பிரித்தானியாவில் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் என்ற மாணவனினால் 25-வது நாளாக முன்னெடுக்கப்பட்ட பட்டினிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மதியம் முடிவுக்கு வந்துள்ளது.
பிரிந்தானிய அரசாங்கம் வழங்கிய சில வெளியிடப்பட முடியாது உறுதி மொழிகளை அடுத்தே இவரது பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வருவதாக சுப்பிரமணியம் பரமேஸ்மரனினால் விடுக்கப்பட்ட ஊடகச் செவ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழ் ஊடங்களுக்கு ஐரோப்பிய நேரம் 13:20 மணிக்கு வழங்கிய ஊடகச் செவ்வியில்:
எங்களுக்கு சில நிர்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் சில விடயங்களை கூறமுடியாது உள்ளது. எனினும் எமது மக்களுக்கு சில விடங்களை தெரியப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.
பட்டினிப் போராட்டத்தைத் தொடர்வதன் ஊடாக எமக்கு கிடைத்த சில சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போகின்றன. அந்த வகையில் இரண்டு மூன்று முக்கிய சந்தப்பங்கள் இப்போது கிடைத்துள்ளன.
பட்டினிப் போராட்டத்தை கைவிடுவதன் ஊடாகவே இச் சந்தப்பங்களைப் பயன்படுத்தலாம் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்டுள்ள சில நிர்பந்தங்களால் அவற்றை வெளிப்டையாகக் கூறமுடியாது உள்ளது.
எனினும் எமது மக்களுக்கு அவற்றைத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். பிரித்தானியாவில் இரண்டு அல்லது மூன்று உயர் முக்கிய சந்திப்புக்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதுவும் பட்டினிப் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே இச்சந்திப்புக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என உத்தவாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தாது போனால் தீர்வுகளும் கிடைக்காமல் போய்விடும். எமக்கான தீர்வினை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்காக சில காலம் பொறுத்திருக்க வேண்டும். சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
இன்னும் சிறுதி காலத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் தெரியப்படுத்துவோம். அது எமது தலையாய கடமை என்பதைக் கூறி எனது பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்கின்றேன் என பரமேஸ்வரன் ஊடகச் செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் பிரிந்தானிய மருத்துவக்குழு ஒன்று பரமேஸ்வரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றது. அத்துடன் பிரித்தானிய பாராளுமன்றக் கட்டிடத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மாணவர் பிரித்தானிய சமூதாயம் அறிவித்துள்ளது.
Thursday, April 30, 2009
பரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முடியாத உறுதிமொழிகளைத்(non disclousure agreement) தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது
Posted by நிலவு பாட்டு at 6:31:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment