இயக்கம்: நந்தன்
வெளியீடு: 9-ஏ, துர்க்கையம்மன் கோயில் மேலத் தெரு,
பேட்டை, திருநெல்வேலி-4.
தமிழ் ஈழத்தின் வரலாற்று முக்கியத்துவங்களை அடிப்படையாக வைத்து, இன்றைய சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகள் வரைக்கும் தெளிவு படச் சொல்லும் குறும்படம். நாம் வரலாறுகளை, உண்மைகளை எப்போதுமே தவறவிட்டு நிற்கிறோம். அடிப்படை தெளிதலுக்காக நாம் அவசியம் காண வேண்டிய படைப்பு. வேதனைகளின் விளிம்பில் ஈழத் தமிழர்கள் நிற்பதை இவ்வளவு உறுதிபடவும், வரிசைப்படுத்தியும் சொல்ல முடிந்த இயக்குநர் நந்தன் பாராட்டுக்குரியவர். ஆகச்சிறந்த குறும்படம் எனத் தயக்கமின்றிச் சொல்லிவிடலாம்!
http://youthful.vikatan.com/youth/document24042009.asp
எந்த விடுதலை போராட்டத்திலும் எப்போதுமே திருநெல்வேலி மாவட்டத்தின் பங்கும் போற்றுதலுக்குரியது. இந்த குறும்பட ஆசிரியரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது மேலும் பெருமை சேர்க்கிறது.
வாழ்க திருநெல்வேலி மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழின உணர்வாளர்கள். நந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
Wednesday, April 29, 2009
"தொப்புள் கொடி உறவுகள்" இந்த ஆண்டின் சிறந்த குறும்படம்
Posted by நிலவு பாட்டு at 10:22:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment