Saturday, June 6, 2009

''இளைஞர்களின் ரோல் மாடல் பிரபாகரன்''!

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, கண்ணா பிரபாகரன்தான்டா சுத்த ஆண்மகன், உன்னோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், 'நான் ஈழத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரன் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்' என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது...

"பிரபாகரனைப் போய் சிலர் சர்வாதிகாரின்னு சொல்றாங்க. சொந்த மக்களையே கொன்று குவித்த ஹிட்லரா அவர்?... தன் மக்களுக்காக களத்தில் நின்று 30 ஆண்டுகளுக்கும் மேல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சுத்த வீரன் பிரபாகரன். தாக்குறது அல்ல அவர் நோக்கம்... தற்காப்புதான்.

அவர் என்ன வல்லரசு ஆசையில் உலகம் பூரா வலிந்து தாக்குதல் செய்து நாட்டைப் பிடிக்கவா முயற்சி பண்ணார்?.. கால காலமா தாங்கள் வாழ்ந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க போர்க்களம் புகுந்தவர்.

அவர் வாழ்க்கையை நினைத்தால் சிலிர்க்கிறது. எத்தனை நேர்மை... எளிமை... வீரம்...! இந்த இனத்தின் பெருமை பிரபாகரன்.

கொண்ட கொள்கை, லட்சியம் வெல்ல தன் உயிரைப் பணயம் வைத்து எப்போதும் கழுத்தில் சயனைடு குப்பியுடன் காட்சி தந்த பிரபாகரன் தான் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ரோல்மாடல். நாமெல்லாம் நேதாஜி, பகத் சிங் பத்தி படிச்சிதான் தெரி்ஞ்சிக்கிட்டோம். ஆனா பிரபாகரன் என்ற சுத்த வீரனைப் பார்த்து வளர்ந்தோம்.

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இதோ பார்... இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல் என்று காட்டி வளர்த்திருப்பேன்...

பிரபாகரனைப் போல் அர்ப்பணிப்பு குணம் உள்ள ஒரு பெரும் தலைவனைப் பெற்றெடுத்ததே ஈழத் தமிழ் மண்ணுக்குள்ள பெருமையா நான் பார்க்கிறேன்.

'வன்னியில் 5 புலி இறக்கிறார்கள்... 50 புலிகள் பிறக்கிறார்கள்' என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது என்று கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

5 Comments:

வெத்து வேட்டு said...

can't he haver any more kids? is he impotent?
all ltte supporters are like that ..hehehehe

நிலவு பாட்டு said...

/* can't he haver any more kids? is he impotent?
all ltte supporters are like that ..hehehehe */

வந்திட்டய்ய சிங்கள காடையா மானம் கெட்டவனே, ஆமாடா தமிழர்கள் எல்லாம் விடுதலைபுலிகள்தான். அதான் அங்கே மொத்தமா 50000 விடுதலைபுலிகளை கொன்னீங்களோ

பாரதி said...

//"என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இதோ பார்... இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல் என்று காட்டி வளர்த்திருப்பேன்..."//

இதை நீங்க (அதாவது நிலவு பாட்டு)
சொல்லியிருந்தா ஏற்றுக்கொள்ளலாம்.
நடிகர் சொல்லுறதாச் சொல்லுறீங்க.
அடா இன்னும் இந்தக் கழிசடை நடிகர்களை நீங்க விடவே மாட்டிங்களா?எவ்வளவு காலமடா அவனுகள கட்டியழுவீங்க? அதான் கருணாநிதி ,ஜெயலலிதா எண்ணு உங்க கண்ணுக்குள்ளாற விரல விட்டுத் தோண்டடினவங்களையெல்லாம் அரசியல்வாதியா உயர்த்தி உங்களுக்கே குழிதோண்டிப்போட்டு இப்ப எங்கிருந்தோவந்த பிரகாஸ்ராஜ் பிராபா படம் நடிக்க முந்திக்கிட்டானா? அட அவன் பிழைக்கத் தெரிந்தவண்டா/ நல்ல வசூலா அது ஓடுமடா உங்க பணத்தை யெடுத்துப் போய் அந்தக் காசிலயே அவன் மாநிலத்தில அவன் பெரியாளாவாண்டா உங்களுக்கு ஏண்டா இதில்லாம் புரியாமப் போகுது நாதாரிப் பயலுகளே?????
சுப்பிரமணி

நிலவு பாட்டு said...

/* இதை நீங்க (அதாவது நிலவு பாட்டு)
சொல்லியிருந்தா ஏற்றுக்கொள்ளலாம்.
நடிகர் சொல்லுறதாச் சொல்லுறீங்க.
அடா இன்னும் இந்தக் கழிசடை நடிகர்களை நீங்க விடவே மாட்டிங்களா? */

நடிகர்களும் மனிதர்கள்தானே நண்பா, அவர்களிலும் எத்தனையோ பேர் நம்மை போல் உண்மையாக இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் எந்த தொழில் பண்றவர்களையும் தவறாக பார்க்காதிர்கள்.

பாரதி said...

நன்றி நண்பரே,நடிகர்களும் மனிதர்கள்தானே நண்பா, அவர்களிலும் எத்தனையோ பேர் நம்மை போல் உண்மையாக இருக்கத்தான் செய்கிறார்கள். என்று சொல்கிற உங்களுக்கு வாழ்த்து. ஆனாலும் இது நான் நடிகர்கள் மேல் கொண்ட தனிப்பட்ட கோபத்தினால் எழுதவில்லை. நீங்கள் மேலும் ஒரு மாநிலக்காரனுக்கு பிரபா படத்தைக் குத்தைகைக்குக் கொடுத்துவிட்டீர்கள். என்கிற ஆத்திரத்தில் எழுதினேன்.தமிழரைத் தமிழனே படம் எடுக்கமுடியல்லியே என்கிற ஆதங்கம். அடா அடுத்த மாநிலக்காரனுக்கு உங்க மானத்தை வித்துப் போடாதீங்கடா போங்கடா
சுப்ரமணி