தமிழின கொலைகார கூட்டணி காங்-திமுக வின் ஆசியுடன் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுகின்றனர். இவர்களுக்கு இன்னும் வீரமணி இன்னும் ஜால்ரா அடித்து கொண்டு உள்ளார். வீரமணியின் அவர்களே நீங்கள் ராசபக்சேக்கும் சேர்த்தே தேர்தல் பிரச்சாரம் பண்ணலாம். முடிந்தால் அவரையும் கூட்டிட்டு வந்து உங்கள் போர் நிறுத்த பேரணியில் கலந்துக்க சொல்லுங்கள்.
சிறிலங்கா பொது மக்களின் வாழ்விடம் மீது மேற்கொண்டுள்ள இன அழிப்புத் தாக்குதலில் இன்று காலை மட்டும் மூன்று மணி நேரம் மேற்கொள்ள்ப்பட்ட தாக்குதலில் 180 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் பெருமளவானவோர் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
இரண்டு நாள் போர் நிறுத்தத்தை அறிவித்து தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா தரப்பு இன்று காலை தொடக்கம் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது கடுமையான ஆட்டிலெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அத்துடன் மோட்டார் தாக்குதல்களும், ஆர்.பி.ஜி தாக்குதல்களும், எல்.எம்.ஜி, கலிபர் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்களை அழித்துக்கொண்டு இறுதியாக எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா தீவிரமாக இறங்கியுள்ளது. இன்று காலை 7.40 மணி தொடக்கம் 10.40 மணி வரை இடம்பெற்ற தாக்குதல்களில் 180 பொது மக்கள் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த பலர் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல் காரணமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்காவின் போலியான போர் நிறுத்த அறிவிப்பை உடனடியாக வரவேற்றிருந்த சர்வதேச நாடுகள், சிறிலங்காவின் இந்த இராணுவ நடவடிக்கை தொடர்பாக கருத்தெதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள தமிழ் மக்களின் எழுச்சி அந்தத்தந்த நாடுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த எழுச்சியை தணிப்பதற்கு சிறிலங்காவிற்கு அழுத்தங்களைப் பிரயோகித்தபோதும், எஞ்சியிருக்கும் பகுதியையும் கைப்பற்றி அங்கிருக்கும் மக்களை அகற்றிவிட்டால் புலம்பெயர்ந்த மக்கள் போராட வேண்டிய நிலை ஏற்பாடாது என எதிர்பார்க்கும் சில சர்வதேச நாடுகள் சிறிலங்காவின் இந்த இறுதித் தாக்குதலுக்கு மௌனமாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன், போரை முடித்துவிட்டு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப்போவதாக சிறிலங்கா அரசு கூறிவருகின்மையை இந்த நாடுகள் வரவேற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Wednesday, April 15, 2009
மூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி
Posted by நிலவு பாட்டு at 6:17:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment