Thursday, June 25, 2009

செந்தழல் ரவி அவர்களின் அட்டகாசம்

உங்களோட இந்த சேவை இந்த அளவு தமிழர்களுக்கு பயன்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. உங்களின் இந்த முயற்சி இன்று கஷ்டப்படும் தமிழர்களுக்கு ஒரு உதவியாக இருக்கப்போகிறது. ஆம் நீங்கள் பதிவு செய்த இந்த இடுகை இன்று தமிழின தலைவரை தட்டி எழுப்பி, இன்று இந்திய கதவினை தட்டி கொண்டிருக்கிறது.

இது விரைவிலே இலங்கை வரை சென்று நமது தமிழீழ மக்களுக்கு பயன்படட்டும்.

உங்களின் இந்த பதிவிற்காக என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இது போல் மேலும் சமூக நோக்குடன் பல பதிவுகளை நீங்கள் இட வேண்டும்.

வணங்காமண் கப்பலை தமிழ்நாட்டுக்கு அனுப்புங்கள்...

4 Comments:

ரவி said...

நன்றி நிலவுபாட்டு.

பதிவு செய்தது மட்டும் அல்லாமல், சமூக ஆர்வலர்கள் பலருக்கும் மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு பேசியிருந்தேன்.

காக்கா உட்கார பனம்பழம் போல என்று சொல்ல்லலாம்.

அல்லது என்னால் முடிந்த துரும்பு என்று சொல்லலாம்.

அல்லது என்னுடைய ரெண்டு பைசா என்றும் சொல்லலாம்.

அவ்வளவுதான்..

வால்பையன் said...

//என்னுடைய ரெண்டு பைசா என்றும் சொல்லலாம்.//

பல இடங்களில் பார்க்கிறேன்.
இதற்கு என்ன அர்த்தம்.

இந்த ப்ளாக்கில் வேர்டு வெரிபிகேஷன் இருக்கு அதனால பின்னூட்டம் போட சலிப்பா இருந்தா என் ப்ளாக்குலயோ, அல்லது உங்க ப்ளாக்கலயோ போடுங்க ப்ளீஸ்.


வேர்டு வெரிபிகேஷன் இருந்தா பின்னூட்டம் போட ஒரு எரிச்சல் வருவது என்னவோ உண்மை தான்!

ரவி said...

வால்பையன்.

ஆங்கில கபட வேடதாரி எழுத்தாளர்கள், here is my 2 cents என்று அவர்களது கருத்து கந்தசாமித்தனத்தை காட்ட எழுதி வைப்பது வழக்கம்.

நான் அதனை தமிழ்ப்படுத்தி, இந்தியப்படுத்தினேன்.

நீங்கள் இதை மையப்படுத்தி எந்த மொக்கையும் போட்டுவிடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்..

நிலவு பாட்டு said...

/* பதிவு செய்தது மட்டும் அல்லாமல், சமூக ஆர்வலர்கள் பலருக்கும் மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு பேசியிருந்தேன்.
*/

மிக்க மகிழ்ச்சி ரவி, உங்கள் முயற்சிகளுக்கு. நீங்கள் கண்டிப்பாக கடமையை செய்தீர்கள்.

/* காக்கா உட்கார பனம்பழம் போல என்று சொல்ல்லலாம்.*/

அப்படி எல்லாம் சொல்லிட முடியாது, நான் கூட இப்படி நினைச்சேன் ஆனால் ஒரு பதிவு போடுவதில் கூட ஒரு நம்பிக்கையே இல்லை என்னிடம்,எங்க இதெல்லாம் நடக்க போகுதுன்னு விட்டுட்டேன். எவ்வளவோ பேசிட்டோம் இனியும் பேச என்ன இருக்கிறது என்ற வெறுப்பில் எழுதவில்லை. உங்களின் அந்த பதிவே எனக்கு ஆச்சரியமளித்தது.

வாழ்க உங்கள் முயற்சி.