கருணாநிதியும் சுவிடனிடம் மான பிச்சை எடுக்கலாம், இதுதாண்டா மானம் தன் இனம் ஒரு விசா நிராகரிப்புக்கே ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. நீயோ அங்கு நம் இனம் ஆயிரகணக்கில் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவதை கூட நினைத்து பார்க்காமல் கும்மி அடித்து கொண்டு இருக்கிறாய் நான்கைந்து ஜால்ராக்களை கூட வைத்து கொண்டு, இவனுங்க உன்னை அழிக்க வந்தவன் என்று தெரியாதா உனக்கு, நீ தந்தி அடிச்சா தலையங்கத்தில எழுதறான் ஒரு பகுத்தறிவு செம்மல். தந்தியடிப்பது உன்னுடைய பொழுது போக்கு என்று தெரிந்தும் அதை தலையங்கமாக எழுத ஆற்றல் வேண்டும். தடுக்கி விழுந்தால் உண்ணாவிரதம் என்று அறிவிக்க ஒரு கூட்டம். காலை, மதிய சாப்பாடுக்கு இடையில் உள்ள கேப்பில் உன் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டாய். நிமிடத்து ஒரு முறை மாற்றி மாற்றி பேசுகிறாய் மன்னிக்கவும் உளறுகிறாய். உன் கையலாக தனத்தை பெருமையாக கூறிகொள்கிறாய். இதற்காகவா உனக்கு தலைமை கொடுத்தோம். ஏதோ அது உன் சொந்த பதவி போல் பேசுகிறாய். யாரால் தேர்ந்தெடுக்கப்பட்டாயோ அவர்களையே மறந்தாய், கொன்றாய்.
---
சுவீடன் தனது இலங்கைக்கான தூதுவரைத் திருப்பியழைத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நாளை கொழும்பு செல்வதற்காக ஏற்கெனவே திட்டமிட்டிருந்த போதும் இலங்கை அரசாங்கம், சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு அனுமதியை வழங்க மறுத்திருப்பால் ஏற்பட்ட இராஜதந்திர முறுகலை அடுத்தே சுவீடன் இந்நடவடிக்கையை எடுத்தள்ளதாகத் தெரிய வருகிறது.
சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை செல்வதற்கான விண்ணப்பம் ஒன்றை சுவீடன் வெளிவிகார அமைச்சு சுவீடனில் உள்ள இலங்கையின் தூதரகத்தில் கையளித்திருந்ததாகவும், அதனை தூதரக அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும் அனால் இப்போது இவ்வாறான விண்ணப்பம் எதுவும் கிடைக்கவில்லை எனக்கூறி இலங்கை அரசாங்கம் சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை நிராகரித்திருப்பது கவலையளிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம் பெயர்ந்தள்ள மக்களைச் சந்தித்து அவர்களது நிலவரங்களை அறிந்து கொள்வதற்காகவே சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை செல்லவிருந்ததாகவும், இலங்கை அரசாங்கத்தின் நிராகரிப்பு வியப்பளிக்கிறது என்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே இலங்கைக்கான சுவீடன் தூதுவரை திருப்பியழைக்க முடிவு செய்தள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் சுவீடன் தனது இலங்கைக்கான தூதுவரைத் திருப்பியழைக்கவில்லை என்றும் அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே தூதுவரை அழைத்துள்ளதாகவும் இன்னொரு செய்தி குறிப்பிட்டுள்ளது.
Tuesday, April 28, 2009
மானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா
Posted by நிலவு பாட்டு at 6:57:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
மான ரோசம் உள்ளவர்கள் விலக்கி கொண்டார்கள்........மற்ற நாடுகளுக்கும் இது விளங்க வேண்டும்
welldne sweden activity for against srilankan animals
by
PRABAKARAN.R
prabharajbe@ymail.com
Post a Comment