மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை அடுத்து டெல்லி யில் நடந்த சீக்கியர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்ததை அடுத்து உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மீது சீக்கிய செய்தியாளர் ஒருவர் தனது ஷýவை எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
.
புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தி யாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அசாமில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சிதம்பரத்திடம் சீக்கிய செய்தியாளர் ஒருவர், 1984 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர் களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து டெல்லியிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் கலவரம் தொடர்பான கேள்வியை எழுப்பினார்.
இந்த கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லரை சிபிஐ விடுவித்திருப்பது தொடர்பாகவும் அவர் சிதம்பரத்தின் கருத்தை கேட்டார். அதற்கு பதிலளிக்க சிதம்பரம் மறுத்தார்.
தொடர்ந்து அந்த நிருபர் கேள்வி கேட்டதை அடுத்து இந்த விஷயத்தில் வாக்குவாதம் தேவை யில்லை என்று சிதம்பரம் கூறினார். தனால் ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷýவை கழற்றி சிதம்பரத்தின் மீது எறிந்தார். எனினும் அந்த ஷý சிதம்பரத்தின் மீது படாமல் தள்ளி விழுந்தது. இதனால் செய்தியாளர் கூட்டம் நடந்து கொண்டிருந்த அறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அனைத்து டிவி கேமராக்களும் படம் பிடித்துக் கொண்டிருந்தன. டனடியாக காவலர்கள் ஓடிவந்து ஷý வீசிய நிருபரை அங்கிருந்து தள்ளி சென்றனர்.
இந்த சம்பவத்தால் சற்றே அதிர்ச்சி அடைந்த சிதம்பரம், உடனே சுதாரித்து கொண்டு, அனைவரும் உட்காருமாறு கேட்டுக் கொண்டார்.
ஒரு மனிதரின் இந்த செயலால் செய்தியாளர் சந்திப்பு பாதிக்கப்பட கூடாது என்றும், அவரது கேள்விக்கு என்னால் முடிந்த வரை பதிலளிக்கிறேன் என்றும் கூறி தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
எனினும் நடந்த சம்பவத்தில் அவரது பதில்கள் எடுபடாமல் போய் விட்டன. தம்பரத்தின் மீது ஷý வீசிய நிருபரின் பெயர் ஜர்னைல் சிங் என்றும் அவர் டைனிக் ஜாக்ரா என்னும் இந்தி பத்திரிகையின் நிருபர் என்பதும் தெரிய வந்தது.
அவர் உடனடியாக காங்கிரஸ் தலைமையகத்திற்கு அருகில் உள்ள துக்ளகாபாத் காவல் நிலையத்திற்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர். அவரை மன்னித்து விட்டதாக சிதம்பரம் கூறிய போதிலும், அவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப் படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
தான் செய்தது சரியான செயல் அல்ல என்பது தனக்கு தெரியும் என்றும், எனினும் அந்த சம்பவத்திற் காக தான் வருந்தவில்லை என்றும் ஜர்னைல்சிங் கூறியிருக்கிறார்.
கலவரத்திற்கு காரணமானவர்களை சிபிஐ விடுவித்துள்ளது. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. இதற்கு எனது எதிர்ப்பை தெரிவிக்கவே நான் இவ்வாறு நடந்து கொண்டேன்.
இது சிபிஐ மீதான எனது எதிர்ப்பை பதிவு செய்வதாகும். சிபிஐ தற்போது சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அவர் கூறினார். இந்த சம்பவத்தை காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் கண்டித்துள்ளன. இந்த சம்பவத்திற்கு பிறகாவது சீக்கியர்கள் மீதான கலவரத்திற்கு காரணமான ஜெகதீஷ் டைட்லர், சாஜன் குமார் ஆகியோரை வேட்பாளர் பட்டியலிலிருந்து காங்கிரஸ் நீக்க வேண்டும் என்று பிஜேபி கூறியுள்ளது
Tuesday, April 7, 2009
செருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சி
Posted by நிலவு பாட்டு at 6:02:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
தமிழின உணர்வாளர்களை இழிவுபடுத்த நினைக்கும் தமிழ்மணத்திற்கும் செருப்படி கொடுக்க வேண்டும்.
Post a Comment