தமிழ் ஒவியா அவர்களே சும்ம கிளிபிள்ளை மாதிரி நீங்க பேசறது சரி இல்லை, கொஞ்சம் பகுத்தறிவை செயல்படுத்துங்கள். நீங்கள் சொல்வது படி வைத்து கொண்டாலும் இன்று கருணாநிதி ஆட்சி எந்தவிதத்திலும் மோசமானதே. 60,000 ஸ்பெக்ட்ரம் கோடி ஊழல். குடும்ப அரசியல். பணம் கொடுத்து ஒட்டு வாங்கல் இதுதான் நடக்கிறது. சென்னையை தவிர வேறு எந்த ஊர்களிலும் உருப்படியான காரியங்கலும் இந்த ஆட்சியால் செய்யப்படவில்லை. மக்களை டிவி கொடுத்தது அதில் வரும் விளம்பரத்தில் சம்பாதித்தது யார். ஆனாலும் அதை பார்க்க மின்சாரம் கிடையாது அது வேறு விசயம். மின்சாரத்தில ஆட்சி போயி விடும் என்ற நிலையில் இருந்த அவரை இன்று தமிழீழ பிர்ச்சனை கொஞ்சம் திருப்பம் கொடுத்தது, ஆனால் நயவஞ்சகன் அதையும் ஏமாற்றி விட்டான்.
ஈழப்பிரச்னையில் யாருக்காக இவர் பேரணி நடத்துகிறார் என்பது கருணாநிதிக்கும், வீரமணிக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. போரை நடத்துபவர்களே இப்படி பேரணி நடத்தினால் தாங்காதுப்பா இந்த உலகம்.
மேலும் இந்த கூட்டணி வேறு தேர்ந்தெடுக்க வேண்டுமாம், அப்படி நடந்தால் மீண்டும் அதே காங்கிரஸ் அதே தமிழின படுகொலை. அதே ராணுவ உதவி, நச்சு வாயு கருணாநிதி சம்மதத்துடன் அனுப்பப்படும் தேவையா. கருணாநிதி இதே போல கையாலாகததனத்தை வெளிப்படுத்துவார்.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, இந்தியாவிடமிருந்து அடுத்தகட்ட உதவிகளை தமிழீழம் எதிர்பார்க்க முடியும் என்ற நிலையில் உள்ளோம்.
Sunday, April 12, 2009
தமிழ் ஓவியா அவர்களின் "செந்தழல் ரவி அவர்களின் கருத்துக்கு பதிலடி" பதிலடி
Posted by நிலவு பாட்டு at 7:07:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
//காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, இந்தியாவிடமிருந்து அடுத்தகட்ட உதவிகளை தமிழீழம் எதிர்பார்க்க முடியும் என்ற நிலையில் உள்ளோம்//
நல்ல காமெடி காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தோற்றவுடன் ஈழத்துக்கு உதவி செய்துவிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பேன் என்று ஜெயலலிதா உங்களிடம் கூறினாரா? முதலில் உங்கள் பகுத்தறிவை பயன்படுத்தவும், கலைஞரை இவ்வளவு விமர்சனம் செய்ய்ம் நீங்கள் உங்கள் தலைவர் மீது விமர்சனம் எழுந்தால் மட்டும் கொதித்து எழுவது ஏன், அது மாதிரி தான் எல்லோரும்
/* நல்ல காமெடி காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தோற்றவுடன் ஈழத்துக்கு உதவி செய்துவிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பேன் என்று ஜெயலலிதா உங்களிடம் கூறினாரா? முதலில் உங்கள் பகுத்தறிவை பயன்படுத்தவும், கலைஞரை இவ்வளவு விமர்சனம் செய்ய்ம் நீங்கள் உங்கள் தலைவர் மீது விமர்சனம் எழுந்தால் மட்டும் கொதித்து எழுவது ஏன், அது மாதிரி தான் எல்லோரும் */
வருகைக்கு நன்றி நண்பரே, உதவி செய்யாமல் இருப்பதே இன்று தமிழீழத்துக்கு பெரிய உதவி.
