Wednesday, April 22, 2009

இலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. வருடமாயிற்று. போன படை திரும்பவேயில்லை.

குமுதம் கேள்வி பதில் ஒரு குட்டிக் கதை சொல்லுங்களேன்.?
ஜி.வி.மனோ, கொலுவைநல்லூர்.

இந்தியத் தலைநகரிலிருந்து வௌிவரும் `வடக்கு வாசல்' இதழில் படித்த கதை இது.

அமெரிக்காவில் காட்டின் அருகில் அமைந்த ஒரு கிராமத் தில் புலி ஒன்றின் அட்டகாசம் இருந்தது. என்ன செய்தும் அந்தப் புலியைப் பிடிக்கமுடியவில்லை. அமெரிக்காவில் முப்படை களாலும் அந்தப் புலியைப் பிடிக்க முடியாத நிலையில் வேற்று நாடுகளிடம் அமெரிக்கா உதவி கோரியது. யு.கே., கனடா, ஃப்ரான்ஸ், ஜப்பான் ம்ஹூம்... யாராலும் முடியவில்லை.

"எங்களைக் கேட்கலியே. நாங்கள் எவ்வளவு புலிகளைப் பிடிக்கிறோம். இதைப் பிடிக்கமாட்டோமா?" என்று ஒரு குரல். யார்? இலங்கை அரசுதான்.
இலங்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. வருடமாயிற்று. போன படை திரும்பவேயில்லை.

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து இலங்கைப் படைகளை மீட்க காட்டுக்குள் சென்றன. நடுக்காட்டில் அவர்கள் கண்ட காட்சி...

ஒரு மான் தலைகீழாக நெருப்பின் மேல் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. கீழே இலங்கைப் படையினர் அந்த மானைக் குண்டாந் தடிகளால் தாக்கிக்கொண்டிருந்தனர். " ஒப்புக் கொள். ஒப்புக்கொள். நீதான் புலி''

உலகப் படையினர் அந்த அப்பாவி மானை விடுவித்து, " ஒரு வருடமாக இதையா கேட்டு உன்னை வதைத்தனர்?''

அதற்கு அந்த மான் . " பரவாயில்லைங்க. எனக்காவது ஒரு வருஷம்தான். ஆனா இலங்கையில 25 வருஷமா இதைத்தான் பண்றாங்க'' என்றது.

நன்றி : குமுதம்

0 Comments: