Sunday, February 15, 2009

இலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் - விஜயகாந்த்

தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கும் இலங்கை நாட்டின் தூதரகத்தை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இழுத்து மூடவேண்டும் இல்லையேல் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



இராமநாதபுரத்தில் ஒரு திருமண விழாவில் உரையாற்றிய தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக உரையாற்றும் பொழுது

இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு கட்சிகளும் போராட்டங் களை நடத்தி வருகிறார்கள். நான் 1983 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது நடிகர்கள் உண்ணாவிரதத்தை நடத்தினேன்.

இலங்கை தமிழர்களுக்காக எம்ஜிஆர் கருப்புச் சட்டை அணிய சொன்னபோதுஇ கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்தாரா? இன்று எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறுகிறார். அப்போது அவர் ஏன் அந்த ஒற்றுமையை காட்டவில்லை.

இலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது மத்திய அரசும், சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று பேசுகிறார்கள்.
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒட்டு மொத்த உணர்வையும் காட்ட மிகப் பெரிய போராட்டம் தேவை. இதில் ஐ.நா. சபையும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தலையிட வேண்டும்.

வரும் 21ந் தேதி இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒபாமா தலையிட வேண்டும் என்று கோரி அமெரிக்க தூதரகத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். அப்போது இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும் நிலையில் இங்கே இலங்கை தூதரகம் எதற்கு? இருநாடுகளுக்கிடையே சுமுக உறவு வேண்டும் என்பதற்காக தான் தூதரகம் வேண்டும். தமிழினம் அழியும் போது இங்கு சிங்களவன் ஏசி அறையில் சொகுசாக இருப்பது தேவையா? என்று எண்ணி பார்க்க வேண்டும். மார்ச் மாதத்திற்குள் இலங்கை தூதரகத்தை மூடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்" என்றார்.


நன்றி http://www.pathivu.com/news/337/54//d,view.aspx

0 Comments: