தமிழக மக்களே கவனம், தமிழ் நாடும் சிங்களவர்களுக்கு சொந்தமானது என சிங்கள காடைகள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. தமிழனை மதிக்காத மத்திய அரசும், அதற்கு ஜால்ரா அடித்து கொண்டிருக்கும் கருணாநிதியும் மாறும் வரை தமிழனின் தலைவிதி மாறப்போவதில்லை.
கடல் எல்லை குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சர்ச்சைகள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாகத் மிண்ட்செய்தித் தாபனம் (Mint news agency)தகவல்கள் வெளியிட்டுள்ளது.
இந்தியாவைச் சூழவுள்ள அரை மில்லியன் சதுர கிலோ மீற்றர் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு கனியப் பொருட்கள், குறித்த பிரதேசத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கமும் குறித்த அதே பிரதேசத்தை உரிமை கோரி வருவதாக இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையினால் உரிமை கோரப்படும் அரை மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பு அந்த நாட்டுக்குச் சொந்தமனதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் இந்த நிலைமை இரு தரப்பு உறவுகளைப் பாதிக்கக் கூடிய அபாயம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் உரிமைக் கோரும் கடல் பரப்புக்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்பதனை உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் கரையோரத்திலிருந்து சுமார் 200 கடல் மைல் பிரதேசம் வரையில் குறித்த நாடுகள் உரிமை கோர முடியும்.
எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கம் அண்மைக்காலமாக கனிய வள அகழ்வுகளை மேற்கொண்டு வரும் கடற்பரப்பு இந்தியாவுக்கே சொந்தமான கடற்பரப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
கடற்பரப்பிலிருந்து கனிய வளங்களை அகழ்ந்தெடுப்பது குறித்த ஆய்வுகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை எனவும், பொருளாதார வளமுடைய நிலப்பரப்புக்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததெனவும் இந்திய விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Saturday, June 13, 2009
கடல் எல்லை குறித்து இலங்கை- இந்தியா இடையில் சர்ச்சை?
Posted by நிலவு பாட்டு at 9:31:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment