Thursday, April 30, 2009

இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிறார்

சிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலைகளைச் சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு முன் கொண்டு வரும் தமிழ் இணையத்தளங்கள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது உர்ஜிதமாகியுள்ளது. தமிழ்மக்கள் மீதான அரச படைகளின் தாக்குதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்காமலும், யுத்த பிரதேசங்களுக்கு அப்பால் இருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும், தமக்குச் சார்பான செய்திகளை மட்டுமே வெளிவரும் வகையில் ஏற்படுத்திக் கொண்டு, இனப்படுகொலைகளை மேற்கொண்ட சிறிலங்கா அரசின் செயற்பாடுகளுக்கு பெரிதும் இடையூறாக இருந்தவை இந்தத் தமிழ இணையத்தளங்கள்.

யுத்த பிரதேசத்தின் காட்சிளை நிழற்படங்களாகவும், கானொளிகளாகவும், உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டுவந்த இணையத்தளங்களை முடக்குவதற்கு பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருவது உர்ஜிதமாகியுள்ளது.

கடந்த 13ந்திகதி 4tramilmedia.com இணையத் தளத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கு எத்தனித்த தருணத்தில், அது கண்டுபிடிக்கப்பட்டு, தொழில் நுட்பவியலாளர்கள் சுமார் 12 மணிநேரப் போராடி, அனைத்துத் தரவுகளையும் இழப்பின்றி மீட்டெடுத்திருந்ததை அறியத் தந்திரந்தோம். தற்போது 'சங்கதி' இணையத்தளம் மீது அத்தகைய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத��
� தெரிய வருகிறது. இது போன்று முன்னர் 'பதிவு' இணையத்தளம் மீதும் மேற்கொள்ளபட்டிருந்ததாக அறிய முடிகிறது.

இனப்படுகொலையை மேற்கொள்பவர்களும், அதற்குத் துணைபோவர்களும், இத்தகைய சாட்சியங்களை அழிக்க நினைப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஒரு இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் காட்டுமிராண்டித் தனத்தை, இனப்படுகொலையை, வெளிக்கொணரும் ஊடகங்கள் மீதான இத் தாக்குதல் மிக வண்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. இத்தகைய இழிசெயல்களுக்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டியுமுள்ளது. இத்தகைய முயற்சிகளுக்கு எதிரா இணையத் தளங்கள் தங்கள் பாதுகாப்பினை அதிகப்படுத்த வேண்டியுமுள்ளது.

பரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முடியாத உறுதிமொழிகளைத்(non disclousure agreement) தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது

பிரித்தானியாவில் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் என்ற மாணவனினால் 25-வது நாளாக முன்னெடுக்கப்பட்ட பட்டினிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மதியம் முடிவுக்கு வந்துள்ளது.

பிரிந்தானிய அரசாங்கம் வழங்கிய சில வெளியிடப்பட முடியாது உறுதி மொழிகளை அடுத்தே இவரது பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வருவதாக சுப்பிரமணியம் பரமேஸ்மரனினால் விடுக்கப்பட்ட ஊடகச் செவ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழ் ஊடங்களுக்கு ஐரோப்பிய நேரம் 13:20 மணிக்கு வழங்கிய ஊடகச் செவ்வியில்:

எங்களுக்கு சில நிர்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் சில விடயங்களை கூறமுடியாது உள்ளது. எனினும் எமது மக்களுக்கு சில விடங்களை தெரியப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.

பட்டினிப் போராட்டத்தைத் தொடர்வதன் ஊடாக எமக்கு கிடைத்த சில சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போகின்றன. அந்த வகையில் இரண்டு மூன்று முக்கிய சந்தப்பங்கள் இப்போது கிடைத்துள்ளன.

பட்டினிப் போராட்டத்தை கைவிடுவதன் ஊடாகவே இச் சந்தப்பங்களைப் பயன்படுத்தலாம் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்டுள்ள சில நிர்பந்தங்களால் அவற்றை வெளிப்டையாகக் கூறமுடியாது உள்ளது.

எனினும் எமது மக்களுக்கு அவற்றைத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். பிரித்தானியாவில் இரண்டு அல்லது மூன்று உயர் முக்கிய சந்திப்புக்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதுவும் பட்டினிப் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே இச்சந்திப்புக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என உத்தவாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தாது போனால் தீர்வுகளும் கிடைக்காமல் போய்விடும். எமக்கான தீர்வினை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்காக சில காலம் பொறுத்திருக்க வேண்டும். சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இன்னும் சிறுதி காலத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் தெரியப்படுத்துவோம். அது எமது தலையாய கடமை என்பதைக் கூறி எனது பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்கின்றேன் என பரமேஸ்வரன் ஊடகச் செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பிரிந்தானிய மருத்துவக்குழு ஒன்று பரமேஸ்வரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றது. அத்துடன் பிரித்தானிய பாராளுமன்றக் கட்டிடத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மாணவர் பிரித்தானிய சமூதாயம் அறிவித்துள்ளது.

கருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தமிழர்களை மொட்டையடிக்க பார்த்தது

உலக‌த்‌திலேயே 3 ம‌ணி நேர‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்த ஒரே நப‌ர் கருணா‌‌நி‌தி: ஜெயல‌லிதா

''உலக‌த்‌திலேயே ‌மிக குறு‌கிய நேர‌ம் அதாவது, 3 ‌ம‌ணி நேர‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்த ஒரே நப‌ர் கருணா‌நி‌திதா‌ன்'' எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் வைரம் தமிழரசியை ஆதரித்து அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா பேசுகை‌யி‌ல், ''உ‌ங்களையெ‌ல்லா‌ம் ச‌ந்‌தி‌க்க வே‌ண்டிய க‌ட்டாய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. உ‌ங்க‌ள் அ‌‌ன்பு சகோத‌‌ரிய‌ா‌கிய எ‌ன்னோடு இ‌ந்த தே‌ர்த‌ல் பய‌ண‌த்‌தி‌ல் ‌‌நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் உட‌ன் இ‌ரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற ம‌கி‌ழ்‌ச்‌சி என‌க்கு உ‌ண்டு. இதே ம‌கி‌ழ்‌‌ச்‌சியை ‌நீ‌ங்களு‌ம் ப‌‌‌கி‌ர்‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌ள் எ‌ன்று நா‌ன் உறு‌திபட ந‌ம்பு‌கிறே‌ன்.

த‌மிழக‌த்‌தி‌ல் த‌ற்போது கு‌டு‌ம்ப ஆ‌ட்‌சி நட‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. இத‌ன் காரணமாக ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌தீமைகளையு‌ம், அவல‌ங்களையு‌ம் ‌நீ‌ங்க‌ள் எ‌ல்ல‌ா‌ம் வேறு வ‌ழி‌யி‌ன்‌றி வேதனையை தா‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌‌ன்‌‌றீ‌ர்க‌ள். 2004 ஆ‌ம் ஆ‌ண்டு நடைபெ‌ற்ற ம‌க்களவை‌ பொது‌த் தே‌ர்த‌லி‌ல் உ‌‌ங்க‌ள் வா‌க்குகளை பெ‌ற்று ம‌த்‌தி‌யி‌ல் கா‌‌ங்‌கிர‌ஸ் தலைமை‌யி‌ல் ‌தி.மு.க. அ‌ங்க‌ம் வ‌கி‌க்கு‌ம் கூ‌‌ட்ட‌ணி அரசு அமை‌க்க‌ப்ப‌ட்‌டது.

கட‌ந்த 5 ஆ‌ண்டுக‌ளி‌ல் இ‌ந்த ம‌த்‌‌திய அரசு உ‌ங்களு‌க்கு எ‌ன் ந‌ம்மை செ‌ய்‌தி‌ரு‌க்‌கிறது. கா‌ங்‌கிரசு‌ம், ‌தி.மு.க. இணை‌ந்த ம‌த்‌திய அரசா‌ல் ‌நீ‌ங்க‌ள் அடை‌ந்த பய‌ன் எ‌ன்ன? பொருளாதார ‌சீ‌ர‌ழிவு, அ‌‌திக‌‌ரி‌த்து வரு‌ம் ‌தீ‌விரவாத‌ம், விவசா‌‌யிக‌ள் த‌ற்கொலை, ந‌தி‌நீ‌ர் ப‌ங்‌கீ‌ட்டி‌ல் பாரப‌ட்ச‌ம், வேலை‌யி‌ல்லா ‌தி‌‌ண்டா‌‌ட்ட‌ம், தொ‌ழி‌ல் வள‌ர்‌‌ச்‌சி கடு‌ம் பா‌தி‌ப்பு, ‌விலைவா‌சி உய‌ர்வு. இவைக‌ள் தா‌ன் ம‌த்‌‌திய அரசு இ‌ந்நா‌ட்டு ம‌க்களு‌க்கு அ‌ளி‌த்து‌ள்ள ப‌ரிசுக‌ள். இ‌ன்றைய ம‌த்‌திய அர‌‌சி‌ன் ‌நி‌ர்வாக ‌திறமை‌யி‌ன்மையு‌ம், அல‌ட்‌சிய‌‌ப் போ‌க்கு‌‌ம்தா‌ன் இத‌ற்கு எ‌ல்லா‌ம் காரண‌ம்.

த‌மிழக‌த்‌தி‌ல் மண‌ல் கொ‌ள்ளை, அ‌ரி‌சி கட‌த்த‌ல், பொதும‌க்க‌ளி‌ன் சொ‌த்து‌க்களை அப‌க‌ரி‌த்த‌ல் என ப‌ல்வேறு அராஜ‌க‌ங்களை நட‌‌த்‌தி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது கருணா‌நி‌தி தலைம‌ை‌யிலான மைனா‌ரி‌ட்டி ‌தி.மு.க. அரசு. அதும‌ட்டும‌ல்லா‌ம‌ல் ‌மி‌‌ன்சார‌த்த‌ி‌ற்கு ‌விடுமுறையு‌ம் அ‌ளி‌த்து த‌மி‌ழ்நா‌ட்டை அ‌ழிவுபா‌தை‌க்கு கொ‌ண்டு செ‌ன்‌றிரு‌‌க்‌கிறது கருணா‌நி‌தி தலைம‌ை‌யிலான மைனா‌ரி‌ட்டி ‌தி.மு.க. அரசு. இவ‌ர்களு‌க்கு வரு‌ம் மே மாத‌ம் 13ஆ‌ம் தே‌தி நடைபெற உ‌ள்ள நாடாளும‌ன்ற பொது‌த் தே‌ர்த‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் த‌க்க பாட‌ம் புக‌ட்ட வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ள்‌கிறே‌ன். செ‌ய்‌வீ‌ர்களா? ‌‌நீ‌ங்க‌ள் செ‌ய்‌வீ‌ர்களா?.

இல‌‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட உ‌ண்ணா‌விரத நாடக‌ம் நட‌‌த்‌தி, தா‌ம் உ‌ண்ணா‌விர‌த‌ம் இரு‌ந்ததா‌ல் உ‌டனே இல‌ங்கை அரசு போ‌ர் ‌நிறு‌த்த‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌த்து ‌வி‌ட்டது. எனவே தனது உ‌ண்ணா‌விரத‌த்‌‌திற‌்கு வெ‌ற்‌றி ‌கிடை‌த்து ‌வி‌ட்டது எ‌ன்று அ‌றி‌வி‌த்து ‌வி‌ட்டு, வ‌ந்த வேக‌த்‌தி‌ல் உ‌ண்ணாநோ‌ன்மை முடி‌த்து‌க் கொ‌ண்டு ‌வீ‌டு ‌திரு‌ம்‌பி‌‌வி‌ட்டா‌ர் கருணா‌நி‌தி. ஆனா‌ல் உ‌ண்மை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்ப‌ட்டதா? அ‌ப்படி அ‌றி‌வி‌க்கவே இ‌ல்லை எ‌ன்று இல‌‌‌ங்கை அரசு மறு‌ப்பு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌வி‌ட்டது எ‌ன்று கருணாந‌ி‌தி அ‌றி‌வி‌‌த்து‌வி‌ட்டு ‌வீ‌டு போ‌ய் சேருவத‌ற்கு‌ள்ளாகவே போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்வதாக எ‌ந்த அ‌றி‌வி‌ப்பையு‌ம் வெ‌ளி‌யிட‌வி‌ல்லை எ‌ன்று இல‌ங்கை அரசு ‌தி‌ட்டவ‌‌ட்டமாக அ‌றி‌‌க்கை வெ‌ளி‌யி‌ட்டது. இல‌‌ங்கை‌யி‌ல் த‌‌மிழ‌ர்க‌ள் வாழு‌ம் பகு‌தி‌க‌ளி‌ல் இராணுவ‌ம் மே‌ற்கொ‌ண்டிரு‌க்கு‌ம் தா‌க்குத‌ல் இடை‌விடாது நடைபெ‌ற்று‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது. இராணுவ‌த்‌தி‌ன் தொட‌ர் தா‌க்குத‌லி‌‌ல் எ‌ண்ண‌ற்ற த‌மிழ‌ர்க‌ள் உ‌யி‌ர் இழ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று அ‌ங்க‌ிரு‌ந்து வரு‌கி‌ன்ற செ‌ய்‌திக‌ள் கூறு‌கி‌ன்றன.

இ‌னி போ‌ர் ‌‌விமான‌ங்களு‌ம், ‌பீர‌ங்‌கிகளு‌ம், பெ‌‌ரிய ரக து‌ப்பா‌க்‌கிக‌ளு‌‌ம் பய‌ன்படு‌த்த‌ப்பட மா‌ட்டாது எ‌ன்று இல‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்சே அ‌றி‌வி‌த்த ‌பிறகு‌ம் கூட மு‌ல்‌லிவா‌ய்‌க்கா‌ல் எ‌ன்ற த‌மிழ‌ர்க‌ள் ‌கிராம‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம் இல‌ங்கை ‌விமான‌ப்படை 23 முறை வான‌த்‌தி‌ல் இரு‌ந்து கு‌ண்டுக‌ள் வீ‌சியதாக இணையதள செ‌‌ய்‌திக‌ள் கூறு‌கி‌ன்றன.

மு‌ல்‌லிவா‌‌ய்‌க்கா‌‌லி‌ல் சு‌ற்‌றியு‌ள்ள த‌மிழ‌ர்க‌ள் பகு‌திக‌ள் ‌மீது இல‌ங்கை இராணுவ‌த்‌தி‌ன் கட‌ற்படை ‌பீர‌ங்க‌ிக‌ள் பொரு‌த்த‌ப்ப‌ட்ட படகுகளை‌க் கொ‌ண்டு தா‌க்குத‌ல் நட‌த்‌‌தி‌யிரு‌க்‌கிறது. ம‌ட்டிபேர‌ல் ரா‌க்கெ‌ட் லா‌ஞ்ச‌ர் எ‌ன்ற பல ரா‌க்கெ‌ட்டுகளை ஒரே நே‌ர‌த்‌தி‌ல் ‌வீ‌சி தா‌க்கு‌ம் கரு‌வியை‌க் கொ‌ண்டு இராணுவ‌த்த‌ி‌ன் தரை‌ப்பட மு‌ல்‌லிவா‌ய்‌க்கா‌லி‌ல் வட‌க்கு பகுத‌ி‌யி‌ல் இரு‌ந்து த‌‌மிழ‌ர்களை தா‌க்‌கி இரு‌க்‌‌கிறது. இ‌ந்த தா‌க்குத‌ல்க‌ள் எ‌ல்லா‌ம் எ‌ந்த நேர‌த்த‌ி‌ல் நடைபெ‌ற்றது தெ‌ரியுமா?

த‌‌மி‌ழ்நாடு முதலமை‌ச்ச‌ர் கருணாந‌ி‌தி மெ‌ரினா கட‌ற்கரை‌யி‌ல் நேரடி ஒ‌ளிபர‌‌ப்பு வச‌தியோடு உ‌ண்ணா‌விரத நாடக‌த்தை அர‌ங்‌கே‌ற்‌றி முடி‌த்த அ‌ந்த நேர‌த்‌தி‌‌ல். கருணா‌நி‌தி காலை உணவை முடி‌த்து ‌வி‌ட்டு ம‌த்‌திய உணவை உ‌ட்கொ‌ள்வத‌ற்கு மு‌ன்பாக இடை‌ப்ப‌ட்ட 3 ம‌ணி நேர‌ம் உ‌ண்ணா‌‌விரத‌ம் இரு‌ந்தத‌ற்காக கருணா‌நி‌தி‌யி‌ன் தொ‌ண்ட‌ர்க‌ள் ஊ‌ர் முழுவது‌ம் பே‌ரு‌ந்துகளை அடி‌த்து நொறு‌க்‌கி, கடைகளை சூறையாடி பொதும‌க்களை அ‌ச்சுறு‌த்‌தி, அராஜ‌க ஆ‌ட்ட‌ம் போ‌ட்ட அ‌ந்த நேர‌த்‌தி‌ல்தா‌ன் இல‌‌ங்கை‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் இ‌த்தகைய கொடூர தா‌க்குத‌ல்களு‌க்கு உ‌ள்ளா‌கி இரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

எ‌ன்றை‌க்கு ஓயு‌ம் எ‌ங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் துயர‌ம் எ‌ன்று ந‌ா‌ம் ‌நினை‌க்காத நா‌ளி‌ல்லை, வே‌ண்டாத தெ‌ய்வ‌‌‌ம் இ‌ல்லை. இ‌த்தகைய துயரமான சூ‌ழ்‌நிலை‌யி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் இரு‌க்க‌க் கூடிய அர‌சிய‌ல்வா‌திக‌ள் ‌சில‌ர் தே‌ர்த‌ல் தோ‌‌ல்‌வி உறு‌தி எ‌ன்று ஆ‌கி‌வி‌ட்ட ‌‌நிலை‌யி‌ல் இல‌‌‌ங்கை த‌‌மிழ‌ர்களை பகடை‌க்கா‌ய்களாக பய‌ன்படு‌த்‌தி அர‌சிய‌ல் சூதா‌ட்ட‌த்‌தி‌ல் கா‌ய்க‌ள் நக‌ர்‌த்து‌கி‌ன்றன‌ர். இ‌ந்த கயமையை நா‌ம் ஒ‌ட்டுமொ‌‌த்தமாக த‌ண்டி‌க்க வே‌ண்டு‌ம். மைனா‌ரி‌ட்டி ‌தி.மு.க. அர‌சி‌ன் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நாடாளும‌ன்ற தே‌‌‌ர்த‌லி‌ல் தமது கூ‌ட்ட‌ணி பெற‌ப் போ‌கி‌ன்றன அவமான‌கரமான தோ‌ல்‌வியை எ‌ண்‌ணி அ‌ஞ்சு‌கிறா‌ர். அத‌ன் எ‌திரொலிதா‌ன் அ‌ண்ணா சம‌ா‌தி‌யி‌‌ல் உ‌ண்ணா‌விரத நாடக‌ம்.

தனது நாடக‌ம் வெ‌ற்‌றி பெற்று ‌வி‌‌ட்டதாக உலகு‌க்கு அ‌‌றி‌வி‌த்து அ‌தி‌ல் ‌மீ‌ண்டு‌ம் தோ‌‌ல்‌வியு‌‌ற்று இரு‌க்‌கிறா‌ர் கருணா‌நி‌தி. உ‌ண்மை தோ‌ற்ற‌தி‌ல்லை, பொ‌ய் ஒருபோது‌ம் வெ‌ன்ற‌தி‌ல்லை எ‌ன்பத‌ற்கு இ‌ந்த ஒரு எடு‌த்து‌க்கா‌ட்டு போது‌ம். கெ‌ட்டி‌க்கார‌னி‌ன் பொ‌ய்யு‌ம் புர‌ட்டு‌ம் 8 நா‌ளி‌ல் தெ‌ரி‌ந்து‌விடு‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடே அ‌றி‌ந்த பழமொ‌ழி. த‌ன்னை கெ‌ட்டி‌க்கார‌ன் எ‌ன்று ‌நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் கருணா‌நித‌ி‌யி‌ன் பொ‌‌ய் நாடக‌ம், புர‌ட்டு வசன‌ம் 8 ம‌ணி நே‌ரம‌் கூட தா‌ங்க‌வி‌ல்லை. வேட‌ம் கலைந்தது, த‌மிழ‌ர்க‌ளி‌ன் வேதனை தொட‌ர்‌‌கிறது.

இல‌‌ங்கை த‌மிழ‌ர்க‌ளி‌ன் துய‌ர‌த்தை போ‌க்க செ‌ன்னை‌யி‌ல் 13 நா‌ட்களாக பெ‌ண்க‌ள் உ‌ண்ணா‌விரத‌‌‌‌ம் இரு‌ந்தா‌ர்‌க‌ள். தெ‌ன் ஆ‌‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல் மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌க்க‌ப்படு‌ம் வரை உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்‌‌கிறா‌ர் ஒரு த‌மிழ‌ர். ‌பி‌ரி‌ட்ட‌னி‌ல் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்த‌வ‌ர் உ‌யி‌ர் ஊசலாடு‌கிறது. உல‌க‌ம் எ‌ங்கு‌ம் த‌‌மிழ‌ர்க‌ள் அ‌றி‌வி‌க்க‌ப்படாத உ‌ண்ணா‌விரத‌ங்களை த‌ங்க‌ள் ‌வீடுக‌ளி‌ல் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர். ஆனா‌ல் உலக‌த்‌திலேயே ‌மிக குறு‌கிய நேர‌ம் அதாவது 3 ‌ம‌ணி நேர‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்த ஒரே நப‌ர் இ‌ந்த கருணா‌நி‌திதா‌ன்.

தேவையான ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்களை பெ‌‌ற்று‌க் கொ‌ண்டு ஊரை ஏமா‌ற்ற உ‌ண்ணா‌விரத‌ம் உ‌ட்கா‌ர்‌ந்தா‌ர் கருணா‌நி‌தி. தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் நேரடி ஒ‌ளிபர‌ப்பு ஆர‌ம்‌பி‌த்தது‌ம் படு‌த்து‌க் கொ‌ண்டா‌ர். அவ‌ர்க‌ள் குடு‌ம்ப உறு‌ப்‌பின‌ர்க‌‌ள் எ‌ல்லா‌ம் த‌ங்க‌ள் தொ‌ழி‌ல்களை ஒ‌‌த்‌திவை‌த்தன‌ர். முக‌த்‌தி‌ல் சோக‌ம் வ‌ழிய வ‌ழிய கருணா‌நி‌தியை சு‌ற்‌றி‌ச்சு‌ற்று வ‌ந்து நாடக‌த்தை சுவார‌சியமா‌க்க முய‌ற்‌சி‌த்தன‌ர்.

ஊ‌ட்ட‌ச்ச‌த்து கால அடு‌த்த வேளை வ‌ந்தவுட‌ன் உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்ப‌ர‌த்‌தி‌ன் அலுவல‌கத்‌தி‌‌ல் இரு‌ந்து ஒரு தகவ‌ல் வ‌ந்ததாக அடு‌த்த க‌ா‌ட்‌சி‌க்கு நக‌ர்‌த்‌தினா‌ர்க‌ள். இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டு எ‌ன்று கருணா‌நி‌‌தி அ‌றி‌வி‌த்தா‌ர். ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் நாடக‌த்‌தி‌ன் தனது கதாபா‌த்‌தி‌ர‌த்‌திற்கு ஒது‌க்க‌ப்ப‌ட்ட வசன‌ங்களை ஒ‌‌ப்‌பி‌த்த‌ா‌ர். நேரடி ஒ‌ளிபர‌ப்பு முடிவடை‌ந்தது. அடு‌த்த வேளை உணவு‌க்கு எ‌ல்லாரு‌ம் புற‌ப்ப‌ட்டு செ‌ன்றா‌ர்க‌ள்.

இல‌ங்கை த‌‌‌மிழ‌ர்க‌ளி‌ன் துயர‌‌ம் ‌தீ‌ர்‌ந்தது, இல‌‌ங்கை இராணுவ‌ம் த‌மிழ‌ர்களை வாழ வை‌க்கு‌ம் ப‌ணிக‌ளி‌ல் ஈடுப‌டு‌‌ம் எ‌ன்று இல‌ங்கை‌ இராணுவ‌த்த‌ி‌ன் அ‌றி‌வி‌க்க‌ப்படாத செ‌ய்‌தியாளராக மா‌றினா‌ர் கருணா‌நி‌தி. வானொ‌லி, தொலை‌க்கா‌ட்‌சி, ப‌த்‌தி‌ரிகைக‌ள், இ‌ன்ட‌ர்நெ‌ட், எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். இவை எ‌ல்லா‌ம் நொடி‌க்கு நொடி உலகெ‌ங்கும் இரு‌ந்து செ‌ய்‌திகளை பர‌ப்பு‌கி‌ன்ற இ‌ந்த 21 ஆ‌ம் நூ‌ற்றா‌‌ண்டி‌ன் ஓடாத இர‌யி‌ல் மு‌ன் தலைவை‌த்து படு‌த்தவ‌ரி‌ன் அ‌ந்த‌க் கால நாடக‌ம் எடுபட‌வி‌ல்லை.

போ‌ர் ‌நிறு‌த்த‌ம் இ‌ல்லை எ‌ன்று இல‌ங்கை அரசு ‌தி‌ட்டவ‌ட்டமாக கூறு‌கிறது. இல‌‌‌ங்கை அ‌திப‌ர் செயல‌கத்‌தி‌ல் இரு‌ந்து போ‌ர் ‌நிறு‌த்த‌ம் எ‌ன்று ஒரு அ‌றி‌‌வி‌ப்பு வ‌ந்ததாக ப‌த்‌தி‌‌ரிகைக‌ளிலு‌ம், தொலை‌க்கா‌ட்‌சிக‌ளிலு‌ம் கூற‌ப்படுவது தவறான செ‌‌ய்‌தி எ‌ன்று இல‌ங்கை பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌‌க‌ம் கூ‌றிய‌ிரு‌க்‌கிறது'' .

இ‌வ்வாறு ஜெயல‌லிதா பே‌சினா‌ர்

Wednesday, April 29, 2009

"தொப்புள் கொடி உறவுகள்" இந்த ஆண்டின் சிறந்த குறும்படம்

இயக்கம்: நந்தன்
வெளியீடு: 9-ஏ, துர்க்கையம்மன் கோயில் மேலத் தெரு,
பேட்டை, திருநெல்வேலி-4.

தமிழ் ஈழத்தின் வரலாற்று முக்கியத்துவங்களை அடிப்படையாக வைத்து, இன்றைய சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகள் வரைக்கும் தெளிவு படச் சொல்லும் குறும்படம். நாம் வரலாறுகளை, உண்மைகளை எப்போதுமே தவறவிட்டு நிற்கிறோம். அடிப்படை தெளிதலுக்காக நாம் அவசியம் காண வேண்டிய படைப்பு. வேதனைகளின் விளிம்பில் ஈழத் தமிழர்கள் நிற்பதை இவ்வளவு உறுதிபடவும், வரிசைப்படுத்தியும் சொல்ல முடிந்த இயக்குநர் நந்தன் பாராட்டுக்குரியவர். ஆகச்சிறந்த குறும்படம் எனத் தயக்கமின்றிச் சொல்லிவிடலாம்!

http://youthful.vikatan.com/youth/document24042009.asp



எந்த விடுதலை போராட்டத்திலும் எப்போதுமே திருநெல்வேலி மாவட்டத்தின் பங்கும் போற்றுதலுக்குரியது. இந்த குறும்பட ஆசிரியரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது மேலும் பெருமை சேர்க்கிறது.



வாழ்க திருநெல்வேலி மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழின உணர்வாளர்கள். நந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவன் பகத் சிங்கின் தோழன்.

1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O’Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.

இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O’Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O’Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.

துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O’Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல…. 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O’Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்

மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து… உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.

பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.

சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்………………

400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O’Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்……

ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?

“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது”
- மகாத்மா காந்தி

400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்…..
அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்….. வந்தது.

பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?
அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்… நாம் செய்தால் தியாகி பட்டமா?
நல்ல நியாம்டா சாமி…………..

சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது…….

ஆனால் ஒருவருக்கு புரிந்தது…..

அவர்தான் ரன்பீர் சிங் முந்தைய பதிவில் நீங்கள் படித்தது, படிக்காவில் இங்கே அழுத்தவும்

ரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமிழர்களுக்கு இல்லையே

ரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமிழர்களுக்கு இல்லையே

ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார்.. இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.

ஆனால் ரன்பீர் சிங்கோ, ‘இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது’ என்று சொல்ல…

யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!”

ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே….. பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?

ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது…………….
மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்………………..

1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்…. மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!

இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது…
பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்? அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?

சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே…
அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?

இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?
இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???

இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்……. (NSA)

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது….. !!!!!!
எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

தமிழர்களில் இருக்கும் கருங்காலி கூட்டம் சீகியர்களிடம் இல்லை..

இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்……….

அட நாய்களே…..
நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை
மனிதனாக இருந்தால் போதும்…..

இப்படிக்கு,
மனிதர்
தமிழர்
இந்தியர்

நன்றி அனானியாக பின்னூட்டமிட்டவருக்கு

சிக்காத சாதுர்ய கருணாநிதி!

போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவே அழுத்தமாகச் சொல்லிய பிறகும், அவர் அளித்த விளக்கத்துக்கு புது அர்த்தம் புகுத்தி, போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டதாக மார்தட்டுகிறார், தமிழக முதலமைச்சர் கருணாநிதி.

காலை உணவு நேரத்தில் சென்னை அண்ணா நினைவிடத்தில் வந்தமர்ந்து, படுத்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, மதிய உணவு நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.

இலங்கையில் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு வருகிறது என்ற தகவலை, போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி, நேற்று தனது நீ.....ண்ட ஆறரை மணிநேர உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் கருணாநிதி.

அவர் வீடு திரும்புவதற்குள், இலங்கையில் இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த செய்திகள் வெளியாயின.

போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று தமிழர்கள் ஆனந்தத்தில் திளைக்கத் தொடங்கிய தருணத்தில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி இது...

//போர் நடவடிக்கைகள் அவற்றின் முடிவை எட்டியிருப்பதாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கணரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை பயன்படுத்துவதையும் ஆகாயமார்க்கமான தாக்குதல்களை மேற்கொள்வதையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப்படையினர் பணயமாக வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளோடு தங்களது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்வதோடு பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்திற்கு மிகுந்த முன்னுரிமை வழங்குவர்.//

இதைக் கருத்தில் கொண்டே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சாடியபடி அறிக்கைகள் விடுத்தனர்.

இது நேற்றைய, அதாவது ஏப்ரல் 27-ம் தேதியின் நிலை!

இன்று... ஏப்ரல் 28... இந்திய நேரப்படி மாலை 5.30 மணி...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார், தமிழக முதலமைச்சர் கருணாநிதி.

"இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை; கனரக ஆயுதத் தாக்குதல்கள் தான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன," என்ற கேள்வி எழுப்பப்படுகிறது...

அந்தக் கேள்விக்காக காத்திருந்தது போல் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு ஏ4 தாளை எடுக்கிறார், கருணாநிதி.

"இதோ... உங்களைப் போல் ஒருவர் கேள்வி கேட்டு, இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த விளக்கம் இது..." என்று கூறி, சி.என்.என். ஐ.பி.என். சேனல் பேட்டியில் ராஜபக்சே ஒரு கேள்விக்கு அளித்த பதிலைச் சுட்டிக் காட்டி வாசிக்கிறார்...

"You know, when you say that you are not using heavy weapons and you are not using air attacks, then what is it? It's like almost a ceasefire only. I mean now, soldiers are moving forward. So when you view all this it looks like a real war. But when we are not using heavy weapons then you know what is it? It's not a war. That is what he must have said."

"இப்போது சொல்லுங்கள் போர் நிறுத்தப்பட்டது உண்மையல்லவா?" என்று பெருமிதம் பொங்க பதிலளிக்கிறார், தி.மு.க. தலைவர்!

அப்போது மற்றொரு நிருபர், "இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறதே?" என்று வினவுகிறார்.

அதற்கு இலக்கியச் சுவையுடன் பதிலளிக்கும் கலைஞர், "மழை விட்டும் தூவானம் விடவில்லை" என்கிறார்.

அத்துடன், போர் நிறுத்தம் பற்றிய விளக்கத்தில் இருந்து, ஏனைய விவகாரங்களுக்கான கேள்விகளுக்குத் தாவுகிறார்!

ஆக... தனது உண்ணாவிரதத்தால், போரே நிறுத்தப்பட்டுவிட்டது என்று மீண்டும் ஒரு முறை முழு பூசணியானது ஒரு சில பருக்கைகளில் மறைக்கப்படுகிறது.

இங்கேதான் தமிழக நிருபர்கள் மீது சற்று வருத்தம் ஏற்படுகிறது. காரணம் இதுவே...

கருணாநிதி சுட்டிக் காட்டிய ராஜபக்சேவின் பதிலானது, வேறொரு கொணத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட விளக்கம். ஆனால், அதற்கு முந்தைய கேள்விக்கான பதிலில், 'போர் நிறுத்தம் இல்லவே இல்லை' என்று உறுதிபட தெரிவித்திருந்தார் ராஜபக்சே. இதுபற்றி நிருபர்கள் கேட்டிருந்தால், ஒருவேளை கருணாநிதி சிக்கியிருக்க முடியும். ஆனால், இந்த முறையில் சிக்கவில்லை சாதுர்ய கருணாநிதி.

கருணாநிதிச் சுட்டிக் காட்டிய ராஜபக்சேவின் பதிலை இங்கே கேள்வியுடன் சுட்டிக் காட்டுகிறோம்...

CNN-IBN: The Indian Home Minister P Chidambaram declared that the Sri Lankan government had actually declared a fecation of hostages.

Rajapaksa: You know, when you say that you are not using heavy weapons and you are not using air attacks, then what is it? It's like almost a ceasefire only. I mean now, soldiers are moving forward. So when you view all this it looks like a real war. But when we are not using heavy weapons then you know what is it? It's not a war. That is what he must have said.

சரி... முந்தையக் கேள்வியையும் பதிலையும் இங்கே காண்போம்...

CNN-IBN: So have you instructed your army to ceasefire?

Rajapaksa: No. It is not ceasefire. We are freeing the people who are kept there as hostages. That is my duty. So the army is now only helping the civilians. We want to get the civilians out from them. It was at the Security Council where we finally thought that we have to do this because for the first time we made a statement saying that we are not using heavy weapons and attacks. An area which was called a no-fire zone was declared by the army on a day-to-day basis. So we managed to send them (civillians) to the no-fire zone. And the LTTE also took them there thinking that they can escape from the sea. But now they realised that they can't move forward. But still they are using heavy weapons inside. They have heavy weapons inside the no-fire zone.

இப்போது புரிகிறது அல்லவா?

மிகச் சாதுர்யமான சொல்விளையாட்டு நேர்த்தியால், பிந்தையக் கேள்விகான பதிலை 'போர் நிறுத்த' அறிவிப்பாக கருதிக் கொண்டு விளக்கமளித்துள்ளார், கருணாநிதி.

இந்த சூட்சம பதிலின் பிண்ணனியைத் தெரிந்துகொள்ளாமல், கருணாநிதியிடம் குறுக்கு கேள்வி கேட்காததால், மீண்டும் நாளைய செய்தித்தாள்களின் சிலச் செய்திகள், 'போர் நிறுத்தம்' பற்றிய கருணாநிதியின் பொய்யான தகவலுடன் வெளிவரலாம்!

ஒருவேளை கருணாநிதியின் அகராதியில், ராஜபக்சேவின் பேட்டிக்கான மறைமுக அர்த்தம் 'இலங்கையில் போர் நிறுத்தம்'தான் என்று பாவித்தால்...

இலங்கையில் மறைமுறைமாக அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை, தனது வெற்றியாகக் கருதிக் கொண்டு, ஆறரை மணிநேர உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, மதிய உணவுக்கு வீடு திரும்பியத் தலைவர் என்று வருணிப்பதில் தவறில்லை என்றேத் தோன்றுகிறது.

'சொன்னதைச் செய்த' சாதனைப் பட்டியலில், 'இலங்கையில் போர் நிறுத்தம் கண்ட தி.மு.க. தலைவர்' என்ற விளம்பரத்துக்கு செலவிடப்பட்ட ஆறரை மணிநேரம், கருணாநிதியைப் பொறுத்தமட்டில் நிறைவானதாகவே இருந்துள்ளது போலும்!

சரி... இன்றைய இலங்கை நிலவரம் என்ன?

'ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை: 5,000 குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்று கோரக்கொலை' என்கிறது புதினம் இணையதளச் செய்தி.

இதுதான் "மழை விட்டும் தூவானம் விடவில்லை" என்பதா?

தொடர்புடைய 'லிங்க்'குகள்

சி.என்.என். ஐ.பி.என். செனலுக்கு ராஜபக்சே அளித்த பேட்டியின் முழு வடிவம்
http://ibnlive.in.com/news/we-want-to-catc...sa/91256-2.html

இன்றைய கோரத் தாக்குதல் குறித்த புதினம் செய்தி

http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO2a030Mt3e


நன்றி: http://www.nigazhvugal.com

'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்கர்கள்

கோவை: ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரஸார் ஓட்டு கேட்க வந்தால் செருப்பால் அடிப்போம் என்ற வாசகங்கள் இடம் பெற்ற ஸ்டிக்கர்களால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பூ மார்க்கெட் பகுதியில் நேற்று சிறிதும், பெரிதுமாக ஏராளமான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில், ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரஸ் ஓட்டு கேட்டு வீட்டிற்கு வந்தால் செருப்பால் அடிப்போம் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரபு போட்டியிடுகிறார். அவருக்கு இங்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கோவை தங்கம் (ஜி.கே.வாசன் ஆதரவாளர்), கோவையில் தனது கட்சிக்காக வாக்கு சேகரிக்காமல், அருகில் உள்ள பொள்ளாச்சிக்குப் போய் விட்டார். அங்கு திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்து வருகிறார்.

அதேபோல எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆதரவாளர்களும் கூட பிரபு மீது காட்டமாக உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்து காங்கிரஸுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் பிரபு வட்டாரம் கலங்கிப் போயுள்ளது.

நன்றி http://www.mdmkonline.com/news/latest/chappal_to_congress.html

Tuesday, April 28, 2009

மானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா

கருணாநிதியும் சுவிடனிடம் மான பிச்சை எடுக்கலாம், இதுதாண்டா மானம் தன் இனம் ஒரு விசா நிராகரிப்புக்கே ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. நீயோ அங்கு நம் இனம் ஆயிரகணக்கில் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவதை கூட நினைத்து பார்க்காமல் கும்மி அடித்து கொண்டு இருக்கிறாய் நான்கைந்து ஜால்ராக்களை கூட வைத்து கொண்டு, இவனுங்க உன்னை அழிக்க வந்தவன் என்று தெரியாதா உனக்கு, நீ தந்தி அடிச்சா தலையங்கத்தில எழுதறான் ஒரு பகுத்தறிவு செம்மல். தந்தியடிப்பது உன்னுடைய பொழுது போக்கு என்று தெரிந்தும் அதை தலையங்கமாக எழுத ஆற்றல் வேண்டும். தடுக்கி விழுந்தால் உண்ணாவிரதம் என்று அறிவிக்க ஒரு கூட்டம். காலை, மதிய சாப்பாடுக்கு இடையில் உள்ள கேப்பில் உன் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டாய். நிமிடத்து ஒரு முறை மாற்றி மாற்றி பேசுகிறாய் மன்னிக்கவும் உளறுகிறாய். உன் கையலாக தனத்தை பெருமையாக கூறிகொள்கிறாய். இதற்காகவா உனக்கு தலைமை கொடுத்தோம். ஏதோ அது உன் சொந்த பதவி போல் பேசுகிறாய். யாரால் தேர்ந்தெடுக்கப்பட்டாயோ அவர்களையே மறந்தாய், கொன்றாய்.

---

சுவீடன் தனது இலங்கைக்கான தூதுவரைத் திருப்பியழைத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நாளை கொழும்பு செல்வதற்காக ஏற்கெனவே திட்டமிட்டிருந்த போதும் இலங்கை அரசாங்கம், சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு அனுமதியை வழங்க மறுத்திருப்பால் ஏற்பட்ட இராஜதந்திர முறுகலை அடுத்தே சுவீடன் இந்நடவடிக்கையை எடுத்தள்ளதாகத் தெரிய வருகிறது.

சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை செல்வதற்கான விண்ணப்பம் ஒன்றை சுவீடன் வெளிவிகார அமைச்சு சுவீடனில் உள்ள இலங்கையின் தூதரகத்தில் கையளித்திருந்ததாகவும், அதனை தூதரக அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும் அனால் இப்போது இவ்வாறான விண்ணப்பம் எதுவும் கிடைக்கவில்லை எனக்கூறி இலங்கை அரசாங்கம் சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை நிராகரித்திருப்பது கவலையளிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம் பெயர்ந்தள்ள மக்களைச் சந்தித்து அவர்களது நிலவரங்களை அறிந்து கொள்வதற்காகவே சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை செல்லவிருந்ததாகவும், இலங்கை அரசாங்கத்தின் நிராகரிப்பு வியப்பளிக்கிறது என்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே இலங்கைக்கான சுவீடன் தூதுவரை திருப்பியழைக்க முடிவு செய்தள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் சுவீடன் தனது இலங்கைக்கான தூதுவரைத் திருப்பியழைக்கவில்லை என்றும் அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே தூதுவரை அழைத்துள்ளதாகவும் இன்னொரு செய்தி குறிப்பிட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம்

ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை... கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை! இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டு தற்பேகாது கனடாவில் வாழ்ந்து வருகின்ற ஒரு ஈழத் தமிழ்மகள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை வரைந்திருக்கின்றார்.


அக்கடிதத்தின் முழுவடிவம்:-

வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே,

தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா,

வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா,

அந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன்.

"ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா" என்று வன்னியில் இருந்து கதறும் ஒரு பிஞ்சுக் குழந்தையொன்றின் கதறலை கேட்டு மனமுடைந்துபோய் எழுதும் மடல் இது. நான் ஈழத்திலிருந்து அகதியாகி அந்நிய தேசமொன்றில் வசிக்கும் பாவப்பட்ட தமிழிச்சி. தங்களை அவமானப்படுத்துவது எனது நோக்கமில்லை... புண்ணைச் சொறிவதில் எனக்கு இன்பமேதுமில்லை.

நான் கனடாவிற்கு எட்டு வயதில் ஏதிலியாய் வந்தேன். இப்போது எனக்கு வயது இருபத்து நாலு. கனடா வந்தாலும் தாய் நாட்டையும் தமிழையும் மறக்கவில்லை... மறக்கவும் மாட்டேன். தங்களோடு ஒப்பிடும்போது நான் ஒரு சிறுமி. அஃதிருக்க, மேன்மக்கள் மேன் மக்களே என்ற தமிழ் வார்த்தைகள் உங்களுக்கு மட்டும் பொருந்தாமல் போனதேன்.

நீங்கள் தமிழுணர்வு மிக்கதொரு சிறந்த கதை ஆசிரியர் என்றுதான் இதுவரை தெரிந்து வைத்தோம். ஆனால் தாங்கள் உலகமகா நடிகன் என்று ஈழப் பிரச்சினை தொடர்பான உங்கள் தந்திகளாலும், கேள்வி பதில் அறிக்கைகளாலும் இப்போது அறிந்து கொண்டோம்.

உங்களிடம் இலைமறை காயாய் மறைந்திருந்த நடிப்புத் திறமையை வெளியே கொணர்ந்து வந்த அன்னை சோனியாவுக்கு தமிழ்த்திரையுலகின் சார்பில் கோடி நன்றி. இதற்கு விலையாக ஈழத்திலே கருவிலேயே குண்டுபட்டுச் செத்துப் போன சிசுக்களை யாது செய்ய?

பதவி ஆசைக்காகவும், அரசியல் குப்பைக் காரணங்களிற்காகவும் எங்கள் ஈழத்தமிழ் மக்களை பலியாக்காதீர்கள். அவர்கள் இரத்தம் சிந்துவதைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் வரவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. பதவியை இராஜினாமா செய்யப் போகிறீர்கள் என்று ஆரம்பி்த்து உண்ணாவிரதம் வரை உங்கள் மெகா தொடர் நாடகம் கலைஞர் ரீவியில் வரும் நாடகங்களைப் போலவே இன்னும் தொடர்கின்றது.

இன்னும் ஈழத்தமிழர் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை நீங்களே உங்கள் கபட நாடகங்களால் கெடுத்து விடுவீர்கள் போல் உள்ளது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஐயா. ஈழத்தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் வேறு வேறல்ல. அனைவரும் தமிழர்தான். தமிழன் என்றால் மானம் மரியாதைக்குத் தான் பெயர் போனவன். நீங்களோ மரியாதைக்குத்தானும் ஒரு மானமுள்ள இனப்பற்றுள்ள தமிழனாய் இருக்க விரும்புகிறீர்கள் இல்லை.

உங்களை மாதிரி பதவி ஆசைக்காக சோனியா அம்மையார் மற்றும் மகிந்த போன்றவர்களின் காலைப் பிடித்துக்கொண்டிருக்கம் சுயநலவாதிகளால்தான் எமக்கு இன்னமும் ஈழம் கிடைக்கவில்லை...விடிவும் கிடைக்கவில்லை.

இந்த வயதில் உங்களுக்கு பதவிப் பித்துத் தேவைதானா? பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். தங்களுக்கு அதுவும் பொய்த்துப் போயிற்றே. பாதி நாட்கள் முதுகு வலி என்று வைத்தியசாலையில் படுத்துறங்கி அறிக்கைப் போர் புரிந்து அரசியல் என்னும் சாக்கடையில் புரண்டு தன்மானத்தை இழந்து பதவி சுகம் காண விரும்பும் வாழ்வெல்லாம் வெல்லமா? நீங்களே சிந்தியுங்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் என்று யோசியுங்கள். நாங்கள் மற்றவர்களுக்கு என்ன நல்லது செய்தோம் என்று சிந்தியுங்கள். நாளைக்கு நாங்கள் இறக்கும் போது எங்களுக்காக யாரேனும் அழுவார்களா என்று யோசியுங்கள்.

ஈழ இனத்தை அழிக்க திட்டம் போட்டுக் கொடுத்த பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையே போர் நிறுத்தம் பற்றி பேச தூதனுப்பியதன் நியமான காரணம் ராஜதந்திரி உங்களுக்குத் தெரியாமல் போனது அதிசயம்தான். கூப்பிடு தூரத்திலே கோடி கோடியாய் இரத்ததின் இரத்தங்கள் நீங்கள் இருக்க, வன்னியிலே எம்மினம் இரத்தம் சிந்துவதும் அதிசயம்தான். உங்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடர் என்ற பதத்தை வைத்துக் கொண்டு ஆரியரோடு கூட்டுச் சேர்ந்து சிங்கள கொடுங்கோல் அரசுக்கு தாங்கள் உதவுவதும் அதிசயம்தான்.

"ஒரே இரத்தம்" என்ற நாடகம் யாத்த நீங்கள் எண்பத்தைந்து வயசினிலும் இனத்தை விட பதவிதான் முக்கியம் என்று சுயநலவாதியாய் இருப்பதும் அதிசயம்தான்.
உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய மத்திய அரசு தூதுவரை கொழும்பிற்கு அனுப்பிய மறு நாளில் எல்லாம் குண்டுவீச்சின் வீரியம் கூடுகிறதாம். உங்களுக்குப் போற வழியில் புண்ணியமாய்ப் போகும் தயவு செய்து இனியும் தூதுவர்களை அனுப்பி எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். மத்திய அரசுக்கு தந்தி அனுப்பிவிட்டோம்...இதற்கு மேல் யாது செய்ய என்ற சாட்டுக்களை விட்டுவிடுங்கள் ஐயா. "இன்னும் ஓரு மணித்தியாலத்திற்குள் வன்னியிலே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராவிடின் தமிழகம் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும்" என்று ஒரு அறிக்கை விட்டீர்கள் என்றால் ஒரு நிமிடத்திலேயே போர் நிறுத்தம் வந்துவிடும். வேண்டாம், இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள் எதுவுமே பேச வேண்டாம். 'இனி காங்கிரஸ்தான் தமிழகத்தின் எதிரி' என்று ஓர் அறிக்கைவிட வேண்டியிருக்கும் என்று மத்திய அரசுக்குச் சொல்லுங்கள்...சொன்னபடி நடவுங்கள்...நாளையே வன்னியிலே போர் நிறுத்தம். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியவில்லை. முடிந்தால் ஈழ மக்களிற்கு உதவுங்கள். இல்லையேல் ஈழம் பற்றிக் கவிதை வரைவதை, அறிக்கை விடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

ஐயா கலைஞர் ஐயா, ஈழத்து மக்களுக்கு சோறும், பால்மாவும் அனுப்ப வேண்டாம். முதலில் அவர்களது உயிரைக் காப்போம். ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை...கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை.

தயவுசெய்து நீங்கள் எங்கள் தலைவர் பிரபாகரனின் நண்பன் என்று சொல்லி எங்கள் தலைவனைக் கேவலப்படுத்தாதீர்கள். தங்களை மாதிரி ஒரு சுயநல விரும்பி நிச்சயமாக எங்கள் தலைவனின் நண்பனாக இருக்கவே முடியாது. உங்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் நான் ஒரு ஈழத் தமிழிச்சி என்பதாலும், பெரியவர்களைக் கனம் செய்ய வேண்டும் என்ற தமிழர் பண்புக்காகவும் விட்டு வைக்கின்றேன்.

என்னைப்போன்ற பல தமிழர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை எழுதுகின்றேன். இதை நான் உங்களைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை..சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். காங்கிரஸிடம் இன்னமும் கூட்டு வைப்பதற்காக நீங்கள்தான் அதனை அனைத்து தமிழர்களிடமும் கேட்க வேண்டும்.

வாழ்க தமிழ்
வெல்க தமிழர்
தமிழர்தான் புலிகள்
புலிகள்தான் தமிழர்
எவர் வந்து தடுத்தாலும்
விரைவில் மலரும் தமிழீழம்

இப்படிக்கு,
ஒரு தமிழிச்சி.

நன்றி http://www.tamilwin.org/view.php?2aSWnBe0dPj0C0ecQG7r3b499EW4d3g2h3cc2DpY3d436QV2b02ZLu2e

Monday, April 27, 2009

தமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்

அன்பான எம் தமிழ் உறவுகளே...!!! தமிழ் ஊடகங்களே..!!!

சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழினத்தின் வேதனைகளையும் வலிகளையும் விலைபேசி விற்கும் தமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகளின் கோமாளித்தனமான செயல்களையும்,அவர்களது உப்புசப்பில்லாத பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

உண்மையான தியாகத்தை புரிந்து தீயில் சங்கமமான முத்துக்குமார் போன்ற சகோதரர்களின் உணர்வுகளின் முன் இந்த அரசியல் கோமாளிகளின் அற்பத்தனமான செயல்கள் ஈழத்தமிழனையும் விடுதலைப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகின்றன.
தேர்தல் வெற்றி ஒன்றே குறியாக கொண்ட இந்த கபட நரிகளின் பசப்பு வார்த்தைகளை இனியும் நம்ப ஈழத்தமிழன் எவனும் கேணையர்கள் இல்லை.





ஈழத்தமிழனுக்கும் ஆதரவு என்ற மாயையை தமிழக மக்களிடம் ஏற்படுத்திவிட்டு காங்கிரசுக்கும் மத்திய அரசுக்கும் வால் பிடிக்கும் இந்த அரசியல் பரதேசிகளின் மனதில் என்ன இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.இருந்தாலும் அவ்வப்போது அவர்கள் விடுகின்ற உணர்வு பூர்வமான கயிறு திரிப்புகளுக்கும் அற்புத வாக்குறுதிகளையும் நம்பி நம்மில் சில பழமைவாதிகள் அவர்களை புகழ்ந்து பாடுவது படு கேவலமாக இருக்கிறது.

உண்மையில் தமிழத்தின் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தமிழர்கள் மேல் வைத்திருக்கும் அன்பும் பாசமும் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை.ஈழத்தமிழனின் வலிகளினை உளப்பூர்வமாக உணர்திருக்கும் அவர்களின் ஆத்மார்த்தமான துடிப்புகளின் முன் இந்த அரசியல் சனியன்களின் கபட நாடகங்கள் வலியில் துடித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் வேதனையை மேலும் மேலும் அதிகரிக்கின்றது.

'உண்ணாவிரதம்' என்ற சத்திய வேள்வித்தீ உருவான தேசத்தில் அந்த போராட்டத்தின் தார்ப்பரியத்தினையே கொச்சைப்படுத்தும் இந்த அரசியல் அசிங்கங்களினை இனியும் நம்பி எமக்கு நாமே மொட்டையடிக்கும் கேவலத்தினை செய்ய நாம் தயாரில்லை.

தேர்தல் வெற்றி,பதவி,பணம் என்ற அற்பத்தனங்களுக்கு ஆசைப்பட்டு ஈழத்தமிழனின் வாழ்வாதார பிரச்சினையை தங்களது சுய லாபங்களுக்காக விலைபேசி விற்கின்ற இவர்களுக்கு தமிழக உறவுகள் சரியான தீர்ப்பினை வெகுவிரைவில் வழங்குவார்கள்.

அன்புடன்
தமிழன்

நன்றி :
http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3198:2009-04-27-14-51-47&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56

3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங்களாக கொலைஞரால் முடியவில்லை

போர்நிறுத்தம் இல்லாமலே அது வந்ததாக சொல்லி மக்களை ஏமாற்றும் இவரிடம், இவர் வழியிலே ஒரு கேள்வி, கொலைஞரே இன்று உங்களால் ஒரு போர் நிறுத்தம் கொண்டு வரமுடிகிறது என்றால் ஏன் இத்தனை தமிழர்கள் இத்தனை மாதங்களாக, வருடங்களாக கொல்லப்படுவதற்கு அனுமதித்திர்கள். அன்றே இதே போல் உண்ணா விரதமிருந்திருந்தால் நாம் இழந்த அனைத்து தமிழர்களையும் காப்பாற்றி இருக்கலாம் அல்லவா. அது எப்படி 3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்த உங்களால் 30 வருடமாக உங்கள் திறமையினை எங்கு ஒளித்து வைக்க முடிந்தது.

எல்லாம் தேர்தல் நாடகம் என்பது அனைவருக்கு தெரிந்த ஒன்றுதான். மீண்டும், மீண்டும் கேட்டு கொள்வது அங்கு தமிழன் அழிகிறான், இந்த நாடகமெல்லாம் வேண்டாம் உங்களின் வயதுக்கு இந்த ஏமாற்று வேலை அழகல்ல.

மேலும், மேலும் தமிழின துரோகியாகி கொண்டே செல்லாதிர்கள். மக்கள் எல்லாம் இப்ப புத்திசாலிகள் உங்கள் காலம் போல் இல்லை. யார் எப்படி ஏமாற்றுகிறார்கள் என நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள்.



லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்குதல்: கண்ணாடிகள் உடைந்து சேதம்; இரண்டு பேர் கைது

மனிதர்களை மனிதர்களாக மதிக்க தவறிய இந்த காங்கிரஸ், திமுக கூட்டணியால் இந்தியாவுக்கு அவமானம். செருப்படியில் ஆரம்பித்து இன்று கல்லடி வரை வந்துள்ள இவர்களுக்கு இனியாவது புரியுமா. காலை உணவுக்கும், மதிய உணவுக்குக் இடையில் கிடைக்கும் கேப்பில் உண்ணாவிரதம் இருக்கும் தலைவர்களே சிந்தியுங்கள். இனியும் மக்களை ஏமாற்றாதிர்கள். இலங்கை அரசு கனரக ஆயுதங்களை வைத்து தமிழ் மக்களை கொல்ல மாட்டார்களாம், சிறு துப்பாக்கிகளை கொண்டுதான் கொல்வார்களாம், எப்படி செத்தால் என்ன சாவறவனுக்கு எல்லாம் ஒன்னுதான்.

இது போர் போர்நிறுத்தம் அல்ல. கண்துடைப்பு நாடகமே.

இன்று (திங்கள்) காலை 6 மணிமுதல், லண்டன் இந்தியத் தூதரகம் முன்னால் கூடிய தமிழர்களால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே தூதரகத்தின் வெளிப்புறக் கண்ணாடிகளை நோக்கி, பெருங்கற்கள், குளிர்பானத்துடனான கண்ணாடிப் போத்தல்கள், ஏன் மீன் டின்கள் கூட வீசப்பட்டன.அப்போது இருவர் கைது செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் குறைந்தளவு எண்ணிக்கையானவர்களே பங்கு கொண்டிருந்த போதிலும், அனைவரின் முகங்களும் பெரும் ஆத்திரத்தில் காணப்பட்டது.

பிரதான வாசல் பூட்டப் பட்டிருந்ததால், அமைதியாக காத்திருந்த மக்கள், காலை 8:30 மணியளவில் தூதரக பணியாளர்களால் கதவு திறக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், பெரும் கோசத்துடனும், ஆக்ரோசத்துடனும், ஒரே நேரத்தில் உள்நுளைய முற்பட்டனர். ஆனால் பொலிசாரின் கடும் எதிர்ப்பினால் அது தடுக்கப்பட்டது.

5 அல்லது 6 பேர் உள்நுளைந்த நிலையில் கதவு முழுவதுமாக மூடப்பட்டு மேலதிக பொலிஸ் குவிக்கப் பட்டது. அதேநேரம் கோபம் கொண்ட ஒருவரால், சுத்தியல் மூலமாக வெளிப்புறக் கண்ணாடிகள் நொருக்கப் பட, காவல்துறையினர் பாய்ந்து சென்று அவரை கைது செய்ய முயன்றபோதும், அவர்களின் இரும்புப்பிடியிலிருந்து மக்களால் அவர் கூட்டத்துக்குள் இழுக்கப்பட்டதால் கைது தடுக்கப்பட்டது. உள்நுளைந்தவர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

நேரம் செல்லச்செல்ல தமிழர்களின் வருகை அதிகமானதால், அவசர அவசரமாக் தடுப்புகள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. எனினும் பெரும் எழுச்சியுடனும், கோசத்துடனும் தொடர்ந்த போராட்டம் முட்டை வீச்சிலும் இறங்கியது. கண்ணாடி ஜன்னல்களை நோக்கி வீசப்பட்ட முட்டைகளில் சில பொலிசார் மீதும் தவறுதலாக வீழ்ந்தது. எனினும் அதனால் பெரும் வாக்குவாதம் எதுவும் எழவில்லை.

இதுவரை நடந்த போராட்டங்களை விட, இன்று நடந்த இந்தப் போராட்டத்தில் மக்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இலங்கை அரசைவிட இந்திய அரசில் அவர்கள் பெருங்கோபம் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே தூதரகத்தின் வெளிப்புறக் கண்ணாடிகளை நோக்கி, பெருங்கற்கள், குளிர்பானத்துடனான கண்ணாடிப் போத்தல்கள், ஏன் மீன் டின்கள் கூட வீசப்பட்டன.

அப்போது இருவர் கைது செய்யப்பட்டனர். இருந்தாலும் அவர்களை விடுவிக்க மக்கள் எவ்வளவோ முயன்றனர். விலங்கிடப் பட்ட நிலையில் அவர்களை கொண்டு செல்ல விடாது பொலிசாரை சூழ்ந்து கொண்டனர். மக்கள் தொகை குறைவாக இருந்ததால் முடியவில்லை. பின் வாகனத்தில் ஏற்றிய பின்னர் கூட வீதியை மறித்து உட்கார்ந்தார்கள். ஆனால் காவல்துறையினர் இலகுவாக தூக்கி வீசி விட்டார்கள். உணர்ச்சி பூர்வமாக மாலை 4:30 இப்போராட்டம் இடம்பெற்றது.

தூதரகத்தின் பெரும்பாலான கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டு விட்டன. மக்களின் இந்தக் கொந்தளிப்புடன் தூதரகம் அவர்களை உள்வாங்கி இருந்திருந்தால் பெரும் சேதம் கண்டிருக்கும். எப்படியோ இது இந்திய அரசுக்கு மாபெரும் அவமானம் என்பதில் சந்தேகமில்லை. அதன் முகத்திரையை முழுவதுமாக கிழித்தாயிற்று. இனி சர்வதேசத்தின் நகர்வுகள் எப்படியிருக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் போராட்டங்கள் இன்னும் விரியும்.

போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநிதி புளுகு மூட்டை அவிழ்ப்பு

கொழும்பு, ஏப்.27: போர் நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ஊடகங்களால் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 15,000 முதல் 20,000 வரையிலான நபர்களை விடுவிக்க மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அந்த நடவடிக்கைகளின்போது பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களை தவிர்க்குமாறு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனை போர்நிறுத்தம் என்று ஊடகங்கள் திரித்துக் கூறுவதாக அரசு அதிகாரியை மேற்கோள்காட்டி இலங்கை ராணுவ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

'பாதுகாப்புப் படைகள் இப்போது வெற்றியை அடையும் தருவாயில் உள்ளன. போர் நடவடிக்கைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கனரக ஆயுதங்கள், விமானத் தாக்குதல்களை தவிர்க்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகளின் நெருக்குதல் காரணமாக இம்முடிவு எடுக்கப்படவில்லை. மீட்பு நடவடிக்கைகளுக்காக தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு' என பாதுகாப்பு அமைச்சக இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=அறிவிக்கப்பட்டது+போர்+நிறுத்தம்+அல்ல:+இலங்கை+அரசு+விளக்கம்&artid=ZgS3oHqOIQ0=&SectionID=S/ywS7KLpvE=&MainSectionID=S/ywS7KLpvE=&SEO=&SectionName=01ZuUMGHROO3OJKw1s0D/w==

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு? மீண்டும் கருணாநிதி மக்களை ஏமாற்ற முயற்சி

தமிழகத்தில் இன்று முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இது காலம் கடந்த முடிவு. இதனை ஒரு மாத்திற்கு முன்பே அவர் எடுத்திருந்தால் தமிழகத்தில் தீக்குளித்து இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.

முழுக்க நனைந்த பிறகு முக்காடு போட்டு என்ன பயன். அனைவரும் ஈழ பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்காகவே பயன் படுத்துகிறார்கள். தமிழக மக்கள்அனைத்தும் அறிந்து மவுனமாக இருப்பது எல்லாம் தேர்தலில் தெரிந்து விடும். ஆளும் கட்சி, எதிர்கட்சிகளின் இத்தனை போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் என எத்தனை முடிவுகள் எடுத்தாலும் மத்திய அரசு இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளையே தொடர்ந்து எடுத்து வருவது வேதனைக்குறியது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது என்றால் போரை நிறுத்தினால் தான் முடியும். அதைவிட்டு இந்தியா போரை நடத்துங்கள் தமிழர்கள் மீத படாமல் என இரட்டைவேடம் போடுகிறது.

இதை எழுதி முடிப்பதற்குள் அடுத்த செய்தி வருகிறது இதோ

இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர்

இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.

இந்திய அரசு இதுவரை போரை நிறுத்த வேண்டும் என்று கூறியது இல்லை.

இலங்கை அரசின் செய்தி இதுவே, இது போர் நிறுத்தம் அல்ல, என்ன ஒரு ஏமாற்று வேலை, என்ன சொல்கிறார்கள் என்றால் பெரிய் டாங்கியை வைத்து தமிழர்களை கொல்ல மாட்டோம், வெறும் துப்பாக்கிகளே கொல்வதற்கு போதுமானது என்று.

Karunanidhi cuts short fast


Tamil Nadu CM Karunanidhi called off his fast after it was reported that the Sri Lankan government has halted the use of heavy weapons and combat aircraft in its assault on the LTTE, Indian Media sources confirmed.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=47235

Sunday, April 26, 2009

ப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு

Shoe thrown at Prime Minister in Modi land

A man made an attempt to throw a shoe at Prime Minister Manmohan Singh at a rally in Ahmedabad on Sunday.

The shoe landed a few metres away from the PM's dais. He was addressing an election rally in the city.

The youth who attempted to throw shoe at PM was taken away by police. PM has asked police not to file a case against the 28-year-old shoe-thrower.

The Opposition Bharatiya Janata Party has condemned the incident, terming it as an unestablished means of protest in a democracy.

Reacting to the incident, Congress star campaigner Priyanka Gandhi has said that 'shoe throwing is not our tradition'.

"If there is a problem, there are two ways to express it -- wrong way and the right way. This is not the right way. This is not our tradition," Vadra told reporters at Dadaur village in her mother's parliamentary constituency.

In the recent past, there have been similar incidents. In one of such attacks, a shoe was hurled at Home Minister P Chidamabaram at a press conference by a journalist.

At a rally in Kurukshtra, Congress leader Naveen Jindal was the target of a shoe thrown by a schoolteacher. The shoe missed him.

BJP leader Lal Krishan Advani has also faced a shoe attack, which missed him.

Chief Minister Narendra Modi, known for his innovative ideas, recently at a rally, came up with a unique technique to avoid such attacks. He tied up a volley ball net infront of his dais to prevent any hurled shoe from reaching him. (With PTI inputs)

http://www.ndtv.com/news/india/shoe_thrown_at_prime_minister_in_modi_land.php

http://www.envazhi.com/?p=7059



பிரதமர் மன்மோகன் சிங் மீது ஷூ வீச்சு!

அகமதாபாத்: இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மீது ஷூ வீசி தப்ப முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

அகமதாபாத்தின் பால்டி தாகூர் ஹாலில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

அப்போது நடந்த காங்கிரஸ் கட்சியின் பேரணியை அவர் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அவர் மீது ஒரு மர்ம நபர் ஷூவை வீசி எறிந்தார்.

ஆனால் அது பிரதமர் மீது படவில்லை. உடனே விரைந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த ‘பேரணியில்’, மன்மோகன் சிங்கின் பேச்சைக் கேட்க வெறும் 500 பேர்தான் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ப சிதம்பரம் ஷூ வீச்சுக்கு இலக்காகி இருக்கிறார்.

இந்த சூழலில் ஈழத்து உறவுகளின் வேதனையை எண்ணி கொந்தளித்துக் கிடக்கும் தமிழகத்துக்கு சோனியாவும் மன்மோகன்சிங்கும் வரவிருக்கிறார்கள். இன்னும் என்னென்ன காட்சிகள் காத்திருக்கிறதோ…!

வீடியோ: அகமதாபாத்தில் மன்மோகன்சிங் மீது ஷூ வீசப்பட்ட காட்சி!

இலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்

ங்களது சொந்த நாட்டிலேயே எல்லாவற்றையும் இழந்து, உயிர்ப் பயத்தில் தவித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களின் அவல நிலையை நேரில் சென்று பார்த்து விட்டுத் திரும்பியிருக்கிறார், `வாழும் கலை' அமைப்பின் நிறுவனரும், ஆன்மிகவாதியுமான ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் குருஜி. கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இலங்கையில உள்ள முல்லைத்தீவு, வவுனியா, செட்டிக்குளம், அருணாசலம் உள்பட எட்டு அகதிகள் முகாம்களுக்குச் சென்று, அங்குள்ள தமிழர்களைச் சந்தித்து ஆறுதல் அளித்ததுடன் நிவாரணப் பணிகளையும் தொடங்கியுள்ளார்.

அவரிடம் நாம் பேசினோம்...

நீங்கள் எதற்காக இலங்கை சென்றீர்கள்? அங்குள்ள உண்மை நிலை என்ன?

``இலங்கையில் தமிழர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு மனிதனாகப் போக முடியாது. மனதை கல்லாக்கிக் கொண்டுதான் போக முடியும். அவ்வளவு கொடுமையான சூழ்நிலையில்தான் மக்கள் வாழ்கின்றனர். இங்குள்ள அரசியல்வாதிகள் அவர்களைக் கைவிட்டுவிட்டதால், ஆன்மிகவாதியான நானும் அவர்களைக் கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆறுதல் கூறச் சென்றேன்.''

முகாமில் உங்களைச் சந்தித்த தமிழ்மக்கள் என்ன சொன்னார்கள்?

``நான் இலங்கை செல்ல இந்திய அரசு எனக்கு உதவ முன்வரவில்லை. இலங்கை அரசிடம் பேசித்தான் சென்றேன். அங்குள்ள மக்களைச் சந்தித்து நிவாரண உதவி செய்யப்போகிறேன் என்று உறுதி கொடுத்த பின்புதான் அனுமதி கிடைத்தது. நாங்கள் எங்கு சென்றாலும் இலங்கை ராணுவம் எங்களை கண்காணித்தபடியே இருந்தது. `நாங்கள் உங்களிடம் ஏதாவது பேசினால், எங்களைத் தீவிரவாதிகள் என்று இலங்கை அரசில் முத்திரை குத்திவிடுவார்கள்' என்று கூறி, அங்குள்ள மக்கள் பயந்து கொண்டு என்னிடம் பேசவே முன்வரவில்லை.

இருப்பினும் ஒருசிலர், `இந்திய அரசை நம்பினோம். அவர்கள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள்!' என்கிற வேதனையை வெளிப்படுத்தினர். `பிச்சைக்காரர்களையே காணாத எம்மக்கள் இன்று பிச்சைக்காரர்களாகக் கையேந்தி நிற்கிறார்களே!' என்று ஒரு பெண்மணி கதறி அழுதபோது, எனக்கே கண்ணீர் வந்துவிட்டது!''

ராஜபக்ஷேவை சந்தித்துப் பேசினீர்களா?

``சந்தித்தேன். அவரிடம், `முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது சொந்த வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்' என்றேன். அதற்கு அவர், `அவர்களின் வீடுகளின் மேற்கூரைகளையெல்லாம் புலிகள் பிய்த்து எறிந்துவிட்டுச் சென்று விட்டனர். பல வீடுகளைத் தரைமட்டமாக்கி விட்டனர். எனவே, புனரமைப்பு முடிந்த பின்பு, அவர்களைத் திரும்ப அனுப்பிவிடுவோம்' என்றார்.

`அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவாவது போரை நிறுத்த வாய்ப்பு உள்ளதா?' என்றேன். அதற்கு அவரோ, `தீவிரவாதத்தை வேரோடு அழிக்கும் வரை அந்தப் பேச்சிற்கே இடமில்லை' என்று இறுமாப்புடன் சொன்னார்.

`இங்குள்ள மக்களின் நலனுக்காக அமைதி மாநாடு ஒன்றை நடத்த அனுமதி வேண்டும்' என்றேன். அதற்கு அனுமதி கொடுப்பதாக உறுதி கொடுத்துள்ளார்.''

பிரபாகரனைச் சந்தித்தீர்களா?

``பிரபாகரனைச் சந்திக்க கடும் முயற்சி செய்தேன். முடியவில்லை!''

தனி ஈழம் அமைய வாய்ப்பு உள்ளதா?

``இந்திய அரசு நினைத்தால் மட்டும்தான் அது முடியும்.''

இந்திய அரசு அனுப்பிய நிவாரணப் பொருள்கள் அங்குள்ள மக்களுக்குக் கிடைத்துள்ளதா?

`` `நீங்கள்தான் எங்களுக்கு முதன்முதலில் நிவாரணப் பொருட்கள் வழங்குகிறீர்கள். இதுவரை இந்திய அரசுத் தரப்பில் இருந்து எங்களுக்கு நிவாரணம் வரவில்லை!' என்றார்கள்.''

ஈழப் பிரச்னையில் இந்திய அரசின் நிலைப்பாடு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

``இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு மிகப்பெரிய தவறு செய்துள்ளதாகத்தான் கருதுகிறேன்.''

விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்றும், போராளிகள் என்றும் இரண்டுவிதமான கருத்துகள் நிலவுகிறதே?

``அவர்கள் போராளிகள் தான்!''

படம் : ஞானமணி

- இரா. முருகேசன்


நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

மக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செய்தால் தே.பா பாயும்

இதுதான் ஜனநாயக நாடு, இங்கு கருங்காலிகள் ஆட்டம்தான் நடைபெறும். நாம் எல்லாம் அதை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும். எதிர்த்தால் நமக்கும் அதே தே.பா தான். போங்கடா பொறுக்கி கருங்காலிகளா.

மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்ட 13 தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழக காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

ஆலங்குடிப் பகுதியில் வைத்து இவர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இக் கைதுச்சம்பவம் நடைபெற்றதாகவும், இக்கைதின்போது இவர்களிடமிருந்த துண்டுப்பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இகைப்ப படம் பிடிக்க முயன்ற பத்திரிகை நிருபர்கள் தடுக்கப்பட்டதாவும், மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களைக் கைது செய்ய முயன்ற பொலிசாரிடம் என்ன வகையில் கைது செய்கின்றீர்கள் எனக் கேட்டபோது, இந்திய சட்ட அமைப்பின், 188, 147, 153(a), 504, 505 பிரிவுகளுக்கமைவாகவே இக் கைது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அறியவருகிறது.


இவர்களிடமிருந்து பறிமுதல் செய்த துண்டுப் பிரசுரத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரசை தோற்கடிப்போம்! பா.சிதம்பரத்தை தோற்கடிப்போம்!

காங்கிரசை ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இராஜபக்சேயின் இனபடுகொலைக்கு முழு ஆதரவு வழங்கக்கூடிய கட்சியாக காங்கிரசு முன் நிற்கிறது. இராஜீவ் காந்தியின் மரனத்திற்கு ஈழத்தமிழர்களின் உயிரை பலி கேட்கிறது. ஈழத்தில் ஒரு தமிழினக் குழந்தை கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று யுத்தம் நடத்தும் இராசபக்சேயின் சிங்கள வெறித்தனதிற்கு சற்றும் குறைந்தது அல்ல காங்கிரசின் பலிவாங்கும் வெறித்தனம்.
சிங்கள ரானுவத்திற்கான யுத்த ஆயுதங்கள், யுத்த பயிற்சிக்கு இடவசதி, யுத்த பயிற்சி, பணவசதி என்று காங்கிரசு அரசு செய்யும் கயவாளிதனத்தனங்கள் எனற்றவை. உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்களும், கண்டன குரல்களும் எழ்ந்தவன்னம் இருக்கிறது. தமிழகத்தில் முத்துகுமார் முத்லாக பல தோழர்கள் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன என்று காங்கிரசு மட்டும் தமிழினபடுகொலைக்கு தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. நம் விரலை கொண்டு நம் கண்ணையே குத்துகிற காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் நாம் என்ன செய்யமுடியும்? தோற்கடிக்கமுடியும். ஆம், நம்மால் முடியும். இந்த தேர்தலில் காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் தோற்கடிக்க மாணவர்கள் சட்டவல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், திரைதுரையினர் என்று நாடு தழுவிய அளவில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

எங்களோடு நீங்களும் இணைந்திடுங்கள்.

உங்களால் முடியும் !

பா.சிதம்பரத்தை தோற்கடிப்பதற்கான பணிகளில் முழுநேரத் தோழராக பணியாற்றலாம்.

குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணியாற்றலாம்.

பிரச்சாரத்திற்கான பொருட்கள் வழங்கலாம். (குறுந்தகடுகள், துண்டரிக்கைகள், சுவரொட்டிகள்)

பணிபுரியும் தோழர்களின் உணவு, போக்குவரத்து, இடவசதிக்கான செலவினங்களுக்கு உதவலாம்.

தமிழீழ படுகொலைகள் குறித்த ஆவணங்களை, பா.சிதம்பரம் பற்றிய தகவல்களை எங்களுக்கு அளிக்கலாம்.

இந்த துண்டரிக்கையை உங்கள் நன்பர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மேற்கண்டவற்றில் எது உங்களால் முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். இந்திய அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் பணியில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு உறுதிபடுத்துங்கள்.

பா.சிதம்பரத்தை ஏன்?

காங்கிரசின் தமிழ்நாட்டுத் தூண், பொருளாதாரப்புலி என்றெல்லாம் புகழப்படும் பா.சிதம்பரத்தின், பட்ஜெட்டால், 10,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு பண முதலைகளுக்கும் பல்லிளிக்கும் பா.சிதம்பரம் இந்த தேசத்தின் முக்கிய தேவைகளான இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கான் நிதியை குறைப்பது எதற்காக? அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கூட்டுவதற்கு எதற்காக? இவற்றிலிருந்து சுருட்டபட்ட நிதிமூலதானத்தின் ஒரு பங்கு ஈழதமிழ் மக்களை கொல்வதற்காக பயன்படுகிறது.
நமது வரிபணத்தில் நம் மக்கள் கொல்லும் பா.சிதம்பரத்தை தேர்தலில் தோற்கடிப்போம்.

கொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போடும் திட்டம்

இந்த கொடுங்கோலன் ஆட்சியில் இது வரை தமிழினம் காணாத அழிவுகளை சந்தித்து கொண்டிருக்கிறது, கையலாகதவனுக்கு ஏன் இந்த முதல்வர் பதவி. நீ கை இருந்தும் இன்னும் பிச்சை எடுக்கும் மூடன். காங்கிரஸ் என்ற கொலைகாரர்களும் நீயும் ஆட்சி நடத்துவதற்க்காக எத்தனை தமிழன் வேண்டுமானாலும் கொல்லலாம் என்றி நினைக்கும் பேய்களே நீங்கள் கண்டிப்பாக குற்றவாளி கூண்டில் ஒரு நாள் ஏற்றத்தான் படுவீர்கள். நன்றி கெட்ட மிருகங்களே உங்களுக்காக 40 சீட்டையும் கொடுத்த நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா எங்களுக்கு நல்ல பாடம் புகட்டினீர்களே மிருகங்களே.

நீங்களெல்லாம் மனிதர்களா. நாங்கள் யார்க்கு என்ன கொடுமை செய்தோம். காங்கிரஸ், திமுக மிருகங்களா. தைரியமான ஒரு மான தமிழ் வீரனாக இருந்தால் இன்றே நீ உன் ஆட்சியை ராஜினாமா செய்து தமிழனை காப்பாற்ற கை கொடுக்க வேண்டும்.

துண்டு பிரசுரம் கொடுத்ததற்கு தே.பாதுகாப்பு சட்டம் பயன்படுத்த கருணாநிதி முயற்சிப்பார் போலும். நண்பர் SREESHARAN (http://sreesharan.blogspot.com/2009/04/13.html)வலைப்பதிவிலிருந்து இந்த செய்தி. கருணாநிதியினை வன்மையாக கண்டிக்கிறேன்.

சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்பதுறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 கைது

மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 பேர் நேற்று இரவு ஆலங்குடியில் 188, 147, 153(a), 504, 505 போன்ற செக்ஷன்களின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்

இலங்கை சம்பந்தமாக துண்டு பிரசுரம் கொடுக்கக் கூடாது என்று ஏதோ சட்டம் இருப்பதாகவும் அதை மீறியதற்காக கைது செய்கிறோம் என்று போலிஸ் சொல்லி இருக்கிறது.

நண்பர்கள் மக்களிடம் பிரசுரித்த துண்டு பிரசுரம் இந்த மெயில் உடன் இணைக்கப் பட்டுள்ளது

கைது செய்யப்படுவதை படம் பிடித்த தினத்தந்தி நிருபர் காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய புகைப்படக் கருவியும் பிடுங்கப் பட்டுள்ளது



துண்டு பிரசுரம்

காங்கிரசை தோற்கடிப்போம்! பா.சிதம்பரத்தை தோற்கடிப்போம்!

காங்கிரசை ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இராஜபக்சேயின் இனபடுகொலைக்கு முழு ஆதரவு வழங்கக்கூடிய கட்சியாக காங்கிரசு முன் நிற்கிறது. இராஜீவ் காந்தியின் மரனத்திற்கு ஈழத்தமிழர்களின் உயிரை பலி கேட்கிறது. ஈழத்தில் ஒரு தமிழினக் குழந்தை கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று யுத்தம் நடத்தும் இராசபக்சேயின் சிங்கள வெறித்தனதிற்கு சற்றும் குறைந்தது அல்ல காங்கிரசின் பலிவாங்கும் வெறித்தனம்.
சிங்கள ரானுவத்திற்கான யுத்த ஆயுதங்கள், யுத்த பயிற்சிக்கு இடவசதி, யுத்த பயிற்சி, பணவசதி என்று காங்கிரசு அரசு செய்யும் கயவாளிதனத்தனங்கள் எனற்றவை. உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்களும், கண்டன குரல்களும் எழ்ந்தவன்னம் இருக்கிறது. தமிழகத்தில் முத்துகுமார் முத்லாக பல தோழர்கள் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன என்று காங்கிரசு மட்டும் தமிழினபடுகொலைக்கு தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. நம் விரலை கொண்டு நம் கண்ணையே குத்துகிற காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் நாம் என்ன செய்யமுடியும்? தோற்கடிக்கமுடியும். ஆம், நம்மால் முடியும். இந்த தேர்தலில் காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் தோற்கடிக்க மாணவர்கள் சட்டவல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், திரைதுரையினர் என்று நாடு தழுவிய அளவில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

எங்களோடு நீங்களும் இணைந்திடுங்கள்.

உங்களால் முடியும் !

பா.சிதம்பரத்தை தோற்கடிப்பதற்கான பணிகளில் முழுநேரத் தோழராக பணியாற்றலாம்.

குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணியாற்றலாம்.

பிரச்சாரத்திற்கான பொருட்கள் வழங்கலாம். (குறுந்தகடுகள், துண்டரிக்கைகள், சுவரொட்டிகள்)

பணிபுரியும் தோழர்களின் உணவு, போக்குவரத்து, இடவசதிக்கான செலவினங்களுக்கு உதவலாம்.

தமிழீழ படுகொலைகள் குறித்த ஆவணங்களை, பா.சிதம்பரம் பற்றிய தகவல்களை எங்களுக்கு அளிக்கலாம்.

இந்த துண்டரிக்கையை உங்கள் நன்பர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மேற்கண்டவற்றில் எது உங்களால் முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். இந்திய அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் பணியில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு உறுதிபடுத்துங்கள்.

பா.சிதம்பரத்தை ஏன்?

காங்கிரசின் தமிழ்நாட்டுத் தூண், பொருளாதாரப்புலி என்றெல்லாம் புகழப்படும் பா.சிதம்பரத்தின், பட்ஜெட்டால், 10,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு பண முதலைகளுக்கும் பல்லிளிக்கும் பா.சிதம்பரம் இந்த தேசத்தின் முக்கிய தேவைகளான இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கான் நிதியை குறைப்பது எதற்காக? அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கூட்டுவதற்கு எதற்காக? இவற்றிலிருந்து சுருட்டபட்ட நிதிமூலதானத்தின் ஒரு பங்கு ஈழதமிழ் மக்களை கொல்வதற்காக பயன்படுகிறது.
நமது வரிபணத்தில் நம் மக்கள் கொல்லும் பா.சிதம்பரத்தை தேர்தலில் தோற்கடிப்போம்.

Saturday, April 25, 2009

தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு எதிரான "இறுதி யுத்தம்" காணொளி இதுதான்..? : tamilsforobama.com

'இறுதி யுத்தம்' இக் காணொளியானது ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையின் தீவிரத்தை காட்டுவதோடு, அதற்கு துணைபோகும் இந்தியாவும் அதன் ஆட்சியில் உள்ள காங்கிரசினையும் கடுமையாக கண்டிப்பதுடன் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசை முற்றாக படுதோல்வியடையச் செய்வதோடு தமிழ்நாட்டிலில் இருந்து காங்கிரசினை துரத்தியடிக்கும் நோக்கத்தினையும் கொண்டுள்ளது. அத்துடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் செய்வதனையும் பிரச்சாரப்படுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்ட காணொளி ஆகும்.

இதனை இங்கு காணலாம்!. http://www.tamilsforobama.com/Final_War.html

தரையிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும். http://www.tamilsforobama.com/video/Final_war.flv

This video is meant to persuade the Tamils in Tamil Nadu not to support the Indian Congress party in this coming election because the Congress Party fully supported the genocidal war against Tamils in Sri Lanka. This video was passed to us by Tamil well wishers. We are just passing it to you.

To download:

http://www.tamilsforobama.com/video/Final_war.flv

NDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள்

இன்று 25 Apr 09 ல் நடந்த விவாதம், இதில் சோ, சாமி, இந்து.ராம் இவர்கள் பேசுவதை கண்டு கொள்ளாதிர்கள். இவனுங்களை பத்திதான் நமக்கு காலம், காலமாக தெரிந்ததுதானே. பேட்டி நடத்துபவன் கூட கேணத்தனமான சில கேள்விகள் கோபத்த்தை ஏற்படுத்தினாலும் பொறுமையாக கேளுங்கள். நாய் வாலை நிமிர்த்த முடியாது.



http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1091390

கருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறது, அவர் நினைத்தபடி

இன்று மக்கள் பாதுகாப்பு வலயம் மீது மதியம் வரை 25 தடவைகள் வான் குண்டு வீச்சு! இவர் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் இந்திய அரசு மலையாளிகள் கூட்டணிகளை அங்கு அனுப்பி இனி ஒவ்வொரு நாளும் 1000 குண்டுகளும் 500தமிழ் மக்களும் மட்டுமே கொல்லப்பட வேண்டும் என கேட்டு கொண்டதற்கினங்க இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது.

வன்னியில் இடம்பெயர்ந்து மக்கள் வாழும் பகுதியான மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது சிறீலங்கா வான்படையினர் பரவலாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என பதிவு இணையத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை மதியம் வரையில் சிறீலங்கா வான் படைக்குச் சொந்தமான மிகையொலி யுத்த வானூர்த்திகள் 25 தடவைகள் மக்கள் மீது அகோர குண்டு வீச்சை நடத்தியுள்ளன.

முற்பகல் 9:00 மணிக்கும் 10:00 மணிக்கும் இடையில் நான்கு தடவைகள் குண்டுகளை வீசியுள்ளன. பின்னர் மதியம் 12:00 மணிக்கும் பிற்பகல் 2:30 மணிக்கும் இடையில் 12 தடவைகளும் வான் வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் பின்னர் பிற்பகல் நான்கு தடவைகளும் தொடர்ந்து மாலை 5 தடவைகளுமாக மொத்தம் 25 தடவைகள் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா வான் படையினர் அகோர வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வி? : தமிழச்சி

"இரண்டு தடவைக்கு மேல் பதவி கூடாது. யாராக இருந்தாலும் இரண்டு தடவைக்கு மேல் ஒரு ஆள் பதவிக்கு வரக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும். இப்போதுள்ளவன், சாகிற வரையில் பதவியில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அதற்காக பல காரியங்களைச் செய்ய பயப்படுகிறான். இதைத் தடுக்க வேண்டும்."

தந்தை பெரியார்
("விடுதலை´ -27.01.1970)

சளைக்காமல் தொடரும் கலைஞர் புராணம். முன்னுக்குப் பின் முரணாக தகவலுடன் ஆட்டம் தொடருகிறது பகுத்தறிவு சிந்தனைவாதி மானமுள்ள கி.வீரமணி அவர்களிடம் இருந்து. எங்கே தான் போய் முடிகிறது பார்ப்போம் என்று பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

மதஆதரவு கட்சியான பா.ஜ.க தமிழகத்திற்குள் நுழைய கூடாதாம். அதற்காக தி.மு.க. வை ஆதரிக்க வேண்டுமாம். கலைஞரை பதவியில் அமர்த்த வேண்டுமாம். கலைஞர் ஆதரிப்பதால் காங்கிரசையும் ஆதரிக்க வேண்டுமாம். இப்படியே அடுக்கடுக்காக கோரிக்கைகள் தினம் தினம் கொட்டிக் கொண்டிருக்கிறார் மானமுள்ளவர்.

தள்ளாடும் வயதில் மூத்திரப்பையை பிடித்துக் கொண்டு ஊர்ஊராக சென்று சொற்பொழிவு செய்த பெரியாரின் நோக்கத்திற்கும், கலைஞரின் பதவி ஆசைக்கும் வித்தியாசம் இருப்பதை மானமுள்ளரு அறியாததா? காங்கிரசை ஆதரிப்பது என்பது பெரியாரியத்திற்கு எதிரானது இல்லையா? காமராசரை பெரியார் ஆதரித்ததற்கு ஒரு காரணம் இருந்தது. இன்றைய நிலையில் சோனியாவை ஆதரிக்க மானமுள்ள கி.வீரமணியிடம் என்ன காரணம் இருக்கிறது?

இதோ தந்தை பெரியார் கேட்கிறார் :

"காங்கிரஸ் ஆட்சி பார்ப்பனர்களின் அடிமைக்கட்சி! பார்ப்பனரே தலைவர். அக்கட்சியில் இருப்பவர்கள் தங்களைப் பாதிப் பார்ப்பனர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவரின் பேச்சை இங்குள்ளவர்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும். அதுபோலவே மற்றக் கட்சிகளும், இவற்றையெல்லாம் விரும்பாத மற்றக் கட்சிகளின் நிலை என்ன? ஏன் செய்யவில்லை?

சாதிக்கு ஆதாரமாக உள்ள சட்டத்தைக் கொளுத்தினால் சிறை என்று சட்டம் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறான். நீ அச்சட்டத்தை ஒழித்துவிடுகிறேன் என்று இங்குள்ள மக்களிடம் கூறிவிட்டுச் சட்டசபைக்குப் போய் அச்சட்டத்திற்கு அடங்கி நடக்கிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறாய்! உனக்கு மானமில்லை. என்ன செய்கிறது உன் முன்னேற்றம்? இதுதான் உன் முன்னேற்றமா? உன்னையும் என்னையும் சேர்த்துத்தானே சூத்திரன் தேவடியாள் மகன் என்று எழுதி வைத்துக் கொண்டு இருக்கிறான்? உன்னைவிட்டு எங்களை மட்டும் சொன்னாலுங்கூட பரவாயில்லையே என்று சொல்லலாம். ரு150- அய் பொறுக்கித்தின்னப் போவதல்லாமல் வேறு என்ன? அங்கே என்ன பருத்திக் கொட்டையிலிருக்கும் பஞ்சு எடுக்கவா போனாய்? எதற்காகப் போனாய்? 1000, 1500- ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு சூத்திரப் பட்டம் போகாமல் இருக்கிறது.


14-12-1958 அன்று பெரியார் கேட்டது (´விடுதலை´ - 25-12-1958)

மானங்கெட்ட பொழப்பு. முடியாத வயதிலும் பதவியின் பெயரால் பொறுக்கித்தின்ன அலையும் கூட்டத்திற்கு வக்கனையாக வக்காலத்து.

"எனக்கு இந்த ஜனநாயகத்தில், சட்டத்தில் நம்பிக்கையில்லை" என்று சாகும் வரையில் அரசியல் கூட்டத்தை வெறுத்த தந்தை பெரியாரின் வழியில் வந்தவர் இன்று ஜனநாயகத்தின் மூலமே தீர்வு கிடைக்கும் என்று பரப்புரையை பப்பரமாக்கிக் கொண்டிருக்கிறார்.

இரண்டு தடவைக்கு மேல் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற சட்டங்கள் பிரான்ஸ், அமெரிக்கா உட்பட பலநாடுகளில் செயல்களில் இருக்கிறது. நம் நாட்டில் தான் பொறுத்தின்னவன் சாகும் வரையில் பொறுக்கித் தின்றுக் கொண்டே இருக்கலாம் என்கிறார்கள். மானமில்லை, வெட்கமில்லை, ரோஷமில்லை, கள் குடித்தவன் உளறல்கள் போன்று தேர்தல் அறிக்கைகளில் தினம் தினம் பல்டி அடித்துக் கொண்டு செயல்படுவதில், "தீவிரமாக உங்களுக்கு சளைத்தவன் இல்லை நான்" என்பதுபோல் கலைஞர் சூப்பர் பல்டி அடிக்கிறார்.

நேற்று பிரபாகனை பிடித்தால் கவுரமாக நடத்தப்பட வேண்டும் என்கிறார். இன்று பிரபாகரன் எனது நண்பர் என்கிறார். கலைஞர் தன் நண்பர்களுக்கு ஆப்பு வைத்து பழகிப்போய்விட்டதை தான் பிரபாகரன் விஷயத்திலும் நாசூக்காக நண்பன் முறையை உபயோகப்படுத்துகிறாரோ?

ஆனால், இந்த கூத்துக்களையும் கேட்க ஆட்கள் இருக்கிறார்கள் தான். நடத்துங்க ஆட்டத்தை மானமுள்ள கி.வீரமணி அவர்களே. அப்படியே தந்தை பெரியார் வார்த்தைகளுக்கு எதிரான செயல்படும் உங்கள் யோக்கியதையை தி.க.விற்குள் முழுவதாக திணிக்காமல் உங்களுடைய சொந்தக் கருத்தாக சொல்லிக் கொள்ளுங்கள். அதற்கான சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் பெரியாரிய போர்வை போர்த்திக் கொண்டு பெரியார் வழியை கடைப்பிடிப்பதாக போலி பாசாங்குத்தனமும், அரசியல்வாதிகளிடம் பொறுக்கித்தின்ன பெரியாரியத்தை ஒழித்துக் கட்ட முயலாதீர்கள் என்று தான் எச்சரிக்கிறோம்.

தமிழச்சி
20/04/2009

நன்றி : http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1181

தமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபரம்..

1. வாசன் குருப் - பாபநாசம் பண்ணையார் சொத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்... இந்த பண்ணையாரின் அடிபொடிகள்... சுதர்சனம், ராணி, டாக்டர் ஜெயகுமார், பழனியாண்டி... காங்கிரசில் இருக்கும் கோஷ்டிகளில் பலம் பெற்றது... இந்த பண்ணையார் கோஷ்டிதான்...யார் டெல்லி மேலிடத்தில் இருந்து வந்தாலும் சந்திப்பது இந்த கோஷ்டியைத்தான்..

2. கிருஷ்ணசாமி குருப் - இவரது கோஷ்டியில் இவரும் கள்ளு குடித்தால் உடம்புக்கு நல்லது என்ற பேமானி பேச்சு இவரது மகன் விஷ்னுபிரசாத் மட்டும்தான்... துணைக்கு மருமகன் அன்புமணி, ஒவ்வோரு தேர்தலிலும் குரங்குக்கு சவால் விடும் மருத்துவர் ராமதாஸ்

3. இளங்கோவன் குருப் - இவரது கோஷ்டியிலும் இவரும் இவரது மகன் திருமகன் மட்டும்தான் இருப்பார்கள். தமிழர்களுக்கு எதிரான இவரது சேவை தொடர்ந்து கொண்டே உள்ளது!

4. குமரி அனந்தன் - இவர் தனி'பனை'மரம்...பனைவாரிய தலைவர் இங்கு இனிமேல் குப்பை கொட்ட முடியாது என்று இவர் மகளை பாஜகவிற்கு அனுப்பி விட்டார்... அங்கு அவர் மகள் தமிழிசை மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு சென்று வருகிறார்...

5. செல்லகுமார் - இவரும் தனிமரம்...

6. மணிசங்கரய்யர் - இவரது கோஷ்டியில் இவரும்... இவரது கைத்தடியான ராஜ்குமார் மாயவரம் எம்.எல்.ஏ.வும்தான்... இவருக்கு ஓட்டு போட மட்டும்தான் மயிலாடுதுறை தொகுதி மக்கள் தேவை... இவருக்கு வேண்டியவர் சிங்கள தலைவர் ராஜபக்சே... வேண்டியவர்கள் சிங்கள மக்கள்... ராஜ பக்சே இவரது வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு சாந்தி முகூர்த்தம் வரை எல்லா வேலைகளையும் செவ்வனே செய்துவிட்டுதான் கொழும்பு சென்றார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..கூடுதல் தகுதி 'ஐயர்'....

7. சிதம்பரம் - இவரது கோஷ்டியில் இவர்... இவரது ம்கன் கார்த்தி. ராகுல் காந்தி மூலமாக இளைஞர் அணி தலைவராக அடி போடுவதாக பேச்சு உலவுகிறது.. மற்றும் கைத்தடி காரைக்குடி எம்.எல்.ஏ. சுந்தரம்...

8. கிருஷ்ணசாமி வாண்டையார் - இவர் தஞ்சை காங்கிரஸின் குறுநில மன்னர்... கள்ளர் சாதிக்காரர்களின் இளவல் - பாபநாசம் பண்ணையார் மூப்பனார்களுக்கு பரம எதிரி - துணை அதிமுகவில் உள்ள 40 நாள் மந்திரியாக இருந்த இவரது சித்தப்பா அய்யாறு வாண்டையார்...

9. வசந்தக்குமார் - சோனியாவிற்கு நெருக்கமானவர் இந்தியாவின் நம்பர் ஒன் ஏஜெண்ட்... பொருட்களுக்கு... தனிமரம்...

10. ஜெயந்தி நடராஜன் - தனிமரம்... காசு கொடுத்து தனக்கு தானே போஸ்டர் அடித்து கொள்வார்...

11. டி.யசோதா - திருபெரும்புதூர் எம்.எல்.ஏ. - சொந்த கட்சியை விட ஜெவுக்கு விசுவாசம் அதிகம்...துணைக்கு போளூர் எம்.எல்.ஏ வரதன்

12. ஆர்.பிரபு - தனிமரம்... நீலகிரியின் ரோஜா என ஊட்டியில் போஸ்டர் அடித்துக் கொள்வார்...

13. பிட்டர் அல்போன்ஸ் - தனிமரம் - காங்கிரஸிலே கொஞ்சம் பேச தெரிந்த நாகரீகமானவர்... சில ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் இவரை... வாசன் குருப் நைய புடைத்த போது கேட்க ஆளில்லை... சட்ட மன்றத்தில் ஜெவை குறை கூறியதற்கு... 1995இல் தாமரைகனியால் தாக்கப் பட்டார்... நிறைய அடிவாங்கியவர்.... காங்கிரஸ் என்றாலே என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிடாங்க என்று வடிவேல் போல அடிவாங்குபவர் என நிரூபிப்பவர்...

14. வேலூர் ஞானசேகரன் கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா..என சிங்கள தூதர் அம்சாவினால் பாராட்ட பெற்றவர்..மேலும் அவர் கொடுக்கும் விருந்தில் அவ்வப்போது கலந்து கொண்டு சிறப்பிப்பவர்..துணைக்கு சித்தன்..ராமநாதபுரம் எம்.எல் ஏ அன்சாரி..இதில் அன்சாரி ராமேசுவரத்திற்கு உயிரை பணையம் வைத்து வந்த ஈழ தமிழர்களிடம் "உங்களுக்கு அங்க என்ன பிரச்சனை?இங்கு வந்து ஏன் தொல்லை பண்ணுகிறீர்கள் திரும்பி போங்கள் என கத்திய பெருமைக்குரியவர்.. தற்போது இந்த கோஷ்டி இலங்கையில் போரை நிறுத்த வேண்டாம் தொடரவேண்டும் பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறபடுகிறது

15. திருநெல்வேலி எம்.பி. ஆதித்தன் - சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால்... கோஷ்டி தெரியவில்லை...

16. அன்பரசு - இவரது கோஷ்டியில் இவரும்... இவர் மகன் சோளிங்கர் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு... ஜெவின் உண்மை தொண்டர்... சிறப்பு தகுதி... சிங்களர்களிடம் இருந்து... விஜயரத்னே விருது பொறுக்கி வந்த பொறுக்கி...

17. வாழ்ப்பாடி ராமமூர்த்தி மகன் சுகந்தன் - இவர் பாஜ்கவில் இருந்து தாவி வந்தவர்... அவ்வப்போது குரங்கு போல் தாவி கொண்டிருப்பார்...

18. எஸ்.ஜி.வினாயகமூர்த்தி - முன்னாள் எம்.எல்.ஏ. எழில் காத்த நாயகியே என ஜெவை புகழ்ந்தவர்...

19. சுதர்சன நாச்சியப்பன் - இவரும் தனி மரம்... தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி கொள்வார்...

20. தங்கபாலு - 1960 களிலேயே வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி மோசடி செய்த பேர்வழி... அமெரிக்காவில் இருக்கும் இவரது தம்பியை வைத்துதான் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெ பெயரை வைக்க ஏற்பாடு செய்த ஜெ விசுவாசி... கூடுதல் தகுதி முன்னாள் ரவுடி... மாநில தலைவர்...தெலுங்கு வந்தேறி..பச்சை தமிழர்களை பார்த்து தமிழின துரோகி என்பார்..சமீபத்தில் விபச்சார புரோக்கர் சோனாவின் திருவாயால் ரெகுலர் கஷ்டமர் என புகழப்பட்டவர்

21.அடைகலராஜ் மூப்ஸ் கோஷ்டியில் இருந்த ஆள்... இந்தியன் வங்கியில் பல கோடி... மூப்ஸ் ஆதரவோடு கடன் வாங்கி... ஏமாற்றிய பேர்வழி... இப்போது இருக்கிறாரா என தெரியவில்லை...

இவரது தங்கை எமிலி திருச்சி முன்னாள் மேயர்... இவரது சகோதரி மகன் ஜெரோம் கடந்த தேர்தலில் திருவரங்கத்தில் தோல்வி அடைந்தவர்... இப்போது வாசன் கோஷ்டியில் உள்ளார்கள்...பெப்ஸி மார்க்கெட்டிங்கில் பார்ட்னர்..மேட்டுபாளையத்தில் உள்ள ப்ளாக் தண்டர் கூட அடைக்கலராஜுக்கு சொந்தமானதுதான்...


22. ஜெயலலிதா - இவர் தமிழ் நாடு காங்கிரஸில் இல்லாவிட்டாலும்... உண்மையில் இவருக்குதான் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் விசுவாசிகள் அதிகம்... அன்பரசு போன்றவர்கள்... இவர் சொந்த கட்சிகாரர்களை விட இவருக்குதான் சேவை செய்வார்கள்... மேலும் காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்களின் தலைவரும் இவரே...

ஏதோ எனக்கு தெரிந்த காங்கிரஸ் கோஷ்டிகளை பற்றி சொல்கிறேன்... மற்றபடி தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை விட கோஷ்டிகள் அதிகமாக இருக்கும்... திறந்த வீட்டில் நாய் வந்து போவது போல... எப்போது வேண்டுமானாலும் கட்சிக்கு வந்து விட்டு போகலாம்...

இப்போதைக்கு காங்கிரஸில் செல்வாக்கான தலைவர்கள்...

1. சிங்கள தலைவர் ராஜபக்சே...

2. ஜெயலலிதா...

3. மருத்துவர் ராமதாசு - கிருஷணசாமியின் சம்பந்தி என்பதால்...

மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி என்பதை... ஜெ காங்கிரஸ் கமிட்டி என்றோ... சிங்கள காங்கிரஸ் கமிட்டி என்றோ... ராஜபக்சே காங்கிரஸ் கமிட்டி என்றோ... கோத்தபயா காங்கிரஸ் கமிட்டி என்றோ மாற்றிக் கொண்டால்... அதன் செயல்பாடுகளுக்கு சரியாக இருக்கும்...

சரி இவர்களுக்கு உள்ள ஒற்றுமையை பார்ப்போம்..

1)தமிழுணர்வு எங்கே வந்து விடும் என்று சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவது இல்லை..
2)தேச பிதா ராஜீவ் காந்திக்காக தீக்குளித்து உயிரை விட துணிபவர்கள்..
3)தமிழர்களுக்கு எதிரான ஒக்கெனக்கல் பிரச்சனையில் இருந்து ..எந்த பிரச்சனையிலும் தங்கள் ஓலவாயை திறப்பது இல்லை..
4)அடிக்கடி காமராசார் ஆட்சியை கனவிலேயே நிறுவுவது..
5)வட 'இந்தி'ய ஆரிய ஆதிக்க சக்திகளுக்கு அடிமை சேவகம் செய்வது..காதுகுத்து பூ முடிப்பு என தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு தங்கள் அடிமை தனத்தை நிருபிப்பது..
6)'இந்தி'ய ஒற்றுமை பற்றி வாய்கிழிய பேசுவது ஆனால் சத்தியமூர்த்தி பவனில்
ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டு சாவது..

நன்றி :

தமிழ்குரல்-தமிழ்நாடுடாக், comment
http://thamilar.blogspot.com/2008/12/blog-post_8983.html



http://thamilar.blogspot.com/2008/12/blog-post_25.html

'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்சிகள்

சேரனின் இந்த கோபம் நியாயமான கோபமே, இயக்குநர்கள் அமீர், சேரன், சீமான் மற்றும் பாரதிராஜா அவர்களே உங்களால் முடியும் இந்த அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தை காப்பாற்ற, தயவு செய்து உங்கள் போராட்டத்தினை விரைவுபடுத்தி தமிழினத்தை காப்பாற்றுங்கள். உங்கள் படங்கள் மட்டுமல்ல நீங்களும் ஒரு பச்சை தமிழன் என்று நிருபித்து கொண்டிருக்கிறிர்கள். எப்பாடு பட்டாவது தமிழர்களை காப்பாற்றுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=56855

இப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்றுகிறது

நேற்றைய விடுதலை தலையங்கத்தில் "தமிழ்நாட்டில் வேலை நிறுத்தம் எதிரொலி,எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் கொழும்பு விரைகின்றனர்!" என்பது. இன்றைய செய்தி "போர் நிறுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை: கோத்தாவின் கருத்தை நாராயணன் குழு ஏற்பு"

இதுதான் கருணாநிதியும், காங்கிரஸ்-ம் அனுப்பிய செய்திகளா இலங்கை அரசாங்கத்துக்கு. மக்களே மீண்டும் ஒரு முறை இந்த கொலைகார கூட்டணி தனது தமிழின துரோக தனத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த செய்திகளை அறிய

தமிழ்நாட்டில் வேலை நிறுத்தம் எதிரொலி,எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் கொழும்பு விரைகின்றனர்!

போர் நிறுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை: கோத்தாவின் கருத்தை நாராயணன் குழு ஏற்பு

Friday, April 24, 2009

ஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிகள் பொன்னிலா

“இந்தாக்கா எனக்கு கட்டுப் போடுக்கா”” என்று ரத்தம் சொட்டும் தன் கரங்களில் பேண்டேஜ் துணியை எடுத்து நீட்டுகிறது ஒரு ஈழத்துக் குழந்தை. கதறுகிற தம்பிக்கு கட்டுப் போடுவதா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக கண்கள் சொருகி தோளில் துவண்டு விழுகிற தன் தங்கையைக் காப்பாற்றுவதா என்று பித்துப் பிடித்து, சிதறி சிதைந்து நிற்கிற அந்த ஈழத்துக் குழந்தை நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறாள். பாதுகாப்பு வலையம் முழுக்க பிணங்கள். அடப்பாவிகளா? இது மனித குலத்தில் எங்கேயும் நடந்ததேயில்லையே! உங்களுக்கு இரக்கமே இல்லையா? அவர்கள் தமிழர்கள் என்பதால் ஏன் இபப்டி அநியாயமாக விஷக் குண்டுகளை வீசிக் கொல்கிறாய். ஓ இந்தியாவே! இரக்கமில்லாத நாய்களே! ஒருத்தனுக்கு இழவு எடுத்ததற்காக இத்தனையாயிரம் தமிழ் மக்களையா காவு கேட்பீர்கள்? ஒரு இந்திராவின் உயிருக்கு மூவாயிரம் சீக்கியர்கள் என்றால் ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்கு பத்தாயிரம் தமிழ் மக்களா?
இன்று உலகெங்கிலும் தமிழினத்திற்கு இருப்பது ஒரே வழிதான் அது தற்கொலை செய்து கொள்வது. நாம் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? ஆமாம் தற்கொலைதான் செய்ய வேண்டும். என்னைக் கைது செய்தாலும் பரவாயில்லை. ஆமாம் ஒட்டு மொத்தமாக நாம் வங்கக் கடலில் குதித்து நம்மை நாமே மூழ்கடித்துக் கொள்வோம். வேறு என்ன செய்ய? கருணாநிதி மாதிரி ஒரு பதவி வெறியனும், ஜெயலலிதா மாதிரி ஒரு பாசிஸ்டும் நம் தலைவர்களாக இருக்கும் போது நாம் என்னதான் செய்வது? வேறு போக்கிடம் தான் ஏது?

குழந்தைகள், பெண்கள், எல்லாம் கொன்றொழிக்கப்பட்டு விட்டார்கள். நிற்க ஒரு நிழல் இல்லை, உண்ண உணவில்லை, தாயகத்தில் தங்களின் சொந்தங்கள் செத்து மடிவதைப் பார்த்து புலத்திலும் நிம்மதியில்லை. ஆனால் நாம் மட்டும் நிம்மதியாக இருக்கிறோம். புலத்தில் காப்பிக் கோப்பை கழுவி, கார்பெட் துடைத்து சம்பாதித்த பணத்தில் ஈழத் தமிழர்கள் யார் யாரையெல்லாம் வெளிநாடுகளுக்கு அழைத்து விருந்து வைத்தார்களோ அவர்களில் சிலர் இன்று கருணாநிதியின் பெயர் ஈழ விவகாரத்தில் கெடுகிறதே என்று வருத்தப்படுகிறார்கள். ஆகவே கருணாநிதியின் மடியில் அமர்ந்து கொண்டு ஜெயலலிதா என்கிற பாசிஸ்டை மையப்படுத்தி ஈழப் பிரச்சனையை அணுகிறார்கள். பதவிக்காக, குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள கருணாநிதி ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தார். பிரபாகரனின் கடைசி முடிவின் மீதான தன் ஆசையை வெளிப்படுத்தி வக்கிரத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் புலம்பெயர் தமிழர்களால் வளம் பெற்ற சிலரோ கருணாநிதிக்கு ஏதும் பாதிப்பு வந்து விடக்கூடாது, தேர்தலில் பாதிப்பு வந்து விடக் கூடாது என்று ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி செய்து கிழித்த சாதனைகள் குறித்து வாய்கிழியப் பேசுகிறார்கள். ஒற்றுமையாக ஒன்று பட்டு போராட வேண்டும் என்கிறார்கள்.

முதலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடும் யாரும் கருணாநிதிக்கு எதிராக போராடவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராகத்தான் போராடினார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியையும் வெள்ளைக்காரி சோனியாவையும் திருப்திப்படுத்த போராட்டங்களை ஒடுக்கினார் கருணாநிதி. கைதுகள், தாக்குதல்கள், இழிவு படுத்தல்கள் என ஒரு கடைந்தெடுத்த பதவிப் பித்துப் பிடித்த ஒரு மனிதராக கருணாநிதி மாறியதோடு. ஈழப் போரைக் கொச்சைபப்டுத்தியும் புலிகளின் தலைவரும், உலகத் தமிழகளின் ஒப்பற்ற தலைவரருமான வேலுப்பிள்ளை பிரபாகரனை மிக கீழ்த்தரமான முறையிலும் கொச்சைப்படுத்தி, காட்டியும் கொடுத்தார். அதன் பிறகுதான் இந்தப் போருக்கு துணைப்போவது காங்கிரஸ் மட்டுமல்ல கருணாநிதியும்தான் என்று கருணாநிதி காங்கிரஸ் கும்பல் மீதான வெறுப்பு வளர்ந்தது.

ஒரு பக்கம் முழு பதவிக்காலத்தையும் அனுபவித்துவிட்டு அனுபவித்த காலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பற்றி வாயே திறக்காமல் இன்று தேர்தல் வந்தவுடன் பேசுகிற - கருணாநிதிக்கு சற்றும் குறைவில்லாத சந்தர்ப்பவாதி டாக்டர் ராமதாசைப் போல, போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று சொன்ன ஜெவைப் போலவோ அல்ல நாங்கள். கருணாநிதி கும்பலுக்கோ பதவி பறிபோய் விடக் கூடாது என்கிற கவலை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் யாருக்குக் கேடு - தமிழ் மக்களுக்கா? கருணாநிதி குடும்பத்துக்கா? கருணாநிதியின் இந்தக் குடும்ப ஆட்சி, சொத்து, ஊடக சர்வாதிகாரம், ஆட்சியதிகாரம் என எல்லாம் பார்ப்பன ஜெவின் கைக்குள் சென்று விடும் என்ற கவலை கருணாநிதி கும்பலுக்கு. ஜெவுக்கோ கருணாநிதி மீது எழுந்துள்ள இந்தக் கசப்பை எப்படியாவது பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற ஆசை. இதில் கருணாவோ ஜெ.வோ - தமிழனுக்கு என்ன நட்டம், லாபம்? ஒரு மண்ணும் கிடையாது.

தோற்றாலும் ஜெயித்தாலும் இன்னும் சில மாதங்களில் கருணாநிதியின் காலை காங்கிரஸ்காரன் வாரி விடப் போகிறான். கருணாநிதியோ ஈழ மக்களுக்காக மூன்றாவது முறையாக தியாகம் செய்து விட்டேன் என்று லிஸ்ட் போடுவார். தியாகம் செய்ய வாய்ப்பு வருகிறபோது காலை வாரிவிட்டு ஓலம் இடும் கருணாநிதி தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு! சூழலை மாசுபடுத்துகிற ஒரு நச்சுக் கிருமி. அவரும் சரி அவரது ஆர்வலர்களும் சரி உண்மையிலேயே ஈழ மக்களை நேசிக்கவில்லை. மாறாக கிடைக்கிற வரை ஈழ மக்களால் கிடைக்கும் அனுகூலங்களை அனுபத்த்து விட்டு அவர்களுக்கு துரோகம் செய்து விட்டு கருணாநிதிக்கு பல்லக்குத்தூக்கும் கைத்தடிகள் இவர்கள். உண்மையிலேயே இவர்கள் ஈழ மக்களை, அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை, போரில் சாகும் தாய்மார்களை, புலிகளை, பிரபாகரனை நேசித்திருந்தால். இப்படி ஒரு துரோகிக்கு பல்லக்குத் தூக்கியிருக்கமாட்டார்கள்.

அதன் விளைவுதான் இன்று கருணாநிதி சொல்கிறார்,’’ ‘அழுது புலம்புவதைத் தவிற வேறு வழி தெரியவில்லை’.” வழி எங்களுக்குத் தெரியும். பதவி வெறி கண்ணை மூடுகிற உனக்கு எப்படி வழி தெரியும்? ஈழத்தில் விழுகிற பிணங்களைப் பார்த்து உனக்கு கண்ணீர் கூட வராது. ஏனென்றால் நீ அந்த மக்களைப் பார்த்து எரிச்சல் அடைக்கிறாய். சர்வாதிகாரிகளின் கடைசி நாட்களை உனக்கு நினைவூட்ட விரும்புகிறோம். மக்கள் புரட்சியின் கடைசி மணித்துளிகளில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் நீ வீசப்படுவாய். உனக்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்கும் அதே கதிதான்.

நன்றி : http://www.keetru.com/literature/essays/ponnila_8.php

கவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி

நாம் நினைப்பது போல் இந்த தேர்தல் அதிமுக, திமுக கூட்டணிக்கு இடையில் நடக்கும் போட்டியல்ல. தமிழர்களின் எதிரிகளான தமிழின கொலைகார கூட்டணிக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் கடும் போட்டியே இந்த தேர்தல், தமிழனின் மானத்திற்கும், ரோசத்திற்கும் விடப்பட்ட சவால் இந்த தேர்தல். தமிழனை ஏமாற்றியே எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம் என்று நினைக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவோம். எதிரில் வரும் எந்த துரோகியானாலும் தட்டி கேட்போம், அது திருமாவோ, வீரமணியோ, சு.ப வீயோ யாரை பற்றியும் கவலை வேண்டாம். இவர்கள் எல்லாரும் ஜால்ராக்கள் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. தமிழனை பற்றி வாய் கிழிய பேசி விட்டு தமிழனை அழிப்பவனிடமே சரணடைவது வேண்டாம் இந்த ஒட்டு பொறுக்கி தனம்.

கொலைகார கூட்டணியை தோற்கடிப்பதே தமிழர்களாகிய நமது கடமை.

இதில் நாம் தவறினால் இந்த பழி நம் மேல் பல தலைமுறைகளுக்கு தொடரும். இந்த தேர்தலிக் கருணாநிதியின் கொலைகார கூட்டணிக்கு கொடுக்கும் பாடம் இனி எந்த கட்சியினையும் தமிழர்களுக்கு எதிராக பேச முடியாத படி செய்ய வேண்டும்.

நம்முடைய குறிக்கோள் நமது தமிழினத்தினை அழிக்க துணை போகும் திமுக,காங்கிரஸ் கட்சிகளை புறமுதுகு காட்டி ஓட செய்வதுதான். இதில் மற்றவர்கள் லாபம் அடைந்தால் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. தமீழீழத்திற்கு அடுத்து ஒரு உதவி என்பது இந்த கூட்டணியை ஆட்சியில் இருந்து அக்ற்றினால் மட்டுமே முடியும்.

இந்த அளவு தமிழர்களில் எந்த ஒரு காலத்திலும் கொல்லப்பட்டிருக்கவில்லை. இவையனைத்தும் சோனியா, சிங், கருணாநிதியின் சம்மதத்துடனே நடைபெறுகிறது.

எப்படியாவது இந்த தேர்தலுக்கு முன் தமிழர்கள் அனைவரையும் கொன்று விட துடிக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்டுவோம்.







Thursday, April 23, 2009

இந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்கும், தமிழர்களுக்கும்தான்

நாம் நினைப்பது போல் இந்த தேர்தல் அதிமுக, திமுக கூட்டணிக்கு இடையில் நடக்கும் போட்டியல்ல. தமிழர்களின் எதிரிகளான தமிழின கொலைகார கூட்டணிக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் கடும் போட்டியே இந்த தேர்தல், தமிழனின் மானத்திற்கும், ரோசத்திற்கும் விடப்பட்ட சவால் இந்த தேர்தல். தமிழனை ஏமாற்றியே எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம் என்று நினைக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவோம். எதிரில் வரும் எந்த துரோகியானாலும் தட்டி கேட்போம், அது திருமாவோ, வீரமணியோ, சு.ப வீயோ யாரை பற்றியும் கவலை வேண்டாம். இவர்கள் எல்லாரும் ஜால்ராக்கள் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. தமிழனை பற்றி வாய் கிழிய பேசி விட்டு தமிழனை அழிப்பவனிடமே சரணடைவது வேண்டாம் இந்த ஒட்டு பொறுக்கி தனம்.

கொலைகார கூட்டணியை தோற்கடிப்பதே தமிழர்களாகிய நமது கடமை.

இதில் நாம் தவறினால் இந்த பழி நம் மேல் பல தலைமுறைகளுக்கு தொடரும். இந்த தேர்தலிக் கருணாநிதியின் கொலைகார கூட்டணிக்கு கொடுக்கும் பாடம் இனி எந்த கட்சியினையும் தமிழர்களுக்கு எதிராக பேச முடியாத படி செய்ய வேண்டும்.

நம்முடைய குறிக்கோள் நமது தமிழினத்தினை அழிக்க துணை போகும் திமுக,காங்கிரஸ் கட்சிகளை புறமுதுகு காட்டி ஓட செய்வதுதான். இதில் மற்றவர்கள் லாபம் அடைந்தால் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. தமீழீழத்திற்கு அடுத்து ஒரு உதவி என்பது இந்த கூட்டணியை ஆட்சியில் இருந்து அக்ற்றினால் மட்டுமே முடியும்.

இந்த அளவு தமிழர்களில் எந்த ஒரு காலத்திலும் கொல்லப்பட்டிருக்கவில்லை. இவையனைத்தும் சோனியா, சிங், கருணாநிதியின் சம்மதத்துடனே நடைபெறுகிறது.

எப்படியாவது இந்த தேர்தலுக்கு முன் தமிழர்கள் அனைவரையும் கொன்று விட துடிக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்டுவோம்.

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தமிழர்களின் நிலை; நேரில் கண்டு வந்த ஸ்ரீரவிசங்கர் பேட்டி

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. இவ்வாறு வவுனியாவில் தங்க வைத்துள்ள இடம்பெயர் தமிழ் மக்களை பார்வையிட்ட வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களை பார்வையிட்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி, வீடு வாசல்களை இழந்து, ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 8 இலட்சம் தமிழர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன்.

நான் நேற்று முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் செட்டிகுளம், அருணாசலா உள்பட 8 முகாம்களை சென்று பார்வையிட்டேன்.

மனதை கல்லாக்கிக்கொண்டுதான் அங்கு செல்ல முடியும். மனிதனாக போகமுடியாது என்றுதான் சொல்லவேண்டும். இந்த முகாம்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். என்ஜினீயர்கள், டாக்டர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினர் அங்கு தங்கி உள்ளனர்.

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களுடன் பேசியபோது, இப்படியே விட்டுவிட்டால் அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த தமிழர்களுக்கு வேட்டி, சேலை போன்றவற்றை வழங்கினோம்.

முகாம்களில் தங்கி உள்ளவர்கள் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இராணுவத்தால் எந்த தொல்லையும் இல்லை என்று சொல்கிறார்கள்.

இந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று ரொம்ப நம்பினோம். கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம்.

தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத்துடன், இலங்கை பிரச்சினை தீராததற்கு இங்கும் சரி, அங்கும் சரி தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம் ஆகும்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு பந்த் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது.

பந்த் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது. உணவு, உடை என்று நிவாரண உதவிகளைப் பெறும் நிலையில் முகாம்களில் தங்கி இருந்தாலும், தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நான் பேசினேன். முகாம்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த வீடுகளுக்கு உடனடியாக செல்ல முடியாத அளவுக்கு வீடு, வாசல்கள் தரை மட்டமாகி உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க முடியாது என்று ராஜபக்சே தெரிவித்தார்.

தீவிரவாதத்தை வேரோடு அழித்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று ராஜபக்சே தெரிவித்தார். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து இருக்கலாம்.

நானே பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல முறை முயன்றேன். அதற்கு பலன் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.




ஆனாலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாதபடி நிலையில் உள்ளனர். தங்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

thanks http://www.tamilwin.org/view.php?2a36QVj4b3c99E234deSWnB0b02p7GQd4d3GYpD2e0d5ZLuSce04g2h92ccb1j0Q2e

இன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம்?

இந்திய அரசு மற்றும் கருணாநிதி ஒப்புதலுடன் ஒரு மாபெரும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மறைக்கவே இன்றைய பொது வேலை நிறுத்தம் கருணாநிதியால் நடத்தப்பட்டது. மக்களே இந்த சகுனியின் சதி வலையில் விழ வேண்டாம்.

சிறீலங்காப் படையினர் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. படை நடவடிக்கையினால் வன்னியில் பெருந் தொகையில் மக்கள் கொல்லப்படும் அச்சம் மேலோங்கியிருப்பதாகவும் அறிய முடிகிறது.

இப் படை நடவடிக்கைகளுக்கான பின்தள நகர்வுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன் முள்ளிவாய்கால் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையினரின் டோறா மற்றும் கூவர் பீரங்கிப் படகுகள் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா விவகாரம் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் இந்த வார இறுதிக்குள் பெரும் தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளிடம் இருக்கும் நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்கவே சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 22, 2009

இலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. வருடமாயிற்று. போன படை திரும்பவேயில்லை.

குமுதம் கேள்வி பதில் ஒரு குட்டிக் கதை சொல்லுங்களேன்.?
ஜி.வி.மனோ, கொலுவைநல்லூர்.

இந்தியத் தலைநகரிலிருந்து வௌிவரும் `வடக்கு வாசல்' இதழில் படித்த கதை இது.

அமெரிக்காவில் காட்டின் அருகில் அமைந்த ஒரு கிராமத் தில் புலி ஒன்றின் அட்டகாசம் இருந்தது. என்ன செய்தும் அந்தப் புலியைப் பிடிக்கமுடியவில்லை. அமெரிக்காவில் முப்படை களாலும் அந்தப் புலியைப் பிடிக்க முடியாத நிலையில் வேற்று நாடுகளிடம் அமெரிக்கா உதவி கோரியது. யு.கே., கனடா, ஃப்ரான்ஸ், ஜப்பான் ம்ஹூம்... யாராலும் முடியவில்லை.

"எங்களைக் கேட்கலியே. நாங்கள் எவ்வளவு புலிகளைப் பிடிக்கிறோம். இதைப் பிடிக்கமாட்டோமா?" என்று ஒரு குரல். யார்? இலங்கை அரசுதான்.
இலங்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. வருடமாயிற்று. போன படை திரும்பவேயில்லை.

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து இலங்கைப் படைகளை மீட்க காட்டுக்குள் சென்றன. நடுக்காட்டில் அவர்கள் கண்ட காட்சி...

ஒரு மான் தலைகீழாக நெருப்பின் மேல் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. கீழே இலங்கைப் படையினர் அந்த மானைக் குண்டாந் தடிகளால் தாக்கிக்கொண்டிருந்தனர். " ஒப்புக் கொள். ஒப்புக்கொள். நீதான் புலி''

உலகப் படையினர் அந்த அப்பாவி மானை விடுவித்து, " ஒரு வருடமாக இதையா கேட்டு உன்னை வதைத்தனர்?''

அதற்கு அந்த மான் . " பரவாயில்லைங்க. எனக்காவது ஒரு வருஷம்தான். ஆனா இலங்கையில 25 வருஷமா இதைத்தான் பண்றாங்க'' என்றது.

நன்றி : குமுதம்

இன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக்கு வழிகோலும்

மேலும் தனது சொத்து வளங்கள் பெருக வேண்டும் என்பதற்க்காக இன்று தமிழினத்தின் அழிவுக்கு துணை போகும் கருணாநிதி நாளையே தமிழினம் முழுவதையும் அழிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்.

மக்களே யோசியுங்கள் இன்று இவர் கொடுக்கும் 2000, 3000, 4000 ரூபாய்க்காக உங்களின் வாக்குகளை இவருக்கு அளித்தால் நாம் என்றுமே பிச்சை காரர்கள் ஆகப்போவது உறுதி. சிந்தித்து வாக்கு அளியுங்கள். இதே பணத்துக்காக உங்களை அழிக்கவும் தயங்க மாட்டார்கள்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நம்பிக்கை முழுவதும் இப்போது பணத்தில்தான், எப்பாடு பட்டாவது மக்கள் ஒவ்வொருவருக்கும் பணத்தினை கொடுத்து வாக்குகளை பெறுவது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடித்த 1 லட்சம் கோடியும் இப்போது இந்த தேர்தலில் இரைக்கப்படுகிறது.

நீலகிரி தொகுதியில் ஒரு வாக்குக்கு 10000 ரூ கொடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன. மதுரையில் 4000 ரூ வரை கொடுக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன.

ஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்!

அரசியல் கட்சிகளே இதுவரை கிளப்பாத முழக்கத்தோடு ஈழப் போராட்டத்தில் 'ரீ என்ட்ரி' ஆகியிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.
''இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத் துக்குள் விடமாட்டோம்!'' என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம்.

ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர்

பாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே மைக் பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள்.

இயக்குநர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். ''ஈழத்துக்காக நாங்கள் புதிதாகக் குரல்



கொடுக்கவில்லை. தமிழக அரசுத் தரப்பிலிருந்து எங்களைத் தொடர்புகொண்ட சிலர், 'ஈழப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக மத்திய அரசுக்கு பலவிதத்திலும் அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.



இந்த நேரத்தில் சினிமா உலகத்தினர் ஆவேசப்படுவதால் தீக்குளிப்புகளும் வன்முறைகளும்தான் நடக்குமே தவிர, உரிய பலன் கிடைக்காது. தயவுசெய்து அமைதியாக இருங்கள்...' என நயந்து சொன்னதால், அடுத்தகட்டப் போராட்டத்தைத் தள்ளி வைத்திருந்தோம்.

ஆனால், தமிழக அரசோ இறையாண்மைக்கு குந்தகமாகப் பேசாத போதும், சீமானின் பேச்சு காங்கிரசுக்கு எதிராக இருந்ததால்,வேண்டு மென்றே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவரை சிறையில் தள்ளியது. கடலூர் கோர்ட்டில் அவரைப் பார்க்கச் சென்ற இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி ஆகியவர்களை வேண்டுமென்றே ஒருநாள் சிறையில் வைத்தார்கள். இதையெல்லாம் சகித்துக் கொண்டோம்.

ஆனால், ஈழத்தில் இரண்டரை லட்சம் தமிழ் மக்களின் வாழ்க்கை முடியப் போகிற அபாயத்தில் இருந்தும், மத்திய-மாநில அரசுகள் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருப்பதைத்தான் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட, சினிமாத் துறையின் முக்கிய ஆட்கள் பலருக்கும் ஈழத் துயரங்களின் படங்களும் செய்திகளும் மெயிலில் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் இயக்குநர் பாரதிராஜாவோடு உணர்வாளர்கள் பலரும் கலந்து பேசி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் திரையுலகத்தினர் தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.

சோனியா தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகம் வரும் பட்சத்தில், எங்கள் எதிர்ப்பைக் கடுமையாக காட்டுவோம். அங்கே தமிழர்களையும், இங்கே தமிழர்களின் உணர்வுகளையும் கொன்றுவிட்டு, தமிழகத்துக்கு சோனியா வரக் கூடாது!'' என்றவர்கள் தொடர்ந்தனர்.

''கட்சி சார்பான திரைப் புள்ளிகள் மூலமாக எங்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளும் நடந்தது. அதை முறியடிக்கத்தான் 'தமிழ்த் திரையுலக தமிழ் ஈழ ஆதரவு உணர்வுக் குழு' என்ற பெயரில் தனி அமைப்பு தொடங்கியிருக்கிறோம். அதன் சார்பாக காங்கிரசுக்கு எதிராக இயக்குநர்கள் அமீர், சீமான் இருவரையும் தேர்தலில் போட்டியிட வைக்கவும் முடிவெடுத்திருக்கிறோம்.



ஈழப் போரைக் கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில், ராஜபக்ஷேவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், எங்களுக்கு மிகப் பெரிய சக்தி. பாரதிராஜா, சத்யராஜ், அமீர் போன்றோரின் வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த்தும் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள சம்மதித்திருக்கிறார்.



அதோடு, உண்ணாவிரதப் போராட்டத்தின்போது ரஜினி பேசிய பேச்சை கேஸட்டுகளாகப் போட்டு, எங்கள் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவோம். பெங்களூருவில் இருக்கும் ரஜினி மன்றங்கள் எல்லாம் ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராடிக் கொண்டிருக்க, இங்கேயுள்ள ரஜினி மன்றங்களும், விஜய், அஜீத் போன்ற மற்ற நடிகர்களின் மன்றங்களும் எங்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் என நம்புகிறோம். அஜீத்கூட தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஈழத் தமிழர் விவகாரத்துக்காக ரத்து செய் திருக்கிறார்!'' என்றனர்.

இயக்குநர்கள் இப்படிப் போராட... உதவி இயக்குநர்களும், 'தமிழ் ஈழ ஆதரவு உதவி இயக்குநர்கள் சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளுக்கும் போய்... காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனராம்.

நடிகர் சத்யராஜிடமும், 'சந்தன காடு' கௌதமனிடமும் இதுகுறித்துக் கேட்டோம்.

''திரைத்துறைக்கு எதற்கு வந்தோமோ அதனை நாங்கள் அடைந்து விட்டோம். இனி யாருக்காகவும் எங்களுடைய உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்கள் குரலுக்கு மதிப்பளித்து, ஈழத்து சோகங்களைத் தடுக்க காங்கிரஸ் உடனடியாகப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல், எங்களின் உணர்வுகளும் எதிர்ப்புகளும் எப்படி இருக்குமென்று எங்களுக்கே தெரியாது!'' எனச் சீறினார்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் பேசியபோது, ''உண்ணாவிரத அறப் போராட்டம் என்றெல்லாம் இனியும் எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள முடியாது. அகிம்சையில் பிறந்த காங்கிரஸ் கட்சி, இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையை வேடிக்கை பார்ப்பது சகிக்க முடியாத அவமானம்! எங்களின் போராட்டத்தை சோனியாவே தீர்மானிக்கட்டும்!'' எனக் காட்டம் காட்டினார்.

திரையுலகத் தரப்பு வேட்பாளர் எனச் சொல்லப்படும் இயக்குநர் அமீரிடம் பேசினோம். ''எங்கேயோ பிறந்த சோனியாவை அன்னையாக மதித்து, நாற்பது தொகுதிகளையும் அவருக்காக வாரிக் கொடுத்த தமிழகம்தான், இன்று ஈழப் படுகொலையை ஊக்குவிக்கும் காங்கிரஸ் மீது வயிறு எரிய சாபத்தைக் கொட்டுகிறது. தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தீர்வாக, சோனியா உடனடியாக ஈழப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தவேண்டும். அப்படி அவர் செய்தால், மொத்தத் திரையுலகமும் அவரைப் பாராட்டி விழா எடுக்கத் தயாராக இருக்கிறது. சாவின் விளிம்பில் நிற்கும் தமிழினத்துக்கு இப்போதுகூட உதவ முன்வராமல், காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்தால்... அதற்கான விளைவுகளை அவர்கள் இந்தத் தேர்தலில் அனுபவித்தே தீருவார்கள். பிரசாரம், போட்டி குறித்தெல்லாம் இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தமிழ்த் திரையுலக தமிழீழ ஆதரவு உணர்வுக் குழு என்ன முடிவெடுத்தாலும் சரி, அதற்கு நானும் சீமானும் கட்டுப்படுவோம்!'' என்றார்.

திரையுலக எதிர்ப்பு குறித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்க பாலுவிடம் கேட்டோம். ''காங்கிரஸின் எத்தகைய முடிவையும் மேலிடத்திடம் கலந்து பேசித்தான் சொல்ல முடியும்!'' என்றார் வழக்கமான காங்கிரஸ்குரலில்.

இதற்கிடையில் பி.ஜே.பி. தரப்பில் ரஜினியைத் தொடர்புகொண்ட சிலர், 'ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்து காங்கிரஸை வீழ்த்துங்கள்!' என சைலன்ட் அசைன்மென்ட் கொடுத்திருப்பதாகக் கிளம்பி இருக்கும் பேச்சும் காங்கிரஸை காய்ச்சலில் ஆழ்த்தி இருக்கிறது

- இரா.சரவணன், எம்.குணா
படம்: என்.விவேக்

நன்றி;விகடன்