Saturday, April 25, 2009

தமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபரம்..

1. வாசன் குருப் - பாபநாசம் பண்ணையார் சொத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்... இந்த பண்ணையாரின் அடிபொடிகள்... சுதர்சனம், ராணி, டாக்டர் ஜெயகுமார், பழனியாண்டி... காங்கிரசில் இருக்கும் கோஷ்டிகளில் பலம் பெற்றது... இந்த பண்ணையார் கோஷ்டிதான்...யார் டெல்லி மேலிடத்தில் இருந்து வந்தாலும் சந்திப்பது இந்த கோஷ்டியைத்தான்..

2. கிருஷ்ணசாமி குருப் - இவரது கோஷ்டியில் இவரும் கள்ளு குடித்தால் உடம்புக்கு நல்லது என்ற பேமானி பேச்சு இவரது மகன் விஷ்னுபிரசாத் மட்டும்தான்... துணைக்கு மருமகன் அன்புமணி, ஒவ்வோரு தேர்தலிலும் குரங்குக்கு சவால் விடும் மருத்துவர் ராமதாஸ்

3. இளங்கோவன் குருப் - இவரது கோஷ்டியிலும் இவரும் இவரது மகன் திருமகன் மட்டும்தான் இருப்பார்கள். தமிழர்களுக்கு எதிரான இவரது சேவை தொடர்ந்து கொண்டே உள்ளது!

4. குமரி அனந்தன் - இவர் தனி'பனை'மரம்...பனைவாரிய தலைவர் இங்கு இனிமேல் குப்பை கொட்ட முடியாது என்று இவர் மகளை பாஜகவிற்கு அனுப்பி விட்டார்... அங்கு அவர் மகள் தமிழிசை மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு சென்று வருகிறார்...

5. செல்லகுமார் - இவரும் தனிமரம்...

6. மணிசங்கரய்யர் - இவரது கோஷ்டியில் இவரும்... இவரது கைத்தடியான ராஜ்குமார் மாயவரம் எம்.எல்.ஏ.வும்தான்... இவருக்கு ஓட்டு போட மட்டும்தான் மயிலாடுதுறை தொகுதி மக்கள் தேவை... இவருக்கு வேண்டியவர் சிங்கள தலைவர் ராஜபக்சே... வேண்டியவர்கள் சிங்கள மக்கள்... ராஜ பக்சே இவரது வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு சாந்தி முகூர்த்தம் வரை எல்லா வேலைகளையும் செவ்வனே செய்துவிட்டுதான் கொழும்பு சென்றார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..கூடுதல் தகுதி 'ஐயர்'....

7. சிதம்பரம் - இவரது கோஷ்டியில் இவர்... இவரது ம்கன் கார்த்தி. ராகுல் காந்தி மூலமாக இளைஞர் அணி தலைவராக அடி போடுவதாக பேச்சு உலவுகிறது.. மற்றும் கைத்தடி காரைக்குடி எம்.எல்.ஏ. சுந்தரம்...

8. கிருஷ்ணசாமி வாண்டையார் - இவர் தஞ்சை காங்கிரஸின் குறுநில மன்னர்... கள்ளர் சாதிக்காரர்களின் இளவல் - பாபநாசம் பண்ணையார் மூப்பனார்களுக்கு பரம எதிரி - துணை அதிமுகவில் உள்ள 40 நாள் மந்திரியாக இருந்த இவரது சித்தப்பா அய்யாறு வாண்டையார்...

9. வசந்தக்குமார் - சோனியாவிற்கு நெருக்கமானவர் இந்தியாவின் நம்பர் ஒன் ஏஜெண்ட்... பொருட்களுக்கு... தனிமரம்...

10. ஜெயந்தி நடராஜன் - தனிமரம்... காசு கொடுத்து தனக்கு தானே போஸ்டர் அடித்து கொள்வார்...

11. டி.யசோதா - திருபெரும்புதூர் எம்.எல்.ஏ. - சொந்த கட்சியை விட ஜெவுக்கு விசுவாசம் அதிகம்...துணைக்கு போளூர் எம்.எல்.ஏ வரதன்

12. ஆர்.பிரபு - தனிமரம்... நீலகிரியின் ரோஜா என ஊட்டியில் போஸ்டர் அடித்துக் கொள்வார்...

13. பிட்டர் அல்போன்ஸ் - தனிமரம் - காங்கிரஸிலே கொஞ்சம் பேச தெரிந்த நாகரீகமானவர்... சில ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் இவரை... வாசன் குருப் நைய புடைத்த போது கேட்க ஆளில்லை... சட்ட மன்றத்தில் ஜெவை குறை கூறியதற்கு... 1995இல் தாமரைகனியால் தாக்கப் பட்டார்... நிறைய அடிவாங்கியவர்.... காங்கிரஸ் என்றாலே என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிடாங்க என்று வடிவேல் போல அடிவாங்குபவர் என நிரூபிப்பவர்...

14. வேலூர் ஞானசேகரன் கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா..என சிங்கள தூதர் அம்சாவினால் பாராட்ட பெற்றவர்..மேலும் அவர் கொடுக்கும் விருந்தில் அவ்வப்போது கலந்து கொண்டு சிறப்பிப்பவர்..துணைக்கு சித்தன்..ராமநாதபுரம் எம்.எல் ஏ அன்சாரி..இதில் அன்சாரி ராமேசுவரத்திற்கு உயிரை பணையம் வைத்து வந்த ஈழ தமிழர்களிடம் "உங்களுக்கு அங்க என்ன பிரச்சனை?இங்கு வந்து ஏன் தொல்லை பண்ணுகிறீர்கள் திரும்பி போங்கள் என கத்திய பெருமைக்குரியவர்.. தற்போது இந்த கோஷ்டி இலங்கையில் போரை நிறுத்த வேண்டாம் தொடரவேண்டும் பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறபடுகிறது

15. திருநெல்வேலி எம்.பி. ஆதித்தன் - சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால்... கோஷ்டி தெரியவில்லை...

16. அன்பரசு - இவரது கோஷ்டியில் இவரும்... இவர் மகன் சோளிங்கர் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு... ஜெவின் உண்மை தொண்டர்... சிறப்பு தகுதி... சிங்களர்களிடம் இருந்து... விஜயரத்னே விருது பொறுக்கி வந்த பொறுக்கி...

17. வாழ்ப்பாடி ராமமூர்த்தி மகன் சுகந்தன் - இவர் பாஜ்கவில் இருந்து தாவி வந்தவர்... அவ்வப்போது குரங்கு போல் தாவி கொண்டிருப்பார்...

18. எஸ்.ஜி.வினாயகமூர்த்தி - முன்னாள் எம்.எல்.ஏ. எழில் காத்த நாயகியே என ஜெவை புகழ்ந்தவர்...

19. சுதர்சன நாச்சியப்பன் - இவரும் தனி மரம்... தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி கொள்வார்...

20. தங்கபாலு - 1960 களிலேயே வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி மோசடி செய்த பேர்வழி... அமெரிக்காவில் இருக்கும் இவரது தம்பியை வைத்துதான் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெ பெயரை வைக்க ஏற்பாடு செய்த ஜெ விசுவாசி... கூடுதல் தகுதி முன்னாள் ரவுடி... மாநில தலைவர்...தெலுங்கு வந்தேறி..பச்சை தமிழர்களை பார்த்து தமிழின துரோகி என்பார்..சமீபத்தில் விபச்சார புரோக்கர் சோனாவின் திருவாயால் ரெகுலர் கஷ்டமர் என புகழப்பட்டவர்

21.அடைகலராஜ் மூப்ஸ் கோஷ்டியில் இருந்த ஆள்... இந்தியன் வங்கியில் பல கோடி... மூப்ஸ் ஆதரவோடு கடன் வாங்கி... ஏமாற்றிய பேர்வழி... இப்போது இருக்கிறாரா என தெரியவில்லை...

இவரது தங்கை எமிலி திருச்சி முன்னாள் மேயர்... இவரது சகோதரி மகன் ஜெரோம் கடந்த தேர்தலில் திருவரங்கத்தில் தோல்வி அடைந்தவர்... இப்போது வாசன் கோஷ்டியில் உள்ளார்கள்...பெப்ஸி மார்க்கெட்டிங்கில் பார்ட்னர்..மேட்டுபாளையத்தில் உள்ள ப்ளாக் தண்டர் கூட அடைக்கலராஜுக்கு சொந்தமானதுதான்...


22. ஜெயலலிதா - இவர் தமிழ் நாடு காங்கிரஸில் இல்லாவிட்டாலும்... உண்மையில் இவருக்குதான் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் விசுவாசிகள் அதிகம்... அன்பரசு போன்றவர்கள்... இவர் சொந்த கட்சிகாரர்களை விட இவருக்குதான் சேவை செய்வார்கள்... மேலும் காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்களின் தலைவரும் இவரே...

ஏதோ எனக்கு தெரிந்த காங்கிரஸ் கோஷ்டிகளை பற்றி சொல்கிறேன்... மற்றபடி தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை விட கோஷ்டிகள் அதிகமாக இருக்கும்... திறந்த வீட்டில் நாய் வந்து போவது போல... எப்போது வேண்டுமானாலும் கட்சிக்கு வந்து விட்டு போகலாம்...

இப்போதைக்கு காங்கிரஸில் செல்வாக்கான தலைவர்கள்...

1. சிங்கள தலைவர் ராஜபக்சே...

2. ஜெயலலிதா...

3. மருத்துவர் ராமதாசு - கிருஷணசாமியின் சம்பந்தி என்பதால்...

மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி என்பதை... ஜெ காங்கிரஸ் கமிட்டி என்றோ... சிங்கள காங்கிரஸ் கமிட்டி என்றோ... ராஜபக்சே காங்கிரஸ் கமிட்டி என்றோ... கோத்தபயா காங்கிரஸ் கமிட்டி என்றோ மாற்றிக் கொண்டால்... அதன் செயல்பாடுகளுக்கு சரியாக இருக்கும்...

சரி இவர்களுக்கு உள்ள ஒற்றுமையை பார்ப்போம்..

1)தமிழுணர்வு எங்கே வந்து விடும் என்று சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவது இல்லை..
2)தேச பிதா ராஜீவ் காந்திக்காக தீக்குளித்து உயிரை விட துணிபவர்கள்..
3)தமிழர்களுக்கு எதிரான ஒக்கெனக்கல் பிரச்சனையில் இருந்து ..எந்த பிரச்சனையிலும் தங்கள் ஓலவாயை திறப்பது இல்லை..
4)அடிக்கடி காமராசார் ஆட்சியை கனவிலேயே நிறுவுவது..
5)வட 'இந்தி'ய ஆரிய ஆதிக்க சக்திகளுக்கு அடிமை சேவகம் செய்வது..காதுகுத்து பூ முடிப்பு என தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு தங்கள் அடிமை தனத்தை நிருபிப்பது..
6)'இந்தி'ய ஒற்றுமை பற்றி வாய்கிழிய பேசுவது ஆனால் சத்தியமூர்த்தி பவனில்
ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டு சாவது..

நன்றி :

தமிழ்குரல்-தமிழ்நாடுடாக், comment
http://thamilar.blogspot.com/2008/12/blog-post_8983.html



http://thamilar.blogspot.com/2008/12/blog-post_25.html

8 Comments:

Rajaraman said...

\\1. வாசன் குருப் - பாபநாசம் பண்ணையார் சொத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்... இந்த பண்ணையாரின் அடிபொடிகள்... சுதர்சனம், ராணி, டாக்டர் ஜெயகுமார், பழனியாண்டி... காங்கிரசில் இருக்கும் கோஷ்டிகளில் பலம் பெற்றது... //

பழனியாண்டி எல்லாம் மேலே போயி ரொம்ப காலம் ஆவுது.

நிலவு பாட்டு said...

தகவலுக்கு நன்றி நண்பரே, பழனியாண்டி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் அவர் ஒரு தமிழின துரோகியாக இருந்திருக்கா விடில்.

இந்த கட்டுரை பல மாதங்களுக்கு முன் வந்தது. எப்படி மாறி விட்டது பாருங்கள் உலக. பழனியாண்டி மறைந்து விட்டார் நம்மிடமிருந்து.

ஜெ. தாக்கி பேசி வந்த நாம் இன்று தமிழின துரோகி கருணாநிதியினை தாக்குகிறோம்.

Anonymous said...

ஒரு திரில்லரைப் படித்தது போல் பயங்கரமாக இருந்தது.

Anonymous said...

காங்கிரஸ் காரனை பார்த்தாலே கொலைகாரனை பார்ப்பது போல் உள்ளது.

மதி said...

காங்கிரஸ் கூட்டம் எதுவும் நடந்தால் தமிழன் என்று சொல்லாதிர்கள அங்கேயே குண்டு போட்டு கொன்னுடுவான். சிங்களவன் என்று சொல்லுங்கள் ராஜ மரியாதை கிடைக்கும்.

siva said...

இது மிக முக்கியமான ஒரு செய்தி.
ஐரோபாவில் இந்த நேரத்தில் இந்த செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது எவ்வளவு உண்மையென்று தெரியவில்லை.ஆனால் பல ஈழத்தமிழர்கள் மிக பதட்டத்தில் இருக்கிறார்கள்
இன்னும் ஒரு நாளுக்குள் இன்று இரவுக்குக் கூட நடக்கலாம் சிங்கள ராணுவம் பல ஆயிரம் தமிழ் மக்களை ஒரே நேரத்தில் கொல்லத் திடடமிட்டுள்ளதாகவும் மிக பெரிய அவலம் நடக்க உள்ளதாகவும் பீதி கொண்டு உள்ளார்கள் .
விடுதலைப்புலிகள் போர்ப்பகுதியில் ஒரு லட்சத்து அறுபதினாயிரம் மக்கள் இன்னும் இருப்பதாக சொல்கிறார்கள் .
ஆனால் இலங்கை அரசு வேண்டுமென்றே இன்னும் இருபதினாயிரம் மக்கள் மட்டும் உள்ளதாக சொல்கிறார்கள்.தமது கொலைத் திட்டத்தை மூடி மறைப்பதற்காக இப்படி வேண்டுமென்றே குறைத்து மக்களின் தொகையைச் சொல்கிறார்கள்.
மிகப்பெரிய இனப்படுகொலைகள் நடக்கப் போகிறது.
தயவு செய்து இந்த செய்தியை எல்லோருக்கும் பரப்பவவும்
ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கையில் நள்ளிரவு நேரத்தில் இந்தப் பெரிய விபரீதம் நடக்கப் போவதாகச் செய்திகள் வருகிறது.
என்ன செய்வதோ என்று எல்லோரும் தவிக்கிறார்கள்.
புலம்பெயர் நாடுகளில் இரவிரவாக ஏதாவது செய்ய வேண்டுமென்று திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன
யாருக்காவது ஏதாவது தெரியுமா?.

யூர்கன் க்ருகியர் said...

வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணுவது என்பது முடியிற காரியமா?

நீங்க பதிவு போட்ட நேரத்துல புதுசா எவனாவது ஒரு கோஸ்டியை உருவாக்கி இருப்பான்!

Anonymous said...

சபாஷ் தலைவா..