Sunday, April 19, 2009

நாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் வாருங்கள்

இத்தாலிய, மன்னிக்க ,இந்திய தேர்தல் நேரம்,இந்த கணத்தில் நாம் ஆற்ற வேண்டிய தலையாய தேர்தல் பணி நம் முன்பு உள்ளது.

இந்த புலம் பெயர் போராட்டங்களை தீவிரப்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்து,மக்களின் அவல உண்மை நிலையை வெளிக்கொணர செய்வதுடன்,மிக அவசியமானது இந்த தேர்தல் பணி ஆகும்.

சரி அது பற்றி பார்ப்போம்.

தமிழகத்தை பொருத்தவரை பெரிய கட்சிகள் அனைத்துக்குமே வாக்கு வங்கிகள் உண்டு.எது நடந்தாலும் அந்த வங்கி வாக்குகள் சிதறாமல் அந்த கட்சிகளுக்கு சென்றுவிடும்.ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது எந்த கட்சியையும் தீவிரமாக சேராத படித்த மக்களின் வாக்குகளே.அவர்கள் எந்த பக்கம் சாய்கிறார்களோ அந்த கட்சிகளின் வெற்றி வாய்ப்பு அதிகம்.ஆகையால் நாம் செய்ய வேண்டியது ஈழ மக்களின் அவல நிலைகளை வெட்ட வெளிச்சமாக்கும் இணைய கடிதங்கள்(EMAIL) தொடர்ந்து படித்தவர்களூக்கு அனுப்ப வேண்டும்.

சமீபத்தில் அவர்களின் நாடி பிடித்து பார்த்த போது ஈழத்து மக்களின் அவலங்கள் அவர்களை மிக மிக பாதித்துள்ளது தெளிவாக தெரிந்தது.

ஆனால் தமிழக ஊடகங்களின் இருட்டடிப்பு செய்திகளால் உண்மை ஊடுருவி சென்று மக்களிடம்அடைவதில் சிக்கல் உள்ளது.

நமது குறிக்கோள் ,வெற்றியை நிர்ணயிக்கும் படித்த நடுத்தட்டு வர்க்கத்திர்க்கு உண்மையை விளக்குவதின் மூலம் ,உண்மையின் பக்கம் அவர்களை கொண்டு வருவதுதான்.

எப்படி சாத்தியம்?ஊடகங்கள் இருட்டடிக்கின்றனவே எப்படி செய்வது?

படித்த மக்கள் அனைவருக்கும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு(அனைவரும் இணைய கடிதம் பயண்படுத்துவது, நமக்கு சாதகமான விஷயம்), group mail மூலமாக அல்லது தங்களிள் தொடர்புகள்(contacts) மூலமாக எளிதில் உண்மையை கொண்டு செல்லலாம்.
காலமும் உலகின் பார்வையும் நம் பக்கம் மெள்ள திரும்பிக்கொண்டு உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு விரைந்து செயல்படுவோம் வாருங்கள்.

இது குறித்து மேலும் தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள் அது நம்மை கூர்மையாக்கும் என்பது திண்ணம்.

விரைந்து செயல்படுவோம் வாருங்கள்.தேர்தல் பணிககளை தொடருங்கள்.

3 Comments:

Anonymous said...

விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்துவைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்றது. வன்னியில் சில நூறு புலிகளே இருப்பதாகவும் அவர்களில் 90 சதவீதமானோர் காடுகளுக்குள் சென்றுவிட்டதாகவும் கூறும் சிறிலங்கா இராணுவத்தினர், அங்குள்ள மக்களை விடுதலைப் புலிகளே தடுத்து வைத்திருப்பதாக கூறுகின்றனர். லட்சக்கணக்கான மக்களை அரசாங்கம் கூறுவதுபோல சில போராளிகளால் தடுத்து வைத்திருக்க முடியுமா?. இதனை எப்படி நம்ப முடியும்

Anonymous said...

எனது போராட்டத்தையும் இன்று கொச்சைப்படுத்துகின்றனர். நான் புலிகளால் அனுப்பிவைக்கப்பட்டு உண்ணாநிலைப் போராட்டம் இருக்கும் ஒருவர் என்று கூறுகிறார்கள்.

கடந்த 11 ஆம் நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 இலட்சம் தமிழ்மக்கள் இங்கே வந்தனர். அப்படியானால் அவர்கள் அனைவரும் புலிகளால் அனுப்பப்பட்டவர்களா?.

-சுப்பிரமணியம் பரமேஸ்வரன்

சுபன் said...

நல்லவிடயம் நன்றே செய்வோம் அதையும் இன்றே செய்வோம்