கண்டிப்பாக காங்கிரஸ்-திமுக தவிர யார் வந்தாலும் இலங்கை உதவி பண்ணப்போவதில்லை அதுவே நமக்கு பெரிய உதவி. நமக்கு உதவி கிடைத்தால் அது மேலும் இரட்டிப்பு சந்தோசமே.
ஆனால் இந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெற்றால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. மீண்டும் தமிழர்கள் கொலை, கருணாநிதி ஒரு அறிக்கை இது மத்திய அரசு சக்திகுட்பட்டது. இது தேவையா. அதான் எல்லாம் பார்த்தாச்சே இவரால என்ன கிழிக்க முடியுதுன்னு. எந்த ஒரு மாற்று கூட்டணியிம் இந்த அளவு மோசமாக தமிழர்களை நடத்தப்போவதில்லை.
unmai
சார்க் நாடுகளுக்குள் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுக்கொன்று உதவி. இந்தியா உதவவில்லையாயின் வேறு நாடுகள் உட்புகும் அபாயம். இது போன்ற காரணங்களால் இந்தியத் தலைமையில் யார் இருந்தாலும் உதவி செய்தே ஆக வேண்டி வரும்.
புலிகள் மக்களை தடுப்பாக பயன்படுத்தவில்லை என்பது உண்மையாயின், வரும் இருநாள் போர் நிறுத்த நாட்களில், நேராக போரில் ஈடுபடாத எல்லா தமிழர்களையும் பாதுகாப்பான இடத்துக்கு புலிகள் வெளியேற்றுவார்களா?
/* புலிகள் மக்களை தடுப்பாக பயன்படுத்தவில்லை என்பது உண்மையாயின், வரும் இருநாள் போர் நிறுத்த நாட்களில், நேராக போரில் ஈடுபடாத எல்லா தமிழர்களையும் பாதுகாப்பான இடத்துக்கு புலிகள் வெளியேற்றுவார்களா? */
குடுமி சாரே சந்தடி சாக்கில உள்ளே உன் விஷமப்புத்தியை காட்டுறீரய்யா. 3 லட்சம் மக்களை புலிகள் பிடியில் சொன்னால் உன்னை மாதிரி மடையந்தான் நம்புவான். மக்களுக்கு எது பாதுகாப்பான இடம் என்று தெரிந்துதான் அவர்கள் இருக்கிறார்கள்.
பாதுகாப்பு வலையத்தில் இருக்கிற மக்கள்தான் சிங்கள் அரசின் பலிகடா. ஆட்டை பிடிச்சு புலி கைல கொடுத்தால் என்ன ஆகும் தெரியும் இல்ல கண்ணு.
சும்ம கருணாநிதியும், இந்த குடுமிகளும் வேண்டுமென்றால் இதை சொல்லுவிங்கள்.
/* சார்க் நாடுகளுக்குள் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுக்கொன்று உதவி. இந்தியா உதவவில்லையாயின் வேறு நாடுகள் உட்புகும் அபாயம். இது போன்ற காரணங்களால் இந்தியத் தலைமையில் யார் இருந்தாலும் உதவி செய்தே ஆக வேண்டி வரும். */
என்னங்கடா எப்படியெல்லாம் யோசிக்கறிங்க. அப்படியே யோசிச்சால்லும் காங்கிரஸ்-திமுக அல்லாத கூட்டணி வந்து யோசிக்கட்டும் நண்பரே, முதலில் தமிழின கொலை நிற்கவாவது செய்யும்.
//
புலிகள் மக்களை தடுப்பாக பயன்படுத்தவில்லை என்பது உண்மையாயின், வரும் இருநாள் போர் நிறுத்த நாட்களில், நேராக போரில் ஈடுபடாத எல்லா தமிழர்களையும் பாதுகாப்பான இடத்துக்கு புலிகள் வெளியேற்றுவார்களா?
//
இது மொக்கைத் தனமான, விஷமத் தனமான கேள்வி...மூன்று லட்சம் மக்களை சில ஆயிரம் புலிகள் கடத்தி வைத்திருக்கிறார்களா என்ன?? பள்ளியில் குண்டு எறிந்து சிறுவர், சிறுமிகளை கொன்ற சிங்கள இனவெறி அரசு பாதுகாப்பு தருகிறதாம்....எல்லாரும் அங்கு செல்ல வேண்டுமாம்...அதனால் தான் போர் நிறுத்தமாம்...
