Sunday, June 7, 2009

கண்ணீருடன் ஒரு ஈழத்தமிழன்

பின்னூட்டமாக வந்த நண்பரின் ஒரு வருத்தம்.

மிகவும் வருத்தத்துடன் சொல்லிக்கொள்வது இதுதான்.

என்னைப் போன்ற உங்கள் போன்ற உள்ளங்கள் மனம் கேட்காமல் ஏதோ புலம்பிக் கொண்டு இருக்கிறோம்.

உண்மையில் ஈழத்தமிழரின் நிலைமை மிக மிக மோசமான நிலையில் உள்ளது.
அவர்களின் உரிமைப் போராட்டம் அழிக்கப் பட்டு விட்டது.

அங்கு சிங்கள அரசு என்ன கொடுமை செய்தாலும் தட்டிக் கேட்க ஆட்கள் இல்லாத படியால் தமிழர்கள் அங்கு முழுமையாக அடிமைப் படுத்தப் பட்டு விட்டார்கள்.

எஞ்சியிருக்கும் தமிழர்களில் சிலர் சிங்கள அரசின் கைகூலிகளாக மாறி விட்டார்கள் ,மற்றையோர் வாய் திறந்தால் உயிருக்கே ஆபத்து என்பதனால் அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு தங்கள் வாழ்க்கையைக் கழிக்கத் தயாராகி விட்டார்கள்.
பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிய போர்த்துகீசர்களின் ஆட்சியோடு தொடங்கிய அடிமை வாழ்க்கை இன்னும் தமிழர்களுக்கு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் ப்போர்த்துக்கீசர்,,டச்சுக்காரர்,பிரிடிஷ்காரார்களின் ஆட்சியை விட இப்போதைய ஆட்சி இன்னும் மோசம்.

அந்த வெள்ளைக்காரர்கள் தமிழரின் வளங்களை சுரண்டத்தான் நினைத்தார்களே ஒழிய தமிழரின் அடையாளங்களையோ அவர்களின் மொழியையோ அழிக்க நினைக்கவில்லை.ஆனால் அவர்கள் இருந்த போது இல்லாத்த ஆபத்து இப்போது தமிழருக்கு ஏற்பட்டுள்ளது. சிங்களவர் தமிழரின் மண்ணை அபகரிக்கிறார்கள் ,ஈழம் என்ற பேரில் சொந்தக் கட்சிகள் வைத்திருக்காமல் தங்கள் கட்சிகளுடன் இணையுமாறு சொல்கிறார்கள் அடக்குமுறையும் கொலைகளும் தாராளமாக அரங்கேறுகின்றன.

ஹிட்லரின் ஆட்சியில் யூதர்கள் இருந்த மாதிரித்தான் இப்போதைய தமிழரின் நிலை.சொல்லப்போனால் நிலைமை இன்னும் மோசம் ஹிட்லரை அன்று உலக நாடுகள் எதிர்த்து போர் செய்து யூதர்களை மீட்டார்கள் ஆனால் ஈழத்தமிழரோ மீட்பர் எவருமே இல்லாத நாதியற்ற இனமாகத்தான் இப்போது உள்ளது. இந்த நூற்றாண்டில் அதுவும் மனித உரிமை மீறல்கள் ,போர்க்குற்றங்கள் இன் ஒழிப்பு போன்றவற்றை தடுப்பதற்கு எத்தனையோ அமைப்புக்கள் உலகில் பல இருந்தும் இந்தக் கொடுமைகள் எல்லாம் ஈழத்தமிழருக்கு நடப்பது ,மக்களுக்காக செயல் பட வேண்டிய ஐநா சபை கேலிக்கூத்தான சபையாக மாறியது எல்லாம் ஜீரணிக்க முடியாமல் இருந்தாலும் உண்மை நிலை அதுதான் .

எதிர்பாராத மாற்றம் ஒன்று நிகழ்ந்து இலங்கை அரசு தனது போக்கை மாற்றிக் கொண்டால் ஒழிய இன்னும் இரண்டு மூன்று தலை முறைகளில் ஈழத்தில் தமிழினம் என்று ஒன்று இருக்காது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஈழ மண்ணில் வாழ்ந்த எமது இனம் அழிந்து போவதை பார்ப்பதற்கு முன்பு கடவுள் எனக்கு சாவைத் தந்து விட வேண்டும் பிரார்த்தனை செய்கிறேன்,

--கண்ணீருடன் ஒரு ஈழத்தமிழன்

2 Comments:

பாரதி said...

ஐயா ஈழத்தமிழனே,உங்க கடிதம் ரொம்ப மன நெகிழ்சி கொடுத்திச்சு.ஆனா நீங்க கேட்டிருக்கிற கேள்விகள் குழப்பமாய் இருந்திச்சு.தமிழன் எந்தக் காலத்திலேயும் தன்னால கெட்டவன்.கருணாவைக்கொண்ணாந்தது உங்க தலைவர்.ரணிலைத் தோக்கப் பண்ணினது உங்க தலைவர். மகிந்தப் பிசாசை ஆசையாய் வரப்பண்ணினது
உங்க தலைவர்.உங்க தலைவர் ஜனங்களையும் காப்பாத்தமுடியாமத் தன்னையும் காப்பாத்த முடியாமப் போனது எதனால?? அட இதெல்லாம் வியாபாரம். இந்த வியாபாரிகளிட்ட செத்து தொலைஞ்சவன் நம்ப தமிழன் தான் .தலைவர்தான் தப்பிற்றார் எல்ல
பிறகென்ன தமிழினம் ஏனப்பா அழியுது. கவலைப்படாத தலைவர் எல்லாம் பார்த்துப்பார். வானத்திலெருந்து உனக்கு ஈழம் கோண்ணாந்து வைப்பார்.
சுப்பிரமணி

Anonymous said...

அய்யா சுப்பிரமணி,
நானும் உம்மைப்போல் ஒரு இந்திய நாட்டவன் என்ற ரீதியில் சொல்கிறேன்
உதவி செய்யவும் வேண்டாம்,ஆதரவு தரவும் வேண்டாம்
இப்படி நக்கல் பண்ணவும் வேண்டாம்.
மற்ற ஒரு இனத்துக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருந்தால் அவர்கள் இப்படி எல்லாம் நடக்க மாட்டார்கள்.
மற்றவரின் துன்பத்தை இப்படி ரசிக்கும் குணமுள்ள ,அதுவும் தனது இனத்தை சேர்ந்தவரின் அழிவை நக்கலோடு ரசிக்கும் ஒரு இனமான தமிழினம் இருந்தால்தான் என்ன ?,அழிந்தால் தான் என்ன?

ஈழத்தமிழர்கள் சிங்களவர்களாலும் அவர்களுக்கு உதவி செய்யும் மற்றவர்களாலும் அழிக்கபடுகிறார்கள்.
ஆனால் நமது தமிழகத் தமிழர்களை மற்றவர்கள் அழிக்கத்தேவை இல்லை
உம்மை போன்ற மனப்பான்மை கொண்டவர்களும் ,தமது தாய் மொழி பேசுவதை இழிவாகக் கருதும் இன்றைய தமிழர்களும்,சுயநலத்தின் மொத்த வடிவங்களாக இருக்கும் தமிழகத் தலைவர்களையும் கொண்ட நம் தமிழ் நாட்டு தமிழர்கள் நாமே எமது அடையாளங்களை அழித்துவிடுவோம்.