Thursday, April 23, 2009

இந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்கும், தமிழர்களுக்கும்தான்

நாம் நினைப்பது போல் இந்த தேர்தல் அதிமுக, திமுக கூட்டணிக்கு இடையில் நடக்கும் போட்டியல்ல. தமிழர்களின் எதிரிகளான தமிழின கொலைகார கூட்டணிக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் கடும் போட்டியே இந்த தேர்தல், தமிழனின் மானத்திற்கும், ரோசத்திற்கும் விடப்பட்ட சவால் இந்த தேர்தல். தமிழனை ஏமாற்றியே எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம் என்று நினைக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவோம். எதிரில் வரும் எந்த துரோகியானாலும் தட்டி கேட்போம், அது திருமாவோ, வீரமணியோ, சு.ப வீயோ யாரை பற்றியும் கவலை வேண்டாம். இவர்கள் எல்லாரும் ஜால்ராக்கள் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. தமிழனை பற்றி வாய் கிழிய பேசி விட்டு தமிழனை அழிப்பவனிடமே சரணடைவது வேண்டாம் இந்த ஒட்டு பொறுக்கி தனம்.

கொலைகார கூட்டணியை தோற்கடிப்பதே தமிழர்களாகிய நமது கடமை.

இதில் நாம் தவறினால் இந்த பழி நம் மேல் பல தலைமுறைகளுக்கு தொடரும். இந்த தேர்தலிக் கருணாநிதியின் கொலைகார கூட்டணிக்கு கொடுக்கும் பாடம் இனி எந்த கட்சியினையும் தமிழர்களுக்கு எதிராக பேச முடியாத படி செய்ய வேண்டும்.

நம்முடைய குறிக்கோள் நமது தமிழினத்தினை அழிக்க துணை போகும் திமுக,காங்கிரஸ் கட்சிகளை புறமுதுகு காட்டி ஓட செய்வதுதான். இதில் மற்றவர்கள் லாபம் அடைந்தால் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. தமீழீழத்திற்கு அடுத்து ஒரு உதவி என்பது இந்த கூட்டணியை ஆட்சியில் இருந்து அக்ற்றினால் மட்டுமே முடியும்.

இந்த அளவு தமிழர்களில் எந்த ஒரு காலத்திலும் கொல்லப்பட்டிருக்கவில்லை. இவையனைத்தும் சோனியா, சிங், கருணாநிதியின் சம்மதத்துடனே நடைபெறுகிறது.

எப்படியாவது இந்த தேர்தலுக்கு முன் தமிழர்கள் அனைவரையும் கொன்று விட துடிக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்டுவோம்.

1 Comment:

Anonymous said...

கருணாநிதியே

பொய் வார்த்தைகளை எத்தனை முறை நீ சொல்வாய் ??? நீ ஒரு தமிழின கொலையாளி நீ எமது தமிழ் இனத்துக்கே துரோகம் செய்துவிட்டாய் … இப்போது நீ இதை தேர்தல் ஆயுதமாய் மாற்ற முனைகிறாய் … பதவி, பண வெறி உன் கண்களை மறைத்துவிட்டன .. தமிழரின் சாபம் உன்னை விட்டுவைக்காது ..