், கூட இருந்தே சங்கூதுற வேலைய செய்த இந்தியாவும் நம்பலைங்கிறதாலதான் இப்போ புதுசா பொட்டம்மானே தலைவர் தலையில சுட்டுட்டார்னு கதைய விடுறாங்க. அதே நேரத்துல தலைவர் கூடவே எப்பவும் முன்னூறு கரும்புலிங்க இருப்பாங்கிறதையும் ராஜபக்சே வட்டாரம் மறுக்கலை. அப்படி பார்த்தா, பொட்டம்மான் சுட்டப்போ கரும்புலிங்க என்ன வேடிக்கையா பார்த்துகிட்டு இருந்துச்சு. கரும்புலி பொட்டம்மான் எல்லாம் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு உடம்பு உறுக்குலைஞ்சு போயிடுச்சுன்னு ஏற்கனவே சொல்லியிருக்காங்க. அப்டீன்னா பக்கத்துல இருந்து சுட்ட பொட்டம்மான், தலைவரை சுத்தியிருந்த கரும்புலியெல்லாம் கருகி அடையாளம் தெரியாத அளவுக்கு பிணமா இருந்தப்போ, தலைவர் பிரபாகரன் உடம்பு மட்டும் எப்படி முழதுமா கிடைச்சது. அதுவும் உடம்புல வேற எந்த காயமும் இல்லாம? கருகாம! இதுதான் பொய் எப்பவும் ஆயிரம் காரண கதைய சொல்லிகிட்டு திரியும்னு சொல்றது." என்றார் சித்தன்.என்னவேனா பேசிக்கிடட்டும். அதைவிடுங்க. இப்போ ராஜபக்சே வட்டாரம், அதான் அவரோட தம்பிங்க பசில், கோத்தபாய எல்லாம் இந்தியா வந்திருக்காங்களாமே. இன்னும் யாரையாவது கொலைபன்னப் போறாங்களாம்- அன்வர்பாய்."அடப்பாவிங்களா, அவிங்களை என்ன கொலைகாரக் கூட்டம்னு நினைச்சுட்டீங்களா. ஒரு ஜீவராசியையும் கொல்லக்கூடாதுன்னு சொல்ற புத்த தேசத்தின் புதல்வர்கள்பா அவிங்க. அந்தாளுங்களை போய் அப்படி சொல்லலாமா. அகிம்சைவாதி காந்திக்கெல்லாம் முன்னோடிப்பா ராஜபக்சே வட்டாரம். புழு பூச்சியை எல்லாம் கொல்ல மாட்டாங்க. ஆனா தமிழினத்தை மட்டும் கொத்துக்கொத்தா கொன்னுப் போடுவாங்க. புத்தர் அதுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்திருப்பார் போல. நம்ப ஊரு மரத்தடி நாட்டாமைகூட நியாயத்தை, தீர்ப்பை சரியா சொல்லுவாங்க. அந்தளவு யோக்கியதைகூட கோட்டு சூட்டு போட்ட ஐக்கிய நாடு, யோக்கிய நாட்டு சபைக்கு கிடையாது. ராஜபக்சேவின் கொலைதாண்டவ கச்சேரிக்கு நல்ல பக்கவாத்தியம் போட்டாங்க" என்று போதையில் கலாய்த்த சுவருமுட்டியை நிதானப் படுத்தினார் சித்தன்.நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லியேப்பா- அன்வர்பாய்."யோவ் நீ கேட்டா... அதுக்கு பதில் சொல்லனுமா? ஆளானப்பட்ட ஐக்கிய நாட்டு சபை கேள்விக்கே, சுண்டக்காய் நாடு ராஜபக்சே பதில் சொல்றதில்லே. உங்க வேலைய பாருங்கலேங்கிறாரு. கேட்கிறவங்களுக்கும் சூடு சொரனை இல்லே. என்ன மாதிரி தண்ணி கேசு ஆளுங்களா இருப்பாங்க போல" என்று போட்டுத் தாக்கிய சுவருமுட்டி சுந்தரத்துக்கு ஒரு டம்ளர் மோர் கொடுத்து படுக்க வைத்த சித்தன் இவன் இப்படித்தான் ஓவராயிட்டா ஏடாகூடமா போட்டுத் தாக்குவான். ஆனா உண்மையத்தான் பேசுவான். என்ன பன்றது, என்று நொந்தபடியே அன்வர்பாய் கேட்ட கேள்விக்கு வந்தார்."அந்த புத்த தேசத்து புதல்வர்கள் இந்தியா வந்ததே நிதிஉதவி, தமிழர்களின் மறுவாழ்வு பற்றி பேசுறதுதான்னு சொல்றாங்க. ஆனா அதுல உண்மை இல்லே. அவன் நிதியுதவி கேக்குறதுக்கு முன்னதான் நம்பாளு ஓடிப்போய் அவன் காலுகிட்ட நின்னு நான் தாரன்சாமி நிதியுதவின்னு சொல்றாங்களே பிறவு எதுக்கு அவன் இங்க வந்து நிதியுதவி கேட்கப்போறான். விஷயமே வேற. அதாவது ரெண்டு நாளைக்கு முன்ன ஒரு சம்பவம். நெடுங்கேணி காட்டுப்பகுதியில புலிகளை தேடி போயிருக்கு ராணுவம். பதுங்கியிருந்த புலிகள் கடுமையா தாக்கியிருக்காங்க. நூற்றைம்பது ராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே காலி. அதே மாதிரி திரிகோணமலை காட்டுப் பகுதியிலேயும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. பலத்த அடி. வாங்கினவங்களும் சொல்லலை. கொடுத்தவங்களும் சொல்லிக்க முடியல. அதுக்கு முன்னாடி இரண்டு ராணுவ ஆயுத கிடங்கும் மர்மமா வெடிச்சு சிதறியிருக்கு. அதுவும் காட்டுக்குள்ள பதுங்கியிருந்த புலிகளோட வேலைன்னு ராஜபக்சே வட்டாரம் உறுதியா நினைக்குது. ஆனா என்ன பன்றது. சொன்னா வெட்கக்கேடு. சொல்லாட்டி மானக்கேடுன்னு இப்போ இந்தியாகிட்ட வந்து நிக்கிகுறாங்க. அதாவது இந்தியாகிட்ட தொழில்நுட்பத்தை கேட்குறாங்க. ஜார்கண்ட், அசாம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில போலீஸெல்லலாம் அந்த மாதிரி தொழிநுட்பத்தை பயன்படுத்தியிருக்கு. ஜார்கண்ட், அஸாம் மாநிலத்தில் காடுகளில் பதுங்கியிருக்குற நக்ஸல்பாரி இயக்கத்துக்கு எதிரா அந்தவித உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்காங்க. அங்க வேலைக்காகலை. ஆனால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வனப்பகுதியல் சாம்ராஜ்யம் நடத்திகிட்டிருந்த சந்தனக்காடு வீரப்பனுக்கு எதிரா பயன்படுத்தின போலீஸ் ஜெயிச்சிருக்கு. அந்தமாதிரி டெக்னிக் யுத்திகள்தான் இப்போ எங்களுக்கு அவசியம் தேவைப்படுது. அப்பதான் காடுகளுக்குள்ள இருக்குற புலிகளை சுத்தமா அழிக்க முடியும்னு ஒத்த காலுல நின்னு கேட்டுகிட்டிருக்காங்க. அதையும் இந்தியா தூக்கி கொடுக்கப்போவுதா, இல்லையான்னு தெரியல.இந்த நேரத்துலதான் அதெல்லாம் இருக்கட்டும் முதலில் தமிழ்நாடு கெவர்மெண்ட் கேக்குறத நாங்க ஓரளவாவது செய்யனும். வணங்காமண் கப்பலில் வந்திருக்கிற நிவாரண பொருட்களை தமிழ்நாட்டிலேயே இறக்கிடறோம். அதை செஞ்சிலுவை சங்கம் மூலமா உங்க நாட்டுக்கு அனுப்பறோம். அதை முகாம்களில் இருக்குற தமிழர்களுக்கு கொடுக்க நீங்க அனுமதிக்கனும் முதலில் இதை ஒத்துக்கிடனும். அப்பதான் மத்ததெல்லாம் சுமூகமா போகும்னு கொஞ்சம் அழுத்தமா சொல்லியிருக்கு. "ஆகட்டும்சாமி. நிங்க சொல்லித்தான இம்புட்டும் நடத்திட்டு வந்தோம். நீங்க சொல்லித்தான அம்புட்டு கொலைகளையும் செய்தோம். இப்போ நீங்க சொல்றமாதிரியே நிவாரண பொருட்களை அனுமதிக்கறோம்னு தலையாட்டியிருக்காங்க பக்சே சகோதரர்கள்.ஏதோ வயசுல பெரிய மனுஷன். தமிழ்நாட்டு முதல்வர். இம்புட்டு நாளா வச்ச கோரிக்கையதான் நாம கண்டுக்கிடலை. இதையாவது சும்மாங்காட்டியும் நாம செய்துக்கொடுப்போம். அவருக்கும் ஒரு மரியாதை. நமக்கும் ஒரு குடைச்சல் குறைந்த மாதிரின்னு பேசி முடிச்சிருக்காங்க. அதன் பிறவுதான் இந்திய வெளியுறவுத்துறை நிவாரண கப்பல் வணங்காமண் சென்னை துறைமுகத்துகுள்ள அனுமதிக்கறதா அறிக்கை விட்டிருக்கு இந்தியா. இதுதான் அந்த சந்திப்பின் பின்னணி" என்றார் சித்தன்.எப்படியோ..கலைஞர் இதை சொல்லியே காலத்தை ஒட்டிடுவாரு. நாங்க சொல்லித்தான் வணங்காமண் நிவாரணம் இலங்கை தமிழருக்கு போகுதுன்னு ஊர் முழுக்க கூட்டம் போடுவாறு- கோட்டை கோபாலு.அவுரு போடுறாரோ இல்லையோ. நம்ப திருமா, வீரமணி, சுபவீ தரப்பு கட்டாயம் போடும். திருச்சியில ஒரு கூட்டம். இந்த மூனுபேரும் பேசினாங்க. எங்க தமிழினத்தின் தலைவர் சொல்லியும் கண்டுக்காம இருக்கிற மத்திய அரசே அப்டீன்னு நல்லா சவுண்ட் விட்டாங்க. வணங்காமண் நிவாரணப் பொருள் அங்கபோய் சேர நடவடிக்கை எடுக்கனும். இல்லாட்டி பெரிய போராட்டமே வெடிக்கும்னு சவுண்ட் கூட்டினாங்க. இப்போ அது மாதிரியே நடந்துடுச்சு. இனிமே கலைஞர் சொல்லித்தான் நிவாரணம் போய் சேருதுன்னு ரவுண்ட் கட்டி சவுண்ட் விடுவாங்க. "ஏன்யா. இதே மாதிரிதான முன்ன போர் நிறுத்தம்னு சவுண்ட் விட்டீங்க. அதை கொஞ்சம்கூட சென்ட்ரல் கவர்மெண்ட் கேட்கலியே. ஒரே நாளுல 25,000 தமிழர்களை நசுக்கி, எரிச்சு கொன்னுபோட்டாங்களேன்னு எல்லாம் யாரும் கேட்டுடக்கூடாது" - போதை தெளிந்த சுவருமுட்டி.ஆமாம், உடனே எங்க தமிழின தலைவரைத்தான் குறை சொல்வீங்க. அம்மா என்ன செய்தாங்க. எலக்ஷன் அப்போ ஈழத் தமிழர்களுக்காக சவுண்ட் விட்டாங்க. அதோட சரி. இப்போ கொடைநாடு குளுகுளு எஸ்டேட் பங்களாவுள படுத்துகிட்டு தனிஈழம் மேப் வச்சிகிட்டு யோசிக்குறாங்க போல. பிறவு ஒரு சத்தத்தையும் காணல. நம்ப வைகோ, தா.பாண்டியன், ராமதாஸ் எல்லாம் அதை ஏன்னு முதலில் கேட்கட்டுமே என பதிலடி கொடுத்தார் கோட்டை கோபாலு. அலப்பறை டீமுக்குள்ளாகவே கோஷ்டி சண்டை வந்துடுமே என பயந்த சித்தன் கூட்டத்தை முடித்துக்கொள்வதாக சொல்லி எழுந்தபடியே கடைசியா ஒரு செய்திபா..."பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த முக்கிய கதர் சட்டைக்காரர் திருச்சி வேலுசாமி இருக்காரே, அவரோட மகனுக்கு வருகிற ஜீலை ஒன்னாம் தேதி கல்யாணம். மண்டபம் பார்த்து பெரிய அளவில் செய்வதாகத்தான் இரண்டு மாதத்திற்கு முன்பு ஏற்பாடு. இப்போ தீடீர்னு அதை மாத்திகிட்டாரு. பத்திரிக்கை ஏதும் அடிக்கலை. கல்யாண மண்டபமும் பார்க்கலை. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைத்து மிக எளிமையா நடத்த ஏற்பாடு. உறவினர்கள் எல்லாம் எவ்வளவோ எடுத்துச் சொல்லி பார்த்தும் வேலுசாமி கேட்கலை. நான் இதுவரை எந்த ஈழ ஆதரவை ஆதரித்து பேசி வந்தேனோ, அதுவே பெரும் சோகத்தில் இருக்கிறது. போராளி புலிகள் எல்லாம் பெரிய இழப்பை சந்தித்திருக்கிறார்கள். அப்படியான ஒரு சூழலில் நானே கல்யாண மண்ணபம் பிடித்து படோடமாக கல்யாணத்தை நடத்துவதென்பது சரியல்ல. வேறு யார் வேண்டுமானாலும் அந்த காரியத்தை செய்யலாம். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் என உறுதியாக மறுத்துவிட்டாராம். முக்கியப் பிரமுகர்கர்களை, சக ஈழ ஆதரவு இயக்கத்தவர்களைகூட அழைக்காமலேயே மகன் திருமணத்தை நடத்தப் போகிறார். இப்படியும் ஒரு காங்கிரஸ்காரர்" என்றபடியே நடந்தார்சித்தன்.
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 7:45:00 PM 1 comments
Labels: ஈழம்