Friday, February 13, 2009

புலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்

விடுதலைப்புலிகளை அழிப்பதாக தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. புலிகளை யாராலும் அழிக்க முடியாது. என ஈழத்தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமாருக்கு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் சென்னை மெமோரியல் அரங்கில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், நடிகர் சத்யராஜ் , அன்பாலயா பிரபாகரன் ஆகியோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ் தொடர்ந்து கூறியதாவது:-, அரசியல் உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் படிப்படியாக வளர்ந்து ஒருவர் புகழ் அடைவார். ஆனால் முத்துக்குமார் மரணத்துக்கு பின் புகழ் அடைந்துள்ளார். அவர் தனது கடிதம் மூலம் மிகப்பெரிய அறிவாளி என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

விடுதலைப்புலிகளை அழிப்பதாக தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. புலிகளை யாராலும் அழிக்க முடியாது. இலங்கை தமிழர் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்வு பூர்வமாக ஒன்றுபட வேண்டும். உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் ஆசை தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பது தான். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. இங்கு ஒலிபெருக்கி, மைக் பயன்படுத்த தடை விதித்துள்ளனர். இது ஜனநாயகம் ஆகாது. தமிழ் சினிமா படங்களில் நல்ல கேரக்டருக்கு முத்துக்குமார் பெயர் சூட்டி கெளரவிக்க வேண்டும்.

கூட்டத்தில் பேசிய பாரதிராஜா, ஈழத்தமிழர்களை பாதுகாக்க தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இராமேஸ்வரத்தில் ஊர்வலம் நடத்தினோம். சென்னையிலும் நடந்தது. நாங்கள் படைப்பாளிகள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறோம். இதில் சுயநலம் கிடையாது. அரசியலும் இல்லை. இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் தமிழர் நெஞ்சங்களில் நிறைந்துள்ளார். அவர் ஒரு கோடி விடுதலைப்புலிகளுக்கு சமம். இந்த ஆண்டு எடுக்கப்படும் எல்லா படங்களிலும் நல்ல தொரு கேரக்டருக்கு முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும். படங்களின் டைட்டிலிலும் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி என்ற வாசகத்தை இடம் பெறச் வேண்டும் என்றார்.

டைரக்டர் சீமான் பேசும்போது, திலீபன் போல் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்ய நான் திட்டமிட்டேன். டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் தடுத்து விட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசுதான் போர் நடத்துகிறது. முத்துக்குமாரை சந்தித்தது இல்லை. இறந்த பிறகுதான் அவரது தியாகமும், உணர்வும் தெரிய வந்தது என்றார்.

நன்றி http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d1j0W0ecGG7X3b4P9E84d2g2h3cc2DpY2d436QV2b02ZLu3e

4 Comments:

LKritina said...

Sonia led indian govt is cheating the world tamils; It needs to be crushed politically!!!
Velka Tamil!!! Velka Tamil Eelam!!!

LKritina said...

why I worship Our Beloved Leader Pabhaharan!
He only has showed to the whole world the Old values of True Veeram spoken in PuraNaanuru!!!
I have no doubt in my mind that Our Beloved Leader Prabhaharan is sure to get our Freedom that is Independent Tamil Eelam!!!!

யட்சன்... said...

//டைரக்டர் சீமான் பேசும்போது, திலீபன் போல் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்ய நான் திட்டமிட்டேன். டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் தடுத்து விட்டனர்.//

இன்னுமா இவய்ங்கள நம்புறீங்க....

யட்சன்... said...

என்னமோ இப்பத்தான் கொஞ்சநாளா இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது மாதிரி குமுறிக்குமுறி கூச்சலிடும் இந்த உணர்வாளர்கள் கடந்த அம்மா ஆட்சியில் எங்கேயிருந்தனர்....யோசிங்கப்பா...

மண்குதிரைகள் ஒருநாளும் கரையேறாது...

நேற்றைக்கு அத்வானி ஈழத்தமிழருக்காய் குரல் கொடுத்தார் பாருங்கள், அந்த மாதிரியான ஆசாமிகளால்தான் தீர்வுகளை தரமுடியும், இந்த கூலிக்கு மாரடிக்கும் கும்பல்களின் உளறல்களை படித்து புளகாங்கிதப்படுவது, சுயசொறிதல் என்பதாவே கொள்ளப்படும்.

வைக்கோ சரியான ஆளை பிடித்திருக்கிறார்...தற்போதைக்கு திரு.அத்வானி அவர்களால் மட்டுமே இந்த பிரச்சினையில் மத்திய அரசின் போக்கினை திசைதிருப்பும் சர்வசக்தி....ம்ம்ம்ம்