Wednesday, April 29, 2009

சிக்காத சாதுர்ய கருணாநிதி!

போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவே அழுத்தமாகச் சொல்லிய பிறகும், அவர் அளித்த விளக்கத்துக்கு புது அர்த்தம் புகுத்தி, போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டதாக மார்தட்டுகிறார், தமிழக முதலமைச்சர் கருணாநிதி.

காலை உணவு நேரத்தில் சென்னை அண்ணா நினைவிடத்தில் வந்தமர்ந்து, படுத்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, மதிய உணவு நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.

இலங்கையில் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு வருகிறது என்ற தகவலை, போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி, நேற்று தனது நீ.....ண்ட ஆறரை மணிநேர உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் கருணாநிதி.

அவர் வீடு திரும்புவதற்குள், இலங்கையில் இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த செய்திகள் வெளியாயின.

போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று தமிழர்கள் ஆனந்தத்தில் திளைக்கத் தொடங்கிய தருணத்தில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி இது...

//போர் நடவடிக்கைகள் அவற்றின் முடிவை எட்டியிருப்பதாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கணரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை பயன்படுத்துவதையும் ஆகாயமார்க்கமான தாக்குதல்களை மேற்கொள்வதையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப்படையினர் பணயமாக வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளோடு தங்களது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்வதோடு பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்திற்கு மிகுந்த முன்னுரிமை வழங்குவர்.//

இதைக் கருத்தில் கொண்டே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சாடியபடி அறிக்கைகள் விடுத்தனர்.

இது நேற்றைய, அதாவது ஏப்ரல் 27-ம் தேதியின் நிலை!

இன்று... ஏப்ரல் 28... இந்திய நேரப்படி மாலை 5.30 மணி...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார், தமிழக முதலமைச்சர் கருணாநிதி.

"இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை; கனரக ஆயுதத் தாக்குதல்கள் தான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன," என்ற கேள்வி எழுப்பப்படுகிறது...

அந்தக் கேள்விக்காக காத்திருந்தது போல் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு ஏ4 தாளை எடுக்கிறார், கருணாநிதி.

"இதோ... உங்களைப் போல் ஒருவர் கேள்வி கேட்டு, இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த விளக்கம் இது..." என்று கூறி, சி.என்.என். ஐ.பி.என். சேனல் பேட்டியில் ராஜபக்சே ஒரு கேள்விக்கு அளித்த பதிலைச் சுட்டிக் காட்டி வாசிக்கிறார்...

"You know, when you say that you are not using heavy weapons and you are not using air attacks, then what is it? It's like almost a ceasefire only. I mean now, soldiers are moving forward. So when you view all this it looks like a real war. But when we are not using heavy weapons then you know what is it? It's not a war. That is what he must have said."

"இப்போது சொல்லுங்கள் போர் நிறுத்தப்பட்டது உண்மையல்லவா?" என்று பெருமிதம் பொங்க பதிலளிக்கிறார், தி.மு.க. தலைவர்!

அப்போது மற்றொரு நிருபர், "இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறதே?" என்று வினவுகிறார்.

அதற்கு இலக்கியச் சுவையுடன் பதிலளிக்கும் கலைஞர், "மழை விட்டும் தூவானம் விடவில்லை" என்கிறார்.

அத்துடன், போர் நிறுத்தம் பற்றிய விளக்கத்தில் இருந்து, ஏனைய விவகாரங்களுக்கான கேள்விகளுக்குத் தாவுகிறார்!

ஆக... தனது உண்ணாவிரதத்தால், போரே நிறுத்தப்பட்டுவிட்டது என்று மீண்டும் ஒரு முறை முழு பூசணியானது ஒரு சில பருக்கைகளில் மறைக்கப்படுகிறது.

இங்கேதான் தமிழக நிருபர்கள் மீது சற்று வருத்தம் ஏற்படுகிறது. காரணம் இதுவே...

கருணாநிதி சுட்டிக் காட்டிய ராஜபக்சேவின் பதிலானது, வேறொரு கொணத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட விளக்கம். ஆனால், அதற்கு முந்தைய கேள்விக்கான பதிலில், 'போர் நிறுத்தம் இல்லவே இல்லை' என்று உறுதிபட தெரிவித்திருந்தார் ராஜபக்சே. இதுபற்றி நிருபர்கள் கேட்டிருந்தால், ஒருவேளை கருணாநிதி சிக்கியிருக்க முடியும். ஆனால், இந்த முறையில் சிக்கவில்லை சாதுர்ய கருணாநிதி.

கருணாநிதிச் சுட்டிக் காட்டிய ராஜபக்சேவின் பதிலை இங்கே கேள்வியுடன் சுட்டிக் காட்டுகிறோம்...

CNN-IBN: The Indian Home Minister P Chidambaram declared that the Sri Lankan government had actually declared a fecation of hostages.

Rajapaksa: You know, when you say that you are not using heavy weapons and you are not using air attacks, then what is it? It's like almost a ceasefire only. I mean now, soldiers are moving forward. So when you view all this it looks like a real war. But when we are not using heavy weapons then you know what is it? It's not a war. That is what he must have said.

சரி... முந்தையக் கேள்வியையும் பதிலையும் இங்கே காண்போம்...

CNN-IBN: So have you instructed your army to ceasefire?

Rajapaksa: No. It is not ceasefire. We are freeing the people who are kept there as hostages. That is my duty. So the army is now only helping the civilians. We want to get the civilians out from them. It was at the Security Council where we finally thought that we have to do this because for the first time we made a statement saying that we are not using heavy weapons and attacks. An area which was called a no-fire zone was declared by the army on a day-to-day basis. So we managed to send them (civillians) to the no-fire zone. And the LTTE also took them there thinking that they can escape from the sea. But now they realised that they can't move forward. But still they are using heavy weapons inside. They have heavy weapons inside the no-fire zone.

இப்போது புரிகிறது அல்லவா?

மிகச் சாதுர்யமான சொல்விளையாட்டு நேர்த்தியால், பிந்தையக் கேள்விகான பதிலை 'போர் நிறுத்த' அறிவிப்பாக கருதிக் கொண்டு விளக்கமளித்துள்ளார், கருணாநிதி.

இந்த சூட்சம பதிலின் பிண்ணனியைத் தெரிந்துகொள்ளாமல், கருணாநிதியிடம் குறுக்கு கேள்வி கேட்காததால், மீண்டும் நாளைய செய்தித்தாள்களின் சிலச் செய்திகள், 'போர் நிறுத்தம்' பற்றிய கருணாநிதியின் பொய்யான தகவலுடன் வெளிவரலாம்!

ஒருவேளை கருணாநிதியின் அகராதியில், ராஜபக்சேவின் பேட்டிக்கான மறைமுக அர்த்தம் 'இலங்கையில் போர் நிறுத்தம்'தான் என்று பாவித்தால்...

இலங்கையில் மறைமுறைமாக அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை, தனது வெற்றியாகக் கருதிக் கொண்டு, ஆறரை மணிநேர உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, மதிய உணவுக்கு வீடு திரும்பியத் தலைவர் என்று வருணிப்பதில் தவறில்லை என்றேத் தோன்றுகிறது.

'சொன்னதைச் செய்த' சாதனைப் பட்டியலில், 'இலங்கையில் போர் நிறுத்தம் கண்ட தி.மு.க. தலைவர்' என்ற விளம்பரத்துக்கு செலவிடப்பட்ட ஆறரை மணிநேரம், கருணாநிதியைப் பொறுத்தமட்டில் நிறைவானதாகவே இருந்துள்ளது போலும்!

சரி... இன்றைய இலங்கை நிலவரம் என்ன?

'ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை: 5,000 குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்று கோரக்கொலை' என்கிறது புதினம் இணையதளச் செய்தி.

இதுதான் "மழை விட்டும் தூவானம் விடவில்லை" என்பதா?

தொடர்புடைய 'லிங்க்'குகள்

சி.என்.என். ஐ.பி.என். செனலுக்கு ராஜபக்சே அளித்த பேட்டியின் முழு வடிவம்
http://ibnlive.in.com/news/we-want-to-catc...sa/91256-2.html

இன்றைய கோரத் தாக்குதல் குறித்த புதினம் செய்தி

http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO2a030Mt3e


நன்றி: http://www.nigazhvugal.com

3 Comments:

ராஜ நடராஜன் said...

முதல்வர் பேட்டியில் கேள்வி கேட்கவேண்டுமென்ற நிலைப்பாட்டில் மட்டுமே நமது ஊடகவியலாளர்கள் செயல்படுகிறார்கள்.

கேள்வியில் சிக்க வைப்பது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டுமானால் ஊடகவியலாளர்கள் ஃப்ராஸ்ட்/நிக்சன் (Frost/Nixon)படம் பார்ப்பது நல்லது.

Anonymous said...

உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவன் பகத் சிங்கின் தோழன்.
1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O’Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.
இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O’Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O’Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.
துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O’Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல…. 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O’Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்
மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து… உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.
பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.
சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்………………
400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O’Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்……
ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?
“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது”
- மகாத்மா காந்தி
400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்…..
அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்….. வந்தது.
பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?
அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்… நாம் செய்தால் தியாகி பட்டமா?
நல்ல நியாம்டா சாமி…………..
சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது…….
ஆனால் ஒருவருக்கு புரிந்தது…..

Anonymous said...

”ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார்.. இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.
ஆனால் ரன்பீர் சிங்கோ, ‘இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது’ என்று சொல்ல…
யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!”
ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே….. பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?
ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது…………….
மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்………………..
1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.
இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்…. மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!
இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது…
பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?
அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?
சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே…
அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?
இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?
இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???
இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்……. (NSA)
ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது….. !!!!!!
எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?
தமிழர்களில் இருக்கும் கருங்காலி கூட்டம் சீகியர்களிடம் இல்லை..
இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்……….
அட நாய்களே…..
நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை
மனிதனாக இருந்தால் போதும்…..
இப்படிக்கு,
மனிதர்
தமிழர்
இந்தியர்