கடந்த இடைதேர்தலில் திருமங்கலத்தில் கண்ட ருசியை இப்போது தமிழக அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்த முனைகிறது. அதனால்தான் வேட்பாளர் தேர்வில் முதல் கேள்வியாக எவ்வளவு பணம் செவழிக்க முடியும் என்பது.
ஜனநாயகத்திலிருந்து மாறி பணநாயகத்திற்கு தனது பாதையினை மாற்றுகிறது. இதில் ஒரு பகுதியாக 1,00,000 கோடி ஸ்பெக்ட்ரம் பணம் இறைக்கப்படுகிறது. மதுரையில் அழகிரி, ராமநாதபுரத்தில் ரீத்திஸ், நீலகிரியில் ராஜா ஆகியோர் இறக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஒரு குடும்பத்தில் பெண் ஒருவருக்கு ஒரு மோதிரமும் அன்பாக கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. கொடுக்கப்படுவது திமுக, அதிமுக கட்சியினர் அல்லாதவர்களுக்கே. இவர்களின் ஓட்டுகளே திருப்பு முனையாக இருக்கும் என நம்புகிறார்கள்.
Monday, April 13, 2009
திமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது
Posted by நிலவு பாட்டு at 10:19:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
அழகிரி 3000 லிருந்து 2000 மாக குறைத்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது. இது சட்டமன்ற தேர்தல் போல் இல்லையாம் நிறைய மக்களை இருக்கிறார்களாம்.
Reel News!
இல்லை உண்மைதான் என்னுடைய நண்பன் ஒருவன் குடும்பத்திற்கு 8000 கிடைத்துள்ளது மற்றும் ஒரு மோதிரமும் கிடைத்துள்ளது. வேண்டுமானால் ஏரியா பெயரை என்னால் தரமுடியும்
Post a Comment