Sunday, April 26, 2009

மக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செய்தால் தே.பா பாயும்

இதுதான் ஜனநாயக நாடு, இங்கு கருங்காலிகள் ஆட்டம்தான் நடைபெறும். நாம் எல்லாம் அதை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும். எதிர்த்தால் நமக்கும் அதே தே.பா தான். போங்கடா பொறுக்கி கருங்காலிகளா.

மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்ட 13 தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழக காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

ஆலங்குடிப் பகுதியில் வைத்து இவர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இக் கைதுச்சம்பவம் நடைபெற்றதாகவும், இக்கைதின்போது இவர்களிடமிருந்த துண்டுப்பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இகைப்ப படம் பிடிக்க முயன்ற பத்திரிகை நிருபர்கள் தடுக்கப்பட்டதாவும், மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களைக் கைது செய்ய முயன்ற பொலிசாரிடம் என்ன வகையில் கைது செய்கின்றீர்கள் எனக் கேட்டபோது, இந்திய சட்ட அமைப்பின், 188, 147, 153(a), 504, 505 பிரிவுகளுக்கமைவாகவே இக் கைது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அறியவருகிறது.


இவர்களிடமிருந்து பறிமுதல் செய்த துண்டுப் பிரசுரத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரசை தோற்கடிப்போம்! பா.சிதம்பரத்தை தோற்கடிப்போம்!

காங்கிரசை ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இராஜபக்சேயின் இனபடுகொலைக்கு முழு ஆதரவு வழங்கக்கூடிய கட்சியாக காங்கிரசு முன் நிற்கிறது. இராஜீவ் காந்தியின் மரனத்திற்கு ஈழத்தமிழர்களின் உயிரை பலி கேட்கிறது. ஈழத்தில் ஒரு தமிழினக் குழந்தை கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று யுத்தம் நடத்தும் இராசபக்சேயின் சிங்கள வெறித்தனதிற்கு சற்றும் குறைந்தது அல்ல காங்கிரசின் பலிவாங்கும் வெறித்தனம்.
சிங்கள ரானுவத்திற்கான யுத்த ஆயுதங்கள், யுத்த பயிற்சிக்கு இடவசதி, யுத்த பயிற்சி, பணவசதி என்று காங்கிரசு அரசு செய்யும் கயவாளிதனத்தனங்கள் எனற்றவை. உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்களும், கண்டன குரல்களும் எழ்ந்தவன்னம் இருக்கிறது. தமிழகத்தில் முத்துகுமார் முத்லாக பல தோழர்கள் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன என்று காங்கிரசு மட்டும் தமிழினபடுகொலைக்கு தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. நம் விரலை கொண்டு நம் கண்ணையே குத்துகிற காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் நாம் என்ன செய்யமுடியும்? தோற்கடிக்கமுடியும். ஆம், நம்மால் முடியும். இந்த தேர்தலில் காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் தோற்கடிக்க மாணவர்கள் சட்டவல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், திரைதுரையினர் என்று நாடு தழுவிய அளவில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

எங்களோடு நீங்களும் இணைந்திடுங்கள்.

உங்களால் முடியும் !

பா.சிதம்பரத்தை தோற்கடிப்பதற்கான பணிகளில் முழுநேரத் தோழராக பணியாற்றலாம்.

குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணியாற்றலாம்.

பிரச்சாரத்திற்கான பொருட்கள் வழங்கலாம். (குறுந்தகடுகள், துண்டரிக்கைகள், சுவரொட்டிகள்)

பணிபுரியும் தோழர்களின் உணவு, போக்குவரத்து, இடவசதிக்கான செலவினங்களுக்கு உதவலாம்.

தமிழீழ படுகொலைகள் குறித்த ஆவணங்களை, பா.சிதம்பரம் பற்றிய தகவல்களை எங்களுக்கு அளிக்கலாம்.

இந்த துண்டரிக்கையை உங்கள் நன்பர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மேற்கண்டவற்றில் எது உங்களால் முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். இந்திய அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் பணியில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு உறுதிபடுத்துங்கள்.

பா.சிதம்பரத்தை ஏன்?

காங்கிரசின் தமிழ்நாட்டுத் தூண், பொருளாதாரப்புலி என்றெல்லாம் புகழப்படும் பா.சிதம்பரத்தின், பட்ஜெட்டால், 10,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு பண முதலைகளுக்கும் பல்லிளிக்கும் பா.சிதம்பரம் இந்த தேசத்தின் முக்கிய தேவைகளான இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கான் நிதியை குறைப்பது எதற்காக? அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கூட்டுவதற்கு எதற்காக? இவற்றிலிருந்து சுருட்டபட்ட நிதிமூலதானத்தின் ஒரு பங்கு ஈழதமிழ் மக்களை கொல்வதற்காக பயன்படுகிறது.
நமது வரிபணத்தில் நம் மக்கள் கொல்லும் பா.சிதம்பரத்தை தேர்தலில் தோற்கடிப்போம்.

0 Comments: