மேலும் தனது சொத்து வளங்கள் பெருக வேண்டும் என்பதற்க்காக இன்று தமிழினத்தின் அழிவுக்கு துணை போகும் கருணாநிதி நாளையே தமிழினம் முழுவதையும் அழிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்.
மக்களே யோசியுங்கள் இன்று இவர் கொடுக்கும் 2000, 3000, 4000 ரூபாய்க்காக உங்களின் வாக்குகளை இவருக்கு அளித்தால் நாம் என்றுமே பிச்சை காரர்கள் ஆகப்போவது உறுதி. சிந்தித்து வாக்கு அளியுங்கள். இதே பணத்துக்காக உங்களை அழிக்கவும் தயங்க மாட்டார்கள்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நம்பிக்கை முழுவதும் இப்போது பணத்தில்தான், எப்பாடு பட்டாவது மக்கள் ஒவ்வொருவருக்கும் பணத்தினை கொடுத்து வாக்குகளை பெறுவது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடித்த 1 லட்சம் கோடியும் இப்போது இந்த தேர்தலில் இரைக்கப்படுகிறது.
நீலகிரி தொகுதியில் ஒரு வாக்குக்கு 10000 ரூ கொடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன. மதுரையில் 4000 ரூ வரை கொடுக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன.
Wednesday, April 22, 2009
இன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக்கு வழிகோலும்
Posted by நிலவு பாட்டு at 7:34:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
வரும் முன் காப்பதுதான் நல்லம் மக்களே உங்களுக்கு இவ்வளவு தருகிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு லாபம் என்று சிந்தியுங்கள்.
They have already given 5000 in madurai.My relative got 20,000 for 4 members
உண்மைதான் மதுரையில் R.S காலனியில் எனக்கு தெரிந்து நடக்கிறது. 2, 3 தெருக்களுக்கு ஒரு ஏஜெண்ட் இந்த வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். அழகிரி மிகவும் கண்டிப்பாக உள்ளாராம் இந்த பணம் மக்களை சென்றடைவதில். எந்த ஏஜெண்டும் ஆட்டைய போட பார்த்தால் உயிரோடு இருக்க மாட்டிர்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளாராம்.
இதுதான் ஜனநாயகம், பணம் கொடுத்து ஆட்சி நடத்துவதற்கு பதில், எந்த கட்சிக்கு அதிக பணமிருக்கிறதோ அவர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டியதுதானே.
well done, ca i be madurai voter to get 5000
Post a Comment