Tuesday, June 30, 2009

நொறுக்கப்படும் கோயில்கள்! சிங்கள மயமாகும் தமிழீழம்

மூன்று லட்சம் தமிழர்களையும் அவர்களது வாழ்விடங்களுக்கு செல்ல அனுமதிக்காமல் தடுப்பு முகாம்களில் சிறை வைத்துள்ள சிங்கள அரசு, ""கண்ணிவெடிகளை அகற்றிய பிறகுதான் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து சிந்திக்க முடியும்'' என்பதனைத் தொடர்ந்து கூறிவருகிறது.

ஆனால் கண்ணிவெடிகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழினத்தின் தொன்மையான அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஏற்கனவே ராணுவம் வீசிய குண்டுகளால் இங்கு பல கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. அதேசமயம், எஞ்சியுள்ள தமிழர்களின் கோயில், கலாச்சார பீடங்கள், ஆய்வு நிலையங்கள் என பலவற்றை அழித்துவிட்டு, அந்த இடங்களில் பௌத்த மதத்தின் ஆலயங்களையும் சிங்களத்தின் அடையாளங்களையும் நிர்மாணித்து வருகிறார் ராஜபக்சே.

சிங்கள பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய தலைவர் மேதானந்ததோரர், ராஜபக்சே கட்சியின் கொள்கை வகுப்பாளரும் சுற்றுலாத்துறை அமைச்சர் சம்பக்க ரணவக்க, சமய விவகார அமைச்சர் பாண்டு பண்டாரநாயக்கா ஆகியோரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத் துள்ளார் ராஜபக்சே.

இலங்கையில் உள்ள பௌத்த தொல்லியல் ஆய்வுக்குழு தேர்ந்தெடுத்து கொடுத்துள்ள இடங்களில் சிங்கள அûடாயளத்தை நிறுவும் பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்ற னர். தமிழர்களின் தொன்மை மிக்க நகரமான கிளிநொச்சியில், கடந்த இரண்டே மாதத்தில் பௌத்த விகாரத்தை அமைத்துள்ளனர்.

மேலும் கிளி நொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ்ப்பெயர்களை மாற்றி சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி கிளிநொச்சியை கிரானிக்கா என்றும் முல்லைத்தீவினை மூலதூவ என்றும் சிங்களத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக ராணுவ கெஜட்டில் ஏற்றியிருக்கிறார் கோத்த பாய ராஜபக்சே. இந்த மாவட்டங்களில் உள்ள மற்ற இடங்களில் தமிழ்ப் பெயர்களையும் சிங்களத்திற்கு மாற்றிடும் பணியில் ஈடுபட சமயத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

0 Comments: