Sunday, February 15, 2009

பொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும்

சமகால அரசியல் பொஸ்னியா சேபியாவில் சுமார் ஏழாயிரம் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டமை போன்றே இலங்கையின் வன்னியில் அண்மையில் படையினரால் நடத்தப்பட்ட வைத்தியசாலை மீதான தாக்குதல்கள்

மற்றும் பாதுகாப்பு வலயத்தின் மீதான தாக்குதல்கள் அமைந்திருந்ததாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் நிர்வாகத்தில் துணை சட்டமா அதிபராக இருந்தவரான புருஸ் பெய்ன்

தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்தை இன்று "பொஸ்டன் குளோப்" சஞ்சிகை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த படுகொலைகளுக்கு அமெரிக்காவின் இரட்டை வதிவிட விசாவைக் கொண்ட பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்சவும், இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுமே பொறுப்பு என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் சிங்கள பெரும்பான்மையினர் தமிழ் கிறிஸ்தவ தமிழ் மக்களை கொலை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவே கருத வேண்டியுள்ளது. இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டு அடங்கிய 1000 பக்க குற்றச்சாட்டுக்கள், அமெரிக்க சட்டமா அதிபர் எரிக் எச் ஹோல்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு தமது பதவிகளை ஏற்ற சரத் பொன்சேகாவும் கோட்டாபய ராஜபக்சவும் தமிழர்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் சுமார் 3800 படுகொலைகளுக்கும் காணாமல் போதலுக்கும் பொறுப்பாளிகளாவர்.அத்துடன் பல்லாயிரக்கணக்கானவர்களின் காயங்களுக்கு பொறுப்பானவர்களாவர்.

பாடசாலைகள் கோயில்கள் மற்றும் வீடுகள், வைத்தியசாலைகள் என பல பொதுஇடங்களிலும் குண்டுவீச்சுகளை நடத்தி இயல்புவாழ்க்கையை ஸ்தம்பித்துள்ளனர். இது பொஸ்னியாவிலும் கொசோவோவிலும் சேபியப்படையினர் நடத்திய படுகொலைகளுக்கு நிகரான, சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டகூடிய குற்றங்களாகும்.

இலங்கையில் பாதுகாப்பு வலயங்கள் மீது அண்மைக்காலமாக படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 2500 பேர் காயமடைந்துள்ளனர். பாதைகள் மூடப்பட்டு தன்னார்வு ஊழியர்கள் தடுக்கப்பட்டதுடன் வன்னியில் இருந்து மனிதாபிமான பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஐக்கிய அமெரிக்கா, சேபியாவில் படுகொலையை மேற்கொண்ட சுலோபொடன் மிலோசவிச், ரடோவன் கராட்சிக், ரட்கோ லாடிவிக் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கையை எடுத்தது.

இதன் அடிப்படையிலேயே தமது பிரஜைகளான கோட்டாபய ராஜாக்சவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் எதிராக அமரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும் என புருஸ் பெய்ன் கோரியுள்ளார்.


நன்றி தராக்கிராம்
http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2367:2009-02-15-15-50-24&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

2 Comments:

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

அவர்கள் சுமார் 3800 படுகொலைகளுக்கும் காணாமல் போதலுக்கும் பொறுப்பாளிகளாவர்.அத்துடன் பல்லாயிரக்கணக்கானவர்களின் காயங்களுக்கு பொறுப்பானவர்களாவர்.//
-;(