1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O’Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.
இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O’Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O’Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.
துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O’Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல…. 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O’Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்
மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து… உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.
பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.
சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்………………
400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O’Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்……
ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?
“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது”
- மகாத்மா காந்தி
400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்…..
அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்….. வந்தது.
பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?
அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்… நாம் செய்தால் தியாகி பட்டமா?
நல்ல நியாம்டா சாமி…………..
சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது…….
ஆனால் ஒருவருக்கு புரிந்தது…..
அவர்தான் ரன்பீர் சிங் முந்தைய பதிவில் நீங்கள் படித்தது, படிக்காவில் இங்கே அழுத்தவும்
ரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமிழர்களுக்கு இல்லையே
Wednesday, April 29, 2009
உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவன் பகத் சிங்கின் தோழன்.
Posted by நிலவு பாட்டு at 6:22:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
is UK considering உதம் சிங் as a தியாகி ?
for UK உதம் சிங் is a தீவிரவாதி..
that is what India is doing ..punishing தீவிரவாதி :)
வெத்து வேட்டு நீ இன்னும் இங்கேதான் சுத்திட்டு இருக்கறியா. இலங்கை அரசு உன்னை பதவியில இருந்து நீக்கி விட்டதாக கேள்வி பட்டேன்.
தமிழ் மக்களை கொல்ல துணை போகிற சிங்கள அரசும், இந்த கொலைகார கூட்டணியும் தான் தீவிரவாதிகள்.
சுதந்திரத்துக்காக போராடுபவர்கள் சுதந்திர தியாகிகள், வீரர்கள். இது எல்லாம் தமிழ் பால் குடிச்சு வளந்தவனுக்குதான் தெரியும், நீ சிங்கள் பிச்சையில் வளருபவன் உனக்கு புரியாதுடா ராசா.
Post a Comment