Sunday, June 28, 2009

கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்! தாமரை

ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...

கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!
ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து, வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்
தலை சுக்கு நூறாகச் சிதறட்டும்!
ஒரு சொட்டுத் தண்ணீருக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழை மேகங்கள் மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்...

இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!
தானியங்களெல்லாம் தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...

உங்கள் இரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!
போர்நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!
வாய்திறந்தாலே இரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து அரசாட்சி செய்தவர்களே...

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...

உங்கள் தலையில்
பெருமின்னல், பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே...

உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு முளைக்காது போகட்டும்...

அலைபேரலையாய் பொங்கியெழுந்து அத்தனையும்
கடல் கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!

பின்குறிப்பு :

உங்கள் குழந்தைகளை மட்டும்
சபிக்க மாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்
குழந்தைகளே...

அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உம் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உம் குழந்தைகள் சிரிக்கட்டும்!

6 Comments:

அறிவன் said...

நிலவுபாட்டு உங்கள் தளம் வந்து பார்வையிடவே வெறுப்பாக உள்ளது. வெறும் வெட்டி ஒட்டல்களை நிறுத்தி கொள்ளலாமே

Anonymous said...

சகோதரி தாமரை அறம் பாடி இருக்கிறார் .அறம் பாடினால் என்ன நடக்கும் என்று
பாவலரேறு பெருஞ்சிதிரனார் அவர்களை பற்றி அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் .
தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது உலக நாடுகள் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை . ஆனால் எங்கள் தமிழன்னை இருகிறாள்,தன் எழுத்தில் ஆயுத எழுத்தை தாங்கியவள். உலக தமிழ் புலவர்களே உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து தமிழ் இன துரோகிகள் மீது அறம் பாடுங்கள். சகோதரி தமிழ் தேவி தாமரை பாடியது கடந்த மாதம் , இந்த வரிகளையும் கடந்த 3 வாரங்களில் நடந்த நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பாருங்கள் . யார் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்றாலும் எங்கள் தமிழன்னை இருகிறாள் .அவள் கண்டிப்பாக தமிழ் இன துரோகிகள் வம்சத்தை கருவருப்பாள்.

நிலவு பாட்டு said...

/* நிலவுபாட்டு உங்கள் தளம் வந்து பார்வையிடவே வெறுப்பாக உள்ளது. வெறும் வெட்டி ஒட்டல்களை நிறுத்தி கொள்ளலாமே */

வருகைக்கு நன்றி நண்பரே, என்னுடைய எழுத்தினில் இவ்வளவு ஆர்வம் வைத்திருக்கும் உங்களின் கோரிக்கையினை விரைவிலே நிறைவேற்றுகிறேன்.

அதுவரை தமிழ் மக்களுக்கு முடிந்த உதவிகளை பண்ணுங்கள்.

Anonymous said...

உண்மையில் நடந்துவிடும்

Anonymous said...

I disagree with Mr. Arivan. I also come to this blog offen. What is the wrong in " Cut @ Paste " from other web site news.

The aim to reach the news to Tamil born. So what?

Mr. Arivan, What is your problem? The act of cut and paste or the Tamil related news.

Most of the Indians, not belongs to Tamil race and from Tamil speaking people, those who are belongs to Tamil race, do not like these kind of news.

Mr. Nilavu Pattu, Go ahead with your service. Most of the Tamil people are not reading to the Tamil race related news web sites. Atleast they can read your informations.

Take care.

Anonymous said...

To be read like this.

Most of the Indians, not belongs to Tamil race and from Tamil speaking people, those who are "NOT "belongs to Tamil race, do not like these kind of news.