போர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கவும், தேவையான பொருட்களை போர் முனைக்கு கொண்டு செல்லவும் தானே இந்த ஏற்பாடு??
//உருப்படியான காரியங்கலும் இந்த ஆட்சியால் செய்யப்படவில்லைய்யா//
சிறுபான்மையினர் நலனுக்காக புதிய அமைச்சகம் உருவாக்கம், 15 அம்சத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெண்களுக்கு முழு சொத்துரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. (இத்தகு சட்டம் ஒன் றைக் கொண்டு வர சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் முயற்சி தோல்வியடைந்த நிலையில் அமைச்சர் பதவியை உதறி விட்டு வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பெண்கள் வீட்டு வன்முறையிலிருந்து தடுக்கும் சட்டம் -2005 நிறைவேற்றப்பட்டது. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (100 நாள்களுக்கு வேலை வாய்ப்பு - நாள் ஒன்றுக்கு ரூ.100 சம்பளம்) நடைமுறைப் படுத்தப்பட்டது.
முதல்வர்கலைஞர் அவர்கள் விவசாயிகளுக்கான கடன் ரூபாய் ஏழாயிரம் கோடியை இங்கே தள்ளுபடி செய் தார். இதில் இந்தியா வுக்கே வழிகாட்டிய பெருமை முதல்வர் கலை ஞருக்கு உண்டு. இதைப் பார்த்த மத்திய அரசு 72 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா முழுக்க விவசா யிகளுக்காக அவர்கள் தள்ளுபடி செய்தார்கள்.
இன்றைக்கு பாரதீய ஜனதா கட்சிக்காரர்களுக்குக் கூட கலைஞர் அவர்களின் திட்டங் களைப் பார்த்து ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு போடப்படும் என்று அறிவித்திருக்கின் றார்கள். தி.மு.க வினுடைய தேர்தல் அறிக்கை இந்தி யாவையே ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது. கட்சி களுக்கு அப்பாற்பட்டு இதைப் பின்பற்றக் கூடிய அளவுக்கு வந்திருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசின் உதவிகள் பல வகைகளிலும் பாராட்டத்தக்க அளவில் இருந்து வந்திருக்கின் றன.
சேது சமுத்திரக் கால் வாய்த் திட்டம், கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம், கடல்சார் பல்கலைக் கழகம், மத்திய பல்கலைக் கழகம், நெடுஞ் சாலைகள் வளர்ச்சி பிருமாண்டமான மேம்பாலங்கள், மகத்தான தகவல் தொடர்பு வசதி சாதனைகள் என்று அடுக் கடுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படு கின்றன.
தமிழ் ஓவியா நல்லாகவே இந்த ஆரம்ப வேலைகளை குறிப்பு எடுத்து வைத்துள்ளிர்கள். ஒரு அரசு என்பது மக்களுக்கு உதவி செய்யவே இருக்கிறது. இது அரசின் கடமை. இதுதான் அரசு செய்ய வேண்டியது என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். இதில் அனைத்துமே ஊழல் என்பது யாவரும் அறிந்தது. அதை பற்றி விவாதம் வேண்டாம்.
ஒரு அரசின் முதல் கடமை தனது இனத்தை காப்பது. அதிலிருந்து தவறிய இந்த கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டியவர்களே.
கருணாநிதியின் சம்மதமின்றி ராணுவமும், நச்சு வாயும் இலங்கையில் பயன்படுத்தபடுகிறது என்றால் ஏன் இவரால் ஒரு அறிக்கை விட முடியவில்லை, இதற்கு நான் காரணம் இல்லப்பா என்று ஒரு சின்ன வார்த்ததை ஏன் முடியவில்லை.
நிலவு பாட்டு,
வாங்கற காசுக்கு தகுந்த மாதிரித்தான் நாய் குறைக்கும்.... நீங்க ஏன் இவ்ளோ கவலை படுறிங்க?? சிலர் அவங்க அவங்க வாங்குன காசுக்கு குறைகிரங்க அதை விட்டுட்டு நீங்க நல்ல எழுதுங்க....
நன்றி
தமிழ் உதயன்
Post a Comment