Sunday, June 14, 2009

இலங்கை இனவெறி அரசால் 30 தமிழர்கள் பட்டினியால் சாவு

முதல்வர் கருணாநிதி அவர்களே, உங்களின் விருப்பபடி விடுதலைபுலிகள் அளிக்கப்பட்டதாகவே இருக்கட்டும், தமிழ் மக்கள் என்ன பாவம் செய்தார்கள், இவர்களுக்கு கூட உங்களால் உரக்க குரல் கொடுக்க முடியவில்லையே. பதவி வேண்டுமென்றால் வீல் சேரிலே டில்லி செல்ல தெரிகிறது, தமிழர்களுக்கு முள் வேலி போட்ட சிறைச்சாலையில் இருந்து விடுவிக்க உம்மால் ஒரு வார்த்தை மத்திய அரசை எதிர்த்து கேட்க முடியவில்லை. தமிழனில் அழிவிற்கு நீரே முதல் காரணம்.




ராணுவத்தால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களில் 30 பேர் பட்டினியாலும் ஊட்டச்சத்து குறைவாலும் இறந்து விட்டனர் என்று இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.


"மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவன அமைப்பு கொழும்பைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. அந்நிறுவனத்தின் சார்பில் நிர்வாக இயக்குநர் பாக்கிய சோதி சரவணமுத்து உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


"இலங்கையின் வடக்கில் வவுனியா, மன்னார்,யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 40 முகாம்களில் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அகதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களைச் சுற்றி முள்கம்பி வேலிபோடப்பட்டிருக்கிறது. முகாமை ராணுவத்தினர் காவல் காக்கின்றனர். உள்ளே இருப்பவர்கள் அனுமதி இல்லாமல் வெளியே வரவே முடியாது; வெளியில் இருந்து தன்னார்வத் தொண்டர்களும் மற்றவர்
களும் உள்ளே செல்ல முடியாது.


விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்ட ராணுவம், ""பாதுகாப்புப் பகுதி'' என்று அறிவிக்கப்பட்டஇடங்களுக்குத் தப்பி ஓடிவந்த தமிழர்கள்தான் இந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரையுமே விடுதலைப் புலிகளாகவோ அவர்களுடைய ஆதரவாளர்களாகவோ

அரசு சந்தேகிக்கிறது. எனவே அவர்களை முகாம்களில் அடைத்துவைத்து நடமாட்டத்தைக் குறைத்து சித்திரவதை செய்கிறது. அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு தரப்படுவதில்லை; ஊட்டச் சத்து குறைவாக உள்ள உணவும் வயிறாரக் கொடுக்கப்படுவதில்லை.


முகாம்களுக்குள் சுகாதாரமும் மருத்துவ வசதியும் சொல்லும் தரத்தில் இல்லை. சிறைக்கூடத்தைவிட மோசமான நிலையில் இந்த முகாம்கள் உள்ளன. தமிழர்களை உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் பலவீனப்படுத்தி அவர்களைத் தண்டிக்கும் நோக்குடனே இந்த முகாம்கள் கடுமையாக நிர்வகிக்கப்படுகின்றன.


இந்த முகாம்களில் அடைத்துவைத்திருப்பதால் தான் இத்தனை தமிழர்கள் தங்கியிருக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உறவினர்களும் நண்பர்களும் வெளியில் உள்ளனர். இவர்களை வெளியேற அனுமதித்தால் இதைவிட பாதுகாப்பான இடத்தில் தங்கி, ஓரளவுக்கு வயிறாரச் சாப்பிட்டு உடல் நலத்தை மேம்படுத்திக் கொள்வர்.

0 Comments: