Sunday, June 21, 2009

பிரபாகரன் மர்மம்! புலிகள் சொல்வது நிஜமா? - விகடன்

தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளி யானது.





விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கியுள்ள அந்த அறிக்கையில், "எமது தேசியத்தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சரணடைந்ததாக வும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறு பட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எமது தலைவர் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை சிறிலங்கா படை யினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார்' என்று அறிவழகனின் அறிக்கை தெரிவிக் கிறது.

பிரபாகரன் பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை உட னடியாக மறுத்து அறிக்கை விட்டவர்தான் அறிவழகன். அவர் பத்மநாதன் வழியில் இப்போது அறிக்கை வெளியிட்டிருப்பதால் உலகத் தமிழினம் பதைபதைப்பும் குழப்பமும் அடைந்திருக்கிறது. இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச அளவிலான செயல்பாட்டாளர்களிடம் நாம் விசாரித்தோம்.

""இறுதிக்கட்டப் போரின்போது சிங்களப் படையினர் திணறிப்போகும் வகையில் ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி, விடுதலைப்போராட்டத்தைத் தொடர் வதற்காக வெளியேறினார் எங்கள் தேசியத் தலைவர். சிங்கள அரசோ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது சொல்லிக் கொண்டிருக்கும் பொய் எங்களுக்கு ஒரு வழியில் நல்லதுதான்.

உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்குவதுதான் இப் போதைய எங்களின் முதல்பணி. பிரபாகரன் இல்லை என சிங்கள அரசாங்கமே சொல் லும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்துக் கான தடை தேவையற்றது என்ற வாதத்தை வைத்து நாங்கள் தடையை நீக்கப் போராடு வோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படை யில்தான் அறிவழகனின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இதுவும் விடுதலைப் போரின் ஒரு யுக்திதான்.

ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் ஆஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்திற்கு தடை கிடையாது. இப்போது அங்கும் தடை விதிக்கக் கோரியது இலங்கை அரசு.

ஆனால், ஆஸ்திரேலிய அரசோ, புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக நீங்களே சொல்கிறீர்கள். பிறகு எதற்கு தடை. நாங்கள் தடை விதிக்க முடியாது எனச் சொல்லிவிட்டது. இதே அடிப்படையில் மேற்குலக நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கப் பாடுபடுவோம்.

சிங்கள அரசின் மனிதஉரிமை மீறல்கள் வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கி யுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கி, விடுதலைப் போராட் டத்திற்கான ஆதரவைத் திரட்டுவதுதான் தற்போதைய எங்கள் திட்டம். நாடு கடந்த தமிழீழத் தாயகம் என்ற முறையில் செயல்படத் தொடங்கியுள்ளோம்.

தற்போதைய நிலையில் தமிழீழக் குடியரசை வெளிநாட்டில் நிறுவுவது என்றும் அதன் மூலமாக சர்வதேச சமுதாயத்தின் ஆதரவைப் பெருக்குவது, புலிகள் மீது தடையில்லா உலகத்தை உருவாக்கியபின், எங்கள் தேசியத் தலைவரின் தலைமையில் இலங்கை மீது போர் தொடுப்பது என நீண்ட திட்டங்கள் உள்ளன. இவை சிதைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அறிவழகனின் அறிக்கை வெளியாகியுள்ளது.

புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்க மறுத்த ஆஸ்திரேலியாவிலோ அல்லது புலம் பெயர் தமிழர்கள் பெருமளவில் உள்ள கனடா விலோ நாடு கடந்த தமிழீழத் தாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை ருத்திர குமாரன் தலைமையிலான ஈழத்தமிழர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். நேதாஜி இப்படித்தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். இன்று விடுதலைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பலர் இதே முறையில் செயல்படுகின்றனர். உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் எங்களின் நாடு கடந்த தமிழீழக் குடியரசின் பணிகள் இருக்கும்'' என விரிவாகத் தெரிவித்தனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அளவில் எழுச்சி பெறச் செய் திருக்கிறது ராஜபக்சே அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரத் தாக்குதல்.

9 Comments:

கொண்டோடி said...

* பத்மநாதனின் அறிக்கையை மறுத்து அறிவழகன் அறிக்கை வெளியிடவேயில்லை. பத்மநாதன் தலைவரின் வீரச்சாவு அறிவித்தலை வெளியிட முன்னர்தான் அறிவிழகனின் அறிவிப்பு தமிழ்நெற்றில் செய்தியாக வந்திருந்தது. அதாவது பத்மநாதன் 'தலைவர் இருக்கிறார்' என்று முதலிற் சொன்னதுபோற்றான் அறிவழகனின் முதலாவது செய்தி தமிழ்நெற்றில் வந்திருந்தது.

ஆனால் ஆனந்தவிகடன் இடையில் புகுந்து குட்டையைக் குழப்புகிறது. பத்மநாதனின் அறிக்கையை அறிவழகன் மறுத்ததாகக் கதைவிடுகிறது.

====================
நிலவுப் பாட்டு,
உங்களைப் போன்றவர்கள் ஈழத்தவர்களுக்கு ஆதரவாளர் என்ற போர்வையில் செய்யும் கூத்துத் தாங்க முடியவில்லை. விகடன், நக்கீரன் போன்றவற்றில் வரும் இதுபோன்ற மூன்றாந்தரக் கட்டுரைகளைப் பெரிதுபடுத்தி என்ன சாதிக்கப் போகிறீர்கள்? நீங்கள் முட்டாள் என்பதை மட்டுமன்றி ஈழத்தமிழர்களும் முட்டாள்கள் என்பதையா சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?

விகடனோ நக்கீரனோ நாளைக்குப் புறங்கையால் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுப் போய்க்கொண்டேயிருப்பார்கள். வேண்டுமானால், பிரபாகரன் கொல்லப்பட்டது எப்படி என்றுகூட இச்சஞ்சிகைகள் ஆய்வுகள் செய்து அலட்டிக் கொண்டிருக்கும்.

நீங்கள் என்ன செய்வீர்கள்? கொஞ்சமாவது மனது உறுத்தாதா?

நிலவு பாட்டு said...

வருகைக்கு நன்றி கொண்டோடி, என் மனது உறுத்துவது பற்றி எனக்கு கவலை இல்லை. அப்படி ஒன்று தலைவருக்கு நடந்திருக்க வாய்ப்பில்லை, அப்படி நடந்திருந்தால் அதற்கு முன் என் மன உறுத்தல் என்பது ஒன்றுமேயில்லை.


சரி இன்னும் சில மாதங்களில் பிரபாகரன் திரும்பி வந்தால் என்ன செய்வீர்கள். அவர் இறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது உங்களிடம்.

siruthai said...

அய்யா மறுபடியும் தங்களை தொல்லை செய்வதற்காக வருந்துகிறேன்.. நான் அத்தனை பிரபலமான பதிவர் இல்லை ..நான் எந்த பதிவை போட்டாலும் தமிழ் மணத்தில் வருவதில்லை..எனக்காக இந்த இடுகையை சேர்க்கவும்..நன்றி



http://siruthai.wordpress.com/2009/06/21/இந்திய-அரசியல்-தமிழக-இந்/

வணங்காப்பேரீச்சம்பழம் said...

//சரி இன்னும் சில மாதங்களில் பிரபாகரன் திரும்பி வந்தால் என்ன செய்வீர்கள். அவர் இறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது உங்களிடம்.//

பிரபாகரன் திரும்பி வராமலே போனால் என்ன செய்வீர்கள்?

அவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதரமுண்டு உங்களிடம்?


சும்மா மஞ்சள்பத்திரிக்கை கட்டுரைகளை வெட்டி ஒட்டிக்கொண்டிராமால் ஈழத்தமிழர் விடிவுக்கான அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கமுடியும் என்பது பற்றிய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வெளியிடுங்கள்.

பொட்டர் றோவிடம் கைதாகி சித்திரவதையில் கிடக்கும் செய்தியைக்கூட எவனுக்கும் வெளியிட நாதியில்லை. சரணடைந்த பிரபாகரன் குடும்பத்தோடு சித்திரவதைக்குள்ளான படு பாதக போர்க்குற்றத்தை வெளிப்படுத்தாமல் மூடிமறைக்கும் நீங்கள் சிங்களனிடம் எவ்வளவு காசு வாங்கினீர்கள்?

நிலவு பாட்டு said...

பிரபாகரனை இறந்ததாக சொல்ல உங்களுக்கு ஏதுவு ஆதாரம் இல்லாததுதான் எங்களுக்கு உள்ள ஒரே ஆதாரம் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பது.

தமிழக மக்கள் எல்லாம் மஞ்சள் பத்திரிக்கைதான் படிக்கறாங்களோ. ஒரு சிங்களவனிடம் தமிழன் காசு வாங்க முடியுமா அதுவும் தமிழின உணர்வாளரிடம். நீங்கள் சொல்லும் இதே கதைதான் நீங்கள் பரப்ப நினைக்கும் பிரபாகரன் விசயத்திலும் பரப்ப நினைக்கிறீர்கள்.

வணங்காப்பேரீச்சம்பழம் said...

பிரபா இருக்கிறார் என்பதற்கு ஒற்றை ஆதாரமும் இல்லாத நிலையே இல்லை என்பவர்களுக்கான பெரிய ஆதாரமாக அப்படியானால் கொள்ள முடியுமல்லவா?

//ஒரு சிங்களவனிடம் தமிழன் காசு வாங்க முடியுமா//

இதுவரை எத்தனை பேர் ஐயா? கருணா வரைக்கும்?

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

ஆனந்தவிகடன் இந்தியாவில் தமிழ்நாட்டில் மிகப்பரந்தளவில் பார்க்கப்படும் பத்திரிகை. அதிலே புலனாய்வுத்துறையின் கண்ணில் மண்ணத்தூவத்தான் பிரபா இறந்த கதையை விடுதலைப்புலிகள் கட்டுகிறார்கள் என்டு கட்டுரை வந்திருக்கு.

இதை தமிழ்நாட்டில் இருக்கும் எத்தனை இந்திய, இலங்கைப்புலனாய்வாளர்கள் படிப்பார்கள்?

அப்படியானால் ஆனந்தவிகடன் இந்திய புலனாய்வாளர்களுக்கு டிப்ஸ் கொடுக்கிறதா? விடுதலைப்புலிகளுக்கு எதிராக?

அப்படியானால் ஆனந்தவிகடன் எமக்கு செய்யும் துரோகம்? அதை கவனிக்க மாட்டீங்களா?

நிலவு பாட்டு said...

இப்படி குதர்க்கமாகவே பேசி திரியும் பலர் இன்னமும் இருக்கதான் செய்கிறார்கள். உங்களுக்கு என்ன பதில் சொல்வது.

ஒரே வார்த்தை பிரபாகரன் தமிழர்களின் இதயத்தில் அன்றும்,இன்றும், என்றும் இருக்கும் ஒரே மாவீரன்.

வணங்காப்பேரீச்சம்பழம் said...

//ஒரே வார்த்தை பிரபாகரன் தமிழர்களின் இதயத்தில் அன்றும்,இன்றும், என்றும் இருக்கும் ஒரே மாவீரன்.//

நான் இல்லை என்றேனா?

பிரபாகரன் தமிழர்களின் வரலாறு கண்ட மாபெரும் தலைவன் என்பதை மறுத்து ஏதாவது சொன்னேனா?

எம்மினத்தலைவர், மாபெரும் வீரன் சித்திரவதை செய்யப்படுக் கொல்லப்பட்டிருக்கிறான் அதற்கு நியாயத்தைத் தேடி போராடாமல், போர்க்குற்றம் புரிந்த மகிந்தவை தூக்கிலட அழுத்தம் கொடுக்காமல், சாகவில்லை என்று சொல்லி மகிந்தவையும் இந்தியாவையும் காப்பற்ற நினைப்பதைத்தானே கோபிக்கிறேன்.

ஏன் புரிந்துகொள்கிறீர்களில்லை?


ஆனந்தவிகடன் கட்டுரை தொடர்பாக நான் எழுப்பிய சந்தேகத்தை நீங்கள் மறுக்கிறீர்களா?

என்னுடைய சந்தேகம் தர்க்கரீதியானதில்லை என்கிறீர்களா?

நிலவு பாட்டு said...

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்.

எங்களுக்கு தெரியும் என்ன பேசுகிறோம் என்று யார் குற்றவாளி என்று.

நீங்கள் உங்கள் கடமையினை செய்யுங்கள் நாங்கள் எங்கள் கடமையினை செய்கிறோம்.

சென்று வரலாம் நண்பரே, விவாதிப்பதற்கு எதுவும் இல்லை. உங்கள் கொள்கையினை பரப்ப எத்தனையோ சிங்கள காடைகள் இருக்கிறார்கள் அங்கு சென்று சொல்லுங்கள்.