சேலத்தில் செய்தியாயளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,
கேள்வி: இலங்கையில் இன்னும் ஏன் போர் நிறுத்தம் ஏற்படவில்லை? போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா உதவுமா?
பதில்: போரை நடத்துவதே இந்திய அரசுதான். பிறகு எப்படி போர் நிறுத்தம் ஏற்படும்?
கேள்வி: இதற்கு முன்பு நீங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தீர்கள். அப்போது இதுபற்றி உங்களுக்கு தெரியாதா?
பதில்: இதுபற்றி பலமுறை பிரதமர் மற்றும் தலைவர்களிடம் தெரிவித்தோம். எங்களது எம்.பி.க்களும், ம.தி.மு.க. எம்.பி.க்களும் கறுப்பு சட்டை அணிந்து பாராளுமன்றத்துக்கு சென்றனர். பிரதமருக்கு பலமுறை கடிதங்களும் எழுதி இருக்கிறேன்.
கேள்வி: இலங்கையில் பட்டினி சாவு தொடருகிறதா?
பதில்: இலங்கை அரசு பல யுக்திகளை கையாண்டு வருகிறது. இதில் ஒன்றுதான் பட்டினி போட்டு கொல்வது. கடந்த நூறு நாட்களில் 4500 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அணுகுண்டுக்கு நிகரான அனல் கக்கும் குண்டுகளை தற்போது பயன்படுத்தி வருகிறார்கள்.
கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?
பதில்: ஐ.நா. பாதுகாப்பு சபை கூடி நல்ல முடிவை எடுத்தால் ஒழிய அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேறு வழி இல்லை. இந்த கூட்டம் கூட இந்தியா தயக்கம் காட்டி வருகிறது என்றார்.
Monday, April 20, 2009
இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்
Posted by நிலவு பாட்டு at 1:15:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment