Tuesday, February 17, 2009

சீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.

நண்பர்களே தமிழனுக்கு ஒரு விடிவு தர ஒரு தலைவன் வரமாட்டானா என தேடி, தேடி அலுத்து விட்டோம். இன்னும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்து தலைவர்களும் பணம், பொருள், பதவி ஆசையில் ஏதாவது ஒன்றில் சிக்கி தமிழின அழிவிற்கு உதவியாக உள்ளனரே தவிர தமிழனை காப்பாற்ற சில தலைவர்கள் நினைத்தாலும் அவர்களால் அது முடியவில்லை.

நாம் ஏன் சீமானை நமது தலைவராக தேர்ந்தெடுக்க கூடாது. உண்மை தமிழன் இதைவிட வேறு என்ன வேண்டும், தைரியம், பயமின்மை, பக்குவம், அனுபவம் என அனைத்தும் உள்ளது.

சீமான் அண்ணா உங்களின் அன்பு தம்பியின் அன்பு கட்டளை தமிழர்களை நீங்கள்தான் வழி நடத்தி செல்ல வேண்டும். என்ன பண்ணூவிர்களோ எப்படியாவது எங்களை வழி நடத்தி இந்த தமிழின அடிமைதனத்திலிருந்து விடிவு கிடைக்க வழி செய்யுங்கள்.

எவனெல்லாமோ நாளைய முதல்வர் சொல்லிட்டி அலையறானுங்க, உங்களை நாளைய முதல்வராக்க நினைக்கும் உன் அன்பு தம்பிகள், உன்னோடு உன் கரத்தை வலுபடுத்த கடைசி வரை வருவோம்.

20 Comments:

Anonymous said...

start a blog blog for asking him run

Anonymous said...

I agree - thiru

Anonymous said...

Good Joke of this century!

Anonymous said...

/Good Joke of this century!/

why is that? Is it because he cares sincerely about tamilnadu and tamileelam unlike JJ, Cho, SSwamy, SVsekhar, Ram and your other cousins?

மதிபாலா said...

ஏன் கூடாது??? தலைமைக்குரிய எந்த தகுதிகளும் இல்லாதவர்கள் எல்லாம் நாளைய முதல்வர் நாந்தான் என்று சொல்லும்போது சீமான் ஏன் நமக்கு தலைவராக இருக்க முடியாது???? தவிர்த்து ஏனையோர் எல்லாம் நான் தலைவன் என்னை ஆதரியுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் தனக்குத்தோன்றிய கருத்துக்களை சமூகத்தில் எடுத்து வைக்கும் சீமான் போன்ற தன்னலமற்றவர்கள் தலைமைப்பதவிக்கு முற்றிலும் தகுதியானவர்களே.

தலைவர் சீமான் சரியான திசையில்தான் பயணிக்கிறார்.கூடிய விரைவில் அவர் கையில் அரசியல் லகான் அகப்படத்தான் போகிறது.

அவரை ஆதரிக்க வேண்டிய கடமையும் இளைஞர்களுக்கு இருக்கிறது.

Anonymous said...

சரியான் நேரத்தில்... சரியான கேள்வி... அண்ணன் சீமான் சமகாலத்து இளைஞர்களுக்கு தான் சரியான வழிகாட்டி...

மதிபாலா said...

நான் பேசினால் எரிச்சல் அடைகிறார்கள் – சீமான்

ஈழத் தமிழர்களின் பிரச்சனையை நான் பேசினாலேயே பலர் எரிச்சலைடைகிறார்கள், அதனால்தான் ஒரு வழக்கைப் போட்டு என்னை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர் என்று இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.

webdunia photo WD
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியதற்காக அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி காவல் துறையினர் எந்த நேரத்திலும் தன்னை கைது செய்ய வருவார்கள் என்ற நிலையில், தமிழ்.வெப்துனியா.காமிற்கு தொலைபே‌சி வா‌யிலாக ஒரு சிறப்பு பே‌ட்டி அளித்தார் இயக்குனர் சீமான்.

தமிழ்.வெப்துனியா.காம் : ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறீர்கள். இன்று 3வது முறையாக கைது செய்யப்படவுள்ள நிலையில் உங்கள் எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

இயக்குனர் சீமான் : ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்கள் விடுதலை பெற வேண்டும் என்ற எழுச்சி தமிழகத்தில் பரவலாக எழுந்துள்ளது. இது அடங்காது. நான் உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் அந்த எழுச்சி மேலும் பெருகத்தான் செய்யும், குறையாது.

எதற்காக சீமான் கைது செய்யப்பட்டான்? ஏன் சிறையில் அடைக்கப்பட்டான் என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் மீ்ண்டும் மீண்டும் எழும். அதற்கு விடை தேடுவார்கள். அதுவே எழுச்சியாகும். அது வளர்ந்து கொண்டேயிருக்கும். எனவே என்னை உள்ளே வைப்பதால் எதுவும் நின்றுவிடாது.

தமிழ்.வெப்துனியா : ஈழத்தில் சிறிலங்க இராணுவத்தின் தொடர் தாக்குதலில் தமிழர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். அங்குள்ள மக்களுக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றம் இங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளதே.

சீமான் : அதைத்தானே பேசுகிறேன். ஒவ்வொரு கூட்டத்திலும் அதைத்தானே பேசுகிறேன். நான் மிகவும் உணர்ச்சி வயப்படக்கூடியவன். துக்கம் தாங்க முடியவில்லை என்றால் கதறி அழுது விடுவேன். அப்படிபட்ட நிலைதான் நீடிக்கிறது. அதனால்தான் என் இனத்தைக் காப்பாற்றக் குரல் கொடுக்கிறேன். ஆனால் நான் பேசுவது சிலருக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இவன் பேசினால்தானே எழுச்சி ஏற்படுகிறது என்று எனது குரலை ஒடுக்க நினைக்கிறார்கள். அதனால் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கிறார்கள். நான் பேசினால் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்று இளைஞர்களும், மக்களும் கூடுகின்றனர். அது சிலருக்குப் பிடிக்கவில்லை. என்னை சிறைப்படுத்துகின்றனர்.


ஆனாலும் அது அடங்காது. ஈழத் தமிழனத்தைக் காப்பாற்ற தமிழகத்தில் உருவாகியுள்ள எழுச்சி அடங்காது. அது இன்று ஒரு பெரிய இயக்கமாகவே வளர்ந்து வருகிறது. மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.

தமிழ்.வெப்துனியா : தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை அரசியல் ரீதியாக கொண்டு செல்லலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறதா?

சீமான் : ஆம். தமிழறிஞர்கள் பலரும் அவ்வாறு கூறுகின்றனர். என்னோடு இருக்கும் தோழர்கள் கூறுகின்றனர். மாணவர்கள், வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இப்போது கூட அது அரசியல் ரீதியாக - ஆனால் எந்தக் கட்சியையும் சாராத - ஒரு இயக்கமாகத்தானே நடந்துகொண்டிருக்கிறது. முத்துக்குமாரின் இறுதி நிகழ்ச்சியில், ஊர்வலத்தில் திரண்ட மாணவர்களும், இளைஞர்களும், ஏராளமான தமிழர்களும் எந்த அரசியல் அடையாளமும் கூடாது என்று கூறியது மட்டுமின்றி, அது ஈழத் தமிழரின் அடையாளத்தோடுதானே நடைபெற்றது. இது எதைக் காட்டுகிறது? தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி இயக்கம் ஒரு புதிய அரசியல் போக்காகவே உள்ளது என்பதைத்தானே?

தமிழ்.வெப்துனியா : ஆனால், ஈழத் தமிழருக்கு ஆதரவான அந்த எழுச்சி சரியான அரசியல் வடிவம் பெற வேண்டுமென்றும் ஒரு கருத்து நிலவுகிறதே?

சீமான் : தேர்தல் அரசியல் எல்லாம் சரிப்பட்டு வராது, அது சில இடங்களுக்காக கூட்டணிக் கட்சிகளிடம் பேசுவது என்றெல்லாம் இருக்கும். அது சரிப்படாது. இந்த எழுச்சி ஒரே நோக்கத்தை மட்டுமே கொண்டது. அது தமிழீழத்தின் விடுதலை. அந்த இலக்கை எட்டிவிட்டால் எதற்கு அரசியல் எல்லாம்?

ஒரு இய‌க்கமாக உருவா‌கியு‌ள்ள இ‌ந்த எழு‌ச்‌சி எ‌ப்படி‌ப்ப‌ட்ட வடிவ‌த்தை‌ப் பெறு‌ம் எ‌ன்பதனை ம‌க்க‌ள்தா‌ன் முடிவு செ‌ய்வா‌ர்க‌ள். நா‌ம் எதையு‌ம் சொ‌ல்ல முடியாது. ஆனா‌ல், ஒ‌ன்று ‌நி‌ச்சய‌ம், இப்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சிதான் தேர்தல் களத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஈழத் தமிழினத்திற்கு ஆதரவான கட்சிகளே வெற்றி பெறும். பொறுத்திருந்து பாருங்கள்.

தமிழ்.வெப்துனியா : நெருக்கடியான இந்த நேரத்திலும் எங்களுக்கு ஒரு நேர்காணலைத் தந்ததற்கு நன்றி.

சீமான் : இந்த மக்கள் எழுச்சி தொடரும். மேலும் வலுப்பெறும். நான் உள்ளேயிருந்தாலும், வெளியே இருந்தாலும் அதில் மாற்றம் ஏதுமில்லை. எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் நான் பேசுவதை நிறுத்தப் போவதில்லை. தமிழீழ விடுதலை கிட்டும் வரை நான் பேசுவேன், பேசிக் கொண்டே இருப்பேன்


=======================

இது நேற்று வெப்துனியாவிற்கு சீமான் தந்த பேட்டி. தமிழினத்துக்கு எதுவுமே செய்யாத புண்ணாக்குகள் எல்லாம் தேர்தல் அரசியலுக்கு வந்து நம்மிடம் ஓட்டுக்கேட்கும்போது , தேர்தல் அரசியலே தேவையில்லை என்ற மாற்று சிந்தனையாளர்.!!

Anonymous said...

//why is that? Is it because he cares sincerely about tamilnadu and tamileelam unlike JJ, Cho, SSwamy, SVsekhar, Ram and your other cousins?//

Sincerely about tamilnadu? What the hell he did to tamilnadu earlier to Srilankan issue? Avan oru masira pudinginna, nee edhukku kooja thookira?

Anonymous said...

சீமான். 100% right choice.!

மறத்தமிழன் said...

நிலவுபாட்டு,
நான் நினைத்ததை நீங்கலும் பதிவாக போட்டதற்கு நன்றி.

இன்று எத்தனையோ போலி அரசியல் வாதிகளுக்கு மத்தியில் எந்த பிறதிபலனும் எதிர்பாறாமல் உண்மையாக குறல் கொடுகும் சீமான் நிச்சயம் தமிழர்களுக்கு தலைமை எற்பார்.

எண்ணற்ற இளைஞர்களின் விருப்பப்படி தமிழகத்தில் ஈழப்புரட்சியின் மூலம் ஒரு தலைவன் கிடைதுவிட்டான்.

மதிபாலா நீங்கல் சொன்னது போல் சீமான் தேர்தல் அரசியலை விரும்பாதவர். எழுச்சிமிக்க மறத்தமிழர் கூட்டம் தான் அவரை அரசியல் பாதைக்கு கொன்டுவரவேன்டும்.
ஜாதி,மதம் கடந்து தமிழர்கள் அனைவரும் சீமான் பின்னால் அனிதிரள்வோம்.
தொப்புல் கொடி உறவுகளுக்கு குறல் கொடுப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரனது அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேன்டும்.
விரைவில் ஈழத்தமிழர் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு கான்போம் என நம்புவோம்.

அன்புடன்
மறத்தமிழன்

நிலவு பாட்டு said...

உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. கண்டிப்பாக இவரை நாம் தலைவராக்கியே தீர வேண்டும். எத்தனையோ துரோகிகளை தலைவர்களாக ஏற்று கொண்ட நாம், இன்று ஒரு மறத்தமிழனை ஜாதி, மத, அரசியல் கடந்து தலைவராக்குவோம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைவோம்.

இந்த கருத்துக்களை சீமானுக்கு தெரிவிக்க வேண்டும்.

Anonymous said...

//உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. கண்டிப்பாக இவரை நாம் தலைவராக்கியே தீர வேண்டும். எத்தனையோ துரோகிகளை தலைவர்களாக ஏற்று கொண்ட நாம், இன்று ஒரு மறத்தமிழனை ஜாதி, மத, அரசியல் கடந்து தலைவராக்குவோம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைவோம்.

இந்த கருத்துக்களை சீமானுக்கு தெரிவிக்க வேண்டும்///


I agree 100%

Anonymous said...

/Avan oru masira pudinginna, nee edhukku kooja thookira?
மொள்ளைமசிரே சீமானுக்கு கூஜா தூக்கரது இருள்நீக்கி நாயிக்கு வாழ எலை தூக்கரதவிட பெட்டர்டா. வந்துட்டானுங்க. சோ கூமுட்டை இவனுங்கள போல ஈழதமிழனுக்களுக்கு ஒன்னுமே கெடுதல் பன்னாம இருந்தாரு பாரு அதுவே பெட்டர்டா பன்னாடை

Mike said...

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம், சீமானின் சிரிப்பில் ஈழத்ததை காணலாம்.

வாருங்கள் அணி திரள்வோம் சீமானின் தலைமையில்.

Senthil said...

Hi Nilavupattu,
How about forming a mailing list
so that we can disseminate information,
take actions(like uploading genocide videos
to international media,sending mails to them)

Shall we go ahead..
If so, could you please let me ur mail id..
--Senthil

Anonymous said...

Why not?
Thalaivar Seemaan! Vazhka! Valarka!

today no one seems to be a tamil leader... let the seemaan be....

Anonymous said...

You r right. சீமான் வாழ்க

mraja1961 said...

நாம் ஏன் சீமானை நமது தலைவராக தேர்ந்தெடுக்க கூடாது. உண்மை தமிழன் இதைவிட வேறு என்ன வேண்டும், தைரியம், பயமின்மை, பக்குவம், அனுபவம் என அனைத்தும் உள்ளது.

இதை நான் ஆமோதிக்கிறேன்
மகாராஜா

muthunagaron said...

வழிமொழிகிறேன்......

//இந்த எழுச்சி ஒரே நோக்கத்தை மட்டுமே கொண்டது. அது தமிழீழத்தின் விடுதலை. அந்த இலக்கை எட்டிவிட்டால் எதற்கு அரசியல் எல்லாம்?//

ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு நடுவில் இந்த அளவுக்கு தெளிவான எண்ண ஓட்டமும் தன்னலமும் அற்ற மனிதர் கிடைப்பது அரிது.

இன்றைய சூழ்நிலையில் ஈழப்போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்ல இவரை விட சிறந்த மனிதராக (தலைவராக) எனக்கு யாரையும் நினைக்கத்தோன்றவில்லை.

LKritina said...

Seeman is 100% true! nothing but true! YES We want Seeman to lead our struggle politically for eelam tamils!!! Eelam Tamils are brutally killed daliy 100's in number by racist sinhala military regime of sinhala Rajapaksa!!
It should be stopped!! more badly Sonia/Rahul led indian govt is actively driving the war for sinhala govt!!!