உலகத்தமிழர் செய்தி விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட டைரக்டர் சீமான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் விடுதலை ஆகிறார்.
சினிமா டைரக்டர் சீமான் பெப்ரவரி மாதம் புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார். அவர் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
17-2-09 அன்று நெல்லையில் நடந்த கூட்டத்திலும், இலங்கை தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசினார். இதில் அவர் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டார்.
நெல்லை கலெக்டர் பரிந்துரையின்பேரில், சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவர் 1 வருடம் ஜெயிலில் இருக்கும் நிலை ஏற்பட்டது.
இதை எதிர்த்து டைரக்டர் சீமானின் தம்பி பீட்டர் ஜேம்ஸ் சென்னை உயர்நீதிமன்றில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட முகாந்திரம் இல்லை. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதற்கிடையே தேசிய பாதுகாப்பு வாரியத்திடமும் முறையீடு செய்யப்பட்டது. அங்கும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி சீமான் கைது செய்யப்பட்டதற்காக, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சீமானை விடுதலை செய்யக்கோரி அவரது தம்பி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தர்மராவ், செல்வம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தவறு என்றும் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
என்றாலும், புதுச்சேரி பொலிஸார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் சீமான் விடுதலை ஆவதில் சிக்கல் உள்ளது.
புதுச்சேரியில் சீமான் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற முடியும். எனவே ஒன்றிரண்டு நாட்களில் அவர் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Friday, April 17, 2009
டைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு
Posted by நிலவு பாட்டு at 6:12:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
தமிழின துரோகி கருணாநிதிக்கு விழுந்த மரண அடி. இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் இந்த கொலைகார கூட்டணியை அடக்க சிங்கம் வெளிவந்து விட்டது.
'இந்திய இறையாண்மை' கிலோ என்ன விலை?
எந்த கடையில் கிடைக்கும்?
வரும் செவ்வாய் திரைப்பட கலைஞர்கள் உண்ணாவிரதம் ---
இது சீமானின் வெற்றி ........எப்படியும் தேர்தல் வரை தொடரும் போராட்டம்.........
இது உறுதி...
அப்படியே தேர்தல் மாற்றமும் உறுதி...............
தமிழின துரோகி கருணாநிதிக்கு விழுந்த மரண அடி
தமிழின துரோகி கருணாநிதிக்கு விழுந்த மரண அடி
தமிழின துரோகி கருணாநிதிக்கு விழுந்த மரண அடி
Post a Comment