Thursday, April 16, 2009

பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா? சத்யராஜ்

என் இரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது: கவிஞர் வைரமுத்து ஆவேசம்

பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா? நம் சொந்தங்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்கக் கூட யோசித்துக்கொண்டிருக்கலாமா?’’ என்று
கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து நேற்று சென்னையில் பேசும்போது நடிகர் சத்யராஜ், ஆவேசப்பட்டார்.
கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நேற்று மாலை நடந்தது.

நடிகர் சத்யராஜ், இவ்விழாவிற்கு வந்ததுமே அனைவரின் கவனமும் அவர் மீது தான் இருந்தது. அதற்கு காரணம், அவர் அணிந்திருந்த கருப்பு டீ-சர்ட்டில் ‘ஈழத்திற்காக குரல் கொடுப்போம்’ என்று ஆங்கில வாசகம் அச்சிடப்பட்டிருந்ததுதான்.

சத்யராஜ் பேசும் போதும் அனைவரின் கவனமும் அவர் மீதுதான் இருந்தது.

‘’நான் இந்த மேடையை ஒரு நல்ல விசயத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறேன். ஈழ விசயத்திற்காகத்தான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

தேர்தலுக்காக யார் வேண்டுமானாலும் யாருடனாவது கூட்டணி வைத்துக் கொள்ளட்டும். ஆனால், ஈழத்தமிழர்கள் விசயத்தில் ஒன்றுபடட்டும். ஒருமித்த குரல் எழுப்ப வேண்டுகிறேன்.

வெளிநாடுகளில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்களோ அத்துனை தமிழர்களும் ஈழ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

ஆனால் தாய் தமிழகத்தில் எத்துனை தமிழர்கள் கலந்து கொள்கிறார்கள். இதுதான் வேதனை. ஈழத்தமிழர்களுக்காக அனைத்து தமிழர்களும் குரல் கொடுக்க முன்வரவில்லை.
பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா? நம் சொந்தங்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்கக் கூட யோசித்துக்கொண்டிருக்கலாமா?’’ என்று ஆவேசப்பட்டார்.

என் இரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது: ஈழத்தமிழருக்காக கவிஞர் வைரமுத்து ஆவேசம்

கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாடல் கேசட்டை வாலி வெளியிட, வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

வைரமுத்து பேசும்போது, ‘’இந்த மேடையில் ஈழப்பிரச்சினையை பேசக்கூடாது என்று மனசு சொல்கிறது. ஆனால் என் இரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது.

உலக நாடுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் ராஜபக்சே கொஞ்சமும் இசையவில்லை. ஐநா சொல்லியும் கூட, அமெரிக்கா சொல்லியும் கூட இசையவில்லை.

உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று அமெரிக்கா மார் தட்டுகிறது. அது சொல்லியே ராஜபக்சே கேட்கவில்லை. இனி தலைவன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது என்று அமெரிக்கா’’ என்று ஆவேசப்பட்டார்.



நன்றி தமிழ்வின்

1 Comment:

Anonymous said...

நல்ல பேசுறாரு வைரமுத்து,

உலக நாடுகள் கண்டித்தன. பட்சே கேட்கவில்லை. நல்லாத்தான் இருக்கு உங்கள் பேட்சு. போரை நடத்தும் இந்திய கண்டித்ததா, அதைப் பற்றி கேட்க தன் வைரமுத்துவுக்கு முடியுமா .