Thursday, April 30, 2009

இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிறார்

சிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலைகளைச் சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு முன் கொண்டு வரும் தமிழ் இணையத்தளங்கள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது உர்ஜிதமாகியுள்ளது. தமிழ்மக்கள் மீதான அரச படைகளின் தாக்குதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்காமலும், யுத்த பிரதேசங்களுக்கு அப்பால் இருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும், தமக்குச் சார்பான செய்திகளை மட்டுமே வெளிவரும் வகையில் ஏற்படுத்திக் கொண்டு, இனப்படுகொலைகளை மேற்கொண்ட சிறிலங்கா அரசின் செயற்பாடுகளுக்கு பெரிதும் இடையூறாக இருந்தவை இந்தத் தமிழ இணையத்தளங்கள்.

யுத்த பிரதேசத்தின் காட்சிளை நிழற்படங்களாகவும், கானொளிகளாகவும், உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டுவந்த இணையத்தளங்களை முடக்குவதற்கு பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருவது உர்ஜிதமாகியுள்ளது.

கடந்த 13ந்திகதி 4tramilmedia.com இணையத் தளத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கு எத்தனித்த தருணத்தில், அது கண்டுபிடிக்கப்பட்டு, தொழில் நுட்பவியலாளர்கள் சுமார் 12 மணிநேரப் போராடி, அனைத்துத் தரவுகளையும் இழப்பின்றி மீட்டெடுத்திருந்ததை அறியத் தந்திரந்தோம். தற்போது 'சங்கதி' இணையத்தளம் மீது அத்தகைய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத��
� தெரிய வருகிறது. இது போன்று முன்னர் 'பதிவு' இணையத்தளம் மீதும் மேற்கொள்ளபட்டிருந்ததாக அறிய முடிகிறது.

இனப்படுகொலையை மேற்கொள்பவர்களும், அதற்குத் துணைபோவர்களும், இத்தகைய சாட்சியங்களை அழிக்க நினைப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஒரு இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் காட்டுமிராண்டித் தனத்தை, இனப்படுகொலையை, வெளிக்கொணரும் ஊடகங்கள் மீதான இத் தாக்குதல் மிக வண்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. இத்தகைய இழிசெயல்களுக்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டியுமுள்ளது. இத்தகைய முயற்சிகளுக்கு எதிரா இணையத் தளங்கள் தங்கள் பாதுகாப்பினை அதிகப்படுத்த வேண்டியுமுள்ளது.

1 Comment:

Anonymous said...

புலிகளை விமர்சிக்கும் இணையத் தளங்களும் முடக்கப்படுகின்றன. அதனை யார் செய்கிறார்கள்? உங்களுடைய நண்பர்கள் செய்யும் அதே வேலையை உங்களுடைய எதிரிகள் செய்ய மாட்டார்களா?