Sunday, April 19, 2009

முல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற்கும், காங்கிரஸிற்கும்

ஈழத் தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமான சிங்கள ராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்துவரும் சோனியாவை சொக்கத் தங்கம் என்கிறார்; கலைஞர் கருணாநிதி.

சோனியா ஆட்சி அமைக்க தமிழர்களின் வாக்குகளைக் கேட்கிறார்;

முல்லைத் தீவில் - ஒவ்வொரு நாளும் மரண ஓலங்கள்;

கொத்து கொத்தாய் செத்து மடியும் தமிழர்கள்;


உணவு இல்லை; மருந்து இல்லை; சிகிச்சை இன்றி - குண்டுவீச்சில் கைகால்களை இழந்தவர்கள் துடிதுடித்துச் சாவும் அவலங்கள்;


இந்த கொடுமைகளுக்கு, இன அழித்தலுக்கு சிங்கள அரசுக்கு நிதியுதவியும், ஆயுத உதவியும், போர் பயிற்சியும் தரும் சோனியாவின் காங்கிரசு மீண்டும் பதவிக்கு வரவேண்டுமா?

தமிழக ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு, கைது செய்வதையும், படகுகளை தாக்குவதையும், மீனவர் வாழ்வாதார உரிமைகளை நசுக்குவதையும், தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் - சிங்கள கப்பல் படைக்கு இந்தியா ஆயுத உதவி செய்யலாமா? இது பற்றி கவலைப்படாத சோனியாவின் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வரலாமா?

தமிழர்களே! தமிழர்களே!

காங்கிரஸ் பகையையும் அதற்கு துணைப்போகும் தி.மு.க. துரோகத்தையும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்து பாடம் புகட்டுவீர்!

2 Comments:

Anonymous said...

Dear நிலவு பாட்டு

Please publish this link ...


http://www.pathivu.com/news/1379/54/.aspx

நிலவு பாட்டு said...

நன்றி நண்பரே, தகவலுக்கு நன்றி. இப்போது பிரசுரிக்கப்பட்டுள்ளது.

http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_8611.html