Thursday, June 18, 2009

நான் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால் தமிழ்நாட்டில் எவன் நம்புவான்? - கருணாநிதியின் ஆணவ திமிர் பேச்சு .

முதலில் செய்தியை படியுங்கள் :-
சென்னையில் நடந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.
அப்போது, ’’காங்கிரசுக்கு தமிழகத்திலே எவ்வளவு பெரிய வீழ்ச்சியை உருவாக்குவதற்கு இலங்கை பிரச்சினை எதிர்கட்சிகளுக்கு பயன்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.

அந்த பிரச்சினையை வைத்து தமிழர்களுடைய உணர்வு, உணர்ச்சி, போராட்டம்- தமிழர்களுக்கு எதிராக நடைபெறுகின்ற காரியங்கள்- இதற்கெல்லாம் காங்கிரஸ் அரசு துணை போகிறது என்கின்ற ஒரு கற்பனையையும், அந்த காங்கிரஸ் அரசோடு தி.மு.க. சேரலாமா என்ற கேள்வியையும் எழுப்பி நம்முடைய பலத்தை குறைக்க எண்ணினார்கள்.

காங்கிரசை பொறுத்தவரையில் அது மத்திய ஆட்சியிலே இருந்த காரணத்தால் அவர்கள் இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு எதிராக அங்குள்ள ராணுவத்திற்கு உதவி செய்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட பொய்களை இங்கே உள்ள மக்கள் நம்புகின்ற அளவிற்கு சொன்னார்கள்.

அதை சிலர் நம்பவும் செய்தார்கள். நாம் உண்மையிலே இலங்கை தமிழர்களுக்காக எங்கிருக்கின்ற தமிழர்களாக இருந்தாலும் அவர்களுக்காக என்றென்றும் பாடுபடுகின்றவர்கள், பணியாற்றுகின்றவர்கள் என்ற உண்மையை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருந்தார்கள்- கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால்- தமிழ்நாட்டில் எவன் நம்புவான்?

பேராசிரியர் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால்- அவருடைய பதவியை தூக்கி எறிந்ததை- இலங்கை தமிழர்களுக்காக நானும், அவரும் சட்டமன்ற பதவியை தூக்கி எறிந்ததை மறந்து விடுவார்களா? எனவே மக்களை அவர்களால் ஏமாற்ற முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் சொன்ன பொய்யை யாரும் நம்பத்தயாராக இல்லை.
நமது கேள்விகள் /விளக்கம் இங்கே :
  • பழங்கதைகளை பேசுவதில் மன்னர் நீங்கள் இரண்டு முறை ஆட்சி கலைக்கப்பட்டது என்பீர்கள் , ஆனால் உண்மை என்பது , ஒரு முறை ஊழலுக்கும் மறுமுறை உங்களின் இப்போதைய தோழமை கட்சியின் திமிர்த்தனத்தாலும் ஆட்சி கலைக்கப்பட்டது. இன்னும் எத்தனை காலம்தான் எஅமாற்றி பிளைக்கபோகிறீர்கள் .
  • நாற்பது எம் பி களும் ராஜினமா என்றீர்கள் . பின்னர் தேவையில்லை என்றீர்கள் .
  • ஊரோடு எல்லாரையும் மழயில் நிற்க சொன்னீர்கள் . பின்னர் பிரணாப் முகர்கி வந்ததும்
    " அனைத்தும் திருப்தி" என்றீர்கள்.
  • ஈழ பிரச்சினைக்காக போராடிய வக்கீல்களை காடுமிராண்டித்தனமாய் அடித்தீர்கள் . அந்த போராட்டத்தையே திசை மாற்றினீர்கள் .
  • மாணவர் போராட்டம் வலுப்பெற்றபொழுது , பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றீர்கள் .
  • பத்து முறைக்கும் மேல் எம் கே நாராயணன் உங்களை சந்தித்தான் அந்த கயவாளி உங்களிடம் என்ன பேசியிருப்பான் என்பதை இப்போது நன்றாக உணரமுடிகிறது .
  • இலங்கை தமிழருக்கு ஒரு அமைப்பு உருவாகிநீர்கள் அது செய்ததென்ன ?
  • கடைசியாக உண்ணாவிரதம் என்றீர்கள் குடும்பத்தோடு காலைசாப்பாடை மட்டும் "கட" பண்ணி விட்டு . போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று அப்பாவி தமிழனை ஏமாற்றினீர்கள் .
  • ராஜபக்சே அதுவெல்லாம் இல்லை என்றான் அதன் பின்புதான் கொடிய ஆயுதங்களை கொண்டு , புள் டோசர்களை மேலே ஏற்றி தமிழர்களை கொன்றான் . அதை நீ தூவானம் என்றாய் .
  • அதற்கும் முன் ஒரு பேரணி என்று வைத்து தமிழ் தேசிய தலைவனை "போர்ருஸ்" மன்னனைபோல் நடத்த வேண்டும் என்றாய் .
  • முல்லிவைக்காளில் நடந்த மனித படுகொலைகள் . இதுவரைக்கும் உலகம் பார்த்திராதது . அதை கண்டித்து இந்த நொடிபொழுது வரை ஒரு கண்டன வார்த்தையேனும் நீ பேசவில்லை .
  • ஏய் கருணாநிதி நாங்கள் நீதி தேவதை ஒன்று இருப்பதாய் நம்புகிறோம் . அது உனக்கும் உன் சந்ததிக்கும் சரியான தண்டனை யை கொடுக்கும் .



நன்றி mdmkonline.com

3 Comments:

கண்டும் காணான் said...

கொஞ்சம் கூட மனசாட்சியே கருணாநிதிக்கு கிடையாதா? அதுதான் சிவசங்கர மேனன் தெளிவாக கூறிவிட்டாரே, இந்தியாவுக்காக நடந்த போர் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன், ராஜபக்ச என்ன கொடுத்தாலும் ( பிச்சை ) அதை இந்தியா ஆதரிக்கும். அதற்குப்பிறகும் இப்படியா? இவரெல்லாம் ஏழு கோடி மக்களுக்கு முதல்வர். ஹ்ம்ம் பெருமூச்சை விட எதைத்தான் நாம் செய்ய முடியும் ???

Anonymous said...

good post

Anonymous said...

test