Monday, April 20, 2009

லண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம் : காணொளி

http://news.bbc.co.uk/1/hi/england/8009150.stm

http://news.bbc.co.uk/1/hi/uk/8008270.stm

பிரித்தானியாவில் கடந்த 14 நாட்களாக தமிழ் மக்களால் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட திரைமறைவு முயற்சிகளை முறியடிக்கும் நோக்கில் இன்று அதிகாலை தொடக்கம் பிரித்தானிய நாடாளுமன்ற வீதியையும் நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள சதுக்கத்தையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கூடியவேளையில் இடம்பெற்ற முற்றுகையின்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களால் நாடாளுமன்ற முன்பாக உள்ள சதுக்கத்தைச் சுற்றி போடப்பட்டுள்ள கம்பிவேலிகள் உடைத்து எறியப்பட்டதுடன் சதுக்கத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நுழைந்துள்ளனர்.

கடந்த 11 ஆம் நாள் தொடக்கம் மேற்படி சதுக்கத்தினுள் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாத வகையில் சதுக்கத்தைச் சுற்றி கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






அத்துடன் 14 ஆவது நாளாக சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை முன்னெடுக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரனை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளிலும் காவல்துறையினர் இறங்கியிருந்தனர்.

இந்நிலையிலேயே நாடாளுமன்றத்துக்கு முன்பாக இன்று அதிகாலை தொடக்கம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் திரண்டனர்.

இலங்கையில் போரை உடனடியாக நிறுத்துமாறு அவர்கள் உரக்க முழக்கமிட்டுள்ளதுடன் குறிப்பாக இன்று காலை மக்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் சிறிலங்கா படையினர் புகுந்து 1,000-க்கும் அதிகமான மக்களின் உயிர்களை கோரப் பலி எடுத்தமையைக் கண்டித்த வண்ணமும் உள்ளனர்.

பிரித்தானிய அரசாங்கமும் அனைத்துலக சமூகமும் உடன் தலையிட்டு போரை இத்துடன் நிறுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையிலான முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர்களால் பெருமளவில் எழுப்பப்பட்டு வருகின்றன.






ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை அங்கிருந்து அகற்ற பிரித்தானிய காவல்துறை முயற்சித்தபோதும் காவல்துறையினரின் எதிர்ப்புக்களையும் மீறுவதாக அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.

மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இருந்துள்ளதுடன் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு எதிராகவும் கிளர்ந்து எழுந்தனர்.

இதனால், காவல்துறையினர் அவர்களை எதுவும் செய்யமுடியாது அந்த இடத்திலேயே அவர்களை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இடமளித்துள்ளனர்.






பிரித்தானிய நாடாளுமன்ற அமர்வு முடிந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இன்று மாலை அங்கிருந்து வெளியேறும்போது இந்தப் போராட்டத்தினை மேலும் தீவிரப்படுத்தும் முயற்சியில் ஏற்பாட்டாளர்கள் இறங்கியுள்ளனர்.

அத்துடன், இந்தப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முயற்சியில் தமிழ்மக்கள் அப்பகுதிக்கு மேலும் சென்றவண்ணம் உள்ளனர்.

அதேநேரம் 14 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடரும் சுப்பிரமணியம் பரமேஸ்வரனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றபோதும் அவர் தனது கோரிக்கைகளில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குளிர்கால விடுமுறை முடிந்து கடந்த மூன்று மாதங்களுக்குப்பின்னர் நாடாளுமன்றம் இன்று கூடியநிலையில் இடம்பெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தை உள்ளுர் மற்றும் அனைத்துலக ஊடகங்கள் முக்கிய கவனம் எடுத்து பதிவு செய்து வருகின்றன.

4 Comments:

Kajan said...

அன்பின் உறவுகளே,
தயவுசெய்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வன்முறைகள் இறங்க வேண்டாம். உங்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அகிம்சைவழியில் மட்டும் போராடுங்கள்.

சுயகட்டுப்பாட்டுடன் அகிம்சைவழியில் மட்டும் போராடுங்கள். வன்முறை போராட்ட நோக்கங்களையே நகைப்புகிடமாக்கிறது. பரமேஸ்வரன் போன்றோரின் உண்ணாவிரத போரடங்களையே பயனற்றதக்கிவிடும்.

Anonymous said...

இவர்களுக்கு தமிழ் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்ததால், நேற்று 35,000 மக்கள் பாதுகாப்பாக யுத்தப் பிரதேசத்தை விட்டு வந்துள்ளதை வரவேற்று அறிக்கை விட்டிருக்க வேண்டும். அந்த மக்கள் கொல்லப்பட்டுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாடுகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனில் என்ன நடக்கிறது? இவர்களது ஆர்ப்பாட்டங்கள் ஈழத் தமிழ் மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் எதிராக இருக்கின்றன. ஈழத்தில் இருக்கும் தமிழனும், சர்வதேச நாடுகளும் இனிமேலும் இவர்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள். ௦௦௦ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் சட்டங்களை மதிப்பதும் இல்லை. வன்முறையில் இறங்கியதற்காக பாரிசில் 200 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை தடைசெய்ய முற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் அடித்தும் அப்புறப்படுத்தினர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்கூட்டர் ஒன்றுக்கு நெருப்பு வைத்ததாகவும் 3 பஸ்களினதும் இரு கார்களினதும் ஒரு லொறியினதும் முகப்புக் கண்ணாடிகளை உடைத்ததாகவும் ஏப்பி செய்தியாளர் பிரான்ஸ் 24 செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்து உள்ளார். பொலிசார் மீதும் குப்பைகளும் போத்தல்களும் எறியப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 210 பேரை கைது செய்ததாக பிரெஞ் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
http://thesamnet.co.uk/?p=10361

Anonymous said...

http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_20.html

முப்பதாயிரம் மக்களை மீட்டதாக எடிட் செய்த வீடியோ - இலங்கை அரசின் பொய் பிரச்சாரம்

Anonymous said...

/* அன்பின் உறவுகளே,
தயவுசெய்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வன்முறைகள் இறங்க வேண்டாம். உங்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அகிம்சைவழியில் மட்டும் போராடுங்கள். */

உண்மைதான் ஆனால் வேறு வழியில்லை இன்று, நாம் தெருவில் இறங்கி போராட விட்டால் நம் இனம் முழிவதும் அழிந்து விடும்