Thursday, February 5, 2009

திண்ணை காலிக்கு 'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முதுகு வலியோ இது.....?"

இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி தமிழகத்தின் ஆளும் தி.மு.க. நேற்று முன்தினம் கூட்டிய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானமும் அங்கு தி.மு.தலைவரும் முதல்வருமான் கருணாநிதி ஆற்றிய உரையும், அதற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் வழங்கிய பேட்டியும் இலங்தை; தமிழர் விடயத்தில் கருணாநிதியினதும், தி.மு.க.தலைமையினதும் அதன் மாநில அரசினதும் முகத்திரையைக் கிழித்து உண்மைச் சொரூபத்தை அம்பலப்படுத்தி விட்டன என்றே கூறவேண்டும்.

ஈழத்தமிழர்களின் இன்றைய பேரவல நிலைமையும் அவர்கள் சிங்களவர்களினால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நிஜத்தையும் கருணாநிதி இந்தப் பேட்டியில் திரும்பவும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள்; ஒவ்வொருவரினதும் மன எண்ணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி நிற்கும் இந்தப் பெரும் கொடூரத்தை மறுக்க மறைக்க அதை ஒப்புக் கொண்டாரோ தெரியவில்லை.

இன்று ஈழத்தமிழர்கள் பச்சிளம் குழந்தைகள் கூட கொல்லப்படுகின்றார்கள். தாய் மார்கள் இழிவாக நடத்தப்படுகின்றார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டின் தலைவர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற ஈழத்தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள்..' கருணாநிதி கூறுகிறார்.

ஆனால் ஈழத்தமிழரின் அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யாமல் பதவிக் கதிரையை ஒட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதில்தான் 'திண்ணையைக் காலி செய்ய மாட்டேன் என அடம் பிடிப்பதில்தான் உறுதியாக நிற்கிறார் கருணாநிதி

'ஈழத் தமிழர்களின் நலனைப பாதுகாப்பாற்காகப் பதவியை இழந்து, அரசைத் துறக்கவும் தயார்' என்று அண்மையில் கூட 'வாய்வீரம்' காட்டிய 'வாய்ப்பேச்சு வீரர்' தான் இந்த கருணாநிதி என்பதனை மறுப்பதற்பாலானது.

'இலங்கையில் போரை நிறுத்தச் செய்வதற்கு இந்திய மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே?' என்ற கேள்விக்குப் பதிலளித்த கருணாநிதி

"போதுமானதாக இல்லை என்பது தான் தி.மு.க.வின் நிலைமை. ஆனால் போரை நிறுத்தச் செய்யக் கூடிய அதிகாரமும் வலிமையும் மாநில அரசுக்கு இல்லையே ' எனப் பதிலளித்திருக்கிறார்.

அவர் கூறுவது போல இலங்கையில் போரை நிறுத்தச் செய்யக் கூடிய அதிகாரமமும் வலிமையும் மாநில அரசுக்கு இல்லை என்பது வாஸ்தவந்தான்.

ஆனால் அதனைச் செய்விப்பதற்கான அதிகார வலுவும், ஆளுமைப் பலமும், கட்டளை இடும் மிடுக்கும் இந்திய மத்திய அரசுக்கு நிலையவே உண்டு. அந்த வலிiமையை இந்திய மத்திய அரசு சரிவரப் பயன்படுத்தவிலை;லை என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. 'மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்வில்லை' என்பதை கருணாநிதியே நேரடியாக ஒப்புக் கொண்டமை கூட இந்த அடிப்படையில்தான்.

உண்மையில் இலங்கையில் போரை நிறுத்தச் செய்யும் நேரடி அதிகாரபலம் தமிழக அரசுக்கு இலாதபோதும் இப்படிச் செய்யும் வலிமை உடைய இந்திய மத்திய அரைச, அத்தியையில் செயற்படவைக்கும் அதிகாரமும், வலுவும் செல்வாக்கும் மாநில அரசுக்கும் தி.மு.காவிற்கும் ரொம்பவே தாராளமாகவே நிறையவே உளளன என்பது மறைக்கக் கூடியதொன்றல்ல.

அவரது தி.மு.க எம்பிக்களின் ஆதரவில்தான் மத்திய அரசு இன்று நிலைத்து நீடிக்கின்றது. மத்திய அரசுக்குத் தான் கொடுத்து வரும் முண்டைத் தி.மு.க விலக்கிக் கொண்டால் மத்திய அரசு கவிழ வேண்டியதுதான்.

ஆனால், அந்தச் செல்வாக்கை சாதக நிலையை ஈழத்தமிழர்களுக்காக இந்திய மத்திய அரசை செயற்பட வைக்கும் விடயத்துக்காக பயன்படுத்த கருணாநிதி விரும்பவில்லை. அப்படி மத்திய அரசை மிரட்டிப் பணிய வைப்பதற்கான 'முதுகெலும்பு' அவருக்கு இல்லை.

அப்படி மத்திய அரசையும், மத்திய அரசின் ஆளும் காங். கட்சியையும் இதற்காக அச்சுறுத்தப் போய், மத்தி அரசு தமிழக மாநில அரசின் ஆட்சியில் வைத்துக் காலை வாரி விட்டால் என்ன செய்வது என்ற பயம் பீதி அச்சம் கருணாநிதி
இதைத்தான் ஈழத்தமிழர் பிரச்சினையை வைத்து 'அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்' என சிலர் எதிர்பார்த்து நப்பாசையுடன் காத்துக் கிடக்கிறார்கள் என்று கருணாநிதி குறிப்பிடுகின்றார்

ஈழத்தமிழர் நலனுக்காகக் கூடத் திண்ணையை விட்டுக் கொடுக்கும் எண்ணத்தில் கருணாநிதி இல்லை என்பது தான் வெளிப்படை.

தமது முதல்வர் பதவியைக் கூட ஈழத்தமிழருக்காகத் துறக்கத் திராணியற்ற முதுகெலும்பற்ற நிலையில் தாம் உள்ளார் என்பதையும், பதவி மீது தமக்குள்ள மோகத்தையும் மேற்படி பேட்டிகளில் வெளிப்படையாகக் கருணாநிதி ஒப்புக் கொண்டுவிட்டார் என்பது தெளிவாகின்றது.

முதுகு வலியால் அவஸ்தைப்படும் அவர் மருத்துவமனையில ஏழு, எட்டு நாட்களாக இருக்கிறார் என்பதையும் இன்னும் ஒரு வாரம் இருக்க நேரிடும் என்பதையும கூட இப் பேட்டியில அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முதுகு வலியோ இது.....?"

நன்றி :சுடர்ஒளி
ஆசிரியர் தலையங்கம்

0 Comments: