Sunday, June 21, 2009

விரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன்

எதை கண்டும் கலங்குவது தமிழன் பண்பு அல்ல. கி.ஆ.பே. விசுவநாதம் கூறும் போது, 2 ஆயிரம் ஆண்டு தமிழ் வரலாற்றில் பிரபாகரனைபோல் ஒரு வீரன் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட பிரபாகரனை அழிக்க யாரும் வரவில்லை. பிரபாகரன் நன்றாக இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். நாம் தமிழர்களுக்கு தோள் கொடுத்து பாதுகாக்க முன் வர வேண்டும்.

வைகோ எம்.பி.யாக வரக்கூடாது என்று முறையற்ற முறையில் செயல்பட்டுள்ளனர். அவர் எம்.பி.யாக இருக்கும்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தியிடமே நேருக்கு நேராக கேள்வி கேட்டு திணறடித்த துணிச்சல் பெற்றவர். தட்டி கேட்கும் குரல் நாடாளுமன்றத்தில் வரக்கூடாது என்பதற்காகத்தான் அவரை தோற்கடித்துள்ளனர்.

கானகத்தில் உள்ள புலி ஆபத்தானது. அடிபட்ட புலி அதை விட ஆபத்தானது. விடுதலைபுலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கிறார்கள். அவர்கள் கொரில்லா முறையில் தாக்குவார்கள். விரைவில் பிரபாகரன் வெளியில் வருவார்.

அவர் இறந்து விட்டார் என்பதை உலக தமிழர்கள் நம்பமாட்டார்கள். ஆயுதம் தாங்காத போராளிகளான நாம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்று சேர வேண்டும்.

மன்மோகன்சிங், சோனியாவை இனி ராஜபக்சே மதிக்கமாட்டார். சீனாவின் ஆதிக்கம் அங்கு (இலங்கையில்) வந்து விட்டது. விரைவில் இது அவர்களுக்கு (மத்திய அரசுக்கு) தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

0 Comments: