Monday, April 27, 2009

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு? மீண்டும் கருணாநிதி மக்களை ஏமாற்ற முயற்சி

தமிழகத்தில் இன்று முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இது காலம் கடந்த முடிவு. இதனை ஒரு மாத்திற்கு முன்பே அவர் எடுத்திருந்தால் தமிழகத்தில் தீக்குளித்து இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.

முழுக்க நனைந்த பிறகு முக்காடு போட்டு என்ன பயன். அனைவரும் ஈழ பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்காகவே பயன் படுத்துகிறார்கள். தமிழக மக்கள்அனைத்தும் அறிந்து மவுனமாக இருப்பது எல்லாம் தேர்தலில் தெரிந்து விடும். ஆளும் கட்சி, எதிர்கட்சிகளின் இத்தனை போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் என எத்தனை முடிவுகள் எடுத்தாலும் மத்திய அரசு இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளையே தொடர்ந்து எடுத்து வருவது வேதனைக்குறியது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது என்றால் போரை நிறுத்தினால் தான் முடியும். அதைவிட்டு இந்தியா போரை நடத்துங்கள் தமிழர்கள் மீத படாமல் என இரட்டைவேடம் போடுகிறது.

இதை எழுதி முடிப்பதற்குள் அடுத்த செய்தி வருகிறது இதோ

இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர்

இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.

இந்திய அரசு இதுவரை போரை நிறுத்த வேண்டும் என்று கூறியது இல்லை.

இலங்கை அரசின் செய்தி இதுவே, இது போர் நிறுத்தம் அல்ல, என்ன ஒரு ஏமாற்று வேலை, என்ன சொல்கிறார்கள் என்றால் பெரிய் டாங்கியை வைத்து தமிழர்களை கொல்ல மாட்டோம், வெறும் துப்பாக்கிகளே கொல்வதற்கு போதுமானது என்று.

Karunanidhi cuts short fast


Tamil Nadu CM Karunanidhi called off his fast after it was reported that the Sri Lankan government has halted the use of heavy weapons and combat aircraft in its assault on the LTTE, Indian Media sources confirmed.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=47235

7 Comments:

நிலவு பாட்டு said...

/* கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
*/

என்னே அன்பு, இதுவல்லவா கொலைகார நடிப்பு கூட்டணி என்பது, வாழ்க உங்கள் நடிப்பு.

நிலவு பாட்டு said...

இலங்கை அரசின் செய்தி இதுவே, இது போர் நிறுத்தம் அல்ல, என்ன ஒரு ஏமாற்று வேலை

Karunanidhi cuts short fast


Tamil Nadu CM Karunanidhi called off his fast after it was reported that the Sri Lankan government has halted the use of heavy weapons and combat aircraft in its assault on the LTTE, Indian Media sources confirmed.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=47235

உளறுவாயன் said...

யார் குத்தினாலும் அது அரிசியாக வேண்டுமென்பது தான் ஈழத்தமிழனின் இன்றைய நிலை. அதனால் வெறும் வாய் மெல்வதை விட்டு விட்டு அந்த மக்களுக்கு நல்லது நடக்க யார் விரும்பினாலும் அல்லது செயல்ப்படுத்தினாலும் அவர்களை வணங்கி வாழ்த்துவோம். அறம் செய்ய விரும்பு என்று தான் தமிழ் கிழவியே சொல்லிச் சென்றிருக்கிறாள். எனவே விரும்புவதையே நமக்கு சாதகமாக்கிக் கொள்வோம்.

ஊர்சுற்றி said...

தாக்குதல் தொடர்கிறது...!!!

//Sri Lanka continues air strikes violating own announcement - Puleedevan
[TamilNet, Monday, 27 April 2009, 07:45 GMT]
Two Sri Lanka Air Force (SLAF) fighter bombers continued to bomb civilian targets in Mu'l'li-vaaykkaal after the announcement by the Sri Lankan forces that it would not deploy heavy weapons or carry out air attacks as pressure mounted from the International Community. LTTE's Director of Peace Seceratariat, S. Puleedevan, when contacted by TamilNet told that SLAF bombers were attacking civilian targets at Mu'l'li-vaaykkaal at 12:50 p.m. and again at 1:10 p.m. despite the announcement to cease such attacks. He blamed Colombo for "deceiving the International Community, including the people of Tamil Nadu," with the announcement.

The SLA was also continuing to fire shells into the civilian zone while engaging the troops to continue to mount ground operations at Valaignar-madam, he charged.//

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29193

நிலவு பாட்டு said...

இவர் ஓட்டு வேண்டுமென்பதற்காக தனி தமீழீழம் கிடைத்து விட்டது என்று கூட சொல்வார் போலுள்ளது. இவருக்கு தேவை விசயம் தெரியாதவனை ஏமாற்றி ஒரு 10 ஓட்டுகளாவது வாங்க வேண்டும்.

www.mdmkonline.com said...

http://www.mdmkonline.com/news/latest/fasting_of_karunanithi.html

உண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.

கருணாநிதி யின் துரோகங்கள் மாற்று நாடகங்களாக ஈழப்பிரச்சினை யை அவர் கையாள்கிறார்.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஈழபிரச்சினையில் உற்று பார்த்தல், எப்பெப்போலுதேல்லாம் அம்மையார் ஈழபிரச்சனையை பேசுகிறாரோ அப்பொழுது அவரின் பேச்சு அல்லது செய்திக்கு எதிராய் கருணாநிதியும் எதாவது ஒன்று எதாவது ஒன்று செய்வார்.

இதன் நோக்கம் அரசியல் பரப்புரை சமன் வேலை .


அவர் ஒன்று செய்கிறார் நான் ஒன்று செய்து விட்டேன் அவ்வளவுதான் .

* எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருக்கலாம் - ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்து .

* அரசை நடுதுபவரே உண்ணாவிரம் இருந்தால் . அந்த உண்ணாவிரதம் யாரின் பார்வைக்கு ? . மத்திய அரசின் பார்வைக்கு என்றால் இவரது திமுக கட்சியும் மத்திய அரசி ஒரு அங்கம் தானே ? பின் ஏன் இந்த உண்ணாவிரதம் சென்னையிலும் நெல்லையிலும் உள்ள தமிழர்களை நோகியா உண்ணாவிரதம்? அவர்கள் இலங்கை சென்று போரை நிருதுவார்கள அல்லது அவர்களால் முடியுமா?

ஒரு பக்கம் காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராய் வேலைபார்த்த மாணவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராய் பரப்புரை செய்த தோழர்களை கைது செய்தது கருணாநிதி அரசு . இங்கே செய்தியை பாருங்கள் ,
http://www.mdmkonline.com/news/latest/tamil_likes_arrested.html
http://www.mdmkonline.com/news/latest/29703007298029903021298629922980302129803007299330212965.html

* மறுநாளே தாம் உண்ணாவிரதம என்கிறார் . எதை நம்புவது அல்லது அவரின் உண்மையான நோக்கம் என்ன .? தமிழர்கள் இழிச்சவாயர்கள ?

இந்த செய்தியை பாருங்கள் ,
http://www.mdmkonline.com/article/avoid_congress__dmk/pc_and_srilanka_minister_in_same_statement.html

* இன்னும் இரண்டு நாளில் போரை முடிவுக்கு கொண்டுவருவதென்று கருணாநிதி , சிதம்பரம் , மன்மோகன் சிங்க் , ராஜ p அக்ஷே ஆகியோர் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்கள் . எனென்றால் போரை நடத்துவது இந்த கூட்டணிதான் .

அவர்களின் நாடக இருதிகட்டம்தான் இந்த உண்ணாவிரதம் என்று என்ன தோன்றுகிறது .

* அடுத்து இந்த செய்தியும் கருணாநிதியின் தூக்கத்தை கெடுத்து விட்டது .
http://www.mdmkonline.com/news/latest/295129942969302129653016_29703014298530212993301529853021.html

* எனென்றால் விடுதலைபுலிகளை சர்வாதிகாரிகள் மற்றும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற தோரணையில் கருணாநிதியின் பேச்சு இருந்தது .
இந்த செய்தியையும் பாருங்கள்


* நான் சொல்வதை மத்திய அரசு கேட்கவில்லை என்று கருணாநிதி சொன்னால் அது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்குகளில் ஒன்றாகும் . ஏனென்றால் மத்திய அல்லது மாநில அரசாங்கம் நல்ல புரிதலில் உள்ளது . இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டுகொடுதுகொண்டிருக்கின்றன , இந்த இரு அரசாங்கம் இணைந்து மூன்றாவதாய் இலங்கை அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து போரை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அதுவே உண்மை .

* நேற்று அமெரிக்கன் அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுதுவிட்டது
* அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த நிர்பந்தம் கொடுத்துவிட்டது . இதனால் போரை நடத்தும் இந்தியாவிற்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது என்பதைவிட பெரும் அவமானமும் ஆகிவிட்டது .

* போரை நாம்தான் நடுதுகிறோம் என்பதை உலகம் பகிரங்கமாய் உணரதொடங்கிவிட்டது . இந்த நிலைமையில் இந்த ஈழ போர் விஷயத்தை அப்படியே பூசி மொழுகி அமுக்கவேண்டும் .

* ஆகவே இன்னும் நிச்சயம் போர் இரண்டு நாளில் நிற்கும் . அதற்குள் தமிழர்கள் குறைத்து பத்தாயிரம் பேர்களை கொள்ளுவார்கள் . அதற்குத்தான் இலங்கை அனுமதி கேட்டுள்ளது இந்தியாவிடம் .

* இடையில் இங்கே இந்தியாவில் கருணாநிதி , மன்மோகன் , சிதம்பரம் சோனியா கூட்டணியின் நாடகம் . தேர்தலுக்காக .

* ஒரே ஒரு சந்தோசம் , இன்னும் சிறுது நாளில் ( இரண்டொரு நாளில் ) இலங்கையும் போர் நிறத்த செய்தியை அறிவிக்கும் என்பதுதான் அது எஅர்கனவே முடிவானதுதான் .


* வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் . வெல்க அவர்களது கூட்டணியின் ஈழப்பற்று .

http://www.mdmkonline.com/news/latest/india_directly_supporting_sla.html


- தோழர் .

வெ. ஜெயகணபதி said...

/ * இவர் ஓட்டு வேண்டுமென்பதற்காக தனி தமீழீழம் கிடைத்து விட்டது என்று கூட சொல்வார் போலுள்ளது. இவருக்கு தேவை விசயம் தெரியாதவனை ஏமாற்றி ஒரு 10 ஓட்டுகளாவது வாங்க வேண்டும். */

இந்தஅவசியம் அவருக்கு இல்ல.. உனக்கோ இல்ல வைகோ வுக்கோ இல்ல உங்க புது தலைவி அம்மா தி மு க தலைவி பினாமி கட்சி தலைவிக்கோ இருக்கலாம